கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

கவாஸாகி வல்கன் ஸ்டைலில் ராயல் என்ஃபீல்டு பைக்!

ராயல் என்ஃபீல்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ராயல் என்ஃபீல்டு

ஸ்பை போட்டோ: ராயல் என்ஃபீல்டு

னது 650சிசி ப்ளாட்ஃபார்மில், இன்டர்செப்டர், கான்டினென்ட்டல் GT பைக்ஸோடு புதிதாக ஒரு ப்ரீமியம் க்ரூஸர் ஒன்றையும் இறக்க இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. மகாபலிபுரத்தில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த பைக்கைப் படம் பிடித்திருக்கிறார், மோ.வி வாசகர் எம்.அர்ஜூன். இதில் ட்வின் சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது என்பதை, பைக்கின் பின்னால் தெரியக்கூடிய இரு க்ரோம் எக்ஸாஸ்ட் பைப்கள் உணர்த்தி விடுகின்றன. மேலும் இது பவர்ஃபுல்லான பைக் என்பதை, தடிமனான பின்பக்க வீல் தெரிவித்துவிடுகிறது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Meteor 350-க்கும் இதற்கும் தோற்றம் & பாகங்களில் அதிக ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது.என்றாலும் அந்த பைக்கைவிட, இந்த க்ரூஸர் நீளமாகவும் தாழ்வாகவும் காட்சி தருகிறது. Meteor போலவே முன்பக்கத்தில் பெரிய வீல் மற்றும் பின்பக்கத்தில் சிறிய வீல் இருப்பதால், பைக்கின் Road Presence நன்றாகவே இருக்கிறது. பைக்கின் சீட்டிங் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் காரணமாக, ரைடரின் கால்கள் சூடான இன்ஜினில் இருந்து தள்ளியே இருப்பதும் நன்மைதான்.

ஸ்பை போட்டோ: ராயல் என்ஃபீல்டு
ஸ்பை போட்டோ: ராயல் என்ஃபீல்டு

இதன் இன்ஜின் பகுதி கறுப்பு நிறத்தில் காட்சி தருகிறது (இன்டர்செப்டரில் க்ரோம் ஃபினிஷ் உண்டு). தவிர ஃப்ரேமின் முன்பக்கத்தில் ஆயில் கூலர் எட்டிப் பார்க்கிறது (Meteor-ல் இது கிடையாது). மிக முக்கிய மாற்றமாக, இந்த க்ரூஸர் பைக்கின் முன்னே USD ஃபோர்க் இருந்தது. எனவே ராயல் என்ஃபீல்டின் இந்திய வரலாற்றில், USD ஃபோர்க் உடன் வரப்போகும் முதல் மாடலாக இது இருக்கலாம்! எப்படி ட்ரையம்ப் போனவில் போன்ற ரெட்ரோ டிசைனுடன் இன்டர்செப்டர் ஈர்த்ததோ, அதேபோல கவாஸாகி வல்கன் போன்ற க்ரூஸர் தோற்றத்தில் வரலாம் இது. சிம்பிளான மெக்கானிக்கல் பாகங்களே இருப்பதால், விலை விஷயத்தில் அதிரடியை எதிர்பார்க்கலாம்.

ராயன் என்ஃபீல்டு வாகனத்தைப் படம் பிடித்த வாசகர் அர்ஜூனுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com