இந்தியாவில், தான் விற்பனை செய்யும் வாகனங்களின் BS-6 வெர்ஷன்களை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியது சுஸூகி இந்தியா.

BS-6 பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் பவரில் மாற்றமில்லாவிட்டாலும், அது முன்பைவிட 0.02kgm குறைவான டார்க்கைத் தருகிறது (1kgm). Metallic Matte Bordeaux Red கலர் ஆப்ஷன் & இன்ஜின் கில் ஸ்விட்ச் புதிது. எடை 2 கிலோ அதிகரித்து இருப்பதுடன் (110 கிலோ), பெட்ரோல் டேங்க்கின் அளவும் 100 மில்லி குறைந்து விட்டது (5.5 லிட்டர்).

ஜிக்ஸர் சீரிஸ் பைக்குகளைப்போலவே, பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் மோட்டோ ஜிபி எடிஷனைக் களமிறக்கும் முடிவில் சுஸூகி இருப்பதுபோலத் தோன்றுகிறது. அதற்கேற்ப MotoGP கலர் & கிராஃபிக்ஸுடன் கூடிய ஸ்கூட்டரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்க்க முடிந்தது. BS-6 சுஸூகி ஜிக்ஸர் 150, முன்பைவிட 0.5bhp குறைவான பவரையும், 0.02kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது; முன்பைவிட ஒரு கிலோ எடையும் அதிகம் (141 கிலோ). மார்ச் மாதத்தில் இதன் விலை அறிவிக்கப்பட்டு, விற்பனை தொடங்கிவிடும்.

ஏறக்குறைய இதே மாற்றங்கள், இன்ட்ரூடரின் BS-6 மாடலிலும் இருக்கலாம். ஜிக்ஸர் 250 BS-6 & ஜிக்ஸர் SF 250 BS-6, முந்தைய மாடலைவிட 0.04kgm குறைவான டார்க்கைத் தருகின்றன. மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.