Published:Updated:

ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!

ஏத்தர்
பிரீமியம் ஸ்டோரி
ஏத்தர்

சிம்பிள் ஒன் Vs ஓலா S1 Pro Vs ஏத்தர் 450X

ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!

சிம்பிள் ஒன் Vs ஓலா S1 Pro Vs ஏத்தர் 450X

Published:Updated:
ஏத்தர்
பிரீமியம் ஸ்டோரி
ஏத்தர்

ஓலா S1 Pro (1.41 லட்சம், சென்னை ஆன்ரோடு)

ஏத்தர் 450X (1.50 லட்சம், சென்னை ஆன்ரோடு)

சிம்பிள் ஒன் (1.09 எக்ஸ் ஷோரூம், டெல்லி)

இப்போதைக்கு இந்தியாவின் எலெக்ட்ரிக் டூ–வீலர் செக்மென்ட்டில் மாஸ் மார்க்கெட்டைப் பிடித்திருக்கிறது ஓலா. ஓலா அடியொற்றி, இன்னொரு அசுரனும் வந்திருக்கிறது இந்திய மார்க்கெட்டுக்கு. அது சிம்பிள் எனெர்ஜி எனும் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம்.

சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் லாஞ்ச் செய்திருக்கும் ‘சிம்பிள் ஒன்’ எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான், இப்போதைக்கு ஓலாவைத் தாண்டிய ஒரு டாக் ஆஃப் தி ஏரியாவாகி இருக்கிறது. அதற்குக் காரணம், ஓலாவின் போட்டியாளர் என்பது மட்டுமில்லை; இந்தியாவின் அதிக ரேஞ்ச் கிமீ கொண்ட ஸ்கூட்டராகக் களம் காண இருக்கிறது சிம்பிள் ஒன்.

இவை தவிர, எலெக்ட்ரிக்கின் முன்னோடி என்றால் அது ஏத்தர்தானே! அதை விட்டு விட்டு எலெக்ட்ரிக் போட்டியைத் தொடங்கி விட முடியாது. சிம்பிள் ஒன்னுக்கும் ஓலா S1 Pro–வுக்கும் ஏத்தருக்கும் செமையான போட்டி நடந்தால் வாடிக்கையாளர்களுக்கு நல்லதுதானே!

டிசைன்

அவுட்லுக்கில் ஓலா ஒரு தனித்துவம் என்றால், சிம்பிள் ஒன் வேறு ரகமாக இருக்கிறது. ஸ்கூட்டர் செம ஷார்ப் டிசைனில், கலக்குகிறது. இதன் ஹெட்லைட்ஸ் முழுக்க எல்இடி மயம். ஓலாவிலும்தான். சிம்பிள் ஒன்னில் ஹெட்லைட்ஸ் முன் பக்க ஆப்ரானில், முக்கோண வடிவில் செம க்ளாஸியாக இருக்கிறது. இதன் டயர் ஹக்கரில் ஆரம்பித்து, பின் பக்கம் வரை எல்லாமே ஷார்ப்பாக டிசைன் செய்திருக்கிறார்கள்.

ஓலாவில் ஹெட்லைட் வழக்கம்போல் டூமில், செவ்வக வடிவில் எல்இடி ஸ்ட்ரிப்புடன் அழகாக இருக்கிறது. பின் பக்கம் கிராப் ரெயில், கிச்சென இருக்கிறது சிம்பிள் ஒன்னில். லாங் ஷாட்டில் தக்கையாக இருக்குமோ என்று நினைத்தால், ஹேண்டில் பாரைப் பிடித்து ஓட்டிப் பார்த்தால், கிண்ணென இருக்கிறது ஓலா S1 Pro.

இதைச் சாலைகளில் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ… ‘ஓ… ஏத்தர்தானே’ என்று கடந்து போய் விட முடிகிறது. ஆனால், ஏத்தரின் கட்டுமானம் ஒரு பைக்குக்கு இணையாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவும் சிம்பிள் ஒன் மாதிரி செம ஷார்ப்பான தம்பி. இதிலும் முன் பக்க ஆப்ரானில் ஹெட்லைட் பொசிஷன் செய்திருக்கிறார்கள். டிசைன் போட்டி என்று வரும்போது, சிம்பிளா ஏத்தரா ஓலாவா என்பதில் குழப்பம் ஏற்படுவது உண்மைதான். ஆனால், ஷார்ப்பான டிசைனில் கலக்குகின்றன சிம்பிள் ஒன்னும் ஏத்தரும்.

ஏத்தர் சீட்டுக்கு அடியில் 22 லிட்டர்தான் இடவசதி!
ஏத்தர் சீட்டுக்கு அடியில் 22 லிட்டர்தான் இடவசதி!
ஓலாவில் காளையின் கொம்பு போல் இருக்கும் கிராப் ரெயில்...
ஓலாவில் காளையின் கொம்பு போல் இருக்கும் கிராப் ரெயில்...
ஏத்தர் ஏப்ரானில் இருக்கும் ஷார்ப்பான LED ஹெட்லைட்ஸ்!
ஏத்தர் ஏப்ரானில் இருக்கும் ஷார்ப்பான LED ஹெட்லைட்ஸ்!
பின் பக்கம் டிஸ்க் 190மிமீ அருமை ஏத்தரில்!
பின் பக்கம் டிஸ்க் 190மிமீ அருமை ஏத்தரில்!

வசதிகள்

S1 Pro லாஞ்ச் ஆன புதிதில் வசதிகளில்தான் டாக் ஆஃப் தி ஏரியாவாக இருந்தது. தமிழ்நாட்டில் பல வாடிக்கையாளர்கள் இன்னும் தங்களுக்கு வசதிகள் அப்டேட் ஆகவில்லை என்று புலம்புகிறார்கள். ஆனால், அப்டேட் ஆன ஓலாவில் எவ்வளவு வசதிகள்! இங்கிருப்பதில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது ஓலா S1 Pro மட்டும்தான். அதேபோல், இந்த செக்மென்ட்டில் அண்டர் சீட் ஸ்டோரேஜ் இடவசதியும் ஓலாவில்தான் அதிகம். 36 லிட்டர் இடவசதி கொண்ட இந்த சீட்டுக்கு அடியில் இரண்டு ஹெல்மெட்கள் வைக்கலாம். மேலும் ஓலாவில் மட்டும்தான் Proximity Lock/Unlock வசதி உண்டு.

சிம்பிள் ஒன்னில் 30 லிட்டர் பூட் ஸ்பேஸ். ஏத்தர்தான் வசதிகள் மற்றும் இடவசதிகளில் பின் தங்குகிறது. 450X–ல் இருப்பது 22லிட்டர்தான். சிம்பிள் ஒன் மற்றும் ஓலாவில் இருக்கும் TPMS (Tyre Pressure Monitoring System) ஏத்தரில் கிடையாது. அதேபோல், புளூடூத் கனெக்டிவிட்டி இருந்தாலும், Wifi வசதி இல்லை ஏத்தரில்.

மற்றபடி மூன்றிலுமே பொதுவான வசதிகள் பல உண்டு. மூன்று ஸ்கூட்டர்களுமே அசத்தலான எல்இடி ஹெட்லைட்ஸ், எல்இடி டிஆர்எல்கள், TFT டிஸ்ப்ளே கொண்ட டச் ஸ்க்ரீன், இன்பில்ட் நேவிகேஷன், ஸ்கூட்டரை ட்ராக் செய்யும் ஜியோஃபென்சிங் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி, ரைடிங் மோடுகள் (இதில் சிம்பிள் ஒன்னில்தான் 4 மோடுகள்), ரிவர்ஸ் மோடு, ட்ரிப் மீட்டர், ரேஞ்ச் மீட்டர், வாய்ஸ் அசிஸ்டன்ட் என்று கலக்குகின்றன. ஓவர்ஆலாக OTA அப்பேட்ஸ் கொண்டிருப்பதால் ஏத்தரைவிட ஓலாவும் சிம்பிள் ஒன்னும்தான் வசதிகளில் பாஸ் மார்க் இல்லை; டாப் மார்க் வாங்குகின்றன.

பேட்டரி மற்றும் மோட்டார்

இங்கிருப்பதில் பேட்டரி பவர் அதிகமாக இருப்பது சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில்தான். ஓலாவைவிட (3.97kWh) பேட்டரி பேக்கேஜில் கெத்து காட்டுகிறது சிம்பிள் ஒன். இதில் இருப்பது 4.8kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கேஜ். இந்த மூன்றில் குறைவான பேட்டரி பவர் கொண்டிருப்பது ஏத்தரில்தான். இதன் பேட்டரி 2.62kWh மட்டுமே!

பேட்டரி பவர் அதிகமாக இருந்தாலும், ஓலா S1 Pro–வைவிட சிம்பிள் ஒன்னில் பவர் குறைவாகவே இருக்கிறது. 9.38bhp பவர் – இது ஓலாவைவிட சுமார் 1.5bhp கம்மி. ஓலாவில் இருப்பது 11bhp பவர். இது ஒரு 125 சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையானது. ஆனால், டார்க்கில் எகிறுகிறது – சிம்பிள் ஒன். 72Nm. ஓலாவில் இருப்பது 58Nmதான். அப்படியென்றால், இந்த மூன்றில் பிக்–அப் செமையாக இருக்கப் போவது சிம்பிள் ஒன்னில் மட்டுமே! பவர் விஷயத்திலும் ஏத்தர் பின்தங்குகிறது. இதன் பவர், 8bhp. டார்க்கிலும் ஏத்தர் குறைவே! 26Nm டார்க்தான்.

இதில் ஓலாவின் டாப் ஸ்பீடுதான் செம! இதன் ஹைப்பர் மோடில் 115 கிமீ வரை பறக்க முடியும். சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் 105 கிமீ வரை போக முடிகிறது. ஏத்தர் டாப் ஸ்பீடிலும் குறைவு! 95 கிமீ வரை இதில் பறக்கலாம். வழக்கம்போல், 0–40 கிமீ, 0–100 கிமீ வேகப்போட்டியிலும் சிம்பிள் ஒன்தான் வின்னர். அதற்காக ஓலா, ஏத்தரைக் குறை சொல்லிவிட முடியாது. அதாவது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்குத் தேவையான பேட்டரி மற்றும் மோட்டார் போன்ற விஷயங்களில் இங்கே சொல்லியடிக்க வந்திருக்கிறது சிம்பிள் ஒன்.

ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!
போனிலேயே ஓலா ஸ்கூட்டரின் சார்ஜிங் பற்றி நோட்டிஃபிகேஷன்...
போனிலேயே ஓலா ஸ்கூட்டரின் சார்ஜிங் பற்றி நோட்டிஃபிகேஷன்...
ஓலா LED ஹெட்லைட்ஸ்... செம பளீர்!
ஓலா LED ஹெட்லைட்ஸ்... செம பளீர்!
ஓலா S1 ப்ரோவின் ஹைலைட்... படுக்கை வசத்தில் இருக்கும் சஸ்பென்ஷன்...
ஓலா S1 ப்ரோவின் ஹைலைட்... படுக்கை வசத்தில் இருக்கும் சஸ்பென்ஷன்...
ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

ஏத்தர் பைக்கை ஓட்டியவர்களும் சரி; ஓலாவை ஓட்டியவர்களும் சரி – ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் இரண்டையும் குறை சொல்லக் கேட்டதில்லை. சிம்பிள் ஒன்னைப் பொருத்தவரை தமிழ்நாட்டிலும் யாரும் ஓட்டவில்லை. இதில் ஓலா S1 Pro–வின் சஸ்பென்ஷன் செட்அப் கொஞ்சம் தனித்துவமாக இருக்கிறது. படுக்கைவசத்தில் இருக்கும் இதன் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் மற்றும் சிங்கிள் சைடு ஃபோர்க், மேடு பள்ளங்களை அசால்ட்டாகச் சமாளிக்கிறது.

ஏத்தரிலும் சிம்பிள் ஒன்னிலும் வழக்கமான டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட் அப் கொடுத்திருக்கிறார்கள். எனவே, இது வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் ஓட்டுவதுபோல் இருக்கின்றன. மூன்று ஸ்கூட்டர்களிலுமே 12 இன்ச் வீல்கள். ஓலாவில் 220/180மிமீ முன்/பின் என டிஸ்க் பிரேக் இருந்தால்… சிம்பிள் ஒன்னில் 200/190 மிமீ டிஸ்க்குகள் கொடுத்திருக்கிறார்கள். ஏத்தரிலும் இதே! அதனால், மூன்றுமே பிரேக்கிங்கிலும் பட்டையைக் கிளப்புகின்றன. ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் இருப்பது கூடுதல் ஸ்பெஷல்!

இங்கிருப்பதில் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர் ஏத்தர் 450X. இதன் எடை 108 கிலோதான் என்பதால், வளைத்து நெளித்து ஓட்ட அற்புதமாக இருக்கிறது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் எடை 110 கிலோ எடை. இங்கே எடை அதிகமாக இருப்பது, ஓலா S1 Proதான். இதன் எடை 125 கிலோ வருகிறது. இருந்தாலும் ஓட்டுதலிலும் கையாளுமையிலும் மூன்றுமே கில்லிகள்தான்!

சார்ஜிங்

சாதாரண 5Amp கன்வென்ஷனல் சார்ஜரில் 5.30 முதல் 6 மணி நேரம் ஆகிறது ஓலா S1 Pro–வை ஃபுல் சார்ஜ் செய்வதற்கு. இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் என்றால், 18 நிமிடங்களில் 75 கிமீ வரை போகக்கூடிய அளவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.

ஏத்தரை ஃபுல் சார்ஜ் செய்ய 5.40 மணி நேரம் வரை ஆகிறது. இதிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்தால்… ஒரு நிமிடத்துக்கு ஒரு கிமீ என்கிற ரீதியில் சார்ஜ் ஏறும்.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் சார்ஜிங்கைப் பொருத்தவரை ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 75 கிமீ–க்கு 30 நிமிடங்கள் ஆகும். மற்றபடி நார்மல் சார்ஜிங்குக்கு அதே நேரம்தான்.

TFT டிஸ்ப்ளே ஏத்தரில் செம!
TFT டிஸ்ப்ளே ஏத்தரில் செம!
ஏத்தர் போலவே சிம்பிள் ஒன் ஆப்ரானில் LED ஹெட்லைட்ஸ்...
ஏத்தர் போலவே சிம்பிள் ஒன் ஆப்ரானில் LED ஹெட்லைட்ஸ்...
கிண்ணென இருக்கும் கிராப் ரெயில்...
கிண்ணென இருக்கும் கிராப் ரெயில்...
சிம்பிள் ஒன்னிலும் டச் ஸ்க்ரீன்... சூப்பர்!
சிம்பிள் ஒன்னிலும் டச் ஸ்க்ரீன்... சூப்பர்!
சிம்பிள் ஒன்னிலும் 30 லிட்டர் இடவசதி.
சிம்பிள் ஒன்னிலும் 30 லிட்டர் இடவசதி.
ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!

ரேஞ்ச்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முக்கியமான அம்சமே ரேஞ்ச்தான். ஏத்தரைப் பொருத்தவரை நாம் பல முறை டெஸ்ட் செய்தவரையில், இதன் ஃபுல் சார்ஜிங் ரேஞ்ச், சுமார் 90 கிமீ வரை கிடைக்கிறது. இதில் 3 மோடுகள் இருப்பதால்… மாற்றி மாற்றி ஓட்டும்போது கொஞ்சம் வித்தியாசம் கிடைக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஓலாவின் ஹாட் டாப்பிக் ஆக இருந்தது அதன் ரேஞ்ச்தான். இதன் ஆரம்ப வேரியன்ட்டான S1–யைவிட S1 Pro–வின் ரேஞ்ச் அதிகம். இது சிங்கிள் சார்ஜுக்கு 181 கிமீ வரை தருவதாக க்ளெய்ம் செய்தாலும், நமது ஓட்டுதலுக்கு 132 கிமீ வரை தாராளமாகத் தந்தது. இது எக்கோ மோடுக்கு. ஹைப்பர் மற்றும் ஸ்போர்ட் மோடை மாற்றி மாற்றி ஓட்டும்போது, சுமார் 112 கிமீ வரை நிச்சயமாகத் தருகிறது ஓலா S1 Pro.

இதிலும் சொல்லியடிப்பது சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்தான். இதன் ஃபுல் ரேஞ்ச் சுமார் 236 கிமீ என்கிறது சிம்பிள் எனெர்ஜி நிறுவனம். இதை ஓட்டிய வாடிக்கையாளர்களிடம் விசாரித்தபோது, சுமார் 200 கிமீ–யைத் தாண்டுகிறது என்கிறார்கள். இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம்தானே! இதைவிட உற்சாகமாக ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறது சிம்பிள் எனெர்ஜி. அதாவது, 6.4kWh பவர் கொண்ட பேட்டரி சிம்பிள் ஒன்னையும் மார்க்கெட்டில் விடவிருக்கிறது சிம்பிள் எனெர்ஜி. இதன் ரேஞ்ச் சுமார் 300 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது அந்நிறுவனம்! அட, இது ஒரு டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் கிமீ ரேஞ்ச்சைவிட அதிகம்!

எது வாங்கலாம்?

ரேஞ்ச், சார்ஜிங்குக்குப் பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் கையைப் பிசைவது பட்ஜெட்டில்தான். ஏத்தர் 450X–ன் சென்னை ஆன்ரோடு விலை சுமார் 1.52 லட்சம் வருகிறது. இதுவே ஓலா S1 Pro விலை சுமார் 1.41 லட்சம். இங்கே சிம்பிள் ஒன் – கெத்தாகக் கையைத் தூக்குகிறது. அதாவது, ஏத்தரின் எக்ஸ் ஷோரூம் விலையில், ஒரு சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை ஆன்ரோடு விலைக்கு வாங்கிவிடலாம். சென்னையில் இதன் ஆன்ரோடு விலை தெரியவில்லை; இருந்தாலும் இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.09 லட்சம்தான். எக்ஸ்ட்ரா ரேஞ்ச் கொண்ட பேட்டரி என்றால், 1.45 லட்சம் ஆன்ரோடு விலைக்குள் வாங்கிவிடலாம் சிம்பிள் ஒன்னை. சென்னைக்கு வரும்போது சிம்பிள் ஒன்னின் விலை நிச்சயம் ஏத்தர் மற்றும் ஓலாவைவிடக் குறைந்தே இருக்கும் என்பதால்… சிம்பிள் ஒன் சிம்பிளாக தமிழ்நாட்டில் காலூன்ற வாய்ப்பு இருக்கிறது.

ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!
ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!
ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!
ஓலாவை விட அதிக ரேஞ்ச் தரும் சிம்பிள் ஒன்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓலா S1 Pro–வுக்கும் சிம்பிள் ஒன் ஸ்கூட்டருக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?

* போன ஆண்டு 2021 – ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் அன்றுதான் ஓலா ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கும் என்றார்கள். அன்றைக்குத்தான் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரும் லாஞ்ச் ஆனது.

* ஓலா மாதிரியே இதுவும் பெங்களூரு வைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்–அப் மொபிலிட்டி நிறுவனம். அட, ஏத்தருக்கும் பெங்களூருதான் தாய் வீடு.

* ஓலாவுக்குத் தமிழ்நாட்டில் தொழிற்சாலை உண்டு. அதேபோல்தான் சிம்பிள் எனெர்ஜிக்கும். ஓசூரில் உள்ள இதன் ப்ளான்ட்டில் சுமார் 10 லட்சம் யூனிட்டுகள் தயாராகுமாம். கூடவே, தர்மபுரியிலும் இன்னொரு தொழிற்சாலைக்குத் தயாராகி வருகிறது சிம்பிள் எனெர்ஜி. இதில் யூனிட்டுகள் அதிகமாக இருக்கும்.

* ஓலாவுக்கு ஒரே நாளில் சுமார் 1 லட்சம் புக்கிங்குகள் ஆயின. சிம்பிள் ஒன் அவ்வளவு இல்லை என்றாலும், சுமார் 30,000 புக்கிங்குகள் ஆகியிருக்கின்றன.

* டெலிவரி சொதப்பலில்கூட ஓலாவையே பின்பற்றி வருகிறது சிம்பிள் எனெர்ஜி. முதலில் 2021 டிசம்பரில் டெலிவரி தொடங்கப்படும் என்றார்கள். இப்போது ஜூன் மாதத்துக்கு டெலிவரியை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

* ஓலாவுக்கு டீலர்ஷிப் நெட்வொர்க் கிடையாது. எல்லாமே டிஜிட்டல்தான். சிம்பிள் எனெர்ஜிக்கு டீலர்ஷிப் நெட்வொர்க் உண்டு. இருந்தாலும், டிஜிட்டலாகவும் ஓலா போலவே ஹோம் டெலிவரி, சர்வீஸும் உண்டாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism