Published:Updated:

அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையன் ரோனின்!

டிவிஎஸ் ரோனின் 225
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் ரோனின் 225

ஃபர்ஸ்ட் ரைடு: டிவிஎஸ் ரோனின் 225

அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையன் ரோனின்!

ஃபர்ஸ்ட் ரைடு: டிவிஎஸ் ரோனின் 225

Published:Updated:
டிவிஎஸ் ரோனின் 225
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் ரோனின் 225
டிவிஎஸ் ரோனின் 225
டிவிஎஸ் ரோனின் 225

எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.50 – 1.69 லட்சம்

ப்ளஸ் : சிட்டிக்குள் ஓட்ட லோ எண்ட் பெர்ஃபாமன்ஸ் சூப்பர், சுறுசுறுப்பான ஹேண்ட்லிங், வசதிகள், விலைக்கேற்ற தரம்

மைனஸ் : ஹை ஸ்பீடு க்ரூஸிங்கில் இன்னும் பவர் வேண்டும்

டிவிஎஸ் நிறுவனம் எது செய்தாலும் புத்திசாலித்தனமாகச் செய்கிறது. பழைய பைக்குகளின் ஃபேஸ்லிஃப்ட்டாக இருக்கட்டும்; புது பைக்குகளின் லாஞ்ச்சாக இருக்கட்டும்; தொழில்நுட்பங்களைப் புகுத்துவதாக இருக்கட்டும். எல்லாமே ஒரு படி மேலே! இப்போதும் அப்படித்தான் ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது. அதன் பெயர் ரோனின்.

டிவிஎஸ் நிறுவனத்தில் கம்யூட்டிங்குக்கு பைக்ஸ் உண்டு; பெண்களுக்கு ஸ்கூட்டர் உண்டு; ஸ்போர்ட்டி பிரியர்களுக்கு அப்பாச்சி மாதிரி பைக்ஸ் இருக்கின்றன. நீண்ட தூரம் செல்பவர்களுக்கு என ஒரு க்ரூஸர் மாடல் பைக்தான் டிவிஎஸ்–ல் இல்லாமல் இருந்தது. இப்போது அதையும் கொண்டு வந்துவிட்டது டிவிஎஸ். அதுதான் ரோனின். இதை கிட்டத்தட்ட ஒரு குவார்ட்டர் லிட்டர் இன்ஜினுக்கு அருகே கொண்டு வந்ததில்தான் இதன் புத்திசாலித்தனம் இருக்கிறது. யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர், ஹோண்டா ஹைனெஸ், ராயல் என்ஃபீல்டு மீட்டியார் போன்ற க்ரூஸர்களுக்குப் போட்டியாக இருக்க வேண்டுமென்றால்… அதைவிட லேசாக பவர் குறைந்தாலும் பரவாயில்லை; ஸ்டைலிலும் விலையிலும் மக்களை ஈர்க்க வேண்டும் என்று ரோனினைக் கொண்டு வந்திருக்கிறது டிவிஎஸ்.

டிவிஎஸ் ரோனின் 225 சிசி பைக்கை ஓட்டிப் பார்க்க கோவா வரை மழையில் போயிருந்தோம். ரோனின் எப்படி இருக்கு?

டிசைன்

4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஜேப்பலின் என்றொரு பைக்கைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள் டிவிஎஸ் ஸ்டாலில். அந்த ஜேப்பலின்தான் இப்போது ரோனின் என்று பெயர் மாற்றம் கண்டு சாலைகளுக்கு வந்திருக்கிறது. டிசைன் கொள்கையில் பல மாற்றங்கள். க்ரூஸருக்கான அத்தனை ஸ்டைலிங் விஷயங்களும் இருக்கின்றன. சீட்டிங் பொசிஷனில் ஆரம்பித்து, ஃபுட் பெக்குகள், ஹேண்ட் பாரைப் பிடிப்பது வரை அது தெரிந்தது. எனக்கு ஹெட்லைட்தான் மிகவும் பிடித்திருந்தது. அந்த ரெட்ரோ ஸ்டைல் வட்ட வடிவ ஹெட்லைட்டில்… ஒரு T வடிவ DRL அட்டகாசம். இது மிகவும் புதுமை. தங்க நிறத்தில் அப் சைடு டவுன் ஃபோர்க்குகள் ஜொலிக்கின்றன. இது பார்க்க கிண்ணென்றும் இருக்கிறது; ஸ்டைலிஷாகவும் இருக்கிறது. இதன் அளவு 41மிமீ. இதன் ஹேண்டில் பாரை Swept Back பார் என்று சொல்வார்கள். இதுதான் நீண்ட தூர க்ரூஸிங்குக்கு ஏற்றது. இதில் 14 லிட்டர் டேங்க் கும்மென்று இருக்கிறது. தொடைகளுக்கு கிரிப் நன்றாக இருக்கிறது. இந்த அலாய் வீல்களின் டிசைனைப் பார்க்கையில் எனக்கு ஹார்லி டேவிட்சன் க்ரூஸர் பைக்குகள்தான் நினைவுக்கு வந்தன.

இதன் ஒற்றைக் குடுவை டயல் செம ரெட்ரோ டிசைன். டுகாட்டி ஸ்க்ராம்ப்ளரில் இருந்து இது இன்ஸ்பையர் செய்யப்பட்டிருக்கிறது. கசகசவெனக் குழப்பியடிக்கவில்லை. பின் பக்கம் கிராப் ரெயில் வழக்கம்போல் இருந்தது. ஆனால், இது பிடிக்கவில்லையென்றால், இதைக் கழற்றிக் கொள்ளலாம். இந்த எல்இடி டெயில் லைட் அருமை. ரியர் சப்ஃப்ரேமில் இதை இன்டக்ரேட் செய்திருப்பது அருமை. மிரர்கள் நல்ல ஸ்மார்ட் லுக்கிங். இதன் அம்பு வடிவ எல்இடி இண்டிகேட்டர்கள், ப்ரீமியம் ஃபீலைக் கொடுக்கின்றன. நாம் கொடுக்கும் காசுக்கு ஃபிட் அண்ட் ஃபினிஷ் மற்றும் இந்த பைக்கின் தரம் அருமை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஓவர்ஆலாக, தோற்றத்தில் நியோ – ரெட்ரோ மாடர்ன் ஸ்டைலில் பக்கா க்ரூஸராக ஜொலிக்கிறது இந்த ரோனின்.

அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையன் ரோனின்!
அலாய் வீல்களின் டிசைன் ஹார்லி டேவிட்சனை நினைவுபடுத்துகின்றன.
அலாய் வீல்களின் டிசைன் ஹார்லி டேவிட்சனை நினைவுபடுத்துகின்றன.
அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையன் ரோனின்!
அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையன் ரோனின்!
இது ஒரு கனெக்டட் பைக். ஸ்விட்ச்களின் தரம் சூப்பர்.
இது ஒரு கனெக்டட் பைக். ஸ்விட்ச்களின் தரம் சூப்பர்.

இன்ஜின் பெர்ஃபாமன்ஸ்…

சிட்டிக்குள் எப்படி… ஹைவேஸில் எப்படி?

இதிலிருப்பது 225 சிசி இன்ஜின். 2018 கான்செப்ட்டில் இதைக் காட்சிப்படுத்தும்போது, அதாவது ஜேப்பலினைச் சொல்கிறோம். அதில் ஹைபிரிட் பவர் டிரெய்ன் இருந்தது. ஒருவேளை, ரோனிலும் அது தொடரும் என்று நினைத்திருந்தேன்; அது மட்டும் இல்லை. மற்றபடி ஜேப்பலினில் காட்சிப்படுத்திய அதே 225 சிசி இன்ஜின்தான். 66மிமீ போர் அண்ட் ஸ்ட்ரோக் கொண்ட இன்ஜின் இது. இப்பொழுதெல்லாம் 4 வால்வில் வந்தால்தான் மரியாதை; இந்த ரோனினிலும் 4 வால்வ்தான். இன்லெட்டுக்கு 2; எக்ஸாஸ்ட்டுக்கு 2. மற்றபடி இது சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான். நல்லவேளையாக, ஏர் கூல்டு இல்லாமல் ஆயில் கூல்டு கொடுத்திருக்கிறார்கள். அப்பாச்சி 200–ல் இருக்கும் அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான், இதிலும் ரியர் வீலுக்குப் பவரைக் கடத்துகிறது.

இதில் இருப்பது 20.4bhp@7,500rpm. இதன் டார்க்கும் கிட்டத்தட்ட அதே! 19.93Nm@3,750rpm டார்க் தருகிறது இது. இந்த பவர் இந்த க்ரூஸருக்குக் குறைவுதான். சிட்டிக்குள் இதன் பெர்ஃபாமன்ஸ் வேற லெவலில் இருக்கிறது. சட் சட் எனச் சீறி நம்மை வியக்க வைத்தது டிராஃபிக்கில். அதாவது, இதன் லோ எண்ட் பெர்ஃபாமன்ஸ் பக்கா! இந்த ஷார்ட் கியரிங் செட்அப்பும், லீனியராகக் கிடைக்கும் பவர் டெலிவரியும்தான் இதற்குக் காரணம். டார்க்கையும் சொல்லியே ஆக வேண்டும். இதன் பீக் டார்க் 3,750rpm–ல் கிடைக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு புல்லட்டை ஓட்டுவதுபோன்ற ஒரு ஃபீல் கிடைத்தது ரோனினில். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், புல்லட் 350 கிளாஸிக், 4,000rm–ல் பீக் டார்க்கை டெலிவரி செய்கிறது. ரோனின் கிட்டத்தட்ட அதை நெருங்கினாலும், புல்லட்டின் டெலிவரி இதைவிட 35% அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

புல்லட்டின் பவர் டெலிவரிக்கு இணையாக இருந்தாலும், இதன் எக்ஸாஸ்ட்டை வைத்தே இது டிவிஎஸ் பைக் என்று சொல்லிவிடலாம். இதன் இன்ஜின், செம ஸ்மூத். எக்ஸாஸ்ட் பீட்டும் அத்தனை இனிமையாகவே இருந்தது. கோவா முழுக்க இனிமையைப் பரவ விட்டோம்.

சில சின்ன ஸ்கூட்டர்கள் மற்றும் கம்யூட்டர்களில் இருப்பதுபோல், இதில் சைலன்ட் ஸ்டார்ட் சிஸ்டம் கொடுத்திருக்கிறார்கள். இதனாலேயே ஒரு அமைதியான க்ரூஸரை ஓட்டுவதுபோல் இருக்கிறது இந்த ரோனினை ஓட்டினால். அதாவது, அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையனாக இருப்பான் இந்த ரோனின்.

லோ எண்டில் அதிகமான கியர்களில்கூட இதன் பெர்ஃபாமன்ஸ் ஸ்மூத்! 3,000rpm-ல் இருந்து அட்டகாசமாகக் கிளம்புகிறது. உதாரணத்துக்கு, டாப் கியரில் கொஞ்சம் வேகமெடுத்து 15 கிமீ–க்கு வந்தேன். 3–வது கியர் வரை டவுன்ஷிஃப்ட் செய்து பார்த்தேன். 3–வது கியரில் இருந்து மாறவில்லை. ஆனாலும், 15 கிமீ–க்கு மேல் அப்படியே த்ராட்டில் கொடுத்தாலும், ரெஸ்பான்ஸ் தொய்வடையவில்லை. இதுதானே சிட்டி ரைடர்களுக்குத் தேவை!

இதன் ரியர் ஸ்ப்ராக்கெட்டையும் கேடிஎம் போல் கொஞ்சம் பெரிதாகக் கொடுத்து, சில புத்திசாலித்தன வேலைகளைப் பார்த்துள்ளதால்தான் சிட்டிக்குள் கலக்குகிறது இந்த ரோனின்.

இப்படி லோ எண்டில் அம்சமாக இருக்கும் இந்த ரோனின், ஹை எண்ட் பெர்ஃபாமன்ஸ் என்று வரும்போதுதான் கொஞ்சம் தொய்வு காட்டுகிறான். 80 – 90 கிமீ வரை எந்தத் தொய்வும் இல்லாமல் பறக்கிறது ரோனின். 100 கிமீ வரும் வரை கூட எந்தக் களைப்பும் தெரியவில்லை. டிவிஎஸ் இதன் டாப் ஸ்பீடு 120 கிமீ என்று க்ளெய்ம் செய்தது. ஆனால், என்ன முறுக்கியும் போகவில்லை. 110 கிமீ வேண்டுமானால் போகலாம். 9,000rpm வரை ரெவ் ஆனாலும், 8,000rpm–க்கு மேல் போவது வீண் என்றே தோன்றியது. அப்படியென்றால், ஹைவே பெர்ஃபாமன்ஸில் இன்னும் பாஸ் மார்க் வாங்க வேண்டும் டிவிஎஸ்.

ஆனால், இதை நாம் குறையாகச் சொல்லி டிவிஎஸ்–ஸைத் திட்ட முடியாது. காரணம், ஏற்கெனவே டிவிஎஸ் ரோனின் ஒரு ஹை ஸ்பீடுக்கான பைக்கோ, ரேஸ் அனுபவத்தைத் தருவதற்காகவோ கிடையாது என்பதை முதலிலேயே சொல்லிவிட்டது.

ஒற்றைக் குடுவை டயல், டுகாட்டி இன்ஸ்பிரேஷனாக இருக்குமோ?
ஒற்றைக் குடுவை டயல், டுகாட்டி இன்ஸ்பிரேஷனாக இருக்குமோ?
அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையன் ரோனின்!
ங்கிள் சேனல் ஏபிஎஸ்; டூயல் சேனல் ஏபிஎஸ் இரண்டுமே உண்டு.
ங்கிள் சேனல் ஏபிஎஸ்; டூயல் சேனல் ஏபிஎஸ் இரண்டுமே உண்டு.

ரைட் அண்ட் ஹேண்ட்லிங்

இந்தச் சமாச்சாரம் என்று வரும்போது, எடைதான் முதல் விஷயமாக இருக்கிறது. இதன் எடை 160 கிலோ. ரொம்ப அதிகம் என்று சொல்லிவிட முடியாது. கம்மியும் கிடையாது. நாங்கள் கோவாவில் இதை ஓட்டும்போது நல்ல மழை.

இந்த டபுள் கிரேடில் சேஸிதான் இந்த பைக்கைத் தாங்கு தாங்கென்று தாங்குகிறது. இந்த 41மிமீ USD ஃபோர்க்குகள், காஸ்ட்லியான 3 லட்ச ரூபாய் அப்பாச்சி RR310 பைக்கில் இருப்பவை. ஆனால், க்ரூஸிங்குக்கும் ஆஃப்ரோடுக்கும் ஏற்றபடி ஸ்ப்ரிங் மற்றும் டேம்ப்பர் செட்அப்பை நன்றாக ரிவைஸ் செய்து, ஒரு அருமையான ஹேண்ட்லிங்கைத் தருகிறது ரோனின். இந்த டேம்ப்பிங் செட்அப், டர்ட் பைக்குகளில் இருப்பவை. பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொடுத்திருக்கிறார்கள். மற்ற சமாச்சாரங்கள் அப்பாச்சியில் இருப்பவை. சுறுசுறுப்பாக இயங்குகிறது ரோனின். மழையில்கூட அத்தனை கிரிப் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

இதன் சீட் உயரம் என் போன்ற உயரம் குறைவானவர்களுக்கு மிக வசதியாகவே இருக்கிறது. 795 மிமீ உயரம்தான். இதன் கிரவுண்ட் கிளியரனஸ், 181 மிமீ. ஆஃப்ரோடிலும் அட்டகாசம் செய்கிறது. கொஞ்சம் அப்ரைட்டான ஹேண்டில் பார் பொசிஷனுடன் ஆஃப்ரோடு செய்தால், டர்ட் பைக்கில் டர்ட் ரேஸ் போவது போலவே இருக்கிறது. ஆனால், இது ஒரு முழு ஆஃப்ரோடர் கிடையாது. ஸ்க்ராம்ப்ளர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்குக்கு இன்னொரு உறுதுணை – இதன் அசிஸ்ட் ஸ்லிப்பர் க்ளட்ச். குறைவான வேகங்களில் இன்ஜின் பிரேக்கிங் நடந்து வீல் ஸ்பின் ஆகாமல் இருக்க இது உதவும். இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ்

வசதிகள், எர்கானமிக்ஸ்

இந்த ஒற்றை வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஏகப்பட்ட தகவல்கள். படிக்கவும் வசதியாக இருக்கிறது. மிக முக்கியமான வசதி என்று பார்த்தால், ஸ்லிப்பர் கிளட்ச். இது கேடிஎம் போன்ற பைக்குகளில் இருப்பவை. இதில் வழக்கம்போல் ஹஸார்டு லைட்கள் கொடுத்திருக்கிறார்கள். கம்யூட்டரிலேயே கொடுக்கும் டிவிஎஸ். ஸ்க்ராம்ப்ளரில் கொடுக்காதா என்ன? அதேபோல், நல்லவேளையாக இந்தப் பெரிய பைக்குக்கு சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதியும் உண்டு.

இதில் 2 ரைடிங் மோடுகள். இவை ஏபிஎஸ்–ன் சென்ஸிட்டிவிட்டியை மட்டும்தான் பதம் பார்க்கிறது. ஆரம்ப மற்றும் நடு வேரியன்ட்டுக்கு சிங்கிள் சேனல் ஏபிஎஸ்–ம், டாப் வேரியன்ட்டுக்கு டூயல் சேனல் ஏபிஎஸ்–ம் கொடுத்திருக்கிறார்கள். டிவிஎஸ் ஆப் மூலமாக இந்த பைக்கை நம் போனில் கனெக்ட் செய்து இயக்கிக் கொள்ளலாம். ஆம், இது ஒரு கனெக்டட் பைக்!

ரோனின் வாங்கலாமா?

நல்ல அற்புதமான எக்ஸ் ஷோரூம் விலைக்கு 1.50 – 1.69 லட்சம் வரை இதை பொசிஷன் செய்திருக்கிறது டிவிஎஸ். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் – மற்றும் சிங்கிள் டோன்தான் ஆரம்ப வேரியன்ட். சிங்கிள் சேனலிலேயே டூயல் டோன் கலர் என்றால், 1,57,000 ரூபாய் ஆகிறது. டாப் எண்டில் டூயல் டோன் கலர் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என்றால், 1.69 லட்சம் வருகிறது. மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது 40,000 ரூபாய் குறைவாகவே இருக்கிறது.

ரோனினில் குறைகள் என்றால், பெரிதாக எதுவும் சொல்லிவிட முடிவதில்லை. அந்த டாப் ஸ்பீடு மட்டும்தான். 120 கிமீ–க்குப் போயிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். எனவே, ஹைவே ரைடர்கள் இதைக் கணக்கி்ல் எடுத்துக் கொள்வது உங்கள் இஷ்டம்.

சிட்டிக்குள் ஓட்ட செம ஜாலியான, பெப்பியான ஒரு அமைதியான ஸ்க்ராம்ப்ளர் வேண்டும் என்றால், ரோனின் இருக்கவே இருக்கு!

அமைதி பார்ட்டிகளுக்கு அடக்கமான பையன் ரோனின்!