Published:Updated:

ஸ்டார் சிட்டி ப்ளஸ்… கம்யூட்டிங்கில் நிறைய ப்ளஸ் இருக்கு!

ஸ்டார் சிட்டி ப்ளஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் சிட்டி ப்ளஸ்

டெஸ்ட் ரைடு: டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

ஸ்டார் சிட்டி ப்ளஸ்… கம்யூட்டிங்கில் நிறைய ப்ளஸ் இருக்கு!

டெஸ்ட் ரைடு: டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

Published:Updated:
ஸ்டார் சிட்டி ப்ளஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார் சிட்டி ப்ளஸ்

விலை: Drum - 84,599

Disc: 86,999 ரூபாய் (ஆன்ரோடு சென்னை)

ஸ்போர்ட்டினெஸ்ஸுக்கும் டிவிஎஸ் ஷோரூமுக்குப் போகலாம்; கம்யூட்டிங் செய்யவும் டிவிஎஸ்–க்குப் போகலாம். கம்யூட்டிங்குக்கு ரேடியானும் இருக்கு; ஸ்போர்ட்டும் இருக்கு; கூடவே ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸும் இருக்கு. ரேடியானை ஓட்டி முடித்த கையோடு, ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸையும் கையில் எடுத்தேன்.

‘என்னடா எல்லாம் புது லாஞ்ச் மாதிரி பில்டப் கொடுக்கிறீங்களே’ என்று நீங்கள் நினைக்கலாம். டிவிஎஸ்–ன் பராமரிப்பும் மைலேஜும் பட்ஜெட் பைக் வாங்கவிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி சில அம்சங்களை உணர்ந்த தருணம்தான் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை ஓட்டியது.

பொதுவாக, டிவிஎஸ்தான் எல்லா புதுமைகளையும் தொடங்கி வைக்கும். ஸ்கூட்டர்களில் எக்ஸ்டெர்னல் ஃப்யூல் ஃபில்லிங் ஆகட்டும் (வீகோ); புளூடூத்/நேவிகேஷன் ஆகட்டும் (என்டார்க்); GLD (Glide through Traffic) வசதி ஆகட்டும் (அப்பாச்சி) டிவிஎஸ்தான் பலவற்றுக்கு முன்னெத்தி ஏர். அந்த வகையில் ஒரு சாதாரண கம்யூட்டிங் பைக்கில் முழுக்க முழுக்க எல்இடி ஹெட்லைட் கொண்டு உலா வருகிறது ஸ்டார் சிட்டி ப்ளஸ். இண்டிகேட்டர்கள், ஹாலோஜன்தான்.

பழசில் இருந்து புதுசில் எந்த மாற்றங்களும் பெருசாக இல்லை. ஹெட்லைட் கவர்ச்சியாகவும் ஏரோ டைனமிக்கலாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற டூயல் டோனில் வந்த ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸை நிறைய வாடிக்கையாளர்கள் விரும்பியதாகச் சொன்னார்கள். கார்கில் எடிஷனுக்கும் பெரிய டிமாண்ட் இருந்தது. இங்கே நமக்குக் கிடைத்தது புளூ மற்றும் கறுப்பு டூயல் டோன் ஸ்டார் சிட்டி ப்ளஸ்.

ஸ்டார் சிட்டி ப்ளஸ்
ஸ்டார் சிட்டி ப்ளஸ்

சீட்டில் உட்கார்ந்ததுமே ஒழுங்குமரியாதையான கம்யூட்டிங் ரைடிங் பொசிஷன்தான் கிடைக்கும். நீளமான ஹேண்டில்பார்கள், கொஞ்சம் தூக்கி இருப்பதுபோல் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் எல்லாமே கம்யூட்டிங் ஜீன். அதென்ன, எக்ஸ்ட்ரா ஒரு கலர் என்றால்.. சஸ்பென்ஷன் ரிங்குகளுக்கு வித்தியாசமாக சிவப்பு கலர் கொடுத்திருந்தார்கள்.

இதன் சீட்டிங் பொசிஷன் அருமை. எம்பூட்டு நீளம். ஒரு குடும்பத்துக்கு அற்புதமான சீட்டிங் வசதி கிடைக்கும். இதன் சீட் உயரமும் 785 மிமீ. குறைவானவர்களுக்குக்கூட பக்கா!

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கசகசவெனக் குழப்பியடிக்கவில்லை. அனலாக்கில் ஸ்பீடோவும், பக்கத்தில் ஒரு சின்ன டிஜிட்டல் மீட்டரில் ஃப்யூல் இண்டிகேஷனும், ஓடோ ரீடிங்கும் இருந்தன. கம்யூட்டிங் பைக் என்றால், ட்ரிப் மீட்டர் கொடுக்கவே கூடாதா என்ன? அலுவலகம் போய் வருபவர்கள், எவ்வளவு கிமீ மைலேஜ் தந்திருக்கு என்று பார்க்க, ட்ரிப் மீட்டரைத்தான் தேடுவார்கள்.

வலது பக்க ஹேண்டில்பாருக்குக் கீழே யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி கொடுத்திருந்தார்கள். நமக்குக் கொடுக்கப்பட்ட பைக்கில் இது வெற்றிடமாக இருந்தது. வேண்டுமென்றால் மாட்டிக் கொள்ளலாமாம்.

மற்றபடி டிசைனில் வேறெந்த மாற்றங்களும் பெரிதாக இல்லை. இன்ஜினும் அதே 110 சிசி எக்கோத்ரஸ்ட் இன்ஜின்தான் (ETFi). பட்டர் ஸ்மூத்தாக இருக்கிறது இதன் சத்தம். பவரும் அதே 8.2bhp. இதன் டார்க்கும் அதே 0.87kgm. ஆனால், இது முன்பைவிட மைலேஜ் 15% அதிகமாகக் கிடைக்கும் என்றது டிவிஎஸ். நமது மோ.வி வாசகர்களும் பழைய ஸ்டார் சிட்டி ப்ளஸ் ஓனர்களிடமும் விசாரித்ததில் இது ஓரளவு நிஜமோ என்று தோன்றியது. பலர் இந்த பைக்கின் மைலேஜாக 60 கிமீ–யைக் குறிப்பிட்டார்கள். இப்போது இதன் மைலேஜை செக் செய்யும் நேரம் வந்தது.

சும்மா 200 ரூபாய்… 100 ரூபாய் என்று இதை பெட்ரோல் அடித்து நிரப்பி சோதனை போட்டோம். (இப்போதான் ட்ரிப் மீட்டர் இல்லை என்கிற குறை அதிகமாக தெரிந்தது!) சுமார் 62 முதல் 64 கிமீ வரை மைலேஜ் தந்தது. இந்த புது பைக் வாடிக்கையாளர்கள் சிலர் 66 கிமீ வரையும் மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள். இதற்காக டிவிஎஸ்–ஸைப் பாராட்டலாம்.

ரேடியானும் இதே மைலேஜ் தந்ததை நினைவில் கொள்ள வேண்டும். இதில் இருப்பதும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். 5 ஸ்பீடு கொடுத்திருந்திருக்கலாம். 100 கிமீ–க்கெல்லாம் போக முடியவில்லை. ஆனால், டாப் ஸ்பீடு 90 கிமீ வரை போக முடிந்தது. நீங்கள் டாப் கியரில் 60 கிமீ–லேயே க்ரூஸ் செய்தால், 65 கிமீ–க்கு மேல் மைலேஜ் உறுதி. க்ளஸ்ட்டரில் உள்ள பவர் மற்றும் எக்கோ மோடைக் கவனத்தில் கொள்ளுங்கள். எக்கோ லைட் எரியும்படி பைக் ஓட்டினால், அதிகப்படியான மைலேஜ் நிச்சயம். ரேடியான் போலவே இதன் டேங்க்கும் 10 லிட்டர் கொள்ளளவு.

 செக்மென்ட் ஃபர்ஸ்ட் எல்இடி ஹெட்லைட்... இரவில் பளீரென வெளிச்சம் தருகிறது.
செக்மென்ட் ஃபர்ஸ்ட் எல்இடி ஹெட்லைட்... இரவில் பளீரென வெளிச்சம் தருகிறது.
எக்கோத்ரஸ்ட் 110சிசி இன்ஜின் முன்பைவிட அதிக மைலேஜ். இதிலும் 5-வது கியர் இல்லை.
எக்கோத்ரஸ்ட் 110சிசி இன்ஜின் முன்பைவிட அதிக மைலேஜ். இதிலும் 5-வது கியர் இல்லை.
செமி டிஜிட்டல் க்ளஸ்ட்டர். இதிலும் ட்ரிப் மீட்டர் இல்லை.
செமி டிஜிட்டல் க்ளஸ்ட்டர். இதிலும் ட்ரிப் மீட்டர் இல்லை.
பின் பக்க டிசைன் ஷார்ப்.
பின் பக்க டிசைன் ஷார்ப்.
ஸ்டார் சிட்டி ப்ளஸ்
ஸ்டார் சிட்டி ப்ளஸ்

இதன் பராமரிப்புச் செலவும் அருமை. நமது வாடிக்கையாளர்கள் சிலர் இதன் சர்வீஸ் செலவு பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள். பாகங்கள் மாற்றாமல் சுமார் 500 ரூபாய்க்குள் சர்வீஸ் முடிந்ததாகச் சொன்னவர்கள் இருக்கிறார்கள். ரேடியான் போலவே இதன் டிஸ்க் பேடுகளும் விலை குறைவுதான்.

இதன் 5 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன், இந்த செக்மென்ட்டுக்கு அருமையாகவே இருக்கிறது. சில மேடு பள்ளங்களில் இறக்கிப் பார்த்தபோது, பெரிதாகப் பாதிப்பு தெரியவில்லை. இதன் கி.கிளியரன்ஸ் 172 மிமீ; இது இந்த செக்மென்ட்டுக்கு அதிகம். ஸ்பீடு பிரேக்கர் பயமே தேவையில்லை. இதன் எடையும் 116 கிலோதான் என்பதால், சும்மா வளைத்து நெளித்து ஓட்ட அற்புதம்!

என்ன, நமக்குக் கொடுக்கப்பட்டது டிரம் பிரேக் மாடல்தான். இதில் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொடுத்திருந்தாலும், இன்னும் ஃபீட்பேக் நன்றாக இருக்க வேண்டும். டிஸ்க் என்றால், 240 மிமீ பெட்டல் டிஸ்க் கொடுக்கிறார்கள். ஏற்கெனவே டிஸ்க் ஓட்டிய அனுபவம் நமக்கு உண்டு என்பதால், டிரம்மைவிட டிஸ்க்தான் நமது சாய்ஸ். நல்லவேளை – ட்யூப்லெஸ் டயர்கள் இருக்கிறது என்பதால் பஞ்சர் பயம் இல்லை.

இதன் சென்னை ஆன்ரோடு 85,000 முதல் 87,000 வரை. நாம் ஏற்கெனவே சொன்னபடி, 2,500 ரூபாய் யோசிக்காமல் டிஸ்க்கைத் தேர்ந்தெடுக்கலாம். 63 கிமீ மைலேஜ் என்பதே ஸ்டார் சிட்டி ப்ளஸ் – கம்யூட்டிங் நண்பர்களுக்கு செம ப்ளஸ். நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் இந்த கம்யூட்டிங் பைக்குகள் எந்தளவு செட் ஆகும் என்று தெரியவில்லை. மற்றபடி, ஓவர் ஆலாகப் பார்த்தால்…ரைடிங், ஹேண்ட்லிங், மைலேஜ், சஸ்பென்ஷன் என்று கொடுக்கும் விலைக்கு ஸ்டார் சிட்டி நல்ல நண்பனாக இருக்கிறான்.

மைலேஜை அதிகம் விரும்பும் தன் கம்யூட்டிங் வாடிக்கையாளர்களுக்கு , டிவிஎஸ் மேலும் ஒரு சாய்ஸை அதிகப்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism