கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்! அல்ட்ராவயலெட்டின் அல்ட்ரா மாடர்ன் பைக் வருது!

அல்ட்ராவயலெட் F77 எலெக்ட்ரிக்
பிரீமியம் ஸ்டோரி
News
அல்ட்ராவயலெட் F77 எலெக்ட்ரிக்

ஃபர்ஸ்ட் லுக்: அல்ட்ராவயலெட் F77 எலெக்ட்ரிக்

எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்!
அல்ட்ராவயலெட்டின் அல்ட்ரா மாடர்ன் பைக் வருது!

இப்போதைக்கு இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகளின் … (கவனிக்க: ஸ்கூட்டர் இல்லை; பைக்) விற்பனை மந்தமாகவே இருக்கிறது. அட, அதற்கு மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் பைக்குகள் இருக்க வேண்டுமே! ரிவோல்ட், ஓபன் ரோர் என்று இ–பைக்குகள் மார்க்கெட்டில் ரொம்பவும் குறைவு. அந்த லிஸ்ட்டில் போன வாரம்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஹாப் மொபிலிட்டியின் ஆக்ஸோ பைக் பற்றிப் பார்த்தோம். இந்த மாதம் ஸ்டார்ட் அப் எலெக்ட்ரிக் மொபிலிட்டி கம்பெனியான அல்ட்ரா வயலெட் நிறுவனத்தின் (UltraViolette) F77 எலெக்ட்ரிக் பைக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

நீங்கள் ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டு இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, இந்த F77 பைக்கின் புக்கிங் ஸ்டார்ட் ஆகியிருக்கும் என்பது ஸ்வீட்டான விஷயம். ‘எப்பா எத்தனை மாதங்கள்… இல்லை வருடங்கள் காத்திருந்தோம் இந்த பைக்குக்கு’ என்பதுபோல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக நவம்பர்

24–ம் தேதி இதற்கு லாஞ்ச் தேதியைக் குறித்துவிட்டது அல்ட்ராவயலெட். F77 பைக்கின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்!
அல்ட்ராவயலெட்டின் அல்ட்ரா மாடர்ன் பைக் வருது!

மொத்தம் 3 வேரியன்ட்களில் இதைக் கொண்டு வருகிறது அல்ட்ராவயலெட். Airstrike, Shadow, Laser – இவைதான் அந்த வேரியன்ட்கள். பேரே வெறித்தனமாக இருக்கிறதுதானே! அந்த வகையில் இதை ஸ்போர்ட்டியாகவும் களமிறக்க இருக்கிறது இது.

இது ஒரு ப்ரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் என்பதால்… பல வசதிகளை இதில் எதிர்பார்க்கலாம். முழுக்க முழுக்க எல்இடி ஹெட்லைட்ஸ், பெரிய TFT மல்ட்டி ஃபங்ஷன் டச் ஸ்க்ரீன், வேரியன்ட்களைப்போலவே 3 விதமான ரைடிங் மோடுகள், LTE Connectivity உடன் இன்டக்ரேட் செய்யப்பட்ட இ–சிம் கார்டு, 9–Axis IMU, ஷாக் மற்றும் இம்பேக்ட் சென்ஸார்கள் என்று ப்ரீமியம் வசதிகள் மட்டுமல்லாமல், தொழில்நுட்பங்களிலும் கலக்க வருகிறது F77. இன்னும் கஸ்டமைஸ்டு ஆப்ஷன்ஸ் வேறு கொடுக்க இருக்கிறது அல்ட்ரா வயலெட்.

ஸ்டைலிஷ் மற்றும் ஸ்போர்ட்டியான பைக்குக்கு ஏற்ப பாடி பேனல்கள் இருந்தால்தானே சாத்தியம். இது கேடிஎம் போன்ற பைக்குகளில் இருப்பதுபோல் சொஃபிஸ்டிக்கேட்டட் ஆன ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமுடன்… கூடவே அலுமினியம் Bulk Head உடன் வருகிறது. அதனால், ஓட்டுதல் நிச்சயம் ஸ்போர்ட்டியாகவும், கட்டுமானம் கிண்ணெனவும் இருக்கும்.

சஸ்பென்ஷனைப் பொருத்தவரையும் கஞ்சத்தனம் காட்டவில்லை இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம். பெரிய ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இருப்பதுபோல்… கேட்ரிட்ஜ் டைப் ஃபோர்க்குகளை இதன் முன் பக்கத்தில் வைத்திருக்கிறது அல்ட்ராவயலெட். பின் பக்கம் கேஸ் சார்ஜ்டு மோனோ ஷாக் அப்சார்பர். நிச்சயம் ஆரவாரமில்லாத சொகுசான ரைடு கிடைக்கும். பின் பக்கம் ப்ரீ லோடு அட்ஜஸ்டபிள் என்பது ஸ்பெஷல்.

எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்!
அல்ட்ராவயலெட்டின் அல்ட்ரா மாடர்ன் பைக் வருது!
சாதா சார்ஜிங்கில் 5 மணி நேரம் ஆகலாம்...
சாதா சார்ஜிங்கில் 5 மணி நேரம் ஆகலாம்...
எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்!
அல்ட்ராவயலெட்டின் அல்ட்ரா மாடர்ன் பைக் வருது!
செம ஸ்டைலான க்ளஸ்ட்டர்...
செம ஸ்டைலான க்ளஸ்ட்டர்...
158 கிலோ எடை ஹேண்ட்லிங்குக்கு உதவும்...
158 கிலோ எடை ஹேண்ட்லிங்குக்கு உதவும்...

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். இதன் பவர்ட்ரெயின்களைப் பொருத்தவரை சுமார் 20bhp இருக்கலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதிலும் ப்ரீமியம்னெஸ் காட்டியிருக்கிறது. 33.52bhp பவரும், 90Nm டார்க்கும் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் கொடுத்திருக்கிறார்கள் இந்த F77–ல்.

அப்படியென்றால், எலெக்ட்ரிக்கில் பெர்ஃபாமன்ஸ் பைக்காக இருக்கப் போகிறது இது. வெறும் 3 விநாடிகளுக்குள் 60 கிமீ–க்கு ஸ்ப்ரின்ட் ஆகக் காத்திருக்கிறது F77. 100 கிமீ–க்கு 7.5 விநாடிகள் வரை எடுத்துக் கொள்ளுமாம். 10 விநாடிகள் இருந்தாலே செம என்று சொல்லலாம். இது அதற்கும் மேலே! இதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதை 147 கிமீ வரை டாப் ஸ்பீடு போனதாகச் சொல்கிறது அல்ட்ராவயலெட்.

இதன் பேட்டரி சமாச்சாரங்களுக்கு வரலாம். இது 4.2kWh பேட்டரி கொண்டு வரவிருக்கிறது. இந்த லித்தியம் அயன் பேட்டரிக்கு நல்ல IP ரேட்டிங் உண்டு. இதை ஒரு 3 மாட்யூலர் பேக்குகளாக வைத்திருக்கிறார்கள். இந்த வெயிட்டான பேட்டரி பேக் கொண்டுமே, இந்த F77–ன் மொத்த எடை 158 கிலோதான் என்பது ரைடிங்குக்கும், ரேஞ்சுக்கும் நிச்சயம் உதவும்.

சார்ஜிங்கைப் பொருத்தவரை CCS சார்ஜிங் போர்ட்டுடன் வரும் இதை, சாதாரண சார்ஜிங் பாயின்ட்டில் முழு சார்ஜ் செய்ய தோராயமாக 5 மணி நேரம் வரை ஆகலாம். இதற்கென ஃபாஸ்ட் சார்ஜரையும் ஆப்ஷனலாகத் தரவிருக்கிறது அல்ட்ராவயலெட். இதில் சுமார் 1.5 மணி நேரத்தைக் குறைக்கலாம். மற்றபடி இதன் ரேஞ்ச் பற்றி ஓர் அதிரடித் தகவல் நிலவுகிறது. IDC டெஸ்ட்டின்படி சிங்கிள் சார்ஜுக்கு இது சுமார் 300 கிமீ ரேஞ்ச் தரும் என்கிறார்கள். குறைந்தது 230 கிமீ கொடுக்க அல்ட்ராவயலெட்டை வேண்டலாம்.

ப்ரீமியம் மோட்டார் சைக்கிளாச்சே… அதனால், இதன் விலையும் கொஞ்சம் ப்ரீமியமாகத்தான் இருக்கப் போகிறது. ஆம், சுமார் 3.10 லட்சம் முதல் 3.75 லட்சம் வரை இதன் விலையை எதிர்பார்க்கலாம்.