வீசும் காற்றை முகத்தில் வாங்கியபடி, மண் மணத்தை நாசியில் சுவாசித்தபடி பைக் ஆக்ஸிலரேட்டரை முறுக்கும் மோசமானவர்களில் முக்கியமானவர், சக்தி. இந்தியா முழுக்க தனது அவென்ஜர் பைக்கில் தனது நண்பருடன் ரைடிங் போய், ஏகப்பட்ட அனுபவங்களையும், நாஸ்டால்ஜியாவையும் சுமந்து வந்திருக்கிறார் இந்த தென்காசி பைக்கர்.

துபாயில் பஸ் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த சக்திக்குப் பிடித்தது ஊர் சுற்றுவது. ‘கடைக்குப் போயிட்டு வந்துடுறேன்’ங்கிற மாதிரி அடிக்கடி ‘காஷ்மீர் போயிட்டு வந்துடுறேன்’ என்று பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவாராம். இதுவரை நான்கைந்து தடவை இந்தியாவை பைக்கிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டார் சக்தி. ஒவ்வொரு தடவையும் பைக் மட்டும் வேறுபடும். இந்த முறை பஜாஜ் அவென்ஜர் 220. தனது தென்காசி வீட்டில் இருந்து நவம்பர் 7–ம் தேதி கிளம்பிய சக்தி, கன்னியாகுமரியில் தனது பயணத்தை ஆரம்பித்து காஷ்மீர் வரை தொட்டுவிட்டு, சரியாக 66 நாட்கள் கழித்துத்தான் வீட்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ‘‘பிக்பாஸ் வீடு மாதிரி 66 நாட்கள் வீட்டுக்கே தொடர்பு இல்லாம...

எப்படி இருந்துச்சு அனுபவம்?’’ ‘‘எனக்கு இந்தியாவே பிக் பாஸ் வீடு மாதிரிதான். இங்கே டேக் லைன், முடிஞ்சவரை ஓடணும்; ஒளியணும்! அப்படித்தான் இருந்துச்சு அனுபவம். ஷிம்லா குளிரில் ஓட்டை க்ளோவ்ஸில் பைக் ஓட்டி விரல் விரைச்சது, மிலிட்டரியிடமிருந்து எஸ்கேப் ஆனது, தாஜ்மஹாலில் தீவிரவாதினு மாட்டினது, ஐஸ் கட்டியில் வழுக்க வழுக்க பைக் ரைடிங் போனது, ஐஸ் தண்ணியில் போட்டிங்னு ஏகப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ். சொன்னா பக்கம் பத்தாது!’’ என்றார் சக்தி.இந்தப் பயணத்தில் ரொம்பவும் சிலிர்ப்பூட்டிய விஷயம் – ஒடிஸாவில் உள்ள சிலிகா ஏரிதானாம். இது வழியாகத்தான் பூரி போக வேண்டும். இடது வலது என்று இருபுறமும் ஏரி. செமையான வியூ. நேராக பைக்கில் 70 கி.மீ வேகத்தில் சென்று கொண்டே இருந்தவர், திடும்மென சடர்ன் பிரேக். பார்த்தால்... சாலை இறங்கும் இடம் இடத்தில் ஏரித் தண்ணீர். அதாவது, பைக் போக சாலையே இல்லை. சுற்றிப் பார்த்தால் நாலாபுறமும் பட்டுப் போன்ற ஏரி... ஒரு அவென்ஜர்... இரண்டு இளைஞர்கள்.

அப்புறம் அந்த வழியாக வந்த ஒரு தாத்தா, ‘இந்தப் பக்கம் ஏன் வந்தீங்க..’ என்று வார்னிங் செய்து, போனா போகட்டும் என்று தனது படகிலேயே ‘தோ கி.மீட்டர்தான்’ என்று பைக்கையும் இவர்களையும் ஏற்றிக்கொண்டு ‘தீரன்’ பட தாத்தாபோல் வழிகாட்டிக் கூட்டிப் போயிருக்கிறார். ‘‘ஜிபிஎஸ் எப்பவுமே நம்பக்கூடாதுன்னு அப்போ தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்றார் சக்தி.

‘‘காஷ்மீர், ஷிம்லானா மிலிட்டரி இல்லாமலா... அப்படி ஏதும் அனுபவம்?’’ என்றால், ‘‘அதுவும் நிறைய இருக்கு’’ என்று ஆரம்பித்தார். ‘‘நேபாள் பார்டர்னு நினைக்கிறேன். நான் என்னோட கோ–ப்ரோவில் வீடியோ எடுத்துட்டு அப்போதான் கேமராவை மடிச்சு உள்ளே வெச்சேன். திடீர்னு என்னைச் சுத்தி மிலிட்டரி மேன். சுத்தி வளைச்சுட்டாங்க. ‘ேஹண்ட்ஸ் அப்... மடிச்சு வெச்ச அந்த கன்னை எடுங்க’னு சொல்லி, களேபரம் ஆகிடுச்சு. அது வீடியோ கேமராதான்னு தெரிஞ்சதுக்கப்புறம்தான் எங்களை அனுப்பினாங்க. அப்புறம் ஷிம்லாவிலேயும் மிலிட்டரி ஏரியாவுக்குள் தெரியாம நுழைஞ்சுட்டோம். ஒரு வழியா பேசி விளக்கினதுக்கப்புறம் ‘இந்தப் பக்கம்லாம் வராதீங்க. சுட்டுடப் போறாங்க’னு எங்களை வார்ன் பண்ணி அனுப்பினாங்க.

அதேமாதிரிதான் தாஜ்மஹால்லேயும் ஒரு சம்பவம் ஆகிடுச்சு. நான் எப்பவுமே பழம் வெட்டுறதுக்காக ஒரு கத்தியைத் துணியில் சுருட்டி வெச்சிருப்பேன். என்ட்ரன்ஸில் ஸ்கேனர்ல கத்தி தெரிஞ்சதும் தீவிரவாதி மாதிரி அரெஸ்ட் பண்ணிட்டாங்க. நான் அந்தளவுலாம் வொர்த் இல்லை; சத்தியமா பழம் வெட்டுறதுக்குத்தான் இந்தக் கத்தினு சொன்னதுக்கப்புறம்தான் எங்களை விட்டாங்க!’’

பயணம் என்றால், தங்கும் இடமும் சாப்பாடும்தான் முக்கியப் பிரச்னையே. ‘‘ஆமாண்ணா... நான், வெஜ் பார்ட்டி. அதாவது, சுத்த சைவம். நான்–வெஜ் பார்ட்டிகளுக்குப் போற இடமெல்லாம் சிறப்புதான். எனக்குத்தான் கொஞ்சம் கஷ்டம் ஆயிடுச்சு. அதேபோல், தங்கும் இடம் இந்த முறை பிரச்னை ஏற்படலை. கங்கை நதியை ஒட்டினாப்புலேயே ரூம் போட்டுத் தங்கினதெல்லாம் செம! போன தடவைதான் தங்க இடம் இல்லாம, கோயில்ல, மண்டபத்துல, நெடுஞ்சாலையில் தங்கின அனுபவம்லாம் நடந்தது! அடுத்த ட்ரிப்பில் இதைவிட அனுபவத்தோட வர்றேன்.’’ என்றார் சக்தி.

பாதுகாப்புதான் முதல் முக்கியம். ஜாக்கெட், ரைடிங் பேன்ட், ஹெல்மெட், ரைடிங் ஷூ, க்ளோவ்ஸ் ரொம்ப முக்கியம். குளிரில் விரல் விரைச்சா தாங்க முடியாது.

கிளட்ச் கேபிள், ஆக்ஸிலரேட்டர் கேபிள், செயின் லூப்ரிகேஷன், டூல் கிட்ஸ், ஸ்பார்க் பிளக், மினிமம் டாப்–அப்புக்கான (200மிமீ) ஆயில் இதெல்லாம் கைவசம் இருப்பது நல்லது. அடிக்கடி ஜெனரல் செக்–அப் அவசியம்.

சில இடங்களில் ரோடு பிளாக் செய்து விடுவார்கள். மலைச்சரிவு போன்ற இடங்களில் 3 நாட்களெல்லாம் சாப்பாடு கிடைக்காமல் அல்லாட வேண்டி வரும். அதனால் ஒரு மினி ஸ்டவ், சமையல் பொருட்கள், சில பாத்திரங்கள் அவசியம்.

நிறைய வாட்டர் புரூஃப் பொருட்கள் அவசியம். முக்கியமாக ஷோல்டர் பேக். மழை நேரங்களில் அவசியம்.

முடிந்தளவு ஜிபிஎஸ்–ஸை முழுவதும் நம்பாதீர்கள். ஒற்றையடிப் பாதை, ஏரிகள், மண் சாலைகள், சுடுகாட்டுப் பாதைகளுக்கெல்லாம் ஜிபிஎஸ்–ஸை நம்பிப் போய்விடாதீர்கள்.