Published:Updated:

அப்பாச்சி RR310... ட்ராக்குக்கு ஓகே...ரோட்டுக்கு எப்படி இருக்கு?

அப்பாச்சி RR310
பிரீமியம் ஸ்டோரி
அப்பாச்சி RR310

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் அப்பாச்சி RR310

அப்பாச்சி RR310... ட்ராக்குக்கு ஓகே...ரோட்டுக்கு எப்படி இருக்கு?

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் அப்பாச்சி RR310

Published:Updated:
அப்பாச்சி RR310
பிரீமியம் ஸ்டோரி
அப்பாச்சி RR310

2017-ல் வெளியானதில் இருந்தே தொடர்ந்து அப்பாச்சி RR 310-க்கு அவ்வப்போது குட்டி குட்டி அப்டேட்களைக் கொடுத்து ஃபரெஷ்ஷாகவே வைத்திருக்கிறது டிவிஎஸ். கடந்த ஆண்டும் புதிதாக சில அப்டேட்களுடன், புதிய திட்டம் ஒன்றையும் RR 310 உடன் அறிமுகப்படுத்தியிருந்தது டிவிஎஸ். சென்னை MMRT ரேஸ் ட்ராக்கில் ஏற்கெனவே இந்த RR 310-ஐ டாப் ஸ்பீடில் விரட்டியது ஞாபகம் இருக்கிறது. முந்தைய RR 310-ல் இருந்து கலர் ஸ்கீம்களைவிட இந்த முறை அப்டேட் செய்த மாடலின் கலர் ஸ்கீமும் RR 310-க்கு ஒரு ரேஸ் பைக்குக்கான தோற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப நாம் ட்ராக்கில் சோதனை செய்த போதும் நம்முடைய எதிர்பார்ப்புகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்திருந்தது RR 310. ரேஸ் ட்ராக்குக்கு ஓகே! ஆனால், `நம் தினசரிப் பயன்பாட்டுக்கு இந்த பைக் சரி வருமா’ என்ற கேள்வி நம் எல்லோரிடமும் இருந்திருக்கும். அதனையும் டெஸ்ட் செய்ய நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ரோடு டெஸ்ட்டுக்காக நம்மிடம் மீண்டும் வந்திருந்தது RR 310. நம்ம ஊர் சாலைகளில் RR 310 எப்படி இருக்கிறது, தினசரிப் பயன்பாட்டுக்கு ஏற்ற பைக்தானா RR 310? பார்க்கலாம்.

என்னென்ன மாறியிருக்கிறது?

புதிய RR310-ல் என்னென்ன மாற்றங்களை எல்லாம் டிவிஎஸ் செய்திருக்கிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். முழுமையாக ரீடிசைன் செய்யப்பட்ட எக்ஸாஸ்ட் சிஸ்டம், கொஞ்சம் உயர்த்தி வைக்கப்பட்ட மஃப்ளர் ஆகியவை புதிய காஸ்மெட்டிக் மாற்றங்கள். இது தவிர, ப்ராக்டிக்கலான சில மாற்றங்களையும் புதிய அப்பாச்சியில் செய்திருந்தது டிவிஎஸ். ட்ரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை அவ்வப்போது வீட்டில் மறந்து வைத்துவிட்டுச் சென்று விடுவோம், இந்த அப்பாச்சியின் அந்த ஆவணங்களை டிஜிட்டலாக ஸ்டோர் செய்து கொள்ளும் வசதியை அளித்திருக்கிறது டிவிஎஸ். மேலும், டே-ட்ரிப் மீட்டர் மற்றும் ஹை-ஸ்பீடு இண்டிகேட்டர் ஆகிய வசதிளைப் புதிதாக அளித்திருக்கிறது. இவையெல்லாம் ஸ்டாண்டர்டான அப்டேட்கள். இந்த ஸ்டாண்டர்டு அப்டேட்களுடன் 5000 ரூபாய் வரை விலையையும் கூட்டி 2,59,000 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் RR 310-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ்.

 RR 310
RR 310
காட்டு விலங்கின் கண்களைப்போல் இருக்கும் ஹெட்லைட்...
காட்டு விலங்கின் கண்களைப்போல் இருக்கும் ஹெட்லைட்...
ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் செட்அப்...
ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் செட்அப்...
அப்பாச்சி RR310...
ட்ராக்குக்கு ஓகே...ரோட்டுக்கு எப்படி இருக்கு?
கலர் ஸ்கீம் மாற்றிக் கொள்ளலாம்.
கலர் ஸ்கீம் மாற்றிக் கொள்ளலாம்.
ரேஸ் பைக்கின் எக்ஸாஸ்ட் பீட் செம!
ரேஸ் பைக்கின் எக்ஸாஸ்ட் பீட் செம!
டெயில் லைட் அசெம்பிளி செம ஷார்ப்.
டெயில் லைட் அசெம்பிளி செம ஷார்ப்.
டச் ஸ்க்ரீன், போன் மாதிரி கெத்தாக இருக்கிறது.
டச் ஸ்க்ரீன், போன் மாதிரி கெத்தாக இருக்கிறது.
க்ளிப் ஆன் ஹேண்டில் பார்கள்... ஸ்விட்ச்கள் தரம் அருமை!
க்ளிப் ஆன் ஹேண்டில் பார்கள்... ஸ்விட்ச்கள் தரம் அருமை!
பில்லியன் சீட் சும்மா பேருக்குத்தான்.
பில்லியன் சீட் சும்மா பேருக்குத்தான்.

ரேஸ் மற்றும் டைனமிக் கிட்

இந்த RR 310 உடன் ரேஸ் கிட் மற்றும் டைனமிக் கிட் ஆகியவற்றைக் கூடுதலாக வழங்குகிறது டிவிஎஸ். வேண்டும் என்பவர்கள் இந்த கிட்களைத் தனியாகக் கூடுதல் தொகை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். ரேஸ் கிட் என்பது முழுமையாக ரேஸிங் அனுபவத்திற்காகக் கொடுக்கப்படுவது. இந்த ரேஸ் கிட் மூலம் Clip-on ஹேண்டில்பார்கள் 8 டிகிரி அளவுக்குக் கீழ்நோக்கியும், 5 டிகிரி அளவுக்கு உள்நோக்கியும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். அதோடு 30 மிமீ வரை உயர்த்தி வைக்கப்பட்ட ஃபுட்பெக்குகளும் இந்த ரேஸ் கிட்டுடன் கிடைக்கிறது. ட்ராக்கில் ஓட்டுவதற்கு இந்த ரேஸ் கிட் சிறப்பான சாய்ஸாக இருக்கும்.

ஆனால், நம் தினசரிப் பயன்பாட்டிற்கு ஏற்றது டைனமிக் கிட் தான். இந்த டைனமிக் கிட்டின் மூலம் முன்பக்க USD போர்க் சஸ்பென்ஷனில் ப்ரீலோடு, கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்டு ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷனில் ப்ரீலோடு மற்றும் ரீபவுண்டை மட்டும் அட்ஜஸ்ட் மட்டும் செய்து கொள்ள முடியும். ஆனால், ரேஸ் கிட்டுக்காக 5000 ரூபாயும், டைனமிக் கிட்டுக்காக 12,000 ரூபாயும் நாம் கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

தினசரிப் பயன்பாடு

இந்தப் புதிய RR 310-ல் ப்ராஸ் கோட்டட் செயினையும் கொடுத்திருக்கிறது டிவிஎஸ். இது எளிதில் துருப்பிடிக்காமல் நீண்ட காலம் உழைக்கும். RR 310-ஐ கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் வரை வைத்து டெஸ்ட் செய்தோம். டிராஃபிக் நிறைந்த நகரச் சாலைகளாக இருந்தாலும் சரி, நெடுஞ்சாலைப் பயணமாக இருந்தாலும் சரி, ரேஸ் ட்ராக்காக இருந்தாலும் சரி, அனைத்து இடத்திலும் சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொடுத்து ஸ்கோர் செய்கிறது இந்த RR 310. ரேஸ் கிட் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட ஹேண்டில்பாரைப் பயன்படுத்தினாலும், மிகவும் தொய்வில்லாமல் தினசரிப் பயன்பாட்டுக்கும் நன்றாகவே இருக்கிறது RR 310.

சில பைக்குகளில் சஸ்பென்ஷன் செட்அப் நமக்குக் கொஞ்சம் அசௌகரியத்தைக் கொடுக்கலாம். ப்ரீமியம் பைக்குகளில் சஸ்பென்ஷன் செட்டப் சிறப்பாக இல்லையென்றால், பைக் ஓட்டும் அனுபவத்தையே அது முழுமையாகக் கெடுத்துவிடும். நாம் ஓட்டும் சாலை, நம்முடைய எடை, டயர் ஆகியவற்றுக்கு ஏற்ப சஸ்பென்ஷன் செட்டப்பையும் அட்ஜஸ்ட் செய்து ஓட்டும்போது நிச்சயமாக சிறப்பான ஒரு ரைடிங் அனுபவத்தை நம்மால் பெற முடியும். அந்த வகையில் இந்த RR310-ல் இந்த டைனமிக் கிட் அடிஷன் சிறப்பு.

சஸ்பென்ஷன் செட்டப்களை நம்மால் அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்றாலும், என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் நாமாகவே அட்ஜஸ்ட் செய்ய முயல்வது சில நேரங்களில் தவறாக முடியலாம். பல நேரங்களில் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு கிடைக்கும் ரைடிங் அனுபவத்தைப் பெற முடியுமால் போகலாம். எனவே, சஸ்பென்ஷன் செட்டப் குறித்து நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளும்வரை அது குறித்த அனுபவம் உள்ள மெக்கானிக் மூலம், நமது ரைடிங் தன்மைக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஷனை செட்டப் செய்து கொள்வது சிறந்தது.

மோ.வி தீர்ப்பு

பார்ப்பதற்கு ரேஸ் பைக் போன்றே இருக்கிறதே, தினசரிப் பயன்பாட்டிற்கு வாங்கினால் எப்படி இருக்கும் என்ற யோசனையில் இருப்பவர்கள், கண்டிப்பாக இந்த RR 310-ஐ முயற்சி செய்யலாம். ரேஸ் கிட் மற்றும் டைனமிக் கிட் ஆகியவை ஆப்ஷனல் மட்டுமே! சிறப்பான ரைடிங் அனுபவம் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக டைனமிக் கிட்டையும் முயற்சி செய்யலாம். ரேஸ் பைக் போன்ற தோற்றம் வேண்டாம் என்பவர்களுக்கு, நார்மலான கலர் ஸ்கீமுடனும் RR 310 இருக்கிறது. மேலும், ரேஸ் ரெப்ளிகா கலர் ஸ்கீம் வேண்டாம் என்றால் 4,500 ரூபாய் குறைவான விலையிலேயே RR 310-ஐ நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். மொத்தத்தில் தினசரிப் பயன்பாட்டுக்கும் ஏற்ற ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் இந்த RR 310.

 RR 310
RR 310
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism