பிரீமியம் ஸ்டோரி
கொரோனாவால் அமல்படுத்தப்படும் ஊரடங்கும், ஊரடங்கு தளர்வும்... மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் சோலோ ரைடிங் எல்லாம் மேற்கொள்ள முடியாது. அந்த சோகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டுமானால், அதைப் பற்றி பேசுவதைத் தவிர வேறு வழியில்லை.

தனிமைப் பயணம் என்பது அலாதியானது என்றாலும், நிறையவே கவனம் தேவை. லாக்-டவுன் முடிந்து சோலோ ரைடிங் கிளம்ப நீங்கள் முடிவெடுக்கும்போது... உங்களுக்காக இந்த செக்லிஸ்ட் உதவும்.

1. பைக் ரெடியா?

தனி பயணம், தேவை முழு கவனம்

பைக்கில் தனியாகப் பயணம் கிளம்புபவர்கள், ‘நம்முடைய பைக் இதுக்கெல்லாம் செட் ஆகுமா’ என்ற கேள்வியை விட்டுவிட்டு, இந்த பைக்கை நம் பயணத்துக்கு ஏற்ப மாற்றுவது எப்படி என்பதையே முதலில் யோசிக்க வேண்டும். நாதன் மில்வார்ட் என்பவர் பீட்ஸா டெலிவரி செய்யும் 105சிசி ஹோண்டா பைக்கில்தான் சிட்னியில் இருந்து லண்டன் வரை சென்றார். இது ஒரு சின்ன இன்ஸ்பிரேஷன். சீட் மற்றும் ஹேண்டில்பார்களில் ஏதாவது மாற்றம் தேவையா என்று பாருங்கள். வழியில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க பிரேக் மற்றும் கிளட்ச் லீவர், பிரேக் பேட், செயின் போன்ற விஷயங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்ய தெரிந்திருக்க வேண்டும். சொகுசாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்க இன்ஜின் கார்டு மற்றும் பளிச்சென்ற ஹெட்லைட் அத்தியாவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. உடை

தனி பயணம், தேவை முழு கவனம்

நெடுந்தொலைவுப் பயணம் என்றால், முழு ரைடிங் கியர் பயன்படுத்த வேண்டும். முதல் முறை தூரமான பயணம் செல்பவர்களிடம் நிச்சயம் ரைடிங் கியர் இருக்காது. பரவாயில்லை; ஆனால், குறைந்த பட்சம் ஒரு தரமான ஹெல்மெட், க்ளோவ்ஸ் நிச்சயம் இருக்க வேண்டும். முழு உடலும் கவர் செய்யும் விதமான உடைகளை உடுத்துங்கள். சாதாரண பேன்ட்டை விட ஜீன்ஸ் பேன்ட் போட்டுக் கொள்வது சிறந்தது. ஷூ நிச்சயம் இருக்க வேண்டும். இது கொரோனா காலம் என்பதால் மாஸ்க் மற்றும் சானிடைஸர் டப்பாவும் கையில் இருக்கட்டும். கச்சிதமாகப் பொருந்தும் உடைகளை அணியுங்கள். தளர்வாக இருக்கும் உடைகள் பயணத்தின்போது அசௌகரியத்தைத் தரும். யாராக இருந்தாலும் தன்னம்பிக்கையும், ஸ்டைலும் ரொம்ப முக்கியம் பாஸ். அதையும் மறக்காதீங்க!

3. குறைவான பேக்கேஜ்

தனி பயணம், தேவை முழு கவனம்

பையில் தேவையில்லாத பெரிய பொருள்களைக் கொண்டு போகாதீர்கள். சிறிய பையை சிறப்பாக பேக்கேஜ் செய்து கொண்டு செல்லுங்கள். ஒரே ஒரு டிராவல் ஃப்ளாஸ்க், எடை குறைவான உடைகள், சில அத்தியாவசியப் பொருள்கள் போதும். பிரட், ரொட்டி போன்ற உணவை பேக் செய்து கொள்ளுங்கள். ஊறுகாய் எல்லாவற்றுக்கும் பொருந்தும் சைடுடிஷ். துணிகளை மடித்து வைக்காமல், சுருட்டி வைத்தால் பையில் அதிக இடைவெளி கிடைக்கும். பைகளை டேங்க் மீது வைக்க வேண்டாம். இரண்டு பஞ்ஜீ கேபிள் வைத்து மாட்டுவது நல்லது. முக்கியமான பொருள்களைத் தனிப் பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. தண்ணீர் முக்கியம்!

பைக் ஓட்டுவது விரல் நுனியில் முடிக்கும் வேலை இல்லை. ஒரு மோட்டோஜிபி ரேஸர், ஒவ்வொரு ரேஸின் முடிவிலும் 4 கிலோ எடை குறைவார். இதற்குக் காரணம் பைக் ஓட்டும்போது உடல் சீக்கிரமே நீர்ச் சத்துகளை இழக்கும். அதனால், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தண்ணீர் குடிப்பது அவசியம். குளிரான இடங்களில் வியர்வை வராது; ஆனாலும் உடல் டீஹைட்ரேட் ஆகும். ஒவ்வொரு பிரேக் எடுக்கும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தனி பயணம், தேவை முழு கவனம்

5. வழி

தனி பயணம், தேவை முழு கவனம்

ழி தெரிவது மட்டுமில்லை; போகும் வழியில் சாலை எப்படி, டிராஃபிக் இருக்கிறதா, எங்கெங்கு கடைகள் திறந்திருக்கின்றன போன்ற விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு சின்ன டிப்ஸ். எப்போதும் எதிர்ச்சாலையில் இருக்கும் உணவு விடுதிகள் மற்றும் டீக்கடைகளைப் பயன்படுத்துங்கள். அங்கு வரும் கார் ஓட்டுநர்கள், பைக் ரைடர்கள், லாரி ஓட்டுநர்கள் போன்றவர்களிடம் வழி எப்படி இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

6. இடைவேளை

நான்-ஸ்டாப்பாக பைக் ஓட்டி எப்படியாவது சீக்கிரமே வீடு போய் சேரவேண்டும் என்ற மனநிலை, நம்மை ப்ரஷர் குக்கர் ஆக்கிவிடும். கஷ்டமான காலம்தான், ஆனால் அதிலும் பாதுகாப்பாகவும், குதுகலமாகவும் இருப்பது நம் மனதை வலுவாக வைத்துக் கொள்ள அவசியம். தேவையான நேரத்தில் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். தூங்கவேண்டும் என்றால் மர நிழலைப் பயன்படுத்தலாம். சூரியன் மறைவதைப் பார்க்க சில நிமிடங்கள் பைக்கை ஆஃப் செய்துவிட்டு நின்று ரசிக்கலாம். சோர்வாக இருக்கிறதா நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் டீ-காபி பருகுங்கள். உணவு விடுதிகளில் சுவாரஸ்யமான மனிதர்களைப் பார்த்தால் கொஞ்ச நேரம் அரட்டை அடியுங்கள். கொரோனா, வாழும் முறையைத்தான் மாற்றியிருக்கிறதே தவிர, வாழ்க்கையை இல்லை.

தனி பயணம், தேவை முழு கவனம்

7. எப்போதும் சவாலுக்குத் தயார்!

ந்த 2020 கற்றுக்கொடுத்த விஷயங்களில் ஒன்று, எப்போதும் சவாலுக்குத் தயாராக இருக்கவேண்டும். பயணங்களில் எதிர்பார்க்காத பிரச்னைகளை எதிர்பார்த்துத் தயாராக இருங்கள். வானிலை மாறலாம், பைக் ஏதாவது கோளாறு ஏற்படுத்தலாம். பிரச்னை எதுவாக இருந்தாலும், கையில் மொபைல் இருக்கிறது. எல்லா ஊரிலும் கனெக்ட்டிவிட்டி கிடைக்கிறது. உலகம் சுருங்கிவிட்டது. நடுக்காட்டில் நின்றுவிட்டால் கூட யாரையாவது தொடர்பு கொண்டு எப்படியாவது சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு