Published:Updated:

பார்முலா ரேஸ் கார் ஆயில் நிறுவனத்துடன் கூட்டு சேரும் டிவிஎஸ்!

டிவிஎஸ் பெட்ரோனாஸ் ரேஸிங்
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் பெட்ரோனாஸ் ரேஸிங்

பைக் ரேஸ்: டிவிஎஸ் பெட்ரோனாஸ் ரேஸிங்

பார்முலா ரேஸ் கார் ஆயில் நிறுவனத்துடன் கூட்டு சேரும் டிவிஎஸ்!

பைக் ரேஸ்: டிவிஎஸ் பெட்ரோனாஸ் ரேஸிங்

Published:Updated:
டிவிஎஸ் பெட்ரோனாஸ் ரேஸிங்
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் பெட்ரோனாஸ் ரேஸிங்
பார்முலா ரேஸ் கார் ஆயில் நிறுவனத்துடன் கூட்டு சேரும் டிவிஎஸ்!

உங்களுக்கு ஃபார்முலா-1, மோட்டோ ஜிபி ரேஸ்கள் பற்றித் தெரிந்திருந்தால், நிச்சயமாக `பெட்ரோனாஸ்’ எனும் பெயரும் தெரிந்திருக்கும். 1995-ல் பார்முலா 1 ரேஸிங்கில் நுழைந்த பெட்ரோனாஸ், மெர்சிடீஸ் பென்ஸ் உடன் இணைந்து, தற்போது வரை தொடர்ந்து 8 முறை சாம்பியன் ட்ராஃபியைக் கைப்பற்றியிருக் கிறார்கள். பெட்ரோனாஸ் என்பது கார், பைக் மற்றும் டிரக்குகளுக்காக ஆயில் தயாரிக்கும் ஒரு நிறுவனம். இவர்கள் பார்முலா 1 மட்டுமன்றி மோட்டோ ஜிபி போன்ற பல பைக் ரேஸிங்குகளையும் ஸ்பான்சர் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெளிநாட்டு பெட்ரோனாஸ், இப்போது இந்தியாவுக்கு... அதுவும் நம் ஊருக்கு வந்திருக் கிறது - டிவிஎஸ் மூலம். ஆம், டிவிஎஸ் ரேஸிங் டீமுடன் கைகோர்த்துள்ளது பெட்ரோனாஸ்.

1982-ல் டிவிஎஸ், தன் ரேஸிங் பயணத்தை இந்தியாவில் துவங்கியது. அப்போதிலிருந்தே பல புதிய தொழில்நுட்பங்களைத் தன் பைக்குகளில் பொருத்தி வருகிறது டிவிஎஸ்.

இந்தியன் நேஷனல் ரேலி சாம்பியன்ஷிப், இந்தியன் நேஷனல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப், இந்தியன் நேஷனல் சூப்பர் க்ராஸ் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளை ஏற்கெனவே டிவிஎஸ் இந்தியாவில் நடத்தி வருகிறது. இப்போது பெட்ரோனாஸ் உடன் இணைந்தவுடன், இதுவரை டிவிஎஸ் ரேஸிங் என்று அழைக்கப்பட்டு வந்த டிவிஎஸ் டீம், தற்போது பெட்ரோனாஸ் டிவிஎஸ் ரேஸிங் என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளது. இனிமேல் டிவிஎஸ் கம்பெனி பங்கு கொள்ளும் எல்லா போட்டிகளுக்குமே பெட்ரோனாஸ் ஸ்பிரின்ட்டா எனும் ஆயிலைத்தான் பயன்படுத்தப் போகிறார்கள். இதன் மூலம் இனி அவர்களது ஆயிலை இந்திய மார்க்கெட்டிலும் கொண்டு வரப் போகிறார்கள். மேலும் அவர்கள் கார் பந்தயத்திற்குப் பயன்படுத்தும் ஆயிலைப்போல, சாலையில் செல்லும் கார்களுக்காக TRU4 Race Pro எனும் ஆயிலை மே 23 முதல் இந்திய மார்க்கெட்டில் கொண்டு வர இருக்கிறார்கள்.

பார்முலா ரேஸ் கார் ஆயில் நிறுவனத்துடன் கூட்டு சேரும் டிவிஎஸ்!

பெட்ரோனாஸ் ஸ்பிரின்ட்டா ஆயில் மொத்தம் மூன்று ரகங்களைக் கொண்டுள்ளது. ஒன்று பெட்ரோனாஸ் ஸ்பிரின்ட்டா F900, மற்றொன்று பெட்ரோனாஸ் ஸ்பிரின்ட்டா F700 என்று சொல்லப்படும் செமி சிந்தடிக் ஆயில், கடைசியாக F300. பெட்ரோனாஸ் இந்தியாவிற்கு வருவதன் மூலம், டிவிஎஸ்-க்கு வெளிநாடுகளில் சென்று ரேஸிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.

``எங்களுடைய டிவிஎஸ் ரேஸ் பைக்குகளை ஓட்டிப் பாருங்கள்!’’ என்று டிவிஎஸ் தரப்பிலிருந்து எங்களை அழைத்தார்கள். நாங்களும் அடுத்த நாளே ட்ராக்கில் டிவிஎஸ் அப்பாச்சி RR 310-ஐ ஓட்டிப் பார்த்தோம். நிறைய விஷயங்களை ரேஸிங்குக்காக மாற்றியமைத்திருப் பார்கள்போல. அந்த பைக்கை நான் புரிந்து கொள்ளவே எனக்கு இரண்டு முதல் மூன்று லேப்கள் தேவைப்பட்டது. இந்த மாதிரி ரேஸ் பைக்கில் நிறைய விஷயங்களை மாற்றியமைத்து அதில் எது பெஸ்ட்டாக இருக்கும் என்று பார்த்துத்தான் அதை ஸ்டாக் பைக்கில் கொண்டு வருவார்கள். அப்படித்தான் டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ் பைக்குகள், டிவிஎஸ் Ntorq ஸ்கூட்டர்கள் போன்றவற்றை மார்க்கெட்டில் கொண்டு வந்தார்கள். இப்போது அவர்கள் பெட்ரோனாஸ் உடன் இணைந்திருப்பதால், இன்னும் நிறைய எதிர்காலத் தொழில்நுட்பங்களை டிவிஎஸ்ஸிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism