Published:Updated:

2021 பைக்ஸ்!

நீங்கள் எடுக்கும் முடிவு Well Informed முடிவாக இருக்க வேண்டியது முக்கியம்.

பிரீமியம் ஸ்டோரி
10,99,651.... கடந்த டிசம்பர் 2020-ல் ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ், ராயல் என்ஃபீல்டு, யமஹா போன்ற நிறுவனங்கள் மொத்தமாக நம் நாட்டில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை இது! கொரோனா காரணமாக, பொதுப்போக்குவரத்தின் நுகர்வு குறைந்து, தனிநபர் போக்குவரத்து நோக்கி மக்கள் படையெடுப்பு ஒரு புறம் என்றால், ஒரு வருட காலமாகத் தள்ளிப்போட்டு வந்த கனவை வட்டியும் முதலுமாக நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் காட்டிய வேகமும் இன்னொரு முக்கியக் காரணம். டூ விலர் வாங்குவது என்பது கணிசமான பணம் சம்பந்தமான ஒரு முடிவு என்பதால்... நீங்கள் எடுக்கும் முடிவு Well Informed முடிவாக இருக்க வேண்டியது முக்கியம். அதற்கு உதவ.. இந்த ஆண்டில், அறிமுகமாகப் போகும் டூ-வீலர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் இங்கே!
2021 பைக்ஸ்!

ஏப்ரிலியா RS660 & Tuono 660

ஃபுல் ஃபேரிங் கொண்ட RS660, பெயருக்கேற்றபடியே ஸ்போர்ட்டியாகக் காட்சியளிக்கிறது. இரட்டை LED ஹெட்லைட்ஸில் இருக்கும் LED DRL-லிலேயே, இண்டிகேட்டர்களும் இடம் பெற்றிருப்பது அழகு. இதர ஏப்ரிலியா பைக்குகளைப்போலவே, இங்கும் அலுமினிய ஃப்ரேம் வெளியே தெரிகிறது. நேக்கட் RS660 ஆக அறியப்படும் Tuono 660, நீட்டான டிசைனுடன் கவர்கிறது. அதுவும் அந்த ஷார்ப்பான செமி ஃபேரிங் & சிவப்பு நிற அலாய் வீல்கள் செம. RSV4 பைக்கிலுள்ள V4 இன்ஜினை அடிப்படையாகக் கொண்டே, இந்த இரு பைக்கிலிருக்கும் 659சிசி - பேரலல் ட்வின் இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. 270 டிகிரி Firing Order இருப்பதால், அசத்தலான பெர்ஃபாமன்ஸுடன் சிறப்பான எக்ஸாஸ்ட் சத்தத்தையும் எதிர்பார்க்கலாம். RS660 100bhp@10,500rpm பவரைத் தந்தால், Tuono 660 சற்றே குறைவான 95bhp பவரை வெளிப்படுத்துகிறது. ஆனால் இரண்டிலுமே, கிட்டத்தட்ட சமமான 6.7kgm டார்க்தான் (TFT டிஸ்பிளேவும்). மற்றபடி ரைடரின் பாதுகாப்புக்காக, 6-Axis IMU உதவியுடன் இயங்கும் APRC சிஸ்டம் உண்டு. இதில் 3 லெவல்களைக் கொண்ட கார்னரிங் ஏபிஎஸ், அட்ஜஸ்டபிள் Wheelie கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், இன்ஜின் பிரேக் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், Up/Down Quickshifter, 5 ரைடிங் மோடுகள் (Commute, Dynamic, Individual, Challenge, Time Attack) என அதிக எலெக்ட்ரானிக் அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. 41மிமீ Kayaba USD ஃபோர்க் - இரட்டை 320மிமீ Brembo டிஸ்க் பிரேக்ஸ் முன்பக்கத்தில் இருந்தால், பின்பக்கத்தில் Rebound/Preload அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் - ஒற்றை 220மிமீ Brembo டிஸ்க் பிரேக் உண்டு. CBU முறையில் இவை முழு பைக்காக நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, ஜூன் மாதத்தில் களமிறங்கலாம்.

2021 பைக்ஸ்!
2021 பைக்ஸ்!

பஜாஜ் பல்ஸர் சீரிஸ்

டாப்-10 டூ-வீலர்களின் பட்டியலில், தவறாமல் இடம்பிடிக்கும் ஒரே 150சிசி பைக் பல்ஸர். காலம் சென்ற யமஹா RX100 போல, இந்த டூ-வீலருக்கும் ரசிகர்கள் ஏராளம். அதனால் பலவிதமான மாடல்களுடன் 150-180சிசி செக்மென்ட்டில் வலுவாகக் காலூன்றி இருக்கும் பஜாஜ், அந்த முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. எனவே புதிதாக வந்திருக்கும் போட்டியாளர்களைச் சமாளிக்கும் விதமாக, அடுத்த தலைமுறை பல்ஸர்கள் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் LS/NS/RS சீரிஸ் மாடல்களில் இருந்த 4 வால்வ் தொழில்நுட்பம், வழக்கமான மாடல்களுக்கு இடம்பெயரலாம். மேலும் LED ஹெட்லைட்ஸ், மோனோஷாக். Full டிஜிட்டல் மீட்டர், தடிமனான ஃபோர்க் & டயர்கள் போன்ற அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். தற்போதுள்ள 220சிசி பல்ஸரைத்தாண்டி, பைக் ஆர்வலர்கள் 250சிசி வெர்ஷனுக்கு வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்... Note This Point பஜாஜ்!

2021 பைக்ஸ்!

பெனெல்லி BS-6 ரேஞ்ச்

டந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில் உள்ள தனது டீலர்களின் அளவை பெனெல்லி அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக, புதிதாக 7 பைக்குகளை அந்த நிறுவனம் களமிறக்கும் முடிவில் உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. TRK 502, TRK 502X, லியோன்சினோ 500, லியோன்சினோ 250, 302S - நேக்கட் ஸ்ட்ரீட் பைக், 302R - ஃபுல் ஃபேரிங் பைக், TNT 600i ஆகியவற்றின் BS-6 அவதாரங்கள்தான். இம்பீரியல் 400-ன் BS-6 மாடல் வந்துவிட்ட நிலையில், பின்னாளில் இதன் 530சிசி வெர்ஷனையும் எதிர்பார்க்கலாம். மேலும் முன்னே சொன்ன மாடல்களில், TRK 502 மற்றும் TNt 600i ஆகியவை பலத்த மாற்றங்களுடன் வரும் என்பது கொசுறுத் தகவல். தவிர பெனெல்லி தனது 800சிசி மற்றும் 1200சிசி மாடல்களைக் கொண்டு வருமா?

2021 பைக்ஸ்!

ஹார்லி டேவிட்சன் Pan America

ந்தியாவில் தனது தனி ஆவர்த்தனத்தை நிறுத்திவிட்ட இந்த அமெரிக்க நிறுவனம், ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி அமைத்தது நினைவிருக்கலாம். இதனால் க்ரூஸர்களுக்குப் பெயர்பெற்ற ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் உற்பத்தி - விற்பனை - சர்வீஸ் ஆகியவற்றை, ஹீரோதான் கவனிக்கப் போகிறது. முதற்கட்டமாக BS-6 வெர்ஷன்கள் களமிறங்கும் என்றாலும், கூடவே முற்றிலும் புதிய அட்வென்ச்சர் பைக் வரப்போகிறது என்பதுதான் ஸ்பெஷல். Pan America எனப் பெயரிடப்பட்டுள்ள இது, பிஎம்டபிள்யூ 1250GS பைக்குடன் போட்டி போடுகிறது. இதிலுள்ள 1,250சிசி, லிக்விட் கூல்டு V-ட்வின் இன்ஜின், ஹார்லியின் புதிய Revolution Max சீரிஸைச் சேர்ந்தது. இது 145bhp பவர் & 12.2kgm டார்க்கைத் தருகிறது. அதிர்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய Counter Balancer இருப்பதால், ஸ்மூத்தான பயணம் கேரன்ட்டி. மேலும் இன்ஜின் ஃப்ரேமுடன் தாழ்வாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளதால், பைக்கின் கையாளுமை சிறப்பாக இருக்கும் எனலாம். Pan America-வுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட Brembo பிரேக்ஸ் & Michelin டயர்கள், இந்த அட்வென்ச்சர் பைக்கின் திறனுக்கேற்பத் தமது பணியைச் செய்யக்கூடும்.

2021 பைக்ஸ்!

ஹீரோ டூயட் E

டந்த ஆண்டில் பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐ-க்யூப், ஏத்தர் 450X என இந்திய நிறுவனங்கள் வரிசையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய நிலையில், உலகின் மிகப்பெரிய டூ-வீலர் உற்பத்தியாளர் என்ற சாதனையை 20 ஆண்டுகாலமாகத் தன்வசம் வைத்திருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் சும்மா இருக்குமா என்ன? இதற்கான விடையாக, கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த நிறுவனம் காட்சிபடுத்திய டூயட் E இருக்கும் எனத் தோன்றுகிறது. டூயல் டோன் ஃபினிஷ் கலர்களைத் தாண்டி, இது பார்க்க வழக்கமான 110சிசி மாடல் போலவே இருந்தது. ஆனால் காணாமல் போயிருக்கும் எக்ஸாஸ்ட் பைப் - சோக் - கிக் லீவர் ஆகியவை, இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் பெட்ரோல் டேங்க் மூடி இருந்த இடத்தில், பேட்டரிக்கான சார்ஜிங் பாயின்ட் இருக்கிறது. கூடவே Anti-Theft & Bike Finder அம்சங்கள் இருப்பதும் நைஸ். இதிலுள்ள 5kv Brushless DC எலெக்ட்ரிக் மோட்டார், 1.4kgm டார்க்கைத் தருகிறது. இதனால் 0-60 கிமீ வேகத்தை வெறும் 6.5 விநாடிகளில் டூயட் E எட்டும் எனவும், இது சிங்கிள் சார்ஜில் 65கிமீ தூரம் செல்லும் எனவும் ஹீரோ கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது காலத்துக்கு ஏற்றபடி அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக், டிஜிட்டல் மீட்டர், அதிக ரேஞ்ச் கொண்ட பேட்டரி ஆகியவை டூயட் E-ல் பொருத்தப்படலாம். 1 லட்ச ரூபாய்வாக்கில் விலை இருந்தால் வாவ்தான்!

2021 பைக்ஸ்!

ஹோண்டா Forza 350

டந்த ஆண்டில் CB350 பைக் வாயிலாக, ராயல் என்ஃபீல்டு கோலோச்சிக் கொண்டிருந்த 350சிசி பைக் செக்மென்ட்டில் தடம்பதித்தது ஹோண்டா. தற்போது அதே இன்ஜின் திறனில், ஒரு மேக்ஸி ஸ்கூட்டரை இந்த நிறுவனம் நம் நாட்டில் வெளியிட உள்ளது. சர்வதேசச் சந்தைகளில் பிரபலமாக இருக்கும் Forza சீரிஸ், 125, 300, 350, 750 எனப் பல்வேறு இன்ஜின் திறனில் விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா தனது Bigwing ஷோரூம்களில் ஏற்கெனவே Forza 300 மேக்ஸி ஸ்கூட்டரை டிஸ்ப்ளேவில் வைத்திருந்ததுடன், கடந்த ஆண்டில் 4 ஸ்கூட்டர்களை விற்றும் விட்டது. ஆனால் தற்போது இதைவிடப் பெரிய இன்ஜினைக் கொண்ட Forza 350 வெளிநாடுகளில் வந்துவிட்ட நிலையில், அதுதான் இந்தியாவுக்கும் வரும் எனத் தெரிகிறது. இது பார்க்க 300சிசி மாடல்போலவே இருந்தாலும், உயரமான விண்ட் ஷீல்டு - தாழ்வான சீட் - பெரிய வீல்கள் என ஒரு மேக்ஸி ஸ்கூட்டருக்கான அம்சங்களுடன் உள்ளது. LED லைட்டிங், கீ-லெஸ் இக்னீஷன், USB பாயின்ட், இண்டிகேட்டருடன் கூடிய மிரர்கள் என அதிக வசதிகள் இருக்கின்றன. மேலும் இதன் சீட்டுக்கு அடியே, 2 ஹெல்மெட் வைக்குமளவுக்கு ஸ்டோரேஜ் உண்டு. அனேகமாக, இருபுறமும் டிஸ்க் பிரேக் உடன், டூயல் சேனல் ஏபிஎஸ் சேர்ந்து வரப்போகும் முதல் ஸ்கூட்டர், Forza 350 ஆக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். மற்றபடி வழக்கமான தகவல்களைத் தாண்டி, டிஜிட்டல் - அனலாக் மீட்டரில் ரேஞ்ச், மைலேஜ், பேட்டரி லெவல், இன்ஜின் Temperature, டேக்கோமீட்டர், ட்ரிப் ஆகியவை தெரிகின்றன. Forza 300-ல் இருந்த 279சிசி இன்ஜினை விட, 50சிசி அதிக திறனுடன் Forza 350 வருகிறது (329.6சிசி). CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், பைக்கில் காணப்படும் 4 வால்வ் - லிக்விட் கூலிங் - Fi போன்ற தொழில்நுட்பங்களுடன் வருகிறது. தவிர CB350-ல் இருந்த HSTC சிஸ்டம், இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது நைஸ். இதன் முன்பக்கத்தில் 33மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 15 இன்ச் வீல் இருந்தால், பின்பக்கத்தில் 7 Step அட்ஜஸ்டபிள் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் - 14 இன்ச் வீல் உண்டு. இப்படி எல்லாவற்றிலும் Maximum ஆக இருக்கும் Forza 350, எதிர்பார்த்தபடியே அதிக விலையில் வரும்.

2021 பைக்ஸ்!

ஹோண்டா CBR650R

னது பெயரில் சேர்க்கப்பட்ட R-க்கு நியாயம் கற்பிக்கும் வகையில், CBR650R பைக்கின் Bs-4 வெர்ஷனை ஸ்போர்ட்டியாக அப்டேட் செய்திருந்தது ஹோண்டா. தற்போது அதன் BS-6 மாடல், இன்னும் ஷார்ப்பாக மாறியிருக்கிறது. Showa நிறுவனத்தின் 41மிமீ Separate Function Big Piston (SFF-BP) USD ஃபோர்க் அதற்கான உதாரணம். மேலும் இன்லைன் 4 சிலிண்டர் - 649சிசி இன்ஜினின் இன்டேக் டைமிங், எக்ஸாஸ்ட் பைப், சைலன்சர், Catalyser, Cam Lobes, ECU ஆகியவை, BS-6 விதிகளுக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், இது முன்புபோலவே 95bhp பவர் - 6.3kgm டார்க்கைத் தருவது நல்ல விஷயம். CBR650-ன் பக்கவாட்டு பாடி பேனல்கள், நம்பர் ப்ளேட் மவுன்ட், LED ஹெட்லைட்டின் Reflector, LCD டிஸ்ப்ளே ஆகியவை புதிது. தவிர பைக்கின் சீட்டுக்கு அடியே, USB டைப்-C Socket உள்ளது. இதன் BS-4 மாடல் 7.7 லட்ச ரூபாய்க்கு விற்பனையான நிலையில், BS-6 வெர்ஷன் அதிக விலையில் வருவது உறுதி.

2021 பைக்ஸ்!

டிவிஎஸ் ஃபியரோ 125

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பாக, ஃபியரோ 150 பைக்கை டிவிஎஸ் இங்கே விற்பனை செய்தது. தற்போது அந்தப் பெயரில், புதிதாக ஒரு 125சிசி பைக் வரவிருக்கிறது. விக்டர் BS-6 விதிகளுக்கு அப்கிரேடு செய்யப்படவில்லை என்பதால், அதன் ப்ரீமியம் கம்யூட்டர் இடத்தை இந்த 125சிசி பைக் பெறும். அதிகமாக விற்பனையாகும் டாப்-10 பைக்குகளில், ஷைன் மற்றும் கிளாமர் தவறாமல் இடம்பிடித்துவிடுகின்றன. எனவே அதனுடன் பல்ஸர் 125-க்கும் போட்டியாக, ஃபியரோவை டிவிஎஸ் கொண்டு வருகிறது. கொஞ்சம் ஸ்போர்ட்டியான டிசைன் - மாடர்ன் வசதிகள் - போதுமான பெர்ஃபாமன்ஸ் - சிறப்பான ஓட்டுதல் என ஒரு ஆல்ரவுண்டர் தயாரிப்பாக இது இருக்குமேயானால், 125சிசி செக்மென்ட்டில் தனக்கென ஒரு இடத்தை டிவிஎஸ் பிடிக்கலாம்.

2021 பைக்ஸ்!

கவாஸாகி W175

ந்தியாவில் தனது விலை குறைவான பைக்காக, W175 எனும் பைக்கைக் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தில் விற்பனை செய்யப்படும் இந்த ரெட்ரோ பைக், மிகச் சிம்பிளாகக் காட்சியளிக்கிறது. வட்டமான ஹெட்லைட் மற்றும் மிரர்கள், Peashooter எக்ஸாஸ்ட், ஸ்போக் வீல்கள், அனலாக் மீட்டர் என வழக்கமான பாகங்களே W175-ல் இடம்பிடித்துள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள 177சிசி கார்புரேட்டட் இன்ஜின், ஆசிய சந்தைகளில் 13bhp பவர் - 1.32kgm டார்க்கைத் தருகிறது. இந்தியாவுக்கு வரும்போது, கூடுதல் செயல்திறனுக்காக இந்த 2 வால்வ் - ஏர் கூல்டு இன்ஜின் ரீ-டியூன் செய்யப்படலாம் (உபயம்: Fi). பேலன்ஸர் ஷாஃப்ட் இருப்பதால், அதிர்வுகள் என்ற பேச்சுக்கே பைக்கில் இடமில்லை. செமி டபுள் க்ரேடில் ஃப்ரேம் - பாக்ஸ் செக்ஷன் ஸ்விங் ஆர்ம், Rubber Gaiters உடனான டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் ஷாக் அப்சார்பர்கள், 220மிமீ டிஸ்க் - 110மிமீ டிரம் என மெக்கானிக்கல் பாகங்களிலும், தான் ஒரு க்ளாஸிக் பைக் என்பதை நிருபிக்கிறது W175. இந்திய மாடலில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இடம்பெறலாம். சர்வதேச மாடலின் எடை வெறும் 126கிலோதான் என்றாலும், நம் நாட்டுக்கு ஏற்றபடியான மாற்றங்கள் காரணமாக, இங்கே பைக்கின் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மற்றபடி 90% உள்நாட்டுப் பாகங்களுடன், இந்த ரெட்ரோ பைக்கை இங்கே தயாரிக்கும் முடிவில் இருக்கிறது கவாஸாகி. எனவே சுமார் 1.25- 1.4 லட்ச ரூபாய் விலையில் W175 கிடைக்கும் எனத் தெரிகிறது. பின்னாளில் இந்த பைக்கின் Cafe Racer & Scrambler அவதாரங்களை, நம் ஊர்ச் சாலைகளில் பார்க்கலாம். ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹோண்டாவுக்கு, ரெட்ரோ பைக் பிரிவில் போட்டி போட இந்த நிறுவனம் ரெடி!

2021 பைக்ஸ்!

கவாஸாகி நின்ஜா 300

ர்வதேசச் சந்தைகளில் இந்த பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டாலும், உள்நாட்டுப் பாகங்களுடன் தயாரிக்கப்பட்ட நின்ஜா 300-ன் BS-4 வெர்ஷனை, கடந்த 2018-ம் ஆண்டில் கவாஸாகி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம் (2.98 லட்ச ரூபாய் - 68 ஆயிரம் குறைவு). தற்போது இதன் BS-6 மாடலைத் தயாரிக்கும் பணிகளில், அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது. எனவே ஏப்ரல் மாதத்தில், இந்த ஃபுல் ஃபேரிங் பைக் வெளிவரலாம். முந்தைய மாடலில் ஹெட்லைட், ஏபிஎஸ் பிரேக்ஸ், கேபிள்கள், டயர்கள், பாடி பேனல்கள் ஆகியவற்றை Localise செய்திருந்தது கவாஸாகி. இம்முறை இன்ஜின் பாகங்கள் அந்தப் பட்டியலில் சேரும் எனத் தெரிகிறது. எனவே சுமார் 2.5 லட்ச ரூபாய்க்கு, நின்ஜா 300-ன் BS-6 மாடல் கிடைக்கலாம். பைக்கின் தோற்றத்தில் எந்த மாறுதலும் இருக்காது. பிஎம்டபிள்யூ G310R மற்றும் அப்பாச்சி RR310 ஆகியவை, இந்த கவாஸாகி பைக்குடன் போட்டி போடுகின்றன.

2021 பைக்ஸ்!

கேடிஎம் RC 200

டியூக் 200யைத் தொடர்ந்து, RC200 பைக்கின் அடுத்த வெர்ஷனைக் களமிறக்க உள்ளது கேடிஎம். ஆனால், இதன் ஷார்ப்பான டிசைன் இந்தப் புதிய வெர்ஷனில் மிஸ்ஸிங். மேலும் டூயல் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸுக்குப் பதிலாக, வழக்கமான ஹாலோஜன் ஹெட்லைட் இருப்பது நெருடல். பில்லியன் சீட் முன்பிருந்ததைவிடப் பிராக்டிக்கலாக மாறியிருக்கிறது. தவிர ஹேண்டில்பாரும் ரைடருக்கு அருகே கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஃபுட் பெக்ஸின் பொசிஷனிங் மாறியிருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. அலாய் வீல்கள் புதிதாக இருந்தாலும், அதே 200சிசி இன்ஜின்தான் தொடர்கிறது. தற்போதைய மாடலின் விலையே 2 லட்ச ரூபாயைத் தாண்டும் நிலையில், விலை உயர்வுடன் புதிய மாடல் வரலாம்.

2021 பைக்ஸ்!

ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

மீட்டியார் 350, ராயல் என்ஃபீல்டின் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது. தற்போது அதன் நீட்சியாக, புதிய க்ளாஸிக் 350 பைக் வரவுள்ளது. மீட்டியார் போலவே க்ளாஸிக்கும் அதன் முந்தைய மாடலைப் போலவே காட்சியளிக்கிறது. என்றாலும் க்ரோம் வேலைப்பாடுடன் கூடிய டெயில் லைட், மேம்படுத்தப்பட்ட பில்லியன் சீட், வலதுபுறத்துக்கு மாறியிருக்கும் டிஸ்க் பிரேக்குகள் என வித்தியாசங்களும் இருக்கவே செய்கின்றன. மீட்டியாரில் இருக்கும் புதிய டூயல் க்ரேடில் ஃப்ரேம் - 349சிசி இன்ஜின் - Tripper நேவிகேஷன் - MIY பேக்கேஜ் - டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவை, புதிய க்ளாஸிக்கிலும் இடம்பெறும். தற்போது 1.65 லட்சத்தில் இருந்து, க்ளாஸிக் 350 BS-6 பைக்கின் விலை ஆரம்பமாகிறது (சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல்). கடந்த ஆண்டில் மட்டும் 3.98 லட்சம் க்ளாஸிக்குகள் விற்பனையானது. அதனால் விலை விஷயத்தில் ராயல் என்ஃபீல்டு உஷாராகவே இருக்கும்.

2021 பைக்ஸ்!

ராயல் என்ஃபீல்டு 650சிசி க்ரூஸர்

ன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி-யைத் தொடர்ந்து, 650சிசி க்ரூஸரை, ராயல் என்ஃபீல்டு களமிறக்க உள்ளது. இதன் ஸ்பை படத்தில், இன்ஜின் முழுக்கவே கறுப்பு நிறத்துக்கு மாறியிருந்தது. சஸ்பென்ஷன், லீவர்கள், மிரர்கள், அலாய் வீல்கள், சேஸி எனக் கிட்டத்தட்ட எல்லாமே கறுப்பு. பின் சஸ்பென்ஷன் - முன் ஃபுட் பெக்ஸ் - இரட்டை எக்ஸாஸ்ட் ஆகியவற்றின் பொசிஷனிங் வித்தியாசமாக உள்ளது. RE வரலாற்றில் முதன்முறையாக, முன்னே USD ஃபோர்க் இடம் பெற்றுள்ளது. எனவே புத்தம் புதிய ஃப்ரேம் இருக்கலாம். இதிலும் Tripper நேவிகேஷன் & MIY பேக்கேஜ் இருக்கும். கவாஸாகி வல்கன் S மற்றும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, இந்த க்ரூஸர் வரும்.

2021 பைக்ஸ்!

டிவிஎஸ் Zepplin R

டொமினார் இருக்கும் பவர் க்ரூஸர் செக்மென்ட்டை மனதில் வைத்து, கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டிவிஎஸ் காட்சிப்படுத்திய ஹைபிரிட் கான்செப்ட்தான் Zepplin. மாருதி சுஸூகியின் SHVS மாடல்களில் இருக்கும் Integrated Starter Generator, e-Boost போன்ற அம்சங்கள் இதில் இருந்தன. 48V லித்தியம் ஐயன் பேட்டரி, 1200W ரீ-ஜெனரேட்டிவ் அசிஸ்ட் மோட்டாருக்குச் சக்தியை அனுப்பும்போது, Zepplin-ன் பெர்ஃபாமன்ஸ் சூப்பராக இருக்கும். இதிலிருந்த 220சிசி இன்ஜின், பல்ஸர் 220-க்கு இணையாக 20bhp பவர் - 1.85kgm டார்க்கை வெளிப்படுத்தியது. 168 கிலோ எடையுள்ள Zepplin, 130கிமீ வேகம் வரை செல்லும். நீளமான 1,498மிமீ வீல்பேஸ் மற்றும் முன்பக்க USD ஃபோர்க், பைக்கின் நிலைத்தன்மைக்குக் கைகொடுக்கும். முன்பக்கத்தில் பெரிய 110/70 R17 - பின்பக்கத்தில் சிறிய 140/70 R15 பைரலி டயர்கள் இருக்கும். இதில் எத்தனை விஷயங்கள் புரொடக்ஷன் வெர்ஷனில் இருக்கும்?

2021 பைக்ஸ்!

யமஹா FZ-X

னது 250சிசி பைக்கான FZ 25-ன் BS-6 வெர்ஷனை அறிமுகப்படுத்தும்போது, கூடவே புதிதாக FZ-S 25 எனும் வேரியன்ட்டை யமஹா விற்பனைக்குக் கொண்டுவந்தது. ஆனால் ஃபுல் ஃபேரிங் கொண்ட ஃபேஸர் 25-ன் BS-6 வெர்ஷன் இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது FZ-X எனும் பெயரில் ஒரு பைக்கை யமஹா களமிறக்க இருக்கிறது. அநேகமாக இது பல்ஸர் AS200 பாணியில், அட்வென்ச்சர் பைக்கில் காணப்படும் அம்சங்களுடன் கூடிய நேக்கட் டூரிங் பைக்காக வரும். ஏனெனில் FZ-S 25 பைக்கில், பெரிய விண்ட்ஸ்க்ரீன் மற்றும் Handguard உண்டு. 110சிசி செக்மென்ட்டை யமஹா புறந்தள்ளிவிட்ட நிலையில், தனது பைக்குகளின் பட்டியலை அந்த நிறுவனம் அதிகரிக்கும் முயற்சியாக FZ-X பார்க்கப்படுகிறது. FZ-S Fi வின்டேஜ் அதற்கான உதாரணம்.

2021 பைக்ஸ்!

ட்ரையம்ப் ட்ரைடெண்ட்

னது என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் நேக்கட் பைக்காக, ட்ரைடெண்ட் 660 பைக்கைப் பொசிஷன் செய்திருக்கிறது ட்ரையம்ப். ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் பைக்கின் வாசம், இதன் டிசைனில் அதிகமாகத் தெரிவது நல்ல விஷயம்தான். LED லைட்டிங், ஃபுல் டிஜிட்டல் மீட்டர், 2 ரைடிங் மோடுகள் (Road, Rain), அட்ஜஸ்டபிள் டிராக்ஷன் கன்ட்ரோல், ரைடு பை வயர், டூயல் சேனல் ஏபிஎஸ், மிஷ்லின் ரோடு 5 டயர்கள் போன்ற பல மாடர்ன் வசதிகள் பைக்கில் இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு எனத் தனியாக புளூடூத் Module வாங்கும்போது, Turn By Turn நேவிகேஷன் - Go Pro - போன்/மியூசிக் கன்ட்ரோல் போன்ற அம்சங்களைப் பயன்படுத்த முடிவது நலம். காலம் சென்ற ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S பைக்கில் இருந்த அதே 660சிசி இன்லைன் 3 சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் காம்போதான் என்றாலும், இதில் 67 புதிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் Up/Down Quickshifter ஆப்ஷனலாகக் கிடைக்கிறது. 81bhp பவர் - 6.4kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த பைக்கை, 16,000 கிமீக்கு ஒருமுறை சர்வீஸ் செய்தாலே போதும் என்கிறது ட்ரையம்ப்! எதிர்பார்த்தபடியே ஸ்ட்ரீட் ட்ரிப்பிளைவிட ரிலாக்ஸ்டான எர்கனாமிக்ஸ் உடன் வருகிறது ட்ரைடென்ட். Showa நிறுவனத்தின் USD Seperate Function ஃபோர்க் - Preload அட்ஜஸ்டபிள் மோனோஷாக், சஸ்பென்ஷன் பணியைக் கவனித்துக் கொள்கிறது. முன்பக்கத்தில் Nissin நிறுவனத்தின் இரட்டை 310மிமீ டிஸ்க் பிரேக்ஸ் இருந்தால், பின்பக்கத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் உண்டு. சிம்பிளான டியூப்லர் ஸ்டீல் ஃப்ரேம் காரணமாக, பைக்கின் எடை வெறும் 189 கிலோதான். CKD முறையில் இந்தியாவுக்குப் பாகங்களாக இறக்குமதி ஆகவுள்ள டரைடெண்ட், சுமார் 7 லட்ச ரூபாய் விலையில் அறிமுகமாகலாம். கவாஸாகி Z650, யமஹா MT-07, ஹோண்டா CB650 ஆகிய பைக்குகளுடன், சர்வதேசச் சந்தைகளில் இந்த ட்ரையம்ப் பைக் போட்டியிடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு