Published:Updated:

பழைய பைக் வாங்கப் போறீங்களா? - பைக் / டூ-வீலர் டிப்ஸ்

டிப்ஸ்: யூஸ்டு பைக்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

ரிச்சயமில்லாத எத்தனையோ பேருடன் வாழப் பழகிக் கொண்டது போல, இப்போது எங்கிருந்தோ வந்த கொரோனாவுடனும் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். லாக்டௌன் முடியும் வேளையில் பொதுப் போக்குவரத்து எனும் பெரும் சிக்கல் நம் முன் இருக்கிறது. இதைச் சமாளிக்க சிலர் யூஸ்டு பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க நினைப்பார்கள். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது யூஸ்டு பைக் வாங்க முற்படுகிறார்கள் என்றால், வாங்கிய பின் செலவு வைக்காமல் இருக்க மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

1. வாகனம் எந்தப் பெரிய விபத்திலும் சிக்கியிருக்கக் கூடாது.

2. எந்த இடத்திலும் ஆயில் லீக் இருக்கக் கூடாது.

3. திருட்டு வாகனமாக இருக்கக் கூடாது. ஓரளவுக்காவது பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

- இந்த மூன்று விஷயங்களை எப்படிக் கண்டுபிடிப்பது? இதோடு சேர்த்து பைக்கின் விலை மற்றும் தரத்தையும் பார்க்க என்னென்ன வழிகள் இருக்கின்றன?

யூஸ்டு பைக்ஸ்
யூஸ்டு பைக்ஸ்

ஒரு டூ-வீலரைப் பார்க்கிறீர்கள் என்றால், முதலில் அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். RC புக் வாங்கிப் பார்த்தால் ஆண்டு மற்றும் மாதம் இருக்கும். சேஸி மற்றும் இன்ஜின் நம்பரும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். இது அந்த வாகனத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவும், விலையை நிர்ணயிக்கவும் உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேஸி மற்றும் இன்ஜின் நம்பரை செக் செய்யுங்கள். நம்பர் ரீஸ்டாம்ப் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். ரீஸ்டாம்ப் அடையாளம் எதுவும் இல்லையென்றால், வாகனத்தின் ஃபோர்க் லாக் உடைக்கப்பட்டிருக்கிறதா, இக்னிஷனுக்குத் தனியாகவும், ஃபோர்க்குக்கு தனி சாவியும் கொ,டுத்துள்ளார்களா என்று பாருங்கள். இல்லை மொத்த கீ செட்டும் புதிதாக மாற்றப்பட்டுள்ளதா என்பதையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது அறிகுறி இருந்தால், ஓனரை மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு விசாரியுங்கள். தப்பே இல்லை. பதில்களின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே தொடர்ந்து வாகனத்தைப் பார்க்கவும்.

யூஸ்டு பைக்ஸ்
யூஸ்டு பைக்ஸ்

லீவர், ஃபுட் பெக் போன்ற விஷயங்களைக் கவனியுங்கள். வளைந்து இருக்கிறது அல்லது தேய்ந்து இருக்கிறது என்றால் பைக் கீழே விழுந்திருக்க வேண்டும். லீவர்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கிறது என்றாலும் பைக் விழுந்திருக்க வேண்டும் அல்லது பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதை விசாரித்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை விபத்து அல்லது கீழே விழுந்திருக்கும் பட்சத்தில் வேறு என்னென்ன பாகங்கள் அடிவாங்கின, எப்போது மாற்றப்பட்டிருக்கின்றன என்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் ஓனர் நம்மிடம் நேர்மையாகவும், தெளிவாகவும் பதில் சொல்கிறாரா என்பது.

இளைஞர்களிடம் இருந்து பைக் வாங்குகிறீர்கள் என்றால், ராஷ் டிரைவிங் செய்யப்பட்டுள்ளதா என்று கண்டுபிடிப்பது சுலபம். டயர் நடுப் பகுதியில் மட்டும் ஃபிளாட்டாக இருக்கிறது, ஓரங்களில் குரூவ் அதிகம் தேய்ந்து இருக்கிறது அல்லது டயர் ஓரங்களில் சின்னச் சின்ன கிராக் இருக்கிறது என்றால், ராஷ் டிரைவ் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

பைக்கின் லைட்ஸ் மாடிஃபை செய்யப்பட்டிருந்தாலோ அல்லது கூடுதல் லைட்ஸ் பொருத்தப்பட்டி ருந்தாலோ சீட்டைத் திறந்து ஒயரிங்கை ஒரு முறை பார்ப்பது நல்லது. மோசமாக டேப் அடிக்கப்பட்டுள்ளது, குறுக்கும் நெடுக்குமாக நிறைய கனெக்‌ஷன் இருக்கிறது, அல்லது ஒரே நிற ஒயர் பல இடங்களில் இருக்கிறது என்றால் ப்ரொஃபஷனலாக ஒயரிங் செய்யவில்லை என்று அர்த்தம். ஒயரிங் பிரச்னை நிகழ வாய்ப்புகள் உள்ளன. அனைத்து லைட், ஹார்ன், இண்டிகேட்டர் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வேலை செய்கிறதா என்று பார்க்கவேண்டும்.

பைக் / டூ-வீலர் டிப்ஸ்
பைக் / டூ-வீலர் டிப்ஸ்

ஓனர்ஸ் மேனுவல், ஃபேக்டரி கீ, OEM ஆஃப்டர் மார்க்கெட் பாகங்கள் போன்றவை வைத்திருக்கிறாரா என்பதும் முக்கியம் . வாகனத்தைக் கவனமாக பராமரிப்பவர்கள், இந்தப் பொருட்களின் மீதும் கவனமாக இருப்பார்கள். கடைசியாக பேட்டரி, டயர், செயின் ஸ்பிராக்கெட் போன்றவை எப்போது மாற்றப்பட்டது என்பதும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்.

ஒரு டூ-வீலரைப் பார்க்கும்போது அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது நல்லது. உதாரணத்துக்கு கியர் பேட்டர்ன் என்ன, பைக்கில் கிக்கர் இருக்கிறதா, ஸ்கூட்டரில் நிறம் சரியாக இருக்கிறதா, இது ஏதாவது ஸ்பெஷல் எடிஷன் மாடலா என்பதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். முடிந்தால் கொஞ்சம் நேரம் எடுத்து, பைக்கைப் பற்றிய லாங் டெர்ம் ரிவ்யூ படிக்கலாம். அதை வைத்து பைக்கில் என்ன பிரச்னைகள் தொடர்ந்து வரும் என்பதை முன்கூடியே தெரிந்துகொள்ள முடியும்.

பைக் / டூ-வீலர் டிப்ஸ்
பைக் / டூ-வீலர் டிப்ஸ்

நீங்கள் பார்க்க வந்த டூவீலரில், ஃபேக்டரி வெல்டிங் தவிர்த்து தனியாக எங்கேயாவது வெல்டிங் அடிக்கப்பட்டிருந்தால், பைக்கின் கட்டமைப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். என்ன பிரச்னைக்காக அதைச் செய்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாகக் கேளுங்கள்.

கடைசியாக எல்லா விஷயமும் ஓகே என்றால், பைக்கை டெஸ்ட் ரைடு செய்து பார்க்கலாம். இங்கே பைக்கை ஓட்டிப் பார்க்கவேண்டும் என்பதைவிட பைக்கின் இன்ஜின், பிரேக் போன்ற விஷயங்களை டெஸ்ட் செய்வதே முக்கியம்.

இன்ஜினை அதிக RPM வரை கொண்டு செல்லுங்கள். இன்ஜின் சூடாகாமல், பிக்-அப் திணறாமல், பைக் ஆஃப் ஆகாமல் இருந்தால் இன்ஜின் ஓகே. சைலென்ஸரில் இருந்து புகை வரக் கூடாது.

3-வது கியர் போகும் முன்பே பிரேக்கை டெஸ்ட் செய்ய வேண்டும். மந்தமாகவோ, ரெஸ்பான்ஸ் குறைவாகவோ இருந்தால் பிளீடிங் தேவை. பிளீடிங் செய்யப்படாம லேயே இருக்கும்போது, சில நேரங்களில் டிஸ்க் லாக் ஆகும் வாய்ப்பு உண்டு.

பைக் / டூ-வீலர் டிப்ஸ்
பைக் / டூ-வீலர் டிப்ஸ்

ஒரு வழியாக எல்லாமே சரி என்ற மனநிலைக்கு வந்துவிட்டால், பேரம் பேச ஆரம்பிக்கலாம். இதுவரை டூவீலரில் கண்டுபிடித்த பிரச்னைகள் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லி விலையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கேளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு