``பைக்ல ரொம்ப தூரம் போனா எனக்கு முதுகு வலி வருது. முதுகுவலியே வரக்கூடாது, அப்படி ஒரு பைக் இருக்கா?”

- பலருக்கும் இப்படி ஒரு கேள்வி இருக்கும். இதெல்லாம் முதுகு வலி தரக்கூடிய பைக்குகள், இதெல்லாம் முதுகுவலி தராத பைக்குகள் என யாராலும் தனித் தனி லிஸ்ட் தரமுடியாது. சஸ்பென்ஷனில் சாஃப்ட், டைட் என்று சொகுசு வேண்டுமானால் குறையுமே தவிர, முதுகுவலி வரக்கூடிய சஸ்பென்ஷன் செட் அப் என்று ஒன்று கிடையாது. நாம் பயணிக்கிற சாலையின் தரம், பைக்கில் அமர்ந்து ஓட்டும் பொஸிஷன் - இந்த இரண்டிலும்தான் விஷயமே இருக்கிறது.

ஸ்கூட்டர் முதல் சூப்பர் பைக் வரை ஒவ்வொரு பைக்குக்கும் ஒவ்வொரு பாடி பொசிஷன் உள்ளது. நீங்கள் சரியான பொசிஷனில் அமர்ந்து பைக் ரைடிங் செய்யவில்லையென்றால், கண்டிப்பாக முதுகுவலி வந்தே தீரும்.

`சரி; பைக்குக்கும் முதுகு வலிக்கும் அப்படி என்னதான் லிங்க்’ என்றறிய டாக்டர் நந்தகுமாரைச் சந்தித்தோம். இவர் டாக்டர் மட்டும் இல்லை; பெரிய ரைடரும்கூட! நீங்கள் ஏதும் பைக் க்ளப்பில் உறுப்பினராகவோ, ஒரு வாண்டர்லஸ்ட் ஆகவோ இருந்தால், ‘அட.. நந்தகோபால் டாக்டரா!’ என்று வாவ் போடுவீர்கள். ஆம், கிருஷ்ணகிரியில் இருக்கும் பைக் ஆர்வலர்கள் பலரும் இவரை, `டாக்டர் சார்' என்றே அன்போடு குறிப்பிடுகிறார்கள்.

18-வது வயதில் துவங்கிய இவரது பைக் காதல், 65 ஆண்டுகள் கடந்த பிறகும் அதே உறுதியோடு தொடர்கிறது. இன்னும் 17 ஆண்டுகளில் செஞ்சுரி அடிக்க இருக்கிறார், 83 வயதான இந்த பைக் காதலர். இப்போதும் இளம் பைக் வீரர்களுக்குச் சவால் விடும் வகையில் வார இறுதி நாட்களில், ஒரு நாளைக்குப் பல நூறு கி.மீட்டர்கள்வரை நான்-ஸ்டாப்பாக பைக் ரைடிங் செய்வதுதான் டாக்டரின் ஸ்பெஷல்.

"பிரபுதேவாகூட டான்ஸ் ஆட மத்த நடிகருங்க கஷ்டப்படுவாங்களே... அது மாதிரிதான்... சார்கூட பைக் ரைடிங் போறது செம டஃப்பா இருக்கும். 400 கி.மீ தாண்டினாகூட டீ/காபி குடிக்கக்கூட நிறுத்தமாட்டார். அதேமாதிரி லாங் ரைடு போயிட்டு வந்து அவர் டயர்டு ஆகியும் நாங்க பார்த்ததில்லை” என்கிறார்கள் டாக்டருடன் பைக் ரைடு போய் வந்தவர்கள். இது மட்டுமில்லை; சுஸூகி பேண்டிட், ட்ரையம்ப் போனவில், புல்லட் 1969 மாடல், ஜிக்ஸர், ஆக்ஸஸ், டியோ என்று நந்தகுமாரின் கராஜில் சாதா ஸ்கூட்டர்களில் இருந்து சூப்பர் பைக்குகள் வரை எல்லாம் உண்டு.

ஓகே.. மேட்டருக்கு வரலாம். “65 வருஷமா பைக் ஓட்டுறீங்களே.. இப்போகூட முதுகுவலி வந்ததே இல்லையா?” என்று நம்ப முடியாமல்தான் கேட்டேன்.

``எல்லாரும் என் வயசு பத்தியே கேக்குறாங்க. It's not about age, it's about attitude. அதாவது, இது வயது பற்றி அல்ல; அணுகுமுறை பற்றியது. முதுகுவலிக்கும் பைக்குக்கும் சம்பந்தமே கிடையாது தம்பி... பைக்கை மட்டும் சர்வீஸ் செய்தால் போதாது, நம் உடலையும் தயார்ப்படுத்த வேண்டும். அது மட்டுமில்லை; நம்ம ரைடிங் பொசிஷனிலும், டிரைவிங் ஸ்டைலிலும்தான் விஷயமே இருக்கு.” என்றார் கெத்தாக!

அதுவும் சரிதான். `முதுகுவலி வரக்கூடாது என்றால் இதைப் பண்ணுங்க...' என்று அவர் செய்து காட்டியதுதான் இதெல்லாம். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க... முதுகுவலியைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யலாம்!