Published:Updated:

இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?

சுஸூகி V-ஸ்ட்ராம் SX 250
பிரீமியம் ஸ்டோரி
சுஸூகி V-ஸ்ட்ராம் SX 250

ரிவ்யூ: சுஸூகி V-ஸ்ட்ராம் SX 250

இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?

ரிவ்யூ: சுஸூகி V-ஸ்ட்ராம் SX 250

Published:Updated:
சுஸூகி V-ஸ்ட்ராம் SX 250
பிரீமியம் ஸ்டோரி
சுஸூகி V-ஸ்ட்ராம் SX 250
இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?

மோட்டார் சைக்கிள் வாங்குவதில் நமக்குத் தேவைப்படும் நேரத்தை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. ஒரு பைக்கை நினைத்து மனசு கிக்கர் அடித்தால், கடைசியில் வண்டி நிற்பதோ வேறு ஒரு இடத்தில்! நேக்கட், ஸ்ட்ரீட், ஸ்போர்ட், க்ரூஸர் என்று செக்மென்ட்கள் எக்கச்சக்கம். ரோடு, டிராக், டெரெயின் என்று பல்வேறு பரிமாணங்களில் அட்வென்ச்சர் செக்மென்ட் பைக்கிற்குத் தனி அட்வான்டேஜ் இருக்கிறது. அதனால்தான் பைக் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக அட்வென்சர் பைக்குகளை களமிறக்குகிறார்கள். இப்போது சுஸூகியும் இதில் குதித்துவிட்டது. ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 பைக்குகளில் இருக்கும் அதே இன்ஜினைப் பயன்படுத்திப் புதிதாக வந்திருக்கிறது வி-ஸ்ட்ராம் SX 250.

வி-ஸ்ட்ராம்

ஏற்கெனவே 1050, 650 என்று இரண்டு பெரிய வி-ஸ்ட்ராம் பைக்ஸ் சர்வதேச சந்தையில் வலம் வருகிறது. இந்தியாவில் இருப்பதோ 650 மட்டும்தான். ஆரம்பத்தில் வி-ட்வின் இன்ஜினோடு வந்ததாலேயே இந்த மாடல்களுக்கு வி-ஸ்ட்ராம் என்று பெயர். காலப்போக்கில் சிங்கிள் சிலிண்டருக்கும், பேரலல் ட்வின் இன்ஜினுக்கும் இதே பிராண்டைப் பயன்படுத்திக் கொண்டார்கள். வி-ஸ்ட்ராம் 250, ஜிக்ஸரின் அதே பிளாட்ஃபார்ம்தான். இன்ஜினிலும் எந்த மாற்றமும் இல்லை. அட்வென்ச்சர் என்பதால் கியரிங்கில் ஏதாவது மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். கியரும் சரி, ஸ்ப்ராக்கெட்டும் சரி எல்லாமே ஜிக்ஸர். சொல்லத்தக்க மாற்றம் என்பது வீல்பேஸ் மற்றும் 19 இன்ச் வீல். ஸ்விங் ஆர்ம் 100மிமீ நீண்டுள்ளது. இதனால் 100மிமீ வீல்பேஸ் கூடியிருக்கிறது. இது பைக்கின் ஸ்டெபிலிட்டிக்கு ஒரு ப்ளஸ்.

டிசைன்

19 இன்ச் வீல் ஆஃப்ரோடுக்கு அத்தியாவசிய முன்னேற்றம். 21 இன்ச் இருந்திருந்தால் ஆடம்பரமாக இருந்திருக்கும். 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் அருமை. சீட் உயரம்தான் அதிகம். 835மிமீ வரை அதிகமாகியிருக்கிறது. 5.5 அடி உயரம் இருப்பவர்கள் நுனிக் கால்களை மட்டுமே தரையில் வைக்க முடியும். 6 அடி இருந்தால்தான் அஞ்சான் சமந்தா எதிர்பார்ப்பதைப்போல கால் தரையில் படும். சுஸூகியில் ஆக்ஸசரியாக வரும் சீட் பயன்படுத்தினால் உயரம் 15மிமீ வரை குறையலாம்.

சைலென்ஸரும் ஜிக்ஸரிடம் கடன் வாங்கிய பீஸ். டயர் ரேடியல் மாடல் இல்லை. MRF Mogrip டயரின் செயல்பாடு எதிர்பார்த்ததைவிட சாலையிலும் சரி, ஆஃப்ரோடிலும் சரி - நிலையாக இருக்கிறது.

இது வி-ஸ்ட்ராம் வகையறா என்பது பெயரில் மட்டுமில்லை; டிசைனிலும் தெரிகிறது. பறவை மூக்கு போன்ற முன்பக்க டிசைன் 1050, 650 மட்டுமல்ல; 250 மாடலிலும் இருக்கிறது. ஹெட்லைட் ஜிக்ஸரின் அதே எல்ஈடி. ஆனால் முன்பக்க பேனல்கள் இதை இன்னும் கம்பீரமாகக் காட்டுகின்றன. இண்டிகேட்டரை இங்கேயாவது LEDயில் கொடுத்திருக்கலாம். அதே ஹாலோஜன் பல்புதான். வைஸர் அட்ஜஸ்டபிள் இல்லை. ஆனால், 90 கி.மீ வேகம் வரை பெரிதாக விண்ட் பிளாஸ்ட் தெரியவில்லை. 120 கிமீ வேகத்திற்கு மேல் போகும்போது, இன்னும் உயரமான வைஸர் தேவை. Knuckle Guards ஆன்ரோடு விலையிலேயே வந்துவிடுவதால், தனியாகச் செலவு செய்யத் தேவையில்லை என்பது சந்தோஷம்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் கனெக்ட்டிவிட்டி வசதி உண்டு. சுஸூகியின் கனெக்ட் ஆப் மூலம் நேவிகேஷன், SMS, மொபைல் அழைப்பு என்று சகல விஷயங்களைப் பார்த்துக் கொள்ளலாம். ஆர்பிஎம், கியர் இண்டிகேட்டர், பேட்டரி வோல்டேஜ், மைலேஜ் என்று எதையும் டிஸ்ப்ளேவில் விட்டுவிடவில்லை சுஸூகி. இதற்கு பெரிய பாராட்டுகள்.

டேங்க் பேனல்கள் தடதடக்கவில்லை என்பது தரத்தைக் காட்டுகிறது. 12 லிட்டர் டேங்க் இருப்பது மற்ற பைக்குகளை ஒப்பிடும்போது பெரிய குறையாகத் தெரியவில்லை. டேங்கின் டிசைன், பைக் மெலிந்திருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. ஆஃப்ரோடுக்கு இது நல்லதுதான், குழிகளில் ஏறியிறங்கும்போது டேங்க்கைப் பிடித்துக் கொள்வது சிரமமாக இல்லை. மினி அட்வென்ச்சர் செக்மென்ட்டிலேயே அகலமான சீட் இங்குதான். 150 கிமீ தூரத்தைக் கடந்து ஓட்டும்போது இதன் அருமை புரியும். முக்கோண சீட் கொடுத்து, `பில்லியன் ரைடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத மத்த பைக்ஸ் எங்க, செவ்வகமா வெட்டி அகலமா’ பில்லியன் சீட் கொடுத்திருக்க சுஸூகி எங்க என்று நிச்சயம் ஒரு மீம் போட்டாக வேண்டும். பின்பக்க லக்கேஜ் ரேக் பைக்கோடு இணைந்தே வந்துவிடுகிறது. இங்கும் ஆன்ரோடுக்கு மேலே வைக்கும் செலவு மிச்சம். சுஸூகியின் தரம் தனி அசத்தல்.

இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?
இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?
இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?
இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?

ப்ளஸ்

ஜிக்ஸர் இன்ஜினின் நம்பகத்தன்மை தெரிந்த விஷயமே! இந்த இன்ஜின் மற்ற மாடல்களில் 30-35 கி.மீ மைலேஜ் தருகிறது; இங்கும் அதையே எதிர்பார்க்கலாம். முதலில் இரண்டு கியர்கள் ஷார்ட் கியர் என்பதால் ஆஃப்ரோடில் வசதியாக இருக்கிறது. 120 கிமீ வேகத்திற்கு மேல் சாலையில் பறக்கும்போது ஒரு சின்ன வைப்ரேஷன் எட்டிப் பார்ப்பது தவிர்க்க இயலாதது. ஆக்ஸசரிகளுக்குப் பெரிய செலவு செய்ய தேவையில்லை. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் தேவையான எல்லா வசதியும் வந்துவிடுகிறது. முக்கியமாக USB சார்ஜர் கொடுத்திருப்பது வெகுதூர ரைடுகளுக்கு வசதியாக இருக்கும்.

மைனஸ்

முதலில் தெரிவது சஸ்பென்ஷன் டிராவல். இது ஸ்ட்ரீட் பைக்கின் அதே சஸ்பென்ஷன் என்பதால், சீரியஸ் அட்வென்ச்சருக்கான சஸ்பென்ஷன் டிராவல் வி-ஸ்ட்ராம் SX மாடலில் இல்லை. ஒவ்வொரு பொத்தல்களிலும், ஸ்பீடு பிரேக்கரிலும் அட்வென்ச்சர் என்று நினைத்து ஓட்ட முடியவில்லை. 120 மிமீ போதாது பாஸ்! அடிப்படையாகத் தேவைப்படும் ஏபிஎஸ் ஆஃப் செய்யும் வசதி இதில் இல்லை. டிரிஃப்ட், ஸ்கிட் எல்லாவற்றுக்கும் ஏபிஎஸ் சிறப்பாகச் செயல்படுவது அட்வென்ச்சர் பைக்கிற்கு ஒரு முட்டுக்கட்டை. மெயின் ஸ்டாண்ட் இல்லை, எதிர்காலத்தில் வரலாம். ஹேண்டில்பார் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்க வேண்டும்.

இந்தக் காட்டுல சுஸூகி ஸ்ட்ராம் SX விடியலைப் பார்க்குமா?

வாசகர் தீர்ப்பு

ஏற்கெனவே சுஸூகியில் அவெனிஸ், பேண்டிட் மாடல்களை வைத்திருக்கும் சதீஸ் எங்களுடன் ரிவ்யூவில் பங்கேற்றிருந்தார். இந்த அட்வென்ச்சருக்கு சதீஸின் தீர்ப்பு இதுதான்:

"அட்வென்ச்சர் பைக்கா இல்லையா என்றால், இது சாலையைக் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அட்வென்ச்சர் பைக் என்பது சரி. அட்வென்ச்சர் என்றால் ஆஃப்ரோடுதான் என்றில்லை. இயற்கையை ரசிக்க ஒரு ஃபிளாட்டான ஒற்றையடிப் பாதையில் போவதும், ஒரு மலைச்சாலையில் வெகு தூர க்ரூஸிங் செய்வதும் ஒரு வகையில் அட்வென்ச்சர்தான். அதுபோன்ற சாகசங்களுக்கு வி-ஸ்ட்ராம் சூப்பர். முழுக்க முழுக்க ஆஃப்ரோடு ட்ரையலை இந்த பைக் தாக்குப்பிடிக்குமா என்பதை ஆற்றுப்பள்ளத்தையும், சகதிகளையும் கடந்து ஓட்டிப்பார்க்கும்போதுதான் தெரியும். இப்போதைக்கு இது ஒரு முதல் பைக் வாங்கும் நபருக்கானது கிடையாது. அதே நேரத்தில் ஒரு அனுபவமான சாகசக்காரருக்கும் கிடையாது.

ஜிக்ஸர் 250 மாடலை விட 35,000 ரூபாய் கூடுதல் விலை என்பது முழு மனதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதே விலையில் வேறொரு ஒரு முழு அட்வென்ச்சர் பைக் வாங்கிவிட முடியும் ஆனால், என்னைப் போன்ற சுஸூகி பிரியர்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை!"