Published:Updated:

அட... புதுஃ பஸினோவில் டிஸ்க், அலாய்!

பஸினோ
பிரீமியம் ஸ்டோரி
பஸினோ

SPY PHOTO ரகசிய கேமரா

அட... புதுஃ பஸினோவில் டிஸ்க், அலாய்!

SPY PHOTO ரகசிய கேமரா

Published:Updated:
பஸினோ
பிரீமியம் ஸ்டோரி
பஸினோ

திண்டிவனம் - மேல்மருவத்தூர் சந்திப்பின் அருகே புதிய ஃபஸினோ டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதனைப் படம் பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மோ.வி வாசகர் எம்.அர்ஜூன்.

இதுவரை ஃபஸினோவில் இல்லாத வசதிகளான 5 ஸ்போக் அலாய் வீல்கள், முன்னால் 220 மிமீ டிஸ்க் பிரேக் இதில் இருந்தன. முன்பக்கச் சக்கரம் முன்பைவிடப் பெரிதாக இருப்பதுபோலத் தெரிவதால், அவை 12 இன்ச் டயராக இருக்கலாம். ் ஹேண்டில்பாரில் கூடுதலாக Bar End Weights, முன்பைவிடக் குறுகலான Floor Board இருப்பதுபோலத் தெரிகிறது. பக்கவாட்டு பாடி பேனல்கள் புதிதாக இருப்பதுடன், அவை நீளமாகவும் உள்ளன. எனவே சிங்கிள் பீஸ் சீட் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருப்பதுடன், டெயில் லைட்டிலும் வித்தியாசம் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிராப் ரெயிலும் முன்பிருந்ததைவிட மெலிதாகியுள்ளது. பின்பக்க வீல் முன்பக்கத்தை விடச் சிறிதாகக் காட்சியளிப்பதால், அநேகமாக இது 10 இன்ச் சைஸில் இருக்கலாம்.

பஸினோ
பஸினோ

மேலும் எக்ஸாஸ்ட் பைப் தடிமனாக இருப்பதை வைத்துப் பார்க்கும்போது, இது BS-6 மாடலாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால், கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இடம்பெறும். இதனால் பவர் மற்றும் டார்க்கில் மாறுதல்கள் இருக்கும். விலையும் தற்போது இருப்பதைவிட 10% வரை அதிகரிக்கும். தற்போது விற்பனை செய்யப்படும் ஃபஸினோவில், போட்டியாளர்களைவிடப் பெரிய இன்ஜின் இருந்தாலும், அதன் பவர் குறைவுதான். ஆனால் ஸ்கூட்டரின் குறைவான எடை, அந்த மைனஸைச் சரிக்கட்டி இருந்தது. புது ஃபஸினோவில் சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் ஃபிரேம் ஆகியவற்றில் பெரிய மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. டிஸ்க் /அலாய் வீல் வச்ச பஸினோ ஓட்ட ரெடியா இருங்க!

யமஹா ஃபஸினோ ஸ்கூட்டரைப் படம்பிடித்த வாசகர் எம்.அர்ஜூனுக்கு ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com