ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

ஹீரோவுடன் பார்ட்னர்ஷிப்… தைவான் கொகோரோ ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருது!

கொகோரோ
பிரீமியம் ஸ்டோரி
News
கொகோரோ

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: கொகோரோ

ஹீரோவுடன் பார்ட்னர்ஷிப்…
தைவான் கொகோரோ ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருது!

வதவதவென எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் களமிறங்க ஆரம்பித்து விட்டன இந்தியாவில். ஹாப், பவுன்ஸ், மோன்ட்ரா (3வீலர்), ப்ரானா, ரிவோல்ட், ஓபென் ரோர், அல்ட்ரா வயலெட் என்று ஏகப்பட்ட எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிதாக சீனாவைச் சேர்ந்த கொகோரோ எனும் நிறுவனம், இந்தியாவுக்கு அடுத்த மாதம் வரவிருக்கிறது. ஓலா நிறுவனம், எட்டெர்கோ எனும் நெதர்லாந்து நிறுவனத்தின் ஸ்கூட்டரை வாங்கி, அப்படியே இங்கே ஓலா S1 எனும் பெயரில் விற்பனை செய்ததைப்போல், இந்த கொகோரோவும் சீனாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் S1 ஸ்கூட்டரை அப்படியே இந்தியாவுக்கு ஏற்றபடி ட்யூன் செய்து கொண்டு வரவிருக்கிறது.

ஹீரோவுடன் பார்ட்னர்ஷிப்…
தைவான் கொகோரோ ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருது!
ஹீரோவுடன் பார்ட்னர்ஷிப்…
தைவான் கொகோரோ ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருது!

முதலில் கொகோரோ பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு பாரா செய்தி:

கொகோரோ (Gogoro) … ஏதோ கோழி கூவுற மாதிரி இருக்கும் இந்தப் பெயரை, தைவானில் போய்க் கேட்டுப் பாருங்கள். அத்தனை பெரிய ரவுடி கம்பெனிதான் கொகோரோ. அதாவது, எலெக்ட்ரிக் மொபிலிட்டியில் முக்கியமான இடம் இதற்கு உண்டு. தைவான் தவிர, சீனாவின் வேறு சில பகுதிகளிலும் இது வெற்றிக் கொடி நாட்டுகிறது. தைவானின் ஏதாவதொரு சிக்னலில் 50 ஸ்கூட்டர்கள் நின்று கொண்டிருந்தால்… அதில் 30 ஸ்கூட்டர் கொகோரோவின் தயாரிப்புகளாகத்தான் இருக்கும்.

இது வெறும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் மட்டுமில்லை; பேட்டரி ஸ்வாப்பிங்கிலும் (Battery Swapping) கொடி கட்டிப் பறக்கும் நிறுவனம். ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால், அதில் பெரிய பிரச்னையாக எதைச் சொல்வீர்கள்? பேட்டரி சார்ஜிங்தானே! அதற்கு முக்கியத் தீர்வாக இருப்பதுதான் இந்த பேட்டரி ஸ்வாப்பிங். அதாவது, உங்கள் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை சார்ஜ் போடத் தேவையில்லை. காலியான பேட்டரியைக் கழற்றி, சார்ஜ் ஏற்றிய புது பேட்டரியை ஸ்கூட்டரில் ஃபிட் செய்துவிட்டுப் பறக்கலாம். இதற்கு 6 விநாடிகள்தான் ஆகும் என்று, அதை நிரூபிக்கவும் செய்திருக்கிறது கொகோரோ.

அதற்கு ஏகப்பட்ட பேட்டரி நெட்வொர்க் ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் இருந்தால்தான் சாத்தியம். சீனாவில் கொகோரோவின் கொடி இதனால்தான் ஓங்கியிருக்கிறது. தைவானில் சுமார் 2,400 லொக்கேஷன்களில் சுமார் 10,000 பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை வைத்திருக்கிறது கொகோரோ. இதன் மூலம் தைவானில் ஆண்டுக்கு 150 மில்லியன் ஸ்வாப்பிங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தைவானின் வணிக ஆப்பரேஷன்கள் 26% மார்க்கெட்டை, கொகோரோ மட்டுமே நடத்துகிறது.

அப்படிப்பட்ட கொகோரோ… இந்தியாவுக்கு வரப் போகிறது. இதற்கு அது பார்ட்னர்ஷிப் வைத்திருப்பது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன். ஏற்கெனவே ஹீரோ மோட்டோ கார்ப்பின் விடா ஸ்கூட்டர் பற்றிப் போன மாதம் பார்த்தோம். இந்த மாதத் தொடக்கத்தில், ஒரு பிரஸ்மீட்டை வைத்து தனது இந்திய வருகையை அறிவித்துவிட்டது கொகோரோ. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்றால், அதற்கு பேட்டரி ஸ்வாப்பிங்தான் ஒரே வழி. அதைக் கையில் எடுத்துத்தான் வந்திருக்கிறது கொகோரோ. மேலும் இந்த நிறுவனத்தின் USP-ம் இதுதான்; பேட்டரி ஸ்வாப்பிங் என்பது கொகோரோவுக்குக் கை வந்த கலை.

பேட்டரி ஸ்வாப்பிங் மட்டுமில்லை; ஓர் அற்புதமான ஸ்கூட்டரையும் கொண்டு வர இருக்கிறதாம் கொகோரோ. ஆனால், எந்த ஸ்கூட்டர் என்று அதிகாரப்பூர்வமாக இன்னும் சொல்லவில்லை அது. இருந்தாலும், தைவானில் சக்கைப் போடு போடும் Gogoro S1 எனும் ஸ்கூட்டரின் காப்பி பேஸ்ட்டாகத்தான் இது இருக்கலாம் என்கிறார்கள். கொகோரோ S1 ஸ்கூட்டரின் முக்கியமான சில அம்சங்களைப் பற்றி ஒரு சின்ன லிஸ்ட்!

* இப்போது எந்த ஸ்கூட்டர்களை எடுத்தாலும், 1.5 லட்ச ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். இந்த கொகோரோ S1 ஸ்கூட்டரும் அந்த செக்மென்ட்டில்தான் வரவிருக்கிறது. ஒருவேளை, பேட்டரி ஸ்வாப்பிங் சிஸ்டத்தில் இது வந்தால்… அதாவது பேட்டரி இல்லாமலும் இதை வாங்கிக் கொள்ளும் ஆப்ஷன் என்றால், விலை நன்கு குறையலாம்.

* இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 7.2kW. அதாவது சுமார் 9.6Bhp. இதன் டார்க் 27 Nm. ஒரு கம்யூட்டிங் ஸ்கூட்டருக்கு இந்தப் பவரும் டார்க்கும் போதுமானதாக இருக்கும். இது ஒரு லிக்விட் கூல்டு பெர்மனென்ட் மோட்டார்.

* இதன் பெர்ஃபாமன்ஸ், ஓகே ரகமாகவே இருக்கும். அதாவது, 3.7 விநாடிகளில் இது 50 கிமீ வேகத்தைக் கடக்கும் என்கிறது கொகோரோ.

 * இது மிட் மவுன்ட் சிங்கிள் மோட்டார் செட்–அப்பைக் கொண்டிருக்கும்.

* இது அலுமினியம் மோனோகாக் சேஸி பாடி கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர். இதன் முன் பக்கம் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின் பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்அப்பும் கொண்டிருக்கும். இதை இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி ரீ–இன்ஜீனியரிங் செய்ய இருக்கிறது கொகோரோ.

* இதன் அண்டர் சீட் ஸ்டோரேஜ் இடவசதி 24.5 லிட்டர் இருக்கலாம். இது ஓலாவின் S1 Pro (36 லி), S1 (34 லி) –யை விடக் குறைவுதான். மற்றபடி இது பிராக்டிக்காலிட்டியில் குறை வைக்காத ஸ்கூட்டராக இருக்கும்.

ஹீரோவுடன் பார்ட்னர்ஷிப்…
தைவான் கொகோரோ ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருது!
ஹீரோவுடன் பார்ட்னர்ஷிப்…
தைவான் கொகோரோ ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருது!
ஹீரோவுடன் பார்ட்னர்ஷிப்…
தைவான் கொகோரோ ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருது!

* ஓலா ஸ்கூட்டருக்கு இணையாக வசதிகளும் இருக்கும். இதிலும் டச் ஸ்க்ரீன், ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்டபிள் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், கீலெஸ் ஆப்பரேஷன், ரைடிங் மோடுகள் போன்றவை உண்டு. இதில் டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன் ஸ்டாண்டர்டு ஆப்ஷனாகக் கொடுக்கப்படலாம்.

* ஓலாவை ஒப்பிடும்போது, இதன் பேட்டரி குறைவான பவரே கொண்டிருக்கும். அதனால் இதன் ரேஞ்சும் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் இதன் சிங்கிள் ரேஞ்ச், சுமார் 100 கிமீ வரை இருந்தால் சூப்பர். ஆனால், 30 கிமீ வேகத்திலேயே க்ரூஸ் செய்தால், 150 கிமீ வரை போகலாம் என்கிறது கொகோரோ. இதில் சார்ஜிங் நேரமும் மற்ற ஸ்கூட்டர்களைவிடக் குறைவாகவே இருக்கும்.

* இதில் ஓலாவைத் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதன் பேட்டரி டிப்பார்ட்மென்ட்டில்தான். இந்த ஸ்கூட்டரியில் உள்ள லித்தியம் அயன் பேட்டரியின் எடை 18 கிலோ. இது ஒரு ரிமூவபிள் பேட்டரி. அதாவது, இதைத் தனியாக எடுத்து கழற்றி சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

* இது ஹீரோ மோட்டோ கார்ப்புடன் கை கோர்ப்பதால்… ஹீரோவின் விடா ஸ்கூட்டரின் பேட்டரி இதற்கும் பொருந்தலாம். அதனால், ஹீரோவின் நெட்வொர்க் சார்ஜிங் ஸ்டேஷன்களிலும் இந்த கொகோரோவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதன் முதல்படியாக Zypp Electric எனும் இந்திய நிறுவனத்துடன் கூட்டு வைத்து, ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை டெல்லியில் ஆரம்பித்து, அப்படியே முக்கியமான நகரங்களில் கொண்டு வர இருக்கிறது கொகோரோ.

* டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஓலா S1, ஹீரோ விடா, சிம்பிள் ஒன், ஏத்தர் 450X, பவுன்ஸ் போன்ற ஸ்கூட்டர்களுக்கு கொகோரோ போட்டியாக வருகிறது. சீனத் தயாரிப்பு என்பதால் விலை, ரேஞ்சில் கவனம் வைத்தால்… போட்டியில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது.

B2B செக்மென்ட்டுக்கும் ஒரு ஸ்கூட்டர்!

கொகோரோ B2B பயன்பாட்டிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறது. Last Mile Delivery போன்ற தொழிற்பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஒரு ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தலாம் என்கிறார்கள். ஏற்கெனவே லாஸ்ட் மைல் டெலிவரி தொழிற்பயன்பாட்டு செக்மென்ட்டில் ஹீரோவின் Hero Electric NYX HS500 ER, ஒக்கினாவா டூயல் 100 போன்ற ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்கின்றன. கொகோரோ, 4bhp பவர் கொண்ட, விவா என்றொரு 80,000 ரூபாய் விலையில் ஸ்கூட்டரை இதற்காக அறிமுகப்படுத்தலாம் என்கிறார்கள்.