நண்பர்களோடு சேர்ந்து மலைப்பிரதேசத்துக்கு பைக்கில் ரைடு போயிருப்போம். கொண்டை ஊசி வளைவுகள் வரும்போதுதான் நமக்குள் இருக்கிற ‘ரேஸன்’ கண் விழிப்பான். ஹேர்பின் பெண்டுகளை ரேஸ் ட்ராக்காகவே பாவித்து முழங்கால் சாலையில் தேய, பைக்கை லாவகமாக ஓட்டியவர்களும் இருக்கிறார்கள்; சிராய்ப்பு வாங்கியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த கார்னரிங் என்பது ஒரு கலை. ஒரு ரைடர், கார்னரிங்கைத் தொடங்குவதற்கு முன் சுமார் 20 துல்லியமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

இந்தக் கலை சும்மா வந்துவிடாது. இதற்கென முறையான டிரைவிங் பயிற்சி வேண்டும். நான் இப்போது இதில் எக்ஸ்பெர்ட். காரணம், கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல். ரேஸ் ட்ராக்கில் ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெட்ச்சில் எப்படிப் பறப்பது, கார்னரிங்கில் எப்படிச் சாமர்த்தியமாக பைக்கைத் திருப்புவது, ட்ரிக்காக ஓவர்டேக்கிங் செய்வது எப்படி என்பதுவரை கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூலில் சொல்லிக் கொடுக்கிறார்கள். ரேஸ் ட்ராக்கில் சும்மா பைக் ஓட்டிவிட முடியாது. இதற்கு ஒரு ரேஸிங் அகாடமியில் பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.

சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கில் 3 நாள் பயிற்சிக்கு என்னை அழைத்திருந்தது கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல். சென்னை ட்ராக்கின் ஒரு லேப், அதாவது மொத்த தூரம் 3.717 கி.மீ... மொத்தம் 14 வளைவுகள். பயிற்சியாளர் ஸ்டீவ், பாதுகாப்புக்கான டிப்ஸ் தந்தார். அப்புறம், ரேஸிங் வார்னிங் கொடிகள் பற்றிய வகுப்பு. மொத்தம் மூன்று லெவல். முதல் இருபது நிமிஷம் தியரி கிளாஸ். பிறகு கற்றுக்கொண்ட பயிற்சியை 25 நிமிடம் டிராக்கில் முயற்சி செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு 5 தியரி கிளாஸ் விகிதம் மூன்று நாளில் மொத்தம் 15 கிளாஸ். ஒரு டிரில்லில் ஐந்து லேப் என்றால், பயிற்சி முடிவில் மொத்தம் 75 லேப் ஓட்டி முடித்திருப்பீர்கள்.

லெவல் 1 பயிற்சிகள்: Throttle Control, Turn Points, Quick Steer, Rider Input, Two-Step Turning. ஒரு பைக்கில் வேகமாகச் செல்ல என்ன செய்ய வேண்டும்? த்ராட்டிலை முறுக்க வேண்டும். ஒரு கார்னரில் திரும்ப என்ன செய்ய வேண்டும்? ஹேண்டில்பாரைத் திருப்பவேண்டும். அப்படித் திரும்பும்போது வளைவில் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வளைவுக்கு ஏற்ப சரியான வேகத்தில் செல்ல வேண்டும்.

`இவ்வளவுதானா, ரொம்ப ஈஸியா இருக்கே’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் இம்மூன்று செயல்களையும் பிரேக்கைப் பயன்படுத்தாமல் செய்ய வேண்டும். ஒரு சில விநாடிக்குள் முடிவெடுத்துச் செயல்பட, முழு கவனத்துடன் கொண்ட பயிற்சி தேவை.

லெவல் 2 பயிற்சிகள்: Reference Points, Three Step, Wide View, Wide View Transitions and Braking இது முழுக்க முழுக்க நமது பார்வை சம்பந்தப்பட்ட விஷயம். பைக் ஓட்டும்போது நீங்கள் எங்கு பார்க்கிறீர்களோ, அங்குதான் வண்டி செல்லும் என்ற ஒரு விதி இருக்கிறது. அதற்குப் பெயர் ‘டார்கெட் ஃபிக்ஸேஷன் (Target fixation).’ ரேஸிங்கில் உங்கள் பார்வைதான் உங்களுக்கு முதல் எதிரி என்று சொன்னால் நம்புவீர்களா? பார்வையின் கவனம் வேறு எங்கும் செல்லாமல் இருக்க ட்ராக்கிங் பாதையில் உங்களுக்கு என ‘ரெஃபரன்ஸ் பாயின்ட் (reference point)’ வைக்க வேண்டும். அடுத்தடுத்து முன்னேறிச் செல்லும் நேரத்தில், நீங்கள் ஃபிக்ஸ் செய்து வைத்த ரெஃபரன்ஸ் பாயின்ட்டுகளை மட்டும்தான் பார்க்க வேண்டும். முன் செல்லும் ரைடரைப் பார்த்துக்கொண்டே போனால் அவரை முந்தாமல் பின்னாடியே போய்க் கொண்டிருப்பீர்கள். விரிவான அகலப் பார்வை கொண்டு பார்க்கும் பட்சத்தில், உங்களது உடலும் பைக்கும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

லெவல் 3 பயிற்சிகள்: Body Position Early, Knee to Knee, Hip Flick, Hook Turn and Pick Up வளைவில் செல்லும்போதெல்லாம் முழங்காலை ரோட்டில் தேய்த்துக் கொண்டு செல்வார்கள். அப்படிச் செய்வதால் என்ன பயன்? அதிவேகத்தில் செல்லும்போது நீங்களும் பைக்கும் வேறு வேறு அல்ல. பாதம் முதல் தலை வரை அனைத்து அசைவுகளும் உங்கள் பைக்கின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும். முழங்கால்களால் டேங்க்கை இறுக்கிப் பிடிப்பதில் இருந்து வளைவுக்கு முன் இடுப்பை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை நகர்த்தி சுமார் 120 கி.மீ வேகத்திலும்கூட வளைவைக் கடப்பது சாத்தியம் என்றால், அது மேலே சொல்லியிருக்கும் லெவல்-3 நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியம்.

பயிற்சி முடிந்து 3 நாள் கழிச்சு இப்படி ஒரு ஃபீலிங்... இப்போ நானும் ஒரு ரேஸர்தான்!