Published:Updated:

பர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு!

டிவிஎஸ் மோட்டோசோல்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் இருக்கும் டிவிஎஸ் பைக் ஓனர்களை ஒன்றுகூட்டும் ஒரு முயற்சிதான் மோட்டோசோல். மோட்டோ என்பது மோட்டார் சைக்கிள், சோல் என்பது ஆன்மா...இந்த இரண்டையும் இணைப்பதே மோட்டோசோல் திருவிழா என்கிறது டிவிஎஸ். இரண்டு நாள்கள் கோவா வாகடார் பீச் அருகே நடந்த இந்த பைக்கிங் திருவிழாவில் நாங்களும் கலந்துகொண்டோம்.

டிவிஎஸ் மோட்டோசோல்
டிவிஎஸ் மோட்டோசோல்

நமக்குள் இருக்கும் பைக்கருக்கு உற்சாகம் தர பல போட்டிகளையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனவே அரங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

முதல் அரங்கத்தில் பார்க்கிங், சர்வீஸ் ஸ்டேஷன், மீடியா சென்டர், உணவுக் கடைகள், இசை நிகழ்ச்சி, ஸ்டன்ட் ஷோ, ஆக்சஸரீஸ் கடைகள், டிவிஎஸ் ரேஸ் பைக்குகளின் கண்காட்சி, செல்ஃபி போட்டி, VR ரேஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஸ் நிபுணர்களுடன் உரையாடல் எனப் பல விஷயங்களை வைத்திருந்தார்கள்.

பர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு!

இரண்டாம் அரங்கில் டர்ட் டிராக் மட்டுமே! இங்கு டர்ட் ரேஸ், ஸ்லோ ரேஸ், தடைகளைத் தாண்டும் அப்ஸ்டக்கிள் ரேஸ், மோட்டோகிராஸ் ஃபிட் எனப் பல பந்தயங்கள் இருந்தன. போட்டியும், கொண்டாட்டமும் மட்டுமில்லாமல், டிவிஎஸ் தனது முக்கியமான இரண்டு முடிவுகளையும் அறிவித்தது. முதல் நாள் ஆரம்பத்திலேயே 2020 டக்கார் ராலியில் ஷெர்கோ-டிவிஎஸ் அணி ரைடர்கள் யார் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுவரை இரண்டு இந்தியர்கள் மட்டுமே முடித்திருக்கும் இந்த ராலியில், வெற்றி பெறுவதை விடுங்கள்... போட்டியை முழுமையாக முடித்துவிட்டாலே வரலாறுதான். இந்நிலையில், இந்த ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஹரித் நோவா, டக்காரில் பங்கேற்கிறார். இவரோடு ஃபிரான்ஸ் ரைடர்கள் மைக்கேல் மெட்ஜ், ஜானி ஆபெர்ட் மற்றும் ஸ்பெயின் ரைடர் லெரன்ஸோ சான்டலினோவும் போட்டி போடுகிறார்கள். கடந்த ஆண்டு டக்கார் ராலியை வெற்றிகரமாக முடித்த ஒரே இந்தியர் கே.பி.அரவிந்த், பயிற்சியில் ஈடுபடும்போது ஏற்பட்ட காயம் காரணமாக இம்முறை டக்காரில் கலந்து கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு!
பர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு!

டிவிஎஸ்ஸின் அடுத்த அறிவிப்பு டிவிஎஸ் பர்ஃபாமன்ஸ் கியர்ஸ். அதாவது, தனது பிராண்டில் பிரத்தியேக ரைடிங் கியர்கள் மற்றும் ஆக்சஸரீஸ்களைத் தனது ஷோரூமில் டிவிஎஸ் விற்பனை செய்யப்போகிறதாம். டிவிஎஸ் ரேஸிங்கின் அடையாளம் பதித்த ஹெல்மெட், டி-ஷர்ட், கண்ணாடிகள், ரைடிங் ஜாக்கெட், ரைடிங் ஃபேன்ட், தொப்பி, கிளவுஸ், பூட்ஸ், டிராவல் பேக், டெக்-பேக் என ஏகப்பட்ட ஆக்சஸரீஸ்கள் அறிமுகமாகியுள்ளன.

டிவிஎஸ்ஸின் ஹெல்மெட்கள் அனைத்தும் இந்தியாவின் ISI மற்றும் அமெரிக்காவின் DOT தரச் சான்றிதழ் பெற்றவை. இந்த ஹெல்மெட்களை வேகா நிறுவனம் தயாரிக்கிறது. இது போக டூயல் வைசர், பின்லாக், D ரிங், ஐரோப்பாவின் ECE சான்றிதழ் உள்ள ட்ராக் பயன்பாடுகளுக்கு ஏற்ற ஹெல்மெட் ஒன்றையும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். இந்த ஹெல்மெட்டை ஆக்ஸார் நிறுவனம் தயாரிக்கிறது. ரேஸ் ஹெல்மெட், ரைடிங் பூட்ஸ் மற்றும் பேக்பேக்குளின் விலையை மட்டும் டிவிஎஸ் இன்னும் வெளியிடவில்லை.

பர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு!

ரைடிங் ஜாக்கெட் மற்றும் ரைடிங் பேன்ட்கள், தாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 600D பாலிஸ்டரில் செய்யப்பட்டுள்ள இந்த ரைடிங் கியர்கள் CE லெவல் 1 ப்ரொட்டக்டர் பாதுகாப்பு கொண்டவை. CE லெவல் -2 அல்லது KNOX ப்ரொட்டக்டருக்கு அப்டேட் செய்து கொள்ளும் விதம் வடிவமைக்கப் பட்டுள்ளது. முதல் நாள் மழை காரணமாக, பல நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப் பட்டிருந்தாலும். பரிக்ராமா குழுவின் ராக் இசை அதிர, அன்றைய இரவுக் கொண்டாட்டமாகவே முடிந்தது. டர்ட் டிராக் நிகழ்ச்சிகள், இரண்டாம் நாள் காலை 7 மணி முதலே தொடங்கப்பட்டன. முதல் நிகழ்ச்சியே ஷெர்கோ - டிவிஎஸ் ரைடர்களின் ஒத்திகை. டக்காரில் போட்டி போடுவது என்றால் சும்மாவா? அந்தக் குட்டி டிராக்கில், பைக்கில் சிட்டாகப் பறந்தார்கள் ரேஸர்கள்.

இதைத் தொடர்ந்து, மோட்டோசோல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு டர்ட் டிராக் அனுபவம் எப்படி இருக்கும் எனக் காண்பிக்க, மூன்று லேப் டர்ட் ரேஸ் மற்றும் ஆப்ஸ்டக்கில் ரேஸ் நடத்தப்பட்டது.

பர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு!

மோட்டோகிராஸ் ஃபிட் ஒரு புது ரகம். ஃபன், ஃபிட்னஸ் என இரண்டும் கலந்த போட்டி இது. இதில் முதலில் ரைடர்கள் பைக் இல்லாமல், ஒரு லேப் டிராக்கைச் சுற்றி வரவேண்டும். வழியில் ஒவ்வோர் இடத்திலும் தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற சின்ன ஃபிட்னஸ் டாஸ்க் செய்யவேண்டும். ஒரு லேப் முடிந்தபிறகு, வேகமாக ரைடிங் கியர்களை மாட்டிக்கொண்டு, பைக்கில் ஏறி இரண்டாவது லேப் முடிக்கவேண்டும். யார் குறைவான நேரத்தில் ரேஸை முடிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்.

ஸ்லோ ரேஸ், ஆப்ஸ்டக்கில் ரேஸ், ஸ்டன்ட் நிகழ்ச்சி உட்பட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்குக் கடைசி நாள் இரவு பரிசுகள் கொடுக்கப்பட்டன. இரவு யுஃபோரியா குழுவின் இசைக்குக் குத்தாட்டம் போட்டபடி, கொண்டாட்டமாக முடிந்தது மோட்டோசோல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு