Published:Updated:

ஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி!

 பயண அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
பயண அனுபவம்

பயண அனுபவம்

டோனி வைத்திருப்பது Fi இன்ஜின் இல்லாத, டிஸ்க் பிரேக்கூட இல்லாத சாதாரண பஜாஜ் CT100 பைக்தான். இந்த 100 சிசி பைக்கில், சுமார் 8,000 கி.மீ பயணித்துவிட்டு வந்திருக்கிறார் டோனி அற்புதராஜ். அதிகபட்ச டாப் ஸ்பீடான 70 கி.மீ-ல் நேபாளம், பூட்டான் வழியாகப் போய், சைனா பார்டரில் செல்ஃபி எடுத்துவிட்டு வந்திருக்கிறார் இவர். அதுவும் பில்லியன் ரைடரோடு.
டோனி
டோனி

லாங் லீவ் கிடைத்தால்… போர் அடித்தால்… சட்டென தனது MetalBird குழுவினருடன் பைக்கில் இந்தியா முழுவதும் லாங் ரைடு அடிப்பதுதான் கோவையைச் சேர்ந்த டோனியின் பழக்கம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி!

``2015-ல்தான் நீளமான பைக் ரைடிங் போக ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் நண்பர்களோட சேர்ந்து என்னோட முதல் ஹோண்டா சிபிஆர் 250 பைக்கில் இந்தியா முழுதும் ரவுண்ட் அடிச்சுட்டு வந்தேன். அப்புறம் சோலோ ரைடும் பண்ணணும்னு ஆசைப்பட்டு, அதையும் பண்ணிட்டேன். லடாக், இமயமலைனு எங்க போனாலும் நமக்கு பைக்தான். ரெண்டு வருஷத்துக்கு முன்னால், கவாஸாகி நின்ஜா 650 பைக்கில் லடாக், இமயமலைன்னு ஒரு பெரிய ரைடு தனியா போயிட்டு வந்தேன். அப்போவே நேபாளம், பூட்டான் போய் சைனா பார்டரைத் தொடணும்னு ஆசைப்பட்டேன். பட்ஜெட், மற்றும் நேரப் பிரச்னையால `அப்புறம் பார்த்துக்கலாம்'னு விட்டேன். இப்போ அதையும் முடிச்சுட்டேன். அதுவும் என்னோட பஜாஜ் CT100 பைக்கில்!’’ என்று அசாதாரண சாதனையை வெகுசாதாரணமாகச் சொன்னார் டோனி.

ஏற்கெனவே சிபிஆர், ட்வின் சிலிண்டர் நின்ஜா போன்ற படா பைக்குகளுக்குச் சொந்தக்காரரான டோனி, `சும்மா ஆபீஸ் போறதுக்கு இருக்கட்டுமே’ என்று அப்போதைய ரிலீஸான பஜாஜ் CT100 பைக்கை வாங்கியிருக்கிறார். `லாங் ரைடு போயே ஆகணுமே’ என்று வழக்கம்போல் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிக்க… `சண்முகம் வண்டியை எட்றா’ என்று தனது நண்பர் சஞ்சுவோடு சேர்ந்து CT100 பைக்கை ஸ்டார்ட் செய்திருக்கிறார். சேடில் பேக், ஸ்டவ், கேஸ் சிலிண்டர், மெக்கானிக் சாமான்கள், ஃபர்ட்ஸ் எய்டு கிட் என்று, சாதாரண கம்யூட்டிங் பைக்கை ஏதோ அட்வென்ச்சர் பைக் ரேஞ்சுக்கு மாற்றி கோயம்புத்தூரில் இருந்து கிளம்பிவிட்டார் டோனி. வெறும் பதினாறே நாட்களில் 8,000 கி.மீ பைக் ஓட்டிவிட்டுத் திரும்பி வந்தவர், எந்தக் களைப்பும் தெரியாமல், `கதை சொல்றதுன்னா பிடிக்கும் பாஸ்… கேளுங்களேன்’ என்று உற்சாகமாகப் பேசுகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``சிபிஆர், நின்ஜானு ஃபாஸ்ட் பைக்கா ஓட்டிட்டு, 100 சிசி பைக் ஓட்ட ஹைவேஸில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனாலும் ஒரு நாளைக்கு 700 கி.மீ ஓட்டிட்டோம். பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர்னு ஒரே அடி. டெல்லி போகாம அங்கிருந்து வலதுபக்கம் திரும்பி நானாபாட் அப்படினு ஒரு இடம். 4-வது நாளில் நேபாளம் பார்டர் வந்துட்டோம். சொன்னா நம்பமாட்டீங்க… இதுவரைக்கும் எங்களுக்குத் தங்குறதுக்குனு 1 ரூபாகூட செலவாகலை. அங்கங்கே ரோடு சைடில் டென்ட் அடிக்கிறது, பெட்ரோல் பங்க், கோவில்னு கிடைக்கிற இடத்திலெல்லாம் தங்கிக்கிட்டோம். இங்க பாஸ்போர்ட் கேட்டாங்க. எங்ககிட்ட இல்லை. ஆனா ஆதார் கார்டு, பைக்கோட ஆர்சி எல்லாம் காண்பிச்சோம். ஒரு பாஸ் கொடுத்தாங்க. அதுதான் நோபளத்துக்குள்ள நுழையற பாஸ். ஒரு நாளைக்கு 21 ரூபாய் கேட்டாங்க. 7 நாளைக்கு பாஸ் எடுத்துக்கிட்டோம்.

ஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி!

400 கி.மீ தாண்டி `தாங்’ அப்படினு ஒரு இடம். நைட் ஆகிடுச்சு. அங்கேயே தங்கிட்டோம். முதன் முதலா ரூம் எடுத்துத் தங்கினோம். நம்ம ஊர்ல 1,00 ரூபாய்னா அங்கே 160 ரூபாய். பார்டர்ல நல்ல உதவி பண்ணாங்க. நெட்வொர்க் எதுவும் இல்லை. அன்னைக்குத்தான் கூட வந்த என் ஃப்ரெண்டு சஞ்சுவுக்குப் பிறந்த நாள். பன்னும் டைரி மில்க்கும் வெச்சுக் கொண்டாடினோம். ரூம் ஓனரான நேபாளியும் பார்ட்டியில் கலந்துக்கிட்டார்.

ஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி!

காட்மண்டு, பொக்காரா - இந்த இரண்டும்தான் நேபாளத்தில் கொஞ்சம் வளர்ச்சியடைந்த ஏரியா. மத்ததெல்லாமே அற்புதமான கிராமம். சுத்திலும் பனிமலை, மரங்கள், அருவிகள்னு செமையா இருக்கும். பொதுவா, நாங்க ட்ராவல் பண்ணும்போது, Mapme அப்படிங்கிற Appதான் யூஸ் பண்ணுவோம். இது ஆஃப்லைனில் ஒர்க் ஆகும். அதாவது, நெட் தேவையில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொக்காரா போற வழியில செம மழை. சாதா மழை இல்லைங்க; ஐஸ்கட்டி மழை. இது தவிர போற வழியில ஒரு பெரிய மலையை வேற க்ராஸ் பண்ணணும். யோசிச்சுப் பாருங்க; ஐஸ் கட்டி மழை; பனிமலை – இதெல்லாத்தையும் CT100 பைக்கில் சமாளிக்கணும். டயர் வழுக்குது; பைக் இழுக்கவே திணறுது!’’ என்று மூச்சு விடாமல் அவர் சொல்லும்போதே CT100 பனிமலையில் எப்படி ஏறியிருக்கும் என்கிற த்ரில்லிங் நம் கண் முன்னே வந்துபோனது.

ஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி!

நேபாளம்- பூட்டான் கிராமங்களில் இரவு நேரங்களில் சிக்கி, தங்க இடமில்லாமல் அலைந்து, ஊர் மக்கள் தங்கள் வீடுகளை காட்டேஜாக்கி தங்க வைத்தது… ரூம் கிடைக்காமல் வேறொரு நாட்டில் நடு ரோட்டில் ஒரு மளிகைக் கடைக்குப் பக்கத்தில் தங்கி – அங்கேயே நூடுல்ஸ் சமைத்துச் சாப்பிட்டது… பொக்காராவின் ஐஸ்கட்டி ஏரிச்சாலையில் பைக்கை விரட்டியது… 500 சிசி பைக்குகள் மட்டுமே ஏறக்கூடிய ஹில் டாப்பில் CT100-யை ஏற்றியது… கொடாரி எனும் ஏரியாவில் CT100-ல் கொடூரமான ஆஃப்ரோடு செய்தது… நேபாள நாட்டில் நிலநடுக்கத்தில் தப்பித்தது… புத்தபிட்சுக்களுடன் புகைப்படம் எடுத்தது… திரும்ப வர பணம் இல்லாமல் அலைந்து திரிந்தது… ராணுவத்தினரிடம் மாட்டி விஷயம் சொல்லி பிரச்சனையில் இருந்து மீண்டது, நேபாள ராணுவத்தினரின் உதவியுடன் சீன பார்டரில் செல்ஃபி எடுத்தது என்று அவர் சொன்ன எக்கச்சக்க த்ரில்லிங் விஷயங்களை எழுத பக்கம் போதாது.

ஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி!

``கோவையில் இருந்து கிளம்பி 8-வது நாள். சாயங்காலம் 4 மணி. கொடாரி எனும் ஏரியா. செம ஆஃப்ரோடு பண்ணினோம். இதுதான் நேபாளம் – சீனா பார்டர். 6 மணிக்குள்ள திரும்பிடலாம்னு பிளான் பண்ணினோம். ஒரு 5 நிமிஷம்கூட ஆகியிருக்காது. சட்டுனு என் மொபைலைப் பார்த்தா… மணி 6.30னு காட்டுச்சு. அதாவது, சீனா நேரம். ரொம்பப் பயந்துட்டோம். அப்புறம் நேபாள நாட்டு ராணுவத்தினர்தான் நாங்க சைனா பார்டர் போயிட்டு, ஊர் திரும்ப உதவி பண்ணினாங்க!’’ என்று அவர் சொன்னபோது, வாவ் என்றிருந்தது.

ஐஸ்கட்டி மழை... பனிமலை - CT100-ல் சீனா பார்டர் தொட்ட டோனி!

வெறும் 16,000 ரூபாய், 18 நாட்கள், ஒரு 100 சிசி பைக், ஜீரோ பட்ஜெட் தங்கும் செலவு என்று சிம்பிள் பட்ஜெட்டில் நாடுவிட்டு நாடு போவதெல்லாம்… சான்ஸே இல்லை!

அற்புதம் நிகழ்த்திவிட்டீர் டோனி அற்புதராஜ்!