
ஃபர்ஸ்ட் லூக்: ட்ரையம்ப் ட்ரைடண்ட் 660
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி இந்தியாவில் வெளியாகியிருக்கிறது ட்ரையம்ப் ட்ரைடண்ட் 660 பைக். சுமார் 6.95 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட இதுதான் ட்ரையம்ப்பின் குறைந்த விலை பைக்!
660 சிசி திறன் கொண்ட இன்லைன்-த்ரீ-சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ட்ரைடன்ட் 660, 81bhp பவர் மற்றும் 64Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸில், க்விக் ஷிப்ட்டரைப் பொருத்திக் கொள்ளலாம். ரைடு-பை-ஒயர் வசதி கொண்ட இதில் ‘ரோடு மற்றும் ரெய்ன்’ என இரு ரைடிங் மோடுகள் உள்ளன. ட்ராக்ஷன் கண்ட்ரோலை அட்ஜஸ்ட் செய்ய முடியும். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோ-ப்ரோ கன்ட்ரோல், போன் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் ஆகியவற்றையும் பயன்படுத்த முடியும்.

ட்ரைடண்டில் சஸ்பென்ஷனுக்காக USD போர்க் மற்றும் ப்ரீலோடட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரேக்குகளுக்கு முன்பக்கம் 310mm டிஸ்க், இரண்டு பிஸ்டன்கள் கொண்ட முன் பக்க காலிப்பரும், பின் பக்கம் சிங்கிள் பிஸ்டன் காலிப்பரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் எடை 189 கிலோ மட்டுமே உள்ள, இதில் மிஷ்லின் 5 டயர்கள் கொடுக்கப்பட இருக்கின்றன.
ட்ரைடண்டின் போட்டியாளர்களுக்கு ஏற்பவே விலையை நிர்ணயித்துள்ளது ட்ரையம்ப். இதன் நேரடிப் போட்டியாளரான கவாஸாகி Z650-யைவிட (6.18 லட்சம் ரூபாய்) கொஞ்சம் அதிகமாகவும், ஹோண்டா சிபி650ஆர்-ஐ (8.67 லட்சம் ரூபாய்) விட குறைவாகவும் விலை நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் நான்கு கலர் வேரியன்ட்களில் கிடைக்கிறது இந்த புதிய ட்ரையம்ப் ட்ரைடண்ட் 660.