Published:Updated:

அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - தெலங்கானா அரசின் புதிய சலுகைகள்!

இந்த வசதி அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல; கூட்டுறவுச் சங்கங்கள், பப்ளிக் செக்டார் பணியாளர்கள், பென்ஷன் வாங்குபவர்கள் அனைவருக்கும் பொருந்துமாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"எல்லோரும் எலெக்ட்ரிக்குக்கு மாறுங்கள்" என்று சத்தமில்லாமல் ஒரு திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது தெலங்கானா அரசு. தெலங்கானா மாநிலம், அநேகமாக இனி மாசற்ற மாநிலமாக மாறலாம். காரணம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான EMI (Equated Monthly Installment) திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது அம்மாநில அரசு. இதன்மூலம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சாலைகளுக்கு வரும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

தெலங்கானா அரசின் திட்டப்பட்டி ஜீரோ டவுன் பேமென்ட் என்பதுதான் ஸ்பெஷல். அதாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது முன்பணமே கட்டாமல் வெறும் மாதத் தவணையை மட்டும் அரசு ஊழியர்கள் செலுத்தினால் போதும்.
Electric Scooter Charging
Electric Scooter Charging

சிங்கிள் சார்ஜில் 40 – 100 கிமீ ரேஞ்சுக்குள் உள்ள எந்த எலெக்ட்ரிக் வாகனங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாதம் 2,500 என 24 – 60 மாதங்களுக்குள் நமக்கு ஏற்றபடி இந்தத் தவணையைச் செலுத்த வேண்டும். வழக்கம்போல், இதில் 3 ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவும் இலவசம். இந்த வசதி அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல; கூட்டுறவுச் சங்கங்கள், பப்ளிக் செக்டார் பணியாளர்கள், பென்ஷன் வாங்குபவர்கள் அனைவருக்கும் பொருந்துமாம்.

‘‘இனிமேல் பப்ளிக் செக்டார் பணிகளுக்குக்கூட எலெக்ட்ரிக் கார்களை டெண்டர் எடுக்கவும் திட்டம் இருக்கிறது’’ என்கிறார் தெலங்கான அரசின் ராமகிருஷ்ணகுமார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் டிவிஎஸ் 1000 கோடி முதலீடு... விற்பனைக்கு வரும் க்ரியான்!

பொதுவாக, நகரங்களில் ஆட்டோ சத்தம்தான் காதையும் சுற்றுச்சூழலையும் பதம் பார்க்கும் விஷயங்கள். அதனால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஒரு மானியத் தொகையை அறிவிக்க இருக்கிறதாம் தெலங்கானா அரசு. மொத்தம் 5,000 டீசல் மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களை எலெக்ட்ரிக் ஆட்டோக்களாக மாற்றும் திட்டம் இருக்கிறதாம். இதற்காக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15,000 ரூபாய் மானியத் தொகையும் அறிவிக்க இருக்கிறார்கள்.

Charging EV Cars
Charging EV Cars

வெறும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓடினால் மட்டும் போதாது; சார்ஜிங் ஸ்டேஷன்களும் வேண்டுமே… அதற்காக மும்பையைச் சேர்ந்த ஒரு எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, 600 சார்ஜிங் ஸ்டேஷன்களையும் நிறுவ திட்டம் போட்டிருக்கிறது தெலங்கானா அரசு. வெறும் சார்ஜிங் ஸ்டேஷன் மட்டுமல்லாது, ஸ்வாப்பிங் ஸ்டேஷனாகவும் இது செயல்படும். அதாவது, சார்ஜ் காலியான பேட்டரிகளைக் கொடுத்துவிட்டு, ஃபுல் சார்ஜ் பேட்டரிகளை வாங்கி மாட்டிக் கொண்டு கிளம்பலாம். இதனால், சார்ஜிங் நேரம் மிச்சம் என்பதுதான் ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களின் அம்சம்.

இதேபோல், ஆந்திர அரசும் அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் வாகன இஎம்ஐ திட்டத்தை ஏற்கெனவே கொண்டு வந்திருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். 500 முதல் 1,000 ஏக்கர்களில் சார்ஜிங் வசதியுடன் EV பார்க் ஒன்றையும் நிறுவத் திட்டமிட்டிருக்கிறது ஆந்திர அரசு. இங்கே 73 இடங்களில் 400 இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் வைக்கத் திட்டம் இருக்கிறதாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு