Published:Updated:

டாப்-5 பட்ஜெட் அட்வென்ச்சர் பைக்ஸ்!

 அட்வென்ச்சர் பைக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அட்வென்ச்சர் பைக்ஸ்

இயற்கையாகவே எஸ்யூவிகளின் 2-வீலர் இணை அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்கள் என்பதால், டாப் 5 பட்ஜெட் அட்வென்ச்சர் பைக்ஸை இந்த மாதம் பார்ப்போம்.

டாப்-5 பட்ஜெட் அட்வென்ச்சர் பைக்ஸ்!

இயற்கையாகவே எஸ்யூவிகளின் 2-வீலர் இணை அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்கள் என்பதால், டாப் 5 பட்ஜெட் அட்வென்ச்சர் பைக்ஸை இந்த மாதம் பார்ப்போம்.

Published:Updated:
 அட்வென்ச்சர் பைக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அட்வென்ச்சர் பைக்ஸ்

ஆங்கிலத்தில் `4 wheels move the body; 2 wheels move the soul’ என்று சொல்வார்கள். அதாவது காரைக் காட்டிலும், ஆத்மார்த்தமான பயணங்கள் பைக்கில் கிடைக்கும் என்பது பொருள். சென்ற மாதம் டாப் 5 - ல் ஆஃப் - ரோடு எஸ்யூவிகளைப் பார்த்தோம். இயற்கையாகவே எஸ்யூவிகளின் 2-வீலர் இணை அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்கள் என்பதால், டாப் 5 பட்ஜெட் அட்வென்ச்சர் பைக்ஸை இந்த மாதம் பார்ப்போம்.

ஹீரோ Xpulse 200 4v
ஹீரோ Xpulse 200 4v

ஹீரோ Xpulse 200 4v

பிளஸ்: விலை, சர்வீஸ் நெட்வொர்க்

மைனஸ்: பின்பக்க சீட், ஹெட்லேம்ப் வெளிச்சம்

விலை: ரூ.1.54 லட்சம்

Xpulse 200 2v-ஐக் காட்டிலும் சிறிது சிறிதாக நிறைய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது ஹீரோ. கூடுதல் இன்டெக் வால்வ் காரணமாக 1 bhp பவர் மற்றும் 1 Nm டார்க் கூடியிருப்பதுடன், பவர் டெலிவரியும் சீராக உள்ளது. இதனால் முறுக்கி ஓட்ட வேண்டிய அவசியமில்லை என்பதால், மைலேஜும் லேசாக மேம்பட்டிருக்கிறது.

முன்பக்கம் உள்ள 37மிமீ போர்க், 190 மிமீ சஸ்பென்ஷன் டிராவல் கொண்டுள்ளது. அதனுடன் 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் சேருவதால், சாலைகளில் உள்ள ஸ்பீடு பிரேக்கர்கள், குழி பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக ஓட்டலாம். முன்பக்கம் 21 இன்ச் மற்றும் பின்புறம் 18 இன்ச் ஸ்போக் வீல்களுடன் வருகிறது எக்ஸ்பல்ஸ் 2004V.

ஹோண்டா CB 200X
ஹோண்டா CB 200X

ஹோண்டா CB 200X

ப்ளஸ்: மைலேஜ்

மைனஸ்: விலை, அட்வென்ச்சர் அம்சங்கள் மிஸ்ஸிங்

விலை: ரூ.1.75 லட்சம்

இந்த லிஸ்ட்டின் மிகவும் சாதுவான அட்வென்ச்சர் பைக் என்றால், அது CB 200Xதான். ஏனென்றால், அடிப்படையில் இது ஒரு ஹார்னெட் 2.0. பைக்கின் பெயர் தான் 200; ஆனால் ஹார்னெட் உள்ளிருக்கும் அதே 184சிசி இன்ஜின்தான் இதிலும் டியூட்டி பார்க்கிறது. ஹார்னெட்டைவிட சீட் 20மிமீ உயர்ந்திருக்கும் வேளையில், கிரவுண்ட் கிளியரன்ஸ் மட்டும் அதே 167மிமீ. இது இந்த லிஸ்ட்டில் மிகவும் குறைந்ததாக உள்ளது. முன்பக்கமும் பின்பக்கமும் 17 இன்ச் அலாய் வீல்கள் டூயல் பர்போஸ் டயர்களுடன் வருகிறது. உயரமான வைஸர் கொண்ட ஃபேரிங், இண்டிகேட்டர் உடன் கூடிய ஹேண்ட் கார்டு, நிமிர்ந்து ஓட்ட கூடிய ரைடிங் பொசிஷன் ஆகியவை மட்டும்தான் ஹார்னெட்டில் இருந்து மாறுபடும் அம்சங்கள்.

யெஸ்டி அட்வென்ச்சர்
யெஸ்டி அட்வென்ச்சர்

யெஸ்டி அட்வென்ச்சர்

ப்ளஸ்: இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்

மைனஸ்: சர்வீஸ் நெட்வொர்க், குறைந்த ஸ்டாண்டர்ட் வாரன்ட்டி

விலை: ரூ.2.42 லட்சம்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் ஃபர்ஸ்ட் காப்பி போல் இருக்கிறது யெஸ்டி அட்வென்ச்சர். இதன் 334 சிசி இன்ஜின் 29.7 bhp பவர் மற்றும் 29.9 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. முன்- பின் 21 இன்ச் & 17 இன்ச் ஸ்போக் வீல்களுக்கு ட்யூப் டயரைக் கொடுத்துள்ளது யெஸ்டி. 815மிமீ உயர சீட் மற்றும் 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது யெஸ்ட்டி அட்வென்ச்சர்.

நின்று கொண்டு ஓட்டும்போது நேவிகேஷன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை டில்ட் செய்யும் வகையில் கொடுத்துள்ளது நல்ல விஷயம். ஆனால், டேங்க் கார்டைக் கட்டாயமாக வாங்க வேண்டிய ஆக்சஸரீயாக யெஸ்டி சேர்த்துள்ளதுதான் என்ன வகை என்று தெரியவில்லை.

சுஸூகி V Strom SX 250
சுஸூகி V Strom SX 250

சுஸூகி V Strom SX 250

விலை ரூ.2.45 லட்சம்

இந்த லிஸ்ட்டின் லேட்டஸ்ட் பைக் V Strom SX 250தான். ஏற்கெனவே GSX 250R- ன் ட்வின் சிலிண்டரை அடிப்படையாகக் கொண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் V Strom 250 உள்ளது. நம்மூரில் ஜிக்ஸர் 250-ஐ அடிப்படையாகக் கொண்ட பைக் என்பதால்தான் அந்த ‘SX’ அடைமொழி. அதேசமயம் ஹோண்டா போல சோம்பேறித்தனமாக இல்லாமல், SX 250 -க்காக ஓரளவு மெனெக்கெட்டு உள்ளது சுஸூகி. ஏனென்றால், V Strom சீரிஸ் பைக்குகளுக்கு உலக அளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஜிக்ஸர் 250 - ல் நமக்குப் பழகிய 26.1 bhp, 22.2 Nm வெளிப்படுத்தும் 249 cc பட்டர் ஸ்மூத் இன்ஜின்தான் SX 250-யிலும். முன்-பின் 19 - 17 இன்ச் டியூப்லெஸ் அலாய் வீல்களைப் பெறுகிறது. 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போதுமானதாக இருக்கும் அதேவேளை, இந்த லிஸ்ட்டில் அதிக சீட் உயரம் (835 mm) கொண்ட பைக்கும் இதுதான் என்பதால், உயரம் குறைவானவர்கள் நகர டிராஃபிக் நெருக்கடியில் சற்று சிரமப்படுவார்கள். இதுவரை சுஸூகி மீடியா ரைடுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பதால், ப்ளஸ், மைனஸுக்குக் கொஞ்சம் காத்திருங்கள்!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ப்ளஸ்: ஆஃப் ரோடு திறன்

மைனஸ்: இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், பழைய டிசைன்

விலை: ரூ.2.58 லட்சம்

இந்த லிஸ்ட்டின் மிகவும் பழைய பைக்கான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்தான் மிகவும் விலை உயர்ந்த பைக்கும் கூட! 411 cc கொண்ட இன்ஜின் வெளிப்படுத்தும் 24.3 bhp பவர் என்னவோ சிறிய இன்ஜின் கொண்ட யெஸ்ட்டி அட்வென்ச்சரைக் காட்டிலும் குறைவு. 199 கிலோ எடையுடன் லிஸ்ட்டின் ஹெவி வெயிட் சாம்பியன் என்பதால், நெடுஞ்சாலையில் பவர் டெலிவரியும் மந்தமாகவே உள்ளது. அதேசமயம், 32 Nm டார்க் இதை ஒரு சிறந்த ஆஃப்-ரோடு மெஷின் ஆக்குகிறது.

முன் - பின் 21-17 இன்ச் ஸ்போக் வீல்கள் ஆஃப்ரோடு டயர்களுடன் வருகிறது. வசதியான சீட்டுடன் முன்பக்கம் 200 mm & பின்பக்கம் 180 mm சஸ்பென்ஷன் டிராவல் கொண்டுள்ளதால் ஆஃப் ரோட்டில் ‘ஜம்முனு’ பயணிக்க உதவுகிறது. 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுக்கு வெறும் 800மிமீ சீட் ஹைட் தேவைப்படுவதால், சராசரி உயரம் உள்ளவர்கள் சிரமம் இல்லாமல் ஆஃப்ரோடுக்கு எடுத்துச் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism