ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650
பிரீமியம் ஸ்டோரி
News
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650

அறிமுகம்: ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650

மீட்டியார் என்றால்… வானத்தில் இருந்து வந்த விண்கல் அல்லது எரிநட்சத்திரம் என்று அர்த்தம். ஏற்கெனவே 350சிசியில் மீட்டியார், சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அதே மீட்டியாரில் 650 சிசி இன்ஜினைப் பொருத்தி, பெரிய மீட்டியாராக்கிக் கொண்டு வந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இத்தாலிக்குப் பக்கத்தில் உள்ள மிலன் நகரில் நடந்த EICMA 2022 ஆட்டோ எக்ஸ்போவில், இதை தனது இன்டர்நேஷனல் மார்க்கெட் லெவலுக்கு அப்கிரேட் செய்து அறிமுகப்படுத்தி இருந்தது ராயல் என்ஃபீல்டு. இந்த நவம்பர் மாதம் 18–ம் தேதி நமது இந்தியாவுக்கு அன்வெய்லிங் செய்திருக்கிறது RE. 

எல்லோரும் எதிர்பார்க்கும் ராயல் என்ஃபீல்டின் மீட்டியார் 650 பற்றிச் சில முக்கியமான அம்சங்களைப் பார்க்கலாம்.


650 சிசியில் RE-ன் மூன்றாவது பைக்!

இந்த சூப்பர் மீட்டியார்தான், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 648 சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் செட்அப் கொண்ட 3–வது பைக். கான்ட்டினென்ட்டல் GT 650 மற்றும் இன்டர்செப்டர் பைக்குகள் – அந்த முதல் இரண்டு பைக்குகள். இந்த மீட்டியார் 7,250rpm-ல் 47bhp பவரையும், 5,650rpm–ல் 52Nm டார்க்கையும் கொண்டிருக்கும். Bespoke Mapping மற்றும் Gearing செட்–அப்பின்படி இதன் பீக் டார்க், சுமார் 80% டார்க் – 2,500rpm-லேயே கிடைத்துவிடும்படி ட்யூன் செய்திருப்பதாகச் சொல்கிறது ராயல் என்ஃபீல்டு. 

ஹார்லி டேவிட்சன் டிசைன்!

ஏற்கெனவே மீட்டியார் 350 பைக்கையே சின்ன ஹார்லி என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஒரிஜினல் ஹார்லி டேவிட்சன் பைக்போலவே… அசத்தலான சூப்பர் பைக் டிசைனில்… இந்த க்ரூஸர் பைக் கலக்குகிறது. சிலர் ட்ரையம்ப் மாதிரி இருப்பதாகவும் சொல்கிறார்கள். 



RE-ன் முதல் USD Fork பைக்!

அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்அப் கொண்ட முதல் ராயல் என்ஃபீல்டு பைக் இதுதான். முன் பக்கம் Showa 43மிமீ தடிமனான ஃபோர்க் கொண்டிருக்கிறது இது. அதேபோல், இதில் இருக்கும் கண்ணீர்த் துளி வடிவ பெட்ரோல் டேங்க், 15.7 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது. 

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!

முதல் எல்இடி ஹெட்லைட்ஸ் கொண்ட RE பைக்!

இதில் இருக்கும் எல்இடி ஹெட்லைட்ஸ் புதுசு! இந்த செக்மென்ட்டில் ஃபுல் எல்இடி ஹெட்லைட்ஸ் கொண்ட பைக் சூப்பர் மீட்டியார் 650 சிசிதான். 

ஸ்டைலிஷ் ட்யூப்லெஸ் அலாய் வீல்கள்!

இதன் முன் பக்கம் 19 இன்ச் வீல்களும், பின் பக்கம் 16 இன்ச் வீல்களும் இருக்கின்றன. மீட்டியார் 350–ல் இருப்பதுபோலவே இங்கே அலாய் செட்அப் கொடுத்திருக்கிறார்கள். இதில் சியட் Zoom Cruz டயர்கள் இருக்கின்றன. கான்ட்டினென்ட்டல், இன்டர்செப்டர் பைக்குகளைப்போன்ற ட்யூப் டயர்களில் பஞ்சர் பயம் இருக்கும். இந்த மீட்டியாரில் ட்யூப்லெஸ் என்பதால், பஞ்சர் பயம் தேவையில்லை. 

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!
ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!

டூயல் சேனல் மீட்டியார்!

இந்த மீட்டியார் 650–ல் இரண்டு பக்கமும் டிஸ்க் ஆப்ஷன்ஸ் இருக்கின்றன. முன் பக்கம் 320 மிமீ டிஸ்க்; பின் பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக்ஸ் நச்சென்று இருக்கும். காரணம், டூயல் சேனல் ஏபிஎஸ் பைக்காக வருகிறது மீட்டியார் 650. இந்தப் பெரிய பிரேக் அளவுகள், இந்த க்ரூஸர் பைக்கின் எடைக்கு ஏற்றவாறு உறுதியான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கும் அளவுக்கு டிசைன் செய்திருக்கிறார்கள். 

எடை அதிகமான புல்லட் இதுதான்!

இதுதான் ராயல் என்ஃபீல்டின் எடை அதிகமான புல்லட்டாக இருக்கப் போகிறது. இதன் எடை 241 கிலோ. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 135 மிமீதான். நமது ரோடு கண்டிஷன்களுக்குத் தாராளம் என்று சொல்ல முடியாது. ஆனால், போதுமானதாக இருக்கும். 

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!


சிட்டிக்குள் புகுந்து புறப்பட ஈஸி!

பொதுவாக, ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் எக்ஸாஸ்ட் பைப்கள், மிக அகலமாக இருக்கும். இந்த மீட்டியாரில் சைலன்ஸர், இடத்தை அடைக்காமல் இருப்பதால்… சின்ன சந்து பொந்துகளுக்குள், டிராஃபிக்குகளில் பைக் இடிக்காமல் புகுந்து புறப்பட ஏதுவாக இருக்கலாம். 

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!

ஸ்ப்ளிட் சீட்ஸ்; ரைடிங் பொசிஷன் சூப்பர்; உயரம் கம்மி!

இதில் ஸ்ப்ளிட் சீட்கள் கொடுத்திருக்கிறார்கள். க்ரூஸர் பைக் என்பதால், அகலமான ஹேண்டில் பாரும், முன்னோக்கி வைக்கப்பட்ட ஃபுட் பெக்குகளும் இதன் ரைடிங் பொசிஷனை க்ரூஸர் ஸ்டைலில் லாங் ரைடுக்கு ஜாலியாக்குகின்றன. உயரம் குறைவானவர்கள் கூட எளிதில் ஓட்டும் வகையில், இதன் சீட் உயரம் 740 மிமீதான் இருக்கிறது. ஆனால் எடை அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்க! இதன் இண்டிகேட்டர்களை நம்பர் பிளேட்டுக்கு அருகில் பிளேஸ் செய்திருக்கிறார்கள். 

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!


இன்டர்செப்டர், கான்ட்டினெட்டலில் இல்லாத வசதிகள்!

இந்த பைக், வழக்கமான வட்ட வடிவ சென்டர் கன்சோலைக் கொண்டிருக்கிறது. இதில் மற்ற 650 சிசி பைக்குகளில் இல்லாத ட்ரிப்பர் நேவிகேஷன் பாட், ஃபுல் எல்இடி ஹெட்லைட்ஸ், கேஸ்ட் அலுமினியம் ஸ்விட்ச் க்யூப்கள், ட்யூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள் போன்றவை வித்தியாசமான வசதிகளாக இருக்கின்றன. 

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!
Andrew Jones

வேரியன்ட் மற்றும் விலை

மொத்தம் 2 வேரியன்ட்களில் வருகிறது சூப்பர் மீட்டியார் 650. இதில் ஸ்டாண்டர்டு (Standard) வேரியன்ட்தான் அடிப்படை மாடல்.  டூரர் (Tourer) வேரியன்ட், விலை அதிகமான டாப் எண்ட். Astral, Interstellar மற்றும் Celestial Colourways–களில் வருகிறது இது. Tourer மாடலிலேயே சிங்கிள் சீட் கொண்ட Solo Tourer மற்றும் ஸ்ப்ளிட் சீட் கொண்ட Grand Tourer என 2 டூரர் மாடல்கள் உண்டு. ராயல் என்ஃபீல்டுக்கே உரித்த ஆக்சஸரீஸ் ஆப்ஷனும் இதில் உண்டு. டாப் எண்டான கிராண்ட் டூரரில், பில்லியன் பேக்ரெஸ்ட், ஹேண்டில்பார் எண்ட் மிரர்கள், லக்கேஜ் ரேக், டீலக்ஸ் ஃபுட் பெக்குகள் மற்றும் பெரிய விண்ட்ஸ்க்ரீன் வசதிகளுடனும் வருகிறது சூப்பர் மீட்டியார் 650. இதன் விலை பற்றித் தெரியவில்லை; ஆனால் சுமார் 3.75 – 4 லட்சம் வரை இதன் விலை வரலாம்.

ஹார்லி டிசைன்; ட்யூப்லெஸ் டயர்; கிண்ணென்ற USD ஃபோர்க்; லாங் ரைடுக்கு வருது அடுத்த மீட்டியார்!

எதனுடன் போட்டி?

இப்போதைக்கு இந்த சூப்பர் மீட்டியாருக்குப் போட்டி குறைவுதான். மற்ற ராயல் என்ஃபீல்டு 650 சிசி பைக்குகளைவிட கொஞ்சம் விலை அதிகமாக வரும் இது, பெனெல்லி 502C பைக்குக்குப் போட்டியாக வருகிறது. இந்த விலை அதிகமான மாடர்ன் பைக்கான பெனெல்லியுடன், இந்த ராயல் என்ஃபீல்டு மீட்டியார் எளிதில் ஜெயிக்க வாய்ப்புண்டு.