Published:Updated:

"ஓலா ஸ்கூட்டர் என்ன சொப்பன சுந்தரி கார் காலத்து மாடலா?" - கடுப்பில் தீ வைத்து எரித்த மருத்துவர்!

எரியும் ஓலா ஸ்கூட்டர்

‘‘நடுரோட்டில், கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டிருந்த எனக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது. ஓலா கஸ்டமர் கேரில், ‘ஸ்கூட்டரை எரிக்கப் போகிறேன்’ என்று தகவல் கொடுத்துவிட்டுத்தான் சாலையோரமாக நிறுத்தி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினேன்’’ என்கிறார் மருத்துவர் ப்ரித்விராஜ்.

"ஓலா ஸ்கூட்டர் என்ன சொப்பன சுந்தரி கார் காலத்து மாடலா?" - கடுப்பில் தீ வைத்து எரித்த மருத்துவர்!

‘‘நடுரோட்டில், கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டிருந்த எனக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது. ஓலா கஸ்டமர் கேரில், ‘ஸ்கூட்டரை எரிக்கப் போகிறேன்’ என்று தகவல் கொடுத்துவிட்டுத்தான் சாலையோரமாக நிறுத்தி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினேன்’’ என்கிறார் மருத்துவர் ப்ரித்விராஜ்.

Published:Updated:
எரியும் ஓலா ஸ்கூட்டர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர் ப்ரித்விராஜ். இவர், கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி ஆன்லைன் மூலம் ‘ஓலா’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி எடுத்தார். இதன் ஆன்ரோடு விலை ஒன்றரை லட்சம். ஓரிரு நாள்கள் மட்டுமே ஸ்கூட்டர் நன்றாக ஓடியது. அதன் பிறகு ஓலா ஸ்கூட்டர் ஓயாமல் தொல்லை கொடுத்திருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டர் தூரம் ஓடும் என உத்திரவாதம் அளித்திருந்த நிலையில், அதிகபட்சமாக 44 கிலோ மீட்டர் தூரம்தான் ஓடியிருக்கிறது. பலமுறை ஸ்கூட்டர் நடுரோட்டிலேயே நின்றுவிட்டதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார் ப்ரித்விராஜ். `கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் ‘சொப்பன சுந்தரி’ கார் ரேஞ்சுக்கு மக்கர் செய்ததால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ப்ரித்விராஜ் ஆசை ஆசையாக வாங்கிய தனது ஓலா ஸ்கூட்டரை நேற்றைய தினம் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருக்கிறார். ஸ்கூட்டருக்குத் தீ வைக்கும் காட்சிகளை அவரே வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டதுதான், இந்த ஏப்ரல் மாத வெயிலின் ஹாட் டாப்பிக்.

மருத்துவர் ப்ரித்விராஜ்
மருத்துவர் ப்ரித்விராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், ‘ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ன சொப்பன சுந்தரி காலத்து மாடலா?’ என்று நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.

இது குறித்து, மருத்துவர் ப்ரித்விராஜிடமே பேசினோம்.

‘‘ஓலா இ-பைக்கை வாங்கிய நாளிலிருந்தே மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். ஃபுல் சார்ஜ் போட்டுவிட்டுச் சென்றாலும் திடீரென நடுரோட்டிலேயே நின்றுவிடுகிறது. குறிப்பிட்ட நேரத்தில், கிளினிக்கிற்குச் சென்று நோயாளிகளுக்குச் சிகிச்சைஅளிக்க முடியாமல் தவித்துள்ளேன். பல சங்கடங்களை அனுபவித்திருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் 4 முறை ரிப்பேர் ஆகிவிட்டது. ஸ்கூட்டர் ரெஜிஸ்டர் செய்யவும் காலதாமதம் செய்தனர். தொடர் வற்புறுத்தலுக்குப் பின்னரே குடியாத்தம் அலுவலகத்தில் ரெஜிஸ்ட்டர் செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘ஆம்பூரிலேயே வாகனப் பதிவு அலுவலகம் இருக்கும்போது, ஏன் குடியாத்தம் செல்ல வேண்டும்?’ என கேட்டேன். அதற்குப் பதில் இல்லை. குடியாத்தத்தில்தான் ரெஜிஸ்டர் செய்ய முடியும் என்றார்கள். நேற்று காலை 9.30 மணிக்கு குடியாத்தம் வாகனப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு எனது முகவரியைப் பார்த்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ‘இந்த வண்டியை ஆம்பூரில்தான் பதிவு செய்ய முடியும்’ எனக் கூறித் திருப்பி அனுப்பினார். காரணம் கேட்டதற்கு, ‘உங்களுடைய ஆதார் முகவரி திருப்பத்தூர் மாவட்டத்துக்குள் வருகிறது. வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்டது குடியாத்தம். எனவே, உங்கள் மாவட்டத்தில் வாகனத்தை ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார் அந்த அதிகாரி. இதனால், மிகவும் வேதனையுடன் நான் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். உள்ளி கிராமம் அருகே வந்தபோது, சார்ஜ் திடீரென டவுன் ஆகி ஸ்கூட்டர் நடுவழியிலேயே நின்றுவிட்டது.

ஸ்கூட்டரை எரிக்க பெட்ரோல் ஊற்றும் ப்ரித்விராஜ்
ஸ்கூட்டரை எரிக்க பெட்ரோல் ஊற்றும் ப்ரித்விராஜ்

அப்போது, நேரம் காலை 10.30 மணி. ஓலா கஸ்டமர் கேர் சென்டருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தேன். நடுரோட்டில் நிற்பதையும் செல்ஃபி எடுத்து மெயில் அனுப்பினேன். ‘இதோ ஆட்களை அனுப்புகிறோம்’ என்று வழக்கம்போல கதை அளந்தார்கள். 12 மணி என்றார்கள். பிறகு 2.30 மணி என்றார்கள். அடுத்து, 'மாலை 5 மணி வரை காத்திருங்கள்’ என்றார்கள். நடுரோட்டில், கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டிருந்த எனக்குக் கோபம் உச்சிக்கு ஏறியது. ஓலா கஸ்டமர் கேரில், ‘ஸ்கூட்டரை எரிக்கப் போகிறேன்’ என்று தகவல் கொடுத்துவிட்டு இரண்டு லிட்டர் பெட்ரோலை நண்பரை வாங்கிவரச் சொல்லி, சாலையோரமாக நிறுத்திக் கொளுத்திவிட்டேன். அந்த ஸ்கூட்டர் இருந்ததால்தான் நான் தினமும் பல்வேறு பிரச்னைகளையும், இன்னல்களையும் அனுபவித்தேன். இனி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நிம்மதியாக இருப்பேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓலா ஸ்கூட்டரில் நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன. பிரச்னையை சரி செய்து ஓட்டினால், அடுத்த இரண்டு நாளில் புது பிரச்னை வருகிறது. சர்வீஸ் விட்டால் டச்-அப் மட்டுமே செய்துகொடுக்கிறார்கள். ஒரு முறை ஃபுல் சார்ஜ் போட்டு வெளியில் சென்றுகொண்டிருந்தேன். திடீரென நின்றுவிட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்குத் தள்ளிச் சென்று, தெரிந்த பெட்ரோல் பங்க்கில் சார்ஜ் போட்டுக் கொண்டேன். ஸ்கூட்டரை வாங்கிய நாளிலிருந்து தற்போது வரை 800 கிலோ மீட்டர்கூட ஓட்டவில்லை. அவ்வளவு கேவலமான, மோசமான ஸ்கூட்டர் அது. அதைவிட கஸ்டமர் கேரில் அமர்ந்திருக்கும் ஆட்கள் பேசும் பொய்யைக் கேட்டால் தலையே வெடித்துவிடும்.

கொழுந்துவிட்டு எரியும் ஓலா ஸ்கூட்டர்
கொழுந்துவிட்டு எரியும் ஓலா ஸ்கூட்டர்

ஓலா சர்வீஸ் இன்ஜினீயருக்கு மெயில் பண்ணிணாலும் ரிப்ளை இல்லை. ட்விட்டரில் டேக் பண்ணினாலும் ரெஸ்பான்ஸ் இல்லை. ஸ்கூட்டரை எரிப்பதற்கு முன்பு மொத்த ஆதாரத்தையும் வீடியோவாகத் தொகுத்து ரெக்கார்டிங் செய்துதான் வெளியிட்டேன். நியூஸ் வைரலானவுடன் ஓலா நிறுவனத்திலிருந்து ‘யாருக்கும் இன்டர்வியூ கொடுக்க வேண்டாம். ஸ்கூட்டரை ரீப்ளேஸ்மெண்ட் செய்து தருகிறோம்’ என்று சமாதானம் செய்கிறார்கள். ‘உங்களுக்கும் எனக்கும் கனெக்டிவிட்டியாக இருந்ததே ஓலா ஸ்கூட்டர்தான். இனி அந்த ஸ்கூட்டரே இல்லை. என்னைச் சந்திக்க வர வேண்டாம். தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.

எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் போய்விட்டதே என்ற கவலையோ, வருத்தமோ ஏற்படவில்லை. எனக்கு பிபி, சுகர் எதுவுமே இல்லை. ஓலா ஸ்கூட்டர் வாங்கிய நாளிலிருந்துதான் டென்ஷன் ஆகி ரத்தக் கொதிப்பே வந்தது. பொதுமக்களுக்கு மட்டும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். தயவுசெய்து, இது மாதிரியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி நஷ்டமடைய வேண்டாம். இந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்" என்றார் நிம்மதிப் பெருமூச்சு விட்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism