
புது எக்ஸ்பல்ஸ் 200T 4V பைக் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல 4 விஷயங்கள் இதோ!

எக்ஸ்பல்ஸ் ஆஃப்ரோடில் புது மாடலை… ஏதோ புது ஜென்போல் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புது எக்ஸ்பல்ஸ் 200T 4V பைக் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல 4 விஷயங்கள் இதோ!
1. புது ஸ்டைலிங்
எக்ஸ்பல்ஸ் என்றாலே ஆஃப்ரோடு பைக் என்றொரு முத்திரை இருந்து வந்ததல்லவா? உண்மையும் அதுதான்! ஆனால், இனி அப்படி இல்லை; இதை ரோடுக்கு ஏற்ப, குடும்பத்துக்கு ஏற்ப, அதே நேரம் ஆஃப்ரோடுக்கும் பங்கம் வைக்காமல் மொத்தமாக இதன் டிசைனை மாற்றி விட்டார்கள். எல்இடி ஹெட்லைட்டுக்கு மேலே அந்த வைஸர், இப்போது நல்ல குட்டியாகி விட்டிருக்கிறது. இதுவே ஒரு ஃபேமிலி லுக் தருகிறது. எக்ஸ்பல்ஸின் முக்கியமான அட்ராக்ஷனான, அந்த ஹை மவுன்ட்டட் முன் பக்க மட்கார்டு, இப்போது டயரை நெருக்கிக் கொண்டு நார்மல் டயர் ஹக்கராக மாறியிருக்கிறது. நார்மலான 17 இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் உண்டு. பின் பக்கம் ரேடியல் டயர், 130 மிமீ அகலம்.
2. இன்ஜின் அதே!
எக்ஸ்பல்ஸ் 200T-ல் இருக்கும் அதே 4வால்வு இன்ஜின் செட்அப்தான். இந்த 199.6சிசி இன்ஜினின் பவர், 19.1bhp@8,500rpm மற்றும் டார்க் 17.3Nm@6,500rpm. அதே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ். நார்மல் எக்ஸ்பல்ஸ் 200T 2V-யைவிட இதன் பீக் அவுட்புட் 0.7bhp பவரும் 0.2Nm டார்க்கும் அதிகம்.
3. மாடர்ன் வசதிகள்
இரண்டு பக்கமும் எல்இடி அசெம்பிளி யூனிட் இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் முழுக்க டிஜிட்டல். புளூடூத் கனெக்டிவிட்டி உண்டு. இதில் டர்ன்–பை–டர்ன் நேவிகேஷனும் கொடுத்திருக்கிறார்கள். சீட்டுக்கு அடியில் யுஎஸ்பி சார்ஜரும், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதியும் இருக்கின்றன.
4. விலை
விலையில் அருமை செய்திருக்கிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.25 லட்சம். ஒரு 150சிசி பைக்கின் விலைக்கு… உதாரணத்துக்கு யமஹா FZS-Fi , ஹோண்டா X–பிளேடு, அப்பாச்சி 160 போன்ற பைக்குகளின் விலைக்கு 200 சிசி வாங்கலாம் என்பது அருமைதானே! டீலர்ஷிப்பில் இப்போதே புக்கிங் தொடங்கி விட்டது எக்ஸ்பல்ஸ் 200T 4V-க்கு.