Published:Updated:

சுஸூகி ஆவெனிஸ்... மைனஸ் அவ்வளவா இல்லை!

புதிய சுஸூகி ஆவெனிஸ்
பிரீமியம் ஸ்டோரி
புதிய சுஸூகி ஆவெனிஸ்

எப்படி இருக்கிறது சுஸூகி ஆவெனிஸ்?

சுஸூகி ஆவெனிஸ்... மைனஸ் அவ்வளவா இல்லை!

எப்படி இருக்கிறது சுஸூகி ஆவெனிஸ்?

Published:Updated:
புதிய சுஸூகி ஆவெனிஸ்
பிரீமியம் ஸ்டோரி
புதிய சுஸூகி ஆவெனிஸ்

சுஸூகி ஏற்கெனவே ஆக்ஸஸ் 125 மூலம் ஸ்கூட்டர் சந்தையில் கால்பதித்து விட்டது. கிளாஸிக்கான அதன் லுக்கைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஹோண்டா ஆக்டிவாவுக்குப் பிறகு வாடிக்கையாளர்களின் பிரதானத் தேர்வாக ஆக்ஸஸே இருந்து வருகிறது. ஆனால், தற்போது மீண்டும் ஒரு புதிய மாடலோடு ஸ்கூட்டர் சந்தையில் என்ட்ரி கொடுத்திருக்கிறது சுஸூகி. `ஸ்கூட்டர்னாலே ஸ்மூத்தாதான் இருக்கணுமா, நாங்க அக்ரஸ்ஸிவ்வா ஸ்போர்ட்டி ஸ்டைல்லயும் ஸ்கூட்டரை வெளியிடுவோம்’’ என என்டார்க்கை விற்பனையில் வைத்திருக்கிறது டிவிஎஸ்.

ஸ்மூத்னஸ் பிடிக்காத ‘ஸ்போர்ட்டி’ பிரியர்கள் என்டார்க் பக்கம் செல்கின்றனர். அந்த அக்ரஸிவ் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ஸ்கூட்டர் சந்தையில் புதிய ஆவெனிஸோடு களமிறங்கியிருக்கிறது சுஸூகி. மோட்டார் விகடனில் வெளியான ‘ஏழு நாள்.. ஏழு மலை..’ தொடரை நிச்சயம் அனைவரும் படித்திருப்பீர்கள். அந்தப் பயணத்தில் நம்முடன் பயணம் செய்த சதீஷ்தான் புதிய ஆவெனிஸ் ஸ்கூட்டரை வாங்கியிருக்கிறார். இந்தப் புதிய ஆவெனிஸ் எப்படி இருக்கிறது?

இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்ட்டர் செம ஸ்டைல். புளூடூத், நேவிகேஷன் என ஏகப்பட்ட வசதிகள்
இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்ட்டர் செம ஸ்டைல். புளூடூத், நேவிகேஷன் என ஏகப்பட்ட வசதிகள்

இனி சதீஷின் கண்ணோட்டத்தில்...

“ஹாய், நான் சதீஷ். கடந்த மூன்று மாதங்களாக 125 சிசி ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என்ற யோசனை எனக்கு இருந்தது. அதற்காக சந்தையில் என்னென்ன ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்கின்றன எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தேவையின்படி பார்த்தால், சந்தையில் ஹோண்டாவின் கிராஸியா மற்றும் டிவிஎஸ் என்டார்க் ஆகிய ஸ்கூட்டர்கள் தான் நான் விரும்பிய ஸ்போர்ட்டினெஸ்ஸோடு இருந்தது. டிசம்பரில்தான் இந்த ஆவெனிஸை சுஸூகி வெளியிட்டது. சுஸூகியின் நம்பகத்தன்மையை ஆக்ஸஸிலேயே நிரூபித்துவிட்டது. அதோடு நிறைய வசதிகளும் சேர்ந்திருந்ததால், ஆவெனிஸையே நான் தேர்ந்தெடுத்தேன்.

ஸ்கூட்டரை ஜனவரியில்தான் என்னால் ஷோரூமில் வாங்க முடிந்தது. என்டார்க்கின் டிசைன் லாங்க்வேஜை நிறையவே ஆவெனிஸில் பார்க்க முடிகிறது. இன்ஜினை எடுத்துக் கொண்டால், ஆக்ஸஸின் இன்ஜினை அப்படியே இந்த ஆவெனிஸில் கொடுத்திருக்கிறார்கள். ஆக்ஸஸ் தயாரான அதே ப்ளாட்ஃபார்மில், அதே இன்ஜினுடன் தயாராகியிருக்கிறது ஆவெனிஸ். பவரும் கிட்டத்தட்ட ஆக்ஸஸில் இருக்கக் கூடிய அதே 8.7bhp பவர் மற்றும் 10Nm டார்க்தான். ரெட்ரோ ஸ்டைல் ஆக்ஸஸ் மற்றும் மேக்ஸி பர்க்மனுக்கு இடையே பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது இந்த ஸ்போர்ட்டி ஆவெனிஸ்.

மேலும், இந்த ஆவெனிஸின் நேரடிப் போட்டியாளர்கள் என்றால், அது டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா கிராஸியா மற்றும் ஏப்ரிலியா ஸ்டார்ம்தான். இவை அனைத்துமே ஸ்போர்ட்டி ஸ்டைலுடன் ஜென் Z தலைமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்கள்.

ஹெட்லைட், என்டார்க்கை நினைவுபடுத்துகிறது
ஹெட்லைட், என்டார்க்கை நினைவுபடுத்துகிறது

ஆவெனிஸின் டிசைன் எனக்குக் கொஞ்சம் பிடித்திருக்கிறது. சின்ன வைசர், ஹேண்டில்பாருடனே சேர்த்து டிசைன் செய்யப்பட்டிருக்கும் இண்டிகேட்டர்கள், ஷார்ப்பான ஹெட்லேம்ப் மற்றும் ஹெட்லேம்புக்குப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய வென்ட்கள் என முன்பக்க டிசைன் நன்றாக இருக்கிறது. இதன் ஹெட்லைட் கொஞ்சம் என்டார்க்கை நினைவுப்படுத்துகிறது. பக்கவாட்டில் ஆவெனிஸில் இருக்கும் A-யைக் குறிக்கும் விதமாக கிராஃபிக் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு புளூடூத் வசதி கொண்ட மாடல் என்பதைக் குறிப்பதற்காகவும் ஒரு சின்ன ஸ்டிக்கரை ஒட்டியிருக்கிறார்கள். நான் வாங்கியிருப்பது டாப் எண்டு மாடல். ஆவெனிஸிலேயே புளூடூத் நேவிகேஷன் மற்றும் சுஸூகி கனெக்ட் வசதி இல்லாமல் இருக்கும் லோ எண்ட் மாடலும் இருக்கிறது. ஆனால், அந்த மாடல் இன்னும் ஷோரூமுக்கே வரவில்லை. எனவே, இப்போதைக்கு இந்த ஒரு மாடல்தான் விற்பனையில் இருக்கிறது.

பில்லியன் ஃபுட்பெக்குகளை மடக்கினால் பாடியுடன் சேர்ந்து கொள்கிறது. இது பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நன்றாக இருக்கிறது. சைலன்ஸரை பர்க்மேனிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறது ஆவெனிஸ். பின்பக்கம் ஸ்பிளிட் எல்இடி டெய்ல் லைட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள். பின்பக்க இண்டிகேட்டர்கள் பைக்கில் இருப்பது போலக் கொடுத்திருக்கிறார்கள். ஸ்கூட்டர் என்றாலே பாடியுடன் சேர்ந்த இண்டிகேட்டர்களைத்தான் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள். இருந்தாலும் இந்த இண்டிகேட்டர்கள் ஓகேதான். கிராப் ரெயிலும் ஸ்போர்ட்டி.

ஆக்ஸஸில் இருக்கும் அதே இன்ஜின் தான்
ஆக்ஸஸில் இருக்கும் அதே இன்ஜின் தான்

5.2 லிட்டர் ப்யூல் டேங்க். அதற்கான ப்யூல் ஃபில்லர் கேப்பை பின்பக்கம் வெளியே கொடுத்திருக்கிறார்கள், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது. அண்டர் சீட் ஸ்டோரேஜ் 21.8 லிட்டர் கொடுத்திருக்கிறது சுஸூகி. ஓகேவான அளவுதான். முன்பக்கம் ஹேண்டில் பாரின் கீழே ஓப்பன் ஸ்டோரேஜ் ஒன்றும், லிட்டுடன் கூடிய ஸ்டோரேஜ் ஒன்றும் கொடுத்திருக்கிறார்கள். இந்த லிட்டுடன் கூடிய ஸ்டோரேஜில் யுஎஸ்பியுடன் சார்ஜிங் வசதி இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில்தான் ஏகப்பட்ட வசதிகளைக் கொடுத்திருக்கிறது சுஸூகி. முழுமையான டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் புளூடூத்தை கனெக்ட் செய்து கொள்ளலாம். சுஸூகி ரைடு கனெக்ட் ஆப்புடன் கனெக்ட் செய்த பிறகு எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன், இன்கமிங் மற்றும் மிஸ்டு கால் அலெர்ட், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் என எல்லாவற்றையும் இந்த டிஜிட்டல் டிஸ்ப்ளே நமக்குக் காட்டுகிறது. இவற்றோடு இரண்டு ட்ரிப் மீட்டர்கள், ஆவரேஜ் ப்யூல் கன்சம்ப்ஷன் என அடிப்படைத் தகவல்களும் இருக்கின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 87,000 ரூபாய். நான் வாங்கியபோது ஆன்-ரோடு விலை 1,07,000 ரூபாய்.

ஆவெனிஸ்
ஆவெனிஸ்

ஆவெனிஸுடனான என்னுடைய அனுபவம்:

மைலேஜ் என்று எடுத்துக் கொண்டால் 45 - 50 கிமீ மைலேஜ் என்றுதான் ஸ்கூட்டர் டிஸ்ப்ளேவில் காட்டுகிறது. 70 - 80 கிமீ ஸ்பீடில் க்ரூஸ் செய்து செல்லும்போது கூட எக்கோ மோடில்தான் காட்டுகிறது. எனவே, இதன் மைலேஜ் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் நான் நீண்ட தூரம் பயணம் செய்யவில்லை. 1,000 கிமீ ஓட்டிய பிறகு தான் மைலேஜ் எவ்வளவு எனத் தெளிவாகச் சொல்ல முடியும். இப்போதைக்கு இந்த மைலேஜ் ஓகேதான்.

ரைடிங் எக்ஸ்பீரியன்ஸை எடுத்துக் கொண்டால், தொடக்கத்தில் ஸ்மூத்தாகத் தான் இருக்கிறது. 30 கிமீ வேகம் செல்லும் வரை ஆக்ஸஸைப்போல சைலன்ட்டாகவே இருக்கிறது. ஆனால், 30 கிமீ வேகத்தைக் கடந்த பிறகு எக்ஸாஸ்ட் பீட்டும் மாறுகிறது. பிக்கப்பும் கொஞ்சம் கூடுதலாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. 80 கிமீ மேல் கொஞ்சம் மெதுவாகவே வேகம் கூடுகிறது. அதிகபட்சமாக 105 கிமீ வேகம் வரை இதில் நான் சென்றிருக்கிறேன். 30 - 80 கிமீ வேகத்துக்குள் க்ரூஸ் செய்யும்போது இதன் பெர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism