Published:Updated:

ரிவோல்ட்டுக்குப் போட்டி... டார்க் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பைக் வருது!

டார்க் க்ரேட்டோஸ் இ–பைக்
பிரீமியம் ஸ்டோரி
டார்க் க்ரேட்டோஸ் இ–பைக்

அறிமுகம்: டார்க் க்ரேட்டோஸ் இ–பைக்

ரிவோல்ட்டுக்குப் போட்டி... டார்க் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பைக் வருது!

அறிமுகம்: டார்க் க்ரேட்டோஸ் இ–பைக்

Published:Updated:
டார்க் க்ரேட்டோஸ் இ–பைக்
பிரீமியம் ஸ்டோரி
டார்க் க்ரேட்டோஸ் இ–பைக்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸ்போவில் ஒரு செமத்தியான எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்டாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பெயர் T6X. இப்போது அந்த கான்செப்ட் உயிர் பெற்று, விற்பனைக்கு வரவிருக்கிறது.

புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்–அப் நிறுவனமான டார்க் (TORK) எனும் எலெக்ட்ரிக் பைக் நிறுவனம், இப்போது அந்த T6X பைக்குக்கு க்ரேட்டோஸ் (Kratos) என்று பெயர் வைத்து லாஞ்ச் செய்யவிருக்கிறது.

இப்போதைக்கு எலெக்ட்ரிக் பைக்கில் ரிவோல்ட் மட்டும்தான் கொஞ்சம் அறியப்பட்ட நிறுவனம். ரிவோல்ட் பைக்குக்குப் போட்டியாக இப்போது க்ரேட்டோஸ் வரவிருக்கிறது. மில்லியனல் ஸ்டைலில், 2K கிட்ஸுக்குப் பிடித்த டிசைனில் கொஞ்சம் ஸ்போர்ட்டியாக இதை டிசைன் செய்திருக்கிறது டார்க். இதன் ஹெட்லைட்டில் ஆரம்பித்து – டயர் ஹக்கர், பெட்ரோல் டேங்க், பின் பக்க டெயில் லைட் அசெம்பிளி டிசைன் எல்லாமே அப்படியே குத்திக் கிழிப்பது மாதிரி ஈட்டி போன்ற ஷார்ப்பான டிசைன். இதன் முக்கோண வடிவ ஹெட்லைட், ஸ்போர்ட்டி பைக்குகளை நினைவுபடுத்துகிறது.

இதில் க்ரேட்டோஸ் மற்றும் க்ரேட்டோஸ் R என இரண்டு வேரியன்ட்களைக் கொண்டு வருகிறது டார்க். க்ரேட்டோஸ் என்பதுதான் பேஸ் வேரியன்ட். இதில் 7.5kW மற்றும் 28Nm கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் இருக்கிறது. ரிவோல்ட் போன்ற பைக்குகளில் 3kW மோட்டார் பவர்தான். க்ரேட்டோஸ் R–ல் இருப்பது 9kW மற்றும் 38 Nm எலெக்ட்ரிக் மோட்டார். அட! இது பவர் பார்ட்டிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

0–40 கிமீ–யை பேஸ் வேரியன்ட்டான க்ரேட்டோஸ் 4 விநாடிகளில் தொட்டு விடுமாம். இதுவே R–க்கு வெறும் 3.5 விநாடிகள்தான். க்ரேட்டோஸ் 100 கிமீ டாப்ஸ்பீடு போனால்… R வேரியன்ட் 105 கிமீ வரை பறக்குமாம். இரண்டு பைக்குகளிலுமே எக்கோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ் என ரைடிங் மோடுகள் உண்டு. எலெக்ட்ரிக் பைக்கில் ரிவர்ஸ் மோடு இல்லாமலா? அதுவும் இருக்கு. பைக்குக்கு நடுவே மவுன்ட் செய்யப்பட்டிருக்கும் இந்த மோட்டார், அப்படியே பவரை பின் வீல்களுக்குத் தள்ளுகிறது.

க்ரேட்டோஸ் மற்றும் R – இரண்டு பைக்குகளிலும் பேட்டரியை ஒரே அளவில்தான் வைத்திருக்கிறார்கள். இரண்டுக்கும் 4kWh லித்தியம் அயன் பேட்டரி இருக்கிறது. இதை ஒரு அலுமினியம் கேஸிங்கில் வைத்திருக்கிறார்கள். வழக்கம்போல் மழை, சேறு சகதி, வெயிலில் ஒன்றும் ஆகாதபடி – இதற்கும் டாப் ரேட்டிங்கான IP67 ரேட்டிங் உண்டு. இது ஒரு ஃபுல் சார்ஜுக்கு 180 கிமீ வரை போகலாம் என்கிறது டார்க். ஆனால், ரியல் டைம் ரேஞ்சாக 120 கிமீ கிடைத்தாலே… நன்று! இது ஓலாவின் S1 Pro ஸ்கூட்டரின் (135கிமீ) ரேஞ்சுக்கு நெருக்கமாக வந்துவிடும்.

ரிவோல்ட்டுக்குப் போட்டி... டார்க் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பைக் வருது!

ஒரு மணி நேரத்துக்கு 25% சார்ஜ் ஏறும் ஹோம் சார்ஜிங்கும்; 1 மணி நேரத்தில் 80% சார்ஜ் சர்ரென ஏறும் ஸ்பீடு சார்ஜிங் ஆப்ஷனும் உண்டு என்கிறது டார்க் நிறுவனம். பைக்கின் வயிற்றுப்பகுதிக்கு அடியில் இதை வைத்திருக்கிறார்கள்.

சஸ்பென்ஷனைப் பொருத்தவரை வழக்கமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் முன் பக்கமும், பின் பக்கம் மோனோஷாக் அப்ஸார்பரும் இருக்கின்றன. இரண்டு பக்கமும் டிஸ்க் ஆப்ஷன் கொடுத்து, CBS (Combined Braking System) வசதியும் கொடுத்திருக்கிறார்கள்.

இதை இரண்டு பேஸ்களாகத் தயாரித்து டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கிறதாம் டார்க். Phase I -ல் புனே, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், டெல்லி போன்ற நகரங்கள். Phase 2-ல் 100 நகரங்களை டார்கெட் வைத்திருக்கிறது டார்க்.

புனேவில் க்ரேட்டோஸ் எக்ஸ் ஷோரூம் விலை 1.33 – 1.48 லட்சம். FAME-II மாநிலங்களுக்கான மானியத்தைச் சேர்த்தால் இதன் விலை கணிசமாகக் குறைகிறது. 1.08 லட்சம் மற்றும் 1.23 லட்சம் வருகிறது. டெல்லியில் இதன் விலை. 1.03 லட்சம்தான்.

சென்னைக்கு வரும்போது க்ரேட்டோஸின் எவ்வளவு விலையில் வருகிறது எனப் பார்க்கலாம்!

ரிவோல்ட்டுக்குப் போட்டி... டார்க் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் பைக் வருது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism