Published:Updated:

கொழும்பு - திருகோணமலை; இராவண தேசத்தில் ஒரு ஹெவி டியூட்டி பயணம்!

கொழும்பு - திருகோணமலை;
பிரீமியம் ஸ்டோரி
கொழும்பு - திருகோணமலை;

பயணம்: டிவிஎஸ் XL100

கொழும்பு - திருகோணமலை; இராவண தேசத்தில் ஒரு ஹெவி டியூட்டி பயணம்!

பயணம்: டிவிஎஸ் XL100

Published:Updated:
கொழும்பு - திருகோணமலை;
பிரீமியம் ஸ்டோரி
கொழும்பு - திருகோணமலை;

சைக்கிளைவிட வேகமானது; பைக் மற்றும் ஸ்கூட்டர் அளவுக்கு விலை கிடையாது. இதனாலேயே மிடில் கிளாஸ் மக்களின் ஆஸ்தான சாய்ஸ் ஆயின மொப்பட்கள். அதிலும் டிவிஎஸ் XL, `நம்ம ஊரு வண்டி' என்ற டேக் லைனுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் இவை இல்லாத கிராமங்களே இல்லை.

கொழும்பு - திருகோணமலை; இராவண தேசத்தில் ஒரு ஹெவி டியூட்டி பயணம்!

கடந்த ஜூலை மாதம், 100சிசி இன்ஜின், i-touch ஸ்டார்ட், சிங்கிள் பீஸ் சீட், சாஃப்ட்டான சஸ்பென்ஷன் என நிறைய அப்டேட்ஸ் உடன் வந்த டிவிஎஸ் டிவிஎஸ் XL 100 மொப்பட்டை, ``ஓட்டிப் பார்க்க வர்றீங்களா?'' என்று டிவிஎஸ் கேட்டது. அப்படி என்ன ஸ்பெஷல் என்றோம். ‘`இலங்கைக்கு வாங்க தெரிஞ்சிக்குவீங்க'’ என்றார்கள். இன்டர்நேஷனல் லைசென்ஸ் வாங்கிக் கொண்டு இலங்கைக்குப் புறப்பட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான கொழும்புவில் இருந்து கிழக்குக் கடற்கரை நகரமான திருகோணமலை வரை சென்று, அங்கிருந்து நெகம்போ எனும் நீர்க்கொழும்புவுக்குத் திரும்புவதுதான் திட்டம். மொத்தம் 620 கி.மீ பயணம், 3 நாட்கள், டிவிஎஸ் XL மொப்பட்டில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கை போன்ற ஒரு சின்ன நாட்டை ஒரு மொப்பட்டில் சுற்றுவது செம த்ரில் எக்ஸ்பீரியன்ஸ். டிவிஎஸ் XL இன்ஜினைச் சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. 620 கி.மீ தூரம்தான் திட்டம் தீட்டியிருந்தது டிவிஎஸ். ஆனால், கடைசியில் ஓடோமீட்டர் ரீடிங் 700 கி.மீ-யைத் தாண்டியிருந்தது. பயணம் முழுவதும் ஆக்ஸிலரேட்டரை முழுவதுமாக முறுக்கியபடி ஜாலியாக 60-70 கி.மீ வேகத்திலேயே சென்றோம். எந்த இடத்திலும் இன்ஜின், பிரச்னையைக் கொடுக்கவில்லை. XL100 மாடலில் இரண்டு வேரியன்ட். ஒன்று XL ஹெவி டியூட்டி, இன்னொன்று XL கம்ஃபர்ட். ஹெவி டியூட்டி என்ற பெயருக்கு ஏற்ப இந்த மாடலின் ஃப்ரேமை வலுவானதாக உருவாக்கியிருக்கிறார்கள். இதனால், கம்ஃபர்ட் மாடலை விட இது 2 கிலோ எடை அதிகம். எடையில் மட்டுமில்லை; ரைடிங் அனுபவத்திலும் வித்தியாசம் தெரிந்தது.

day 1
day 1

ஹெவி டியூட்டி குறைவான வேகத்தில் அதிக டார்க்கைத் தருகிறது. ஆனால், பவர் லீனியராக இல்லை. ஆக்ஸிலரேட்டரை முழுவதுமாக முறுக்கிக் கொண்டு சென்றால், கம்ஃபர்ட் மாடல் சுலபமாக ஓவர்டேக் செய்துவிடுகிறது. இரண்டு வேரியன்ட்டுக்கும் டயர் ஒரே அளவுதான் என்றாலும், ஹெவிடியூட்டியின் டயரில் அதிக லோடில் நல்ல கிரிப் தருவதற்காக ட்ரெட்டின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. இதில், பின் சீட்டைக் கழட்டிவிட்டு அந்த இடத்தை கேரியராகவும் பயன்படுத்தலாம்.

கம்ஃபர்ட், ஒரு ஃபேமிலி மொப்பட். டூயல் டோன், முன்பக்கம் பைகள் மாட்டுவதற்கான ஹூக், நீளமான சிங்கிள் பீஸ் சீட் என ஸ்டைலாக டிசைன் செய்திருக்கிறார்கள். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் ஓட்டுவதற்கு கம்ஃபர்ட்டாக இருக்கும் கம்ஃபர்ட்.

day 2
day 2

65 கி.மீ வேகம் தாண்டிச் செல்லும்போது இதன் நிலைத்தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. கம்ஃபர்ட்டின் சஸ்பென்ஷன், ஹெவிடியூட்டி அளவுக்கு ஸ்டிஃப்பாக இல்லை. சிறிய அதிர்வுகளைக்கூட உள்வாங்குகிறது. சீட் சாஃப்ட்டாக இருப்பது இதன் கூடுதல் ப்ளஸ். கம்ஃபர்ட் வேரியன்ட்டின் இன்ஜினில் பவர் லீனியராக இருக்கிறது.

இதனால் குறைவான எடை இருக்கும்போது ஹெவிடியூட்டியைவிட வேகமாக இருக்கிறது. ஆனால், எடையை ஏற்றி இழுக்கச்சொன்னால் கொஞ்சம் சோம்பேறித்தனப்படுகிறது இந்த XL.

day 3
day 3

இப்படி ஒரு பாதையில் ஒரு வேகமான பைக்கில் சென்றிருந்தால், வேகமாக டார்க்கெட்டை நோக்கிச் சென்றிருப்போம். ஆனால், இந்தப் பசுமையான சாலைகளையும், கடலில் மூழ்கும் சிவப்புச் சூரியனையும், மீன் பிடிக்கக் காத்திருக்கும் வலைகளையும், ஐஸ் வண்டிகளையும், காற்றாலைகளையும், அமைதியாகக் கடக்கும் நதிகளின் அழகையும் ரசிக்க நேரம் இருந்திருக்காது. வேகமான வாழ்க்கையில், கொஞ்சம் பொறுமையாகச் செல்லக் கற்றுக் கொடுத்துள்ளது இந்த XL.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism