Published:Updated:

பொங்கலுக்கு உங்களோட புது வாகனம் எலெக்ட்ரிக்கா இருக்கட்டுமே... அப்படி என்ன நன்மை இதுல?

Ather | எலெக்ட்ரிக் வாகனம்
News
Ather | எலெக்ட்ரிக் வாகனம்

‘சூர்யவம்சம்’ ராதிகா ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், "ரூபாய்க்கு 4 கிமீ ஓடுற எலெக்ட்ரிக் எங்க… 4 ரூபாய்க்கு 1 கிமீ கூட ஓடத் திணறுற பெட்ரோல் ஸ்கூட்டர் எங்க!!!?"

ஒரு சின்னப் புள்ளி விவரம்… போன வருஷம் இதே பொங்கல் நாளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 87 ரூபாய். இப்போது 100 ரூபாய் கொடுத்தால்… ஒரு லிட்டருக்குச் சில மில்லிகள் கொஞ்சம் கம்மியாய்த்தான் விழுகிறது பெட்ரோல். ஒரு வருஷத்துக்கு 13 ரூபாய் ஏறியிருக்கிறது. அட, வாகனங்களின் விலை, பெட்ரோல்/டீசல் விலையைவிடப் பயமுறுத்துகிறது.

புள்ளி விவரத்தை விட்டுத் தள்ளுங்க! இந்த நேரத்தில் ஒரு புத்திசாலித்தனமான ஐடியா ஒன்று தோன்றுகிறது. பெட்ரோல்/டீசலில் ஓடுகிற ICE (Internal Combustion Engine) வாகனங்களுக்குப் பதில் ஏன் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கக் கூடாது? ‘ஏன் பாஸ்.. எலெக்ட்ரிக் வண்டி மட்டும் ரேஷன் கடையில் தர்ற பொங்கல் படியில 16 பொருள்களோடு இலவசமாவா வருது’ என்று நீங்கள் கேவலமாகக் கேட்பது கேட்கிறது. உண்மைதான்; ஆனால், ஒரு ஐசி இன்ஜின் வாகனம் வாங்குவதைவிட, ஒரு எலெக்ட்ரிக் வாகனம் வாங்குவதில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கு பாஸ்! (‘வண்டிக்கு சார்ஜ் போட எலெக்ட்ரிக் ஸ்டேஷன் நீங்களா தொறந்திருக்கீங்க’ என்று திட்டுவதும் கேட்கிறது!)

Ola
Ola

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எலெக்ட்ரிக் வாகனங்களில் நினைத்த இடத்தில் சார்ஜிங் போட முடியாதே; நினைக்கிற தூரம் போக முடியாதே; ‘ஜில்லுனு ஒரு காதல்’ சூர்யா மாதிரி ஜிவ்வுனு பறக்க முடியாதே; பெட்ரோல் வாகனம் மாதிரி ரீ–சேல் பண்ணி காசு பார்க்க முடியாதே என்று சில மைனஸ்கள் உண்டுதான். ‘ஆபீஸ் விட்டா வீடு; வீடு விட்டா ஆபீஸ்’ னு இருக்கும் நல்ல பிள்ளைகளுக்கு, சாதா வண்டிகளைவிட எலெக்ட்ரிக் வாகனங்களில் அவ்வளவு நல்ல விஷயம் இருக்கு பாஸ்!

கூட்டிக் கழிச்சுப் பாருங்க!

பெட்ரோல்/டீசல் வாகனங்கள் வாங்குவதற்கு அரசாங்கத்திடம் மானியம் கேட்டால்… ‘உங்க சம்பளத்தில் இருந்து நீங்கதான் அரசாங்கத்துக்கு இவ்வளவு காசு தரணும்’ என்று வடிவேலுவிடம் கணக்குக் கேட்கும் சத்யராஜ் மாதிரி வரியைக் கட்டச் சொல்வார்கள். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அப்படியில்லை. FAME II (Faster Adoption and Manufacturing of Electric and Hybrid Vehicles) என்றொரு மானியம், சத்தமில்லாமல் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் உண்டு. இதை மார்ச் 2024 வரைக்கும் எக்ஸ்டெண்ட் செய்திருக்கிறது அரசு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு புளூடூத் கனெக்டிவிட்ட கொண்ட டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரை எடுத்துக் கொள்வோம். இதன் ஆன்ரோடு விலை – சுமார் 1.06 லட்சம். அதிகம் விற்பனையாகிற ஒரு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்துக் கொள்வோம். இதன் ஆன்ரோடு விலை 1.40 லட்சம். விலை அதிகம்தான்; இது கார்களுக்கும் பொருந்தும்தான். ஆனால், நீங்கள் வருடக்கணக்கில் போடுகிற எரிபொருளுக்கும் சார்ஜுக்கும் ஒப்பிட்டுப் பாருங்கள். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்… கணக்கு இடிக்கும்; ஆம், பெட்ரோல்தான் பட்ஜெட்டில் போர்வை விழக் காரணமாக இருக்கும். எலெக்ட்ரிக்கில் விலை குறைவான ஸ்கூட்டர்களும் உண்டு பாஸ். 65,000 முதல் 80,000–க்கெல்லாம் கிடைக்கும் ஆம்பியர், ஒக்கினாவா, கோமாக்கி, ஹீரோ ஸ்கூட்டர்களை டிக் அடிக்கலாமே!

Electric Scooter
Electric Scooter

ரூபாய்க்கு 4 கிமீ போகணுமா... 4 ரூபாய்க்கு 1 கிமீ கிடைச்சா போதுமா?

உங்கள் பயணம் ஒரு நாளைக்கு சுமார் 50 கிமீ; உங்கள் எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் 90 கிமீ என்று வைத்துக் கொள்வோம். 3kWh கொண்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபுல் சார்ஜ் போட 4–6 மணி நேரம் சார்ஜிங் நேரம் ஆகும். ஒரு ஃபுல் சார்ஜுக்கு அதிகபட்சம் 3 யூனிட்டுக்கு மேல் ஆகாது. (கார்களுக்கு என்றால், 5 யூனிட்னு வெச்சுக்கலாம்.) வீடுகளில் ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய்க்கு மேல் போகாது. கடை எலெக்ட்ரிக் என்றால் தனி ரேட். ஒரு நாளைக்கு 3 யூனிட்களுக்கு 15 ரூபாயில் ஃபுல் சார்ஜ் ஏறிவிடும். இது மாதத்துக்கு 450 ரூபாய். இதுவே 50 கிமீ–க்குக் குறைவான பயணம்தான் என்றால், நாளுக்கொரு சார்ஜிங் தேவையில்லை. இரண்டு நாளுக்கொரு தடவை போடும் பட்சத்தில் 225 ரூபாய்தான் வருகிறது. அதாவது ஒரு ரூபாய்க்கு 3 – 4 கிமீ பயணிக்கலாம் எலெக்ட்ரிக்கில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியே பெட்ரோலுக்கு வாங்க! லிட்டருக்கு 50 கிமீ–க்கு மேல் மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டர்கள் இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாய். அப்படியென்றால், ஒரு நாளைக்கு 101 ரூபாய். மாசத்துக்கு 3,030 ரூபாய். (150 சிசி பைக்குக்கெல்லாம் ஒரு நாளைக்கு 100 ரூபாய் பத்தாதே பாஸ்!) இதில் 4 ரூபாய்க்கு 1 கிமீ வருது… கணக்கு அப்படியே தலைகீழாகும்! ‘மாசத்துக்கு 450 ரூபாய் எங்க இருக்கு… 3,030 ரூபாய் எங்க இருக்கு!’

‘சூர்யவம்சம்’ ராதிகா ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், "ரூபாய்க்கு 4 கிமீ ஓடுற எலெக்ட்ரிக் எங்க… 4 ரூபாய்க்கு 1 கிமீ கூட ஓடத் திணறுற பெட்ரோல் ஸ்கூட்டர் எங்க!!!?"

இதுவே கார்களுக்கு இன்னும் செமத்தியான லாபம் கிடைக்கும் மக்களே! நமது மோட்டார் விகடன் வாசகரும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் உரிமையாளருமான கோவையைச் சேர்ந்த ராஜராஜன் என்பவர், தனது நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மூலம் மாதம் 5,000 டீசல் செலவை மிச்சப்படுத்துவதாகச் சொல்கிறார்.

Battery Li-Ion
Battery Li-Ion
Autocar India

சர்வீஸுக்கு 200 ரூபாய் இருந்தா போதும்!

ஒரு ICE வாகனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சர்வீஸ் என்று போகும்போதுதான் இந்த வாகனங்களின் அடமென்ட் புரியும். ‘பீரியாடிக்கல் சர்வீஸ் பண்ணணும்… இன்ஜின் ஆயில் ஊத்தணும்… ஸ்பார்க் பிளக் போயிடுச்சு… ஃப்யூல் பில்ட்டர்/ஏர் ஃபில்ட்டர் மாத்தணும்… டீசல் இன்ஜெக்ட்டர் லைஃப் முடிஞ்சிடுச்சு’ என்று சர்வீஸில் படுத்தி எடுப்பார்கள். இதுபோக டயர், பிரேக் பேடுகள், ஆக்ஸிலரேட்டர் கேபிள் என்று தேய்மானச் செலவுகள் வேறு பேய் மாதிரி பயமுறுத்தும்!

இதுவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இந்தத் தொல்லைகள் இருக்காது. காரணம், இன்ஜின் இருந்தால்தானே! இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டாருக்கு 7 ஆண்டுகள் வரை நிச்சயம் வாரன்ட்டி உண்டு. ‘சர் புர்’ என எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் இளசுகள் மாதிரி ஓட்ட முடியாது என்பதால்… தேய்மானச் செலவுகளும் குறைவு. கார்களுக்கும் இந்த விதி பொருந்தும். இதில் உள்ள ஒரே செலவு – பேட்டரி மட்டும்தான். இதற்கு பைக் நிறுவனங்கள் 2 ஆண்டுகள் வரை கட்டாய வாரன்ட்டி கொடுக்கின்றன. அதனால் கவலை இல்லை!

charging
charging
ஒக்கினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தி வரும் சென்னையைச் சேர்ந்த சங்கரலிங்கம், தனது ஸ்கூட்டருக்கு சர்வீஸில் ‘வாட்டர் வாஷ்’தான் பெரிய செலவு என்று சிரிக்கிறார். சர்வீஸ் விட்டால்… 250 ரூபாய்க்கு மேல் தாண்டுவதில்லை என்கிறார்.

டச் ஸ்க்ரீன் எப்போ வரும்?

எல்இடி ஹெட்லைட், புளூடூத் கனெக்ட்டிவிட்டி, டிஸ்க் பிரேக்ஸ், அண்டர் சீட் ஸ்டோரேஜ் என்று முதன் முதலில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள்தான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்தன. புளூடூத், நேவிகேஷன் என்று டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்தான் முதன் முதலில் வசதிகளைக் கொண்டு வந்தது. ஆனால், இப்போது எலெக்ட்ரிக் புள்ளைகள் அதற்கும் மேலே போய்விட்டன. டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லைட்கள், புளூடூத், ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, மொபைல் கனெக்ட் ஆப் என்று வேற லெவல் பண்ணுகின்றன. பெட்ரோல் ஸ்கூட்டரில் TFT டச் ஸ்க்ரீன் வர்றதுக்கெல்லாம் எத்தனை Decade ஆகுமோ?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது இதைக் கவனிங்க!

எடுத்தவுடன் அகலக்கால் வைக்காமல், விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம். அதற்காக, ‘விலை குறைச்சலா இருக்கே’ என்று லெட் ஆசிட் பேட்டரி பைக்குகளை வாங்கிவிடாதீர்கள். இது அவுட்டேட்டட் மட்டுமில்லை; ஆசிட் லீக் போன்ற ரிஸ்க்கும் அதிகம். ஆயிரங்கள் அதிகமானாலும், லித்தியம் ஐயன் பேட்டரி கொண்ட பைக்குகளை வாங்குங்கள்.

detachable battery
detachable battery
  1. ஹீரோ போன்ற நிறுவனங்களில் இரட்டை பேட்டரி கொண்ட ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. ஒன்றில் சார்ஜ் இல்லாத பட்சத்தில், அதை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு, சார்ஜ் உள்ள பேட்டரியில் ஆபீஸ் போகலாம்.

  2. இப்போது `Detachable Battery’ என்றொரு ஆப்ஷன் உண்டு. அதாவது, பேட்டரியைத் தனியாகக் கழற்றி எடுத்து, வீட்டில் 3 – 5 Amp சார்ஜரிலேயே போட்டு, மறுபடியும் மாட்டிக் கொள்ளலாம். அப்பார்ட்மென்ட்டில் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் பார்ட்டிகளுக்கு இது செமையான ஆப்ஷன். ஆம்பியர், ஒக்கினாவா போன்ற ஸ்கூட்டர்கள் இதில் பெஸ்ட். என்ன, இதில் ஹெல்மெட் வைத்து மூட, அண்டர் சீட் ஸ்டோரேஜை எதிர்பார்க்க முடியாது. ஏத்தர், ஐ–க்யூப், சேட்டக் போன்ற காஸ்ட்லி ஸ்கூட்டர்களுக்கு, வசதி கொண்ட கிரவுண்ட் ஃப்ளோர் பார்ட்டிகள்தான் லாயக்கு!

  3. வீட்டில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை ஸ்கூலில் விடும் அம்மாக்களுக்கு, வேகம் அதிகம் போகாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பரிந்துரையுங்கள். இதில் ஆக்ஸிலரேட்டரை முறுக்கு முறுக்கு என்று முறுக்கினாலும் 25 கிமீ–க்கு மேல் போகாது. இதற்கு லைசென்ஸ், ஆர்சி, இன்ஷூரன்ஸ் என்று எந்தப் பஞ்சாயத்தும் தேவையில்லை.

  4. சாதா ஸ்கூட்டர்களைவிட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எர்கானமிக்ஸ்தான் கொஞ்சம் இடிக்கும். அதாவது – சில ஸ்கூட்டர்களில் ஹார்ன் ஸ்விட்ச் இருக்க வேண்டிய இடத்தில் இண்டிகேட்டர் இருக்கும்; ஹெட்லைட் ஸ்விட்ச் இருக்க வேண்டிய இடத்தில் மோடு பட்டன் கொடுத்திருப்பார்கள்; கால் வைக்கும் ஃபளோர் போர்டு கொஞ்சம் உயரமாக இருப்பதால்… ஹேண்ட்லிங் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். இதெல்லாம்தான் எர்கானமிக்ஸ் சிக்கல்கள். சாதா ஸ்கூட்டரை ஓட்டியவர்கள் இதை ஓட்டும்போது கொஞ்சம் திணறலாக இருக்கும். இதைக் கவனித்து வாங்குங்கள்! அல்லது வாங்கிவிட்டுப் பழகிக் கொள்ளுங்கள்!

மாசில்லா பொங்கல் நல்வாழ்த்துகள் மக்களே!