Published:Updated:

பைக் டிசைன்... ஆனால் ஸ்கூட்டர்!

யமஹா ரே-ZR 125
பிரீமியம் ஸ்டோரி
யமஹா ரே-ZR 125

டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்: யமஹா ரே-ZR 125

பைக் டிசைன்... ஆனால் ஸ்கூட்டர்!

டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்: யமஹா ரே-ZR 125

Published:Updated:
யமஹா ரே-ZR 125
பிரீமியம் ஸ்டோரி
யமஹா ரே-ZR 125
125சிசிஸ்கூட்டர் செக்மென்ட்... வழக்கமான ஸ்கூட்டர்களிலிருந்து வித்தியாசமான ஒரு தயாரிப்பு வேண்டும் என்பவர்களைத் திருப்திப்படுத்தும் ஏரியாவாகத் திகழ்கிறது. இதற்கு மக்கள் தரும் வரவேற்பு காரணமாக, ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே இந்தப் பிரிவில் தங்களுக்கு என ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொள்ள விரும்புகின்றன.

அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறது யமஹா. அதற்கேற்ப ரெட்ரோ லுக்கில் ஃபஸினோவையும், ஸ்போர்ட்டி லுக்கில் ரே-ZR என இரு மாடல்களையும் இந்த நிறுவனம் களமிறக்கிவிட்டது. 110சிசியில் இருந்து 125சிசிக்குப் ப்ரமோஷன் பெற்றிருக்கும் ரே எப்படி இருக்கிறது?

1. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல் ஸ்போர்ட்டி. ஆனால் டிவிஎஸ், சுஸூகிபோல புளூடூத் கனெக்ட்டிவிட்டி இல்லை.  2. ஷார்ப்பான ஹெட்லைட் இன்னும் ஸ்போர்ட்டி. ஆனால், ஹாலோஜன் பல்புகள்தான்.   3. 125 ஸ்கூட்டர் என்பதற்கு அடையாளமாக ஸ்டிக்கர் டிசைன் அருமை. 4. 21 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஓகே. பெட்ரோல் போட சீட்டைத் திறந்துதான் ஆக வேண்டும்.
1. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல் ஸ்போர்ட்டி. ஆனால் டிவிஎஸ், சுஸூகிபோல புளூடூத் கனெக்ட்டிவிட்டி இல்லை. 2. ஷார்ப்பான ஹெட்லைட் இன்னும் ஸ்போர்ட்டி. ஆனால், ஹாலோஜன் பல்புகள்தான். 3. 125 ஸ்கூட்டர் என்பதற்கு அடையாளமாக ஸ்டிக்கர் டிசைன் அருமை. 4. 21 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஓகே. பெட்ரோல் போட சீட்டைத் திறந்துதான் ஆக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிசைன் மற்றும் வசதிகள்

காலம் சென்ற தனது 110சிசி மாடலின் `Armoured Energy’ டிசைனைப் பின்பற்றியே, ரே-ZRன் 125சிசி வெர்ஷனை வடிவமைத்துள்ளது யமஹா. ஏப்ரானில் இடம்பிடித்திருக்கும் Faux ஏர் வென்ட்கள், ஸ்கூட்டரின் முன்பக்கத்துக்கு ஸ்டைலான தோற்றத்தைத் தருகின்றன. மேலும் இங்கே இருக்கும் Gloss மற்றும் Matte பாடி பேனல்கள், பக்கா Contrast ஃபீலுடன் அமைந்துள்ளன. ஹேண்டில்பாரில் இருக்கும் சிறிய விண்ட் ஸ்க்ரீன் மற்றும் Y வடிவ LED DRL, ஸ்போர்ட்டி டச் எனலாம். இங்குள்ள ரியர் வியூ மிரர்கள் மற்றும் இண்டிகேட்டர்கள், FZ பைக்கில் இருப்பவையேதான்! பக்கவாட்டு பாடி பேனல்கள், ஸ்கூட்டரின் டிசைனுடன் இயைந்து போகின்றன. இங்கும் முன்பக்கத்தைப் போல Gloss & Matte ஃபினிஷ் எதிரொலிக்கிறது. க்யூட்டான டெயில் லைட் மற்றும் வழக்கமான கிராப் ரெயில், பின்பக்கத்தை முழுமையாக்குகின்றன. பெரிய எக்ஸாஸ்ட், BS-6 விதிகளுக்கேற்ப இருக்கிறது. புதிய ப்ளாட்ஃபார்மில் தயாராகி இருக்கும் ரே-ZR, பெரிய ஸ்கூட்டர் போலக் காட்சியளிக்கிறது. என்றாலும், இதுவும் ஃபஸினோ 125 போல 99 கிலோ எடைதான் என்பது ஆச்சர்யம்தான். (முந்தைய 110சிசி மாடலைவிட, 4 கிலோ எடை குறைவு).

சிங்கிள் பீஸ் சீட்டுக்கு அடியே, போதுமான 21 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது. ஆனால் இதற்கான லைட் மற்றும் USB பாயின்ட் இல்லாதது பெரிய மைனஸ் (USB பாயின்ட்டை ஆக்ஸசரியில் வாங்கலாம்). மேலும் போட்டி 125சிசி ஸ்கூட்டர்களைப்போல இல்லாமல், 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் மூடி சீட்டுக்கு அடியேதான் உள்ளது. ஹெட்லைட்டும் ஹாலோஜன் பல்ப்தான் (35/35W). டிஜிட்டல் மீட்டர், தேவையான தகவல்களைத் தெளிவாகத் தருகிறது. ஆனால் டிவிஎஸ் மற்றும் சுஸூகி போல இங்கே புளூடுத் கனெக்ட்டிவிட்டி கிடையாது. மற்றபடி சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச், பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய சாவி துவாரம், சைலன்ட் ஸ்டார்ட், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், முன்பக்க 12 இன்ச் வீல் & டிஸ்க் பிரேக் ஆப்ஷன், அலாய் வீல்கள் எனச் சிறப்பம்சங்கள் தொடர்கின்றன. இருப்பினும் ரே-ZR 125ல் பாஸ் லைட் & கில் ஸ்விட்ச் மிஸ்ஸிங் என்பதுடன், டிரம் மாடலில் வழக்கமான அனலாக் மீட்டர்கள்தான்! பைகளை மாட்டுவதற்குத் தேவையான Hook கூட ஆக்ஸசரிதான் என்பது பெரிய மைனஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
யமஹா ரே-ZR 125
யமஹா ரே-ZR 125

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ்

ஃபஸினோ 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 125சிசி BlueCore இன்ஜின்தான், ரே-ZR 125 ஸ்கூட்டரிலும் இடம்பிடித்துள்ளது. எனவே இது வெளிப்படுத்தும் 8.2bhp பவர் மற்றும் 0.97kgm டார்க் ஆகியவற்றில் எந்த மாறுதலும் இல்லை. போட்டி 125சிசி ஸ்கூட்டர்களைவிட இது குறைவு என்றாலும், அவற்றைவிடக் குறைவான எடை என்பதால், பெர்ஃபாமன்ஸ் நன்றாகவே உள்ளது. 0-60கிமீ வேகத்தை 8.46 விநாடிகளில் எட்டிப் பிடிக்கும் இந்த ஸ்கூட்டர், 80கிமீ வேகத்தை 18.77 விநாடிகளில் எட்டுகிறது. மேலும் 30-60கிமீ வேகத்தின்போது கிடைக்கக் கூடிய ஆக்ஸிலரேஷன், முன்பைவிட 30% அதிகரித்துள்ளதாக யமஹா கூறியுள்ளது. முன்செல்லும் வாகனத்தை முந்திச்செல்ல நேரும்போது, இதனை நன்றாகவே உணர முடிகிறது. தவிர ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்யும் இந்த இன்ஜின், ஆவரேஜாக 55 மைலேஜ் தரலாம். இதற்கு ரே-ZRன் குறைவான எடை மற்றும் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் துணை நிற்கிறது. ஆனால் ஹோண்டா ஸ்கூட்டர்களைப்போல, இங்கே ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் சீராகச் செயல்படவில்லை. இந்த வசதியைத் தேவைபட்டால் ஆஃப் செய்துகொள்ளக்கூடிய வசதியையும் யமஹா கொடுத்திருக்கிறது.

யமஹா ரே-ZR 125
யமஹா ரே-ZR 125

ஓட்டுதல் அனுபவம்

ஃபஸினோ 125 தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில்தான், ரே-ZR 125-ம் தயாராகிறது. எனவே ஓட்டுதலில், இரு ஸ்கூட்டர்களிலும் அதிக ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. அதற்கேற்ப குறைவான வேகங்களில் செல்லும்போது, சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமாகவே உள்ளது (டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக்). இதனால் சாலை தரும் இடர்பாடுகளை, ரைடர் உணர முடிவது நெருடல். மேலும் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், இந்த ஸ்கூட்டரின் சீட் கொஞ்சம் ஓகே ரகம்தான் (785மிமீ சீட் உயரம்). ஆனால் அவற்றை விட அகலமான பின்பக்க டியூப்லெஸ் டயர் இருப்பதால் (110/90-10), நிலைத்தன்மையில் முன்னேற்றம் தெரிகிறது (1,280மிமீ வீல்பேஸ்). காம்பி பிரேக் உடன் வரும் 190மிமீ டிஸ்க்-டிரம் பிரேக் செட்-அப்பின் ஃபீட்பேக் டல்லாகத் தெரிந்தாலும், அது ஸ்கூட்டரைக் கச்சிதமாக நிறுத்திவிடுகிறது. 60கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால், 20 மீட்டர்களில் ஸ்கூட்டர் நின்றுவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பைக் டிசைன்... ஆனால் ஸ்கூட்டர்!

டிசைனில் அசத்தும் ரே-ZR 125, வசதிகளில் கொஞ்சம் பின்தங்கி விடுகிறது. மேலும் சொகுசான & நிலையான ஓட்டுதல் கொண்ட என்டார்க் உடன் ஒப்பிட்டால், ஓட்டுதல் தரத்தில் இது பாஸ் மார்க்தான் வாங்குகிறது. ஆனால் பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் விஷயத்தில், இந்த ஸ்கூட்டர் டிஸ்டிங்ஷன் அடித்துவிட்டது. மேலும் குறைவான எடையில் ஒரு 125சிசி ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்களை, இந்த யமஹா தயாரிப்பு கவரும் என்றே தோன்றுகிறது. 70,810 - 73,810 ரூபாய் எனும் தமிழக எக்ஸ்-ஷோரூம் விலையில், இரு வேரியன்ட்கள் மற்றும் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் ரே-ZR 125, இளசுகளைக் கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism