Published:Updated:

TVS Ronin: இது டிவிஎஸ்-ன் செம ஸ்டைல் பைக் - என்னென்ன சிறப்புகள்?

TVS Ronin | டிவிஎஸ் ரோனின்

இந்தப் புதிய டிவிஎஸ் ரோனின் KTM 250, Husqvarna 250, Pulsar 250 மற்றும் தற்போது அறிமுகமாகவுள்ள Royal Enfield Hunter 350 ஆகி பைக்குகளுக்குப் போட்டியாக வரும் எனக் கூறப்படுகிறது.

TVS Ronin: இது டிவிஎஸ்-ன் செம ஸ்டைல் பைக் - என்னென்ன சிறப்புகள்?

இந்தப் புதிய டிவிஎஸ் ரோனின் KTM 250, Husqvarna 250, Pulsar 250 மற்றும் தற்போது அறிமுகமாகவுள்ள Royal Enfield Hunter 350 ஆகி பைக்குகளுக்குப் போட்டியாக வரும் எனக் கூறப்படுகிறது.

Published:Updated:
TVS Ronin | டிவிஎஸ் ரோனின்
`விக்ரம்' கமல் சென்சேஷன் முடிந்துவிட்டது. இப்போது நம் ஊரின் அடுத்த சென்சேஷனல் விஷயம் ரோனின். இது நம்ம ஊரு டிவிஎஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பைக். 2018 ஆட்டோ எக்ஸ்போவில் Zeppelin என்ற பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த ஜெப்பலின் பைக்தான் இப்போது ரோனின் ஆகியிருக்கிறது.

நாளை வெளியாக இருக்கும் ரோனின் பைக்கின் ஃபர்ஸ்ட்லுக் புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் இப்போது வைரல். 225 சிசியில் வரவிருக்கும டிவிஎஸ் ரோனின் விலை சுமார் 1.49 லட்சம் விலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன் விவரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

TVS Ronin | டிவிஎஸ் ரோனின்
TVS Ronin | டிவிஎஸ் ரோனின்
இந்த பைக் க்ரூஸர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ஆகிய பைக்குகளை இணைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் டேங்க் டிவிஎஸ்-க்கு மட்டுமல்ல, நமக்கும் புதுசு.

இந்த பைக் ஒரு டூயல் டோன் கலர் பினிஷ் மற்றும் முழு கறுப்பு நிற இன்ஜினைக் கொண்டுள்ளது. முன்பக்கம் டெலெஸ்கோபிக் ஃபோர்க், அலாய் வீல், புதிய அகலமான டயர், LED ஹெட்லேம்ப், T வடிவ LED DRLS, LED இண்டிகேட்டர் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக ரோனினின் இந்த வடிவமைப்பு, கடந்த கால டிவிஎஸ்-லிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முக்கிய வசதிகள்

இந்த பைக்கில் மொபைல் ஆப் கனெக்டிவிட்டி, டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்ற வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டூயல் சேனல் ABS, புதிய பிரவுன் சேடில், புதிய எக்ஸாஸ்ட், முன்பக்க மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் போன்ற வசதிகளும் இடம்பெறும் எனth தெரிகிறது.

எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட பைக்கில் புதிய லிக்விட் கூல்டு மோட்டார் இடம் பெற்றிருந்தது. ஆனால் நேற்று வெளியான புகைப்படத்தில் இவை இரண்டும் இடம் பெறவில்லை.

TVS Zeppelin (File Photo)
TVS Zeppelin (File Photo)

இந்த செக்மென்ட்டில் உள்ள டிவிஎஸ் பைக்குகள் 100, 200 மற்றும் 310 சிசி இன்ஜின் ஆப்ஷன்களை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் 200 முதல் 300 சிசிக்கு இடைப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்களில் ஒரு பைக் கூட இல்லை. இந்தப் புதிய டிவிஎஸ் ரோனின் அந்த இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய டிவிஎஸ் ரோனின் KTM 250, Husqvarna 250, Pulsar 250 மற்றும் தற்போது அறிமுகமாகவுள்ள Royal Enfield Hunter 350 ஆகி பைக்குகளுக்குப் போட்டியாக வரும் எனக் கூறப்படுகிறது.

TVS மோட்டார் நிறுவனம் மற்றும் BMW Motorrad தங்களது பார்ட்னர்ஷிப்பில், புதுக் கட்டமைப்புகளின்‌ அடிப்படையில் பல வாகன மாதிரிகளைத் தயாரித்து உலகளாவிய சந்தைகளில் விற்பனைக்கு எடுத்துச் செல்வார்கள் எனத் தெரிகிறது.