Published:Updated:

ரேஸ் ட்ராக்கில்... இத்தனை வேலை வாய்ப்புகளா?

பைக் ரேஸ்
பிரீமியம் ஸ்டோரி
பைக் ரேஸ்

ஒர்க்ஷாப்: ரேஸ்

ரேஸ் ட்ராக்கில்... இத்தனை வேலை வாய்ப்புகளா?

ஒர்க்ஷாப்: ரேஸ்

Published:Updated:
பைக் ரேஸ்
பிரீமியம் ஸ்டோரி
பைக் ரேஸ்

ரேஸ் ட்ராக்கில்... இத்தனை வேலை வாய்ப்புகளா?கடந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் தொடர்பான ஒரு முன்னுரையை, ஒரு தெளிவை, அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குக் கொடுக்கும் விதமாக ஆன்லைன் பயிலரங்கு ஒன்றை நடத்தியது மோட்டார் விகடன். முக்கியமாக மோட்டார் ஸ்போர்ட்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும், மோட்டார் ஸ்போர்ட்ஸில் தங்கள் கரியரை அமைக்க விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த ஆன்லைன் பயிலரங்கை CRA மோட்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்து நடத்தியது மோட்டார் விகடன். கோவையில் இருக்கும் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் கோச்சாக இருக்கும் தருண்குமார் இந்த ஆன்லைன் பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்.

தருண்குமார்
தருண்குமார்

மோட்டார் ஸ்போர்ட்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், முக்கியமாக பைக்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர்கள், மோட்டார் விகடன் நடத்திய இந்த ஆன்லைன் பயிரங்கில் கலந்து கொண்டார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் முதல் நாள் முழுவதும் பைக்கின் டிசைனைப் பற்றி விவரிப்பதற்காகவே எடுத்துக் கொண்டார் தருண்குமார். ஒரு கட்டிடத்தை எழுப்ப வேண்டுமானால், அதற்கு அடித்தளத்தை மிகவும் பலமாக அமைக்க வேண்டும். அது போல ரேஸ் பைக் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பைக்குகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன, பைக்கில் இருக்கும் பாகங்கள் மற்றும் அவற்றின் வகைகளைப் பற்றி முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, முதல் நாள் செஷனில், எத்தனைவிதமாக பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன, அவற்றில் என்னென்னவிதமான சேஸிக்கள், இன்ஜின்கள், சஸ்பென்ஷன்கள், வீல்கள் மற்றும் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்துத் தெளிவாக விளக்கினார் தருண்.

செவிவழி கேட்டால் மட்டும் நாம் பயிற்சி பெற்றதாக ஆகிவிடாதே! எனவே, பயிலரங்கிற்கு வந்தவர்கள் அன்றைய தினம் தாங்கள் கற்றுக் கொண்டதைச் சிந்தித்துச் செயல்படுத்தும்விதமாக பயிற்சிக்காகவும் சிறிதுநேரம் ஒதுக்கி அவர்களைச் சிந்திக்க வைத்தார் தருண். சுயமாக நாம் ஒன்றைச் செய்ய முற்படும்போது தான் சந்தேகங்களும் எழும். எனவே, பயிற்சிக்கான நேரம் முடிந்ததும் கேள்வி - பதில் நேரம். பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் பயிற்சியின்போது தங்களுக்கு எழுந்த சந்தேகங்களை தருணிடம் கேட்டுத் தெளிவு பெற, முதல் நாள் செஷன் நிறைவுற்றது.

ரேஸ் ட்ராக்கில்... இத்தனை வேலை வாய்ப்புகளா?

இரண்டாம் நாள் செஷனில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் என நாம் பொதுப் பெயரில் அழைத்தாலும், பிரத்தியேகமாக உருவாக்கப்படும் ட்ராக்குகளில் நடைபெறும் F1-ம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான், பாலைவனத்தில் நடைபெறும் ஆஃப் ரோடிங் போட்டிகளும் மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான். எனவே, என்னென்ன வகையான மோட்டார் ஸ்போர்ட்ஸ்கள் எல்லாம் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன என மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து மோட்டார் ஸ்போர்ட்ஸில் என்னென்னவிதமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்தும் இரண்டாம் நாள் செஷனில் விளக்கினார் தருண். மோட்டார் ஸ்போர்ட்ஸில் ரேஸ் மார்ஷல், சேஃப்டி ஆபிஸர், டீம் பிரின்சிபல் என ஒரு சில வேலைகள் பற்றி நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதில் வேறு என்னென்ன வேலை வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றன என தருண்குமார் விளக்கினார். டெக்னீஷியன்ஸ், டேட்டா அனலிஸ்ட், ட்ரெய்னர், டயடீஷியன், போட்டோகிராஃபர், நெட்வொர்க்கிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் எனப் பல்வேறு வேலை வாய்ப்புகள் மோட்டார் ஸ்போர்ட்ஸில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் குறித்து விரிவாக விளக்கினார் தருண். முதல் நாளைப் போலவே இரண்டாம் நாளிலும் சிறிது நேரம் பயிற்சிகளுக்காகவும், அதனைத் தொடர்ந்து கேள்வி - பதில் நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது. பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய சந்தேகங்களுக்கான தெளிவைப் பெற்றதுடன், மோட்டார் விகடன் மற்றும் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய இரண்டு நாள் ஆன்லைன் பயிலரங்கு நிறைவுற்றது.தருண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism