கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

ஜெஸ்ட்டுக்கு அடுத்ததாய்... ஆக்ஸஸுக்கு நெருக்கமாய்...!

யமஹா ஃபஸினோ 125
பிரீமியம் ஸ்டோரி
News
யமஹா ஃபஸினோ 125

டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்: யமஹா ஃபஸினோ 125

ஃபஸினோ 125... முதல் பார்வையிலேயே இது ஒரு நல்ல அப்கிரேடாகத் தெரிந்தது. 113சிசி ஃபஸினோவுடன் ஒப்பிடும்போது டிசைன் - வசதிகள் - பர்ஃபாமன்ஸ் - ஓட்டுதல் ஆகியவற்றில் மாற்றங்கள் தெரிகின்றன. புது ஃபஸினோ எப்படி இருக்கு?

டிசைன் மற்றும் வசதிகள்

ஃபஸினோ 110 போல இந்த 125சிசி வெர்ஷனையும் ரெட்ரோ ஸ்டைலில் கொண்டு வந்திருக்கிறது யமஹா. முக்கோண வடிவ ஹாலோஜன் ஹெட்லைட், ஆங்காங்கே இருக்கும் க்ரோம் வேலைப்பாடுகள், நீளமான டெயில் பகுதி என ரசிக்கும்படியான அம்சங்கள் ஸ்கூட்டரில் உள்ளன. இதன் பளிச் கலர் ஆப்ஷன்களுக்கு, இளசுகளின் லைக்குகள் கியாரன்ட்டி. அதில் சிவப்பு, நீலம், தங்கம் ஆகிய நிறங்கள், நிச்சயம் ஈர்க்கும். மேட் ஃபினிஷ் கலர்கள் போனஸ் ரகம். (இதில் க்ரோம் வேலைப்பாடுகள் கிடையாது). முன்புபோலவே ஃபஸினோவின் பாடி பேனல்கள் பிளாஸ்டிக்தான் என்றாலும் (முன்பக்க ஃபெண்டர் மட்டும் மெட்டல்), அவற்றின் ஃபிட் அண்டு ஃபினிஷ் நன்றாகவே இருக்கிறது. ஸ்விட்ச்களின் தரமும் ஓகேதான்.

 அனலாக் மீட்டர், சேட்டக்கை நினைவுபடுத்துகிறது.  முன் பக்க டிஸ்க் பிரேக், ஆப்ஷனல்தான்.  பல அம்சங்களை உள்ளடக்கிய மல்ட்டி ஃபங்ஷன் கீ-ஸ்லாட். கிராப் ரெயில் பிடிப்பதற்கு வசதி; டெயில் லைட்-ஹெட்லைட் எதுவுமே எல்இடி இல்லை.  ஹெல்மெட் வைக்கும் அளவுக்கு பூட் ஸ்பேஸ் 21 லிட்டர்; பூட்டுக்கு லைட் இல்லை; பெட்ரோல் டேங்க் இங்கேதான் இருக்கிறது.  கி.கிளியரன்ஸ் 145 மிமீதான் என்பதால், டபுள்ஸ் அடிக்கும்போது ஸ்பீடு பிரேக்கர்களில் கவனம்.
அனலாக் மீட்டர், சேட்டக்கை நினைவுபடுத்துகிறது. முன் பக்க டிஸ்க் பிரேக், ஆப்ஷனல்தான். பல அம்சங்களை உள்ளடக்கிய மல்ட்டி ஃபங்ஷன் கீ-ஸ்லாட். கிராப் ரெயில் பிடிப்பதற்கு வசதி; டெயில் லைட்-ஹெட்லைட் எதுவுமே எல்இடி இல்லை. ஹெல்மெட் வைக்கும் அளவுக்கு பூட் ஸ்பேஸ் 21 லிட்டர்; பூட்டுக்கு லைட் இல்லை; பெட்ரோல் டேங்க் இங்கேதான் இருக்கிறது. கி.கிளியரன்ஸ் 145 மிமீதான் என்பதால், டபுள்ஸ் அடிக்கும்போது ஸ்பீடு பிரேக்கர்களில் கவனம்.

ஆனால் ஸ்கூட்டர் பழையதாகும்போது, இவை கடாமுடாவென ஆகாமல் இருக்குமா என்பது இனிதான் தெரியும். வசதிகளைப் பொறுத்தவரை, இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் - சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் சிஸ்டம் - பல அம்சங்களை உள்ளடக்கிய சாவி துவாரம் - சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டம் - அகலமான பின்பக்க டயர் (110/90-10) ஆகியவற்றைத் தாண்டி பெரிதாக ஒன்றும் இல்லை. ஏனெனில் ஸ்கூட்டரில் எதுவுமே LED கிடையாது (பூட் லைட் மிஸ்ஸிங்). மேலும் ஸ்பீடோமீட்டரும் அனலாக்தான் (இது சேட்டக்கை நினைவுபடுத்துகிறது). தவிர மொபைல் சார்ஜிங் பாயின்ட்கூட ஆக்சஸரிஸ்தான் என்பது பெரிய மைனஸ். இதனுடன் 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் மூடியும் சீட்டுக்கு அடியேதான்! மொத்தமாகப் பார்த்தால், ஸ்கூட்டரின் டிசைனில் தெரிந்த தாராளம் வசதிகளில் இல்லை. ரே ஸ்கூட்டரில் இருக்கும் டிஜிட்டல் மீட்டர் & LED DRL, இங்கே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 21 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் தாராளம்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ்

ஃபஸினோவின் சேஸி போலவே, 2 வால்வ் - ஏர் கூல்டு 125சிசி இன்ஜினும் புத்தம் புதிது. இது வெளிப்படுத்தும் 8.2bhp பவர் மற்றும் 0.97kgm டார்க் ஆகியவை போட்டியாளர்களைவிடக் குறைவு. 113சிசி ஃபஸினோவைவிட 30% அதிக பவர் மற்றும் 16% அதிக மைலேஜை, 125சிசி ஃபஸினோ தருவதாக யமஹா கூறுகிறது. இந்த ஸ்கூட்டரின் எடை வெறும் 99 கிலோ என்பது வியப்பளிக்கும் தகவல் (110சிசி ஸ்கூட்டி ஜெஸ்ட்டுக்கு அடுத்தபடியாக, இதுதான் எடை குறைவான ஸ்கூட்டர்). எனவே 0 - 60 கிமீ வேகத்தை 8.41 விநாடிகளில் இது எட்டிப்பிடிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை (சுஸூகி ஆக்ஸஸைவிட 0.33 விநாடியே அதிகம்).

யமஹா ஃபஸினோ 125
யமஹா ஃபஸினோ 125

மேலும் 0 - 80 கிமீ வேகத்தை 16.84 விநாடிகளில் எட்டும் ஃபஸினோ 125-ன் அதிகபட்ச வேகம் 89 கிமீ. இந்த Bluecore இன்ஜினின் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸும் நன்றாகவே உள்ளது. மற்றபடி நெரிசல்மிக்க நகரச்சாலை அல்லது விசாலமான நெடுஞ்சாலை என எந்த வேகத்தில் எங்கு பயணித்தாலும், இன்ஜின் அதிர்வுகளின்றி இயங்குவது பெரிய ப்ளஸ்.

ஃபஸினோ 125-ன் குறைவான எடை, அதன் அதிக மைலேஜுக்குக் கைகொடுக்கிறது. அதன்படி நகரத்தில் 57.08 கிமீயும் - நெடுஞ்சாலையில் 64.2 கிமீயும் மைலேஜ் தந்தது. ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் கூடுதல் மைலேஜுக்கு வழிவகுத்தாலும், அது இயங்கும் விதம் சீராக இல்லை. ஆக்ஸிலரேட்டரைத் திருகிய பிறகு, சில விநாடிகள் கடந்தவுடன்தான் இன்ஜின் ஸ்டார்ட் ஆகிறது. ஹோண்டா ஆக்டிவா 125-ல் இதே சிஸ்டம் சீராக வேலை செய்ததை நாம் பார்த்தோம். செல்ஃப் ஸ்டார்ட் தவிர கிக் ஸ்டார்ட் வசதியும் இதில் உண்டு.

ஓட்டுதல் அனுபவம், எர்கனாமிக்ஸ்

ஃபஸினோ 125-ன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன், இறுக்கமான செட்-அப்பைக் கொண்டிருக்கிறது. எனவே குறைவான வேகத்தில் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, ஓட்டுதல் அவ்வளவு சொகுசாக இல்லை. வேகமெடுத்த பிறகு ஓட்டுதல் நன்றாக இருந்தாலும், அது டிவிஎஸ் என்டார்க் அளவுக்கு நச்சென இல்லை. தவிர ஸ்கூட்டரின் எடையும் குறைவு என்பதால், இந்த யமஹா நிலைத்தன்மையில் கொஞ்சம் மதிப்பெண்களை இழந்துவிடுகிறது (1,280மிமீ வீல்பேஸ் உண்டு). ஆப்ஷனலாகக் கிடைக்கும் முன்பக்க 190மிமீ டிஸ்க் பிரேக்கின் ரெஸ்பான்ஸ், இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். 60கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால், 17.43 விநாடிகளில் ஸ்கூட்டர் நின்றுவிடுகிறது. UBS அம்சத்தைக் கொண்ட டிரம் பிரேக்ஸின் ஃபீட்பேக்கும் ஓகேதான்.

ஃபஸினோ 125-ன் ரெட்ரோ டிசைனுக்காக, சில எர்கனாமிக்ஸ் குறைபாடுகளை ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழல் நிலவுகிறது. 145மிமீதான் கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் ஸ்கூட்டரை ஏற்றி இறக்கும்போது கவனம் தேவை (பில்லியனுடன் செல்லும்போது). மேலும் பெரிய கால்கள் கொண்டவர்களுக்கு, இதன் ஃப்ளோர் போர்டு நெருக்கடியாக இருக்கலாம். தவிர 5.8 அடிக்கு மேலான உயரத்தில் இருப்பவர்கள் இதில் உட்கார்ந்து வாகனத்தைத் திருப்ப நேரிட்டால், ஹேண்டில்பார் கால்களை இடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனுடன் 780மிமீ உயரத்தில் இருக்கும் சிங்கிள் பீஸ் சீட்டின் குஷனிங் மென்மையாக இருப்பதால், நீண்ட நேரப் பயணங்களுக்கு இது அசெளகரியமாக இருக்கலாம்.

ஜெஸ்ட்டுக்கு அடுத்ததாய்... ஆக்ஸஸுக்கு நெருக்கமாய்...!

சதிகளில் விட்டதை, விலையில் சரிசெய்துவிட்டது யமஹா. ரூபாய் 70,750 - 74,250 தமிழக எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கிறது இந்த ஸ்கூட்டர். எதிர்பார்த்தபடியே, ஃபஸினோவின் ரெட்ரோ டிசைன்தான் அதன் மிகப்பெரிய துருப்புச் சீட்டு. சிறப்பான பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் ஆகியவை அடுத்த ப்ளஸ் பாயின்ட். ஆனால் சொகுசு, ஓட்டுதல் ஆகியவற்றில் இது டிஸ்டிங்ஷன் வாங்காவிட்டாலும், பாஸ் மார்க் பெற்றுவிடுகிறது. மற்றபடி எடை குறைவாக இருந்தாலும், அந்த ஜப்பானிய தயாரிப்புகளுக்கே உரித்தான நம்பகத்தன்மைதான் ஃபஸினோவின் பலம்.