‘என்டார்க் - ரேஸ் எடிஷன் மாடல், பார்க்க எப்படி இருக்க வேண்டும்?’ - இதற்கு ஒரு அற்புதமான டிசைனை உருவாக்கச் சொல்லி ஒரு டாஸ்க் வைத்திருந்தது டிவிஎஸ். டாஸ்க்குக்குப் பெயர் - ‘TVS NTORQ 125 - Call of Design’. 300-க்கும் அதிகமான டிசைன் பயிலும் மாணவர்கள் மற்றும் 20-க்கும் அதிகமான ஆட்டோமொபைல் ஜர்னலிஸ்ட்கள் தங்கள் திறமையைக் காட்டினார்கள்.

இதில் மாணவர்கள், விதவிதமான தோற்றத்தில் என்டார்க்கை வடிவமைத்திருந்தார்கள். டிவிஎஸ்ஸின் வடிவமைப்பு நிபுணர்களும், R&D துறையைச் சேர்ந்தவர்களுமான எலியாஸ் ஏபிரஹாம், அமித் ராஜ்வாடே, டிவிஎஸ்மார்க்கெட்டிங் பிரிவின் துணைத் தலைவரான அனிருதா ஹால்டார்... என Jury பேனலில் பல்துறைத் தலைவர்கள் இருந்தனர்.

பலகட்டப் பரிசோதனைகளைத் தாண்டி, இந்தப் போட்டியில் பெங்களூரூவில் உள்ள ஸ்டேட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் பயிலும் இவான்கா திம்மக்கா என்ற மாணவி, டிசைன் மாணவர்களுக்கான பிரிவில் முதல் பரிசை வென்றார். பாடி பேனல்களில் ஸ்போர்ட்டி ஸ்டிக்கரிங் மற்றும் பைக் சீட்டில் அவர் உபயோகப்படுத்தியிருந்த கிராஃபிக்ஸ் அசத்தல் ரகம். இரண்டாவது பரிசை, நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டிசைனில் பயிலும் அனுப் நெல்லிகலையில் வென்றார். இன்டஸ்ட்ரீயல் டிசைன் சென்டரில் பயிலும் சித்தார்த் சங்வான் மற்றும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் டிசைனில் பயிலும் சச்சின் சிங் டென்சிங் மூன்றாவது பரிசை ஒருசேரத் தட்டிச் சென்றார்கள்.

ஆட்டோமொபைல்பத்திரிகையாளர்களுக்கான பிரிவில் `பவர் டிரிஃப்ட்’ அக்ஷய் சித்வார், `பைக்வாலே’ பிலால் ஃபிர்ஃபிரே, இண்டியன் ஆட்டோஸ் பிளாக் சோயப் கலானியா வெற்றி பெற்றனர்.

“இந்தப் போட்டி திட்டமிடப்பட்டது போன ஆண்டில்தான். ஒரு கல்லூரியிலிருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் டிவிஎஸ் வெளியிடும் மாடல்களுக்கும், இந்தப் போட்டியை இதே போன்று தொடர்ந்து நடத்தும் முடிவில் இருக்கிறோம்’’ என்றார் டிவிஎஸ் நிறுவனத்தின் வர்கீஸ் தாமஸ். டிசைன் உலகில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு, இந்த போட்டிகள் அவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கட்டும்.