Published:Updated:

யமஹா FZ-X... மாடர்னா... க்ளாஸிக்கா?

யமஹா  FZ-X 150
பிரீமியம் ஸ்டோரி
யமஹா FZ-X 150

ஃபர்ஸ்ட் ரைடு: யமஹா FZ-X 150

யமஹா FZ-X... மாடர்னா... க்ளாஸிக்கா?

ஃபர்ஸ்ட் ரைடு: யமஹா FZ-X 150

Published:Updated:
யமஹா  FZ-X 150
பிரீமியம் ஸ்டோரி
யமஹா FZ-X 150

யமஹா இந்தியாவுக்கு எப்போது XSR பைக்கைக் கொண்டு வரப்போகிறது எனக் காத்திருக்கிறார்கள் இந்திய பைக் ஆர்வலர்கள். அதற்குப் பதிலாக பழைய FZ-ல் வெளிப்புற டிசைனை மட்டும் கொஞ்சம் XSR போல மாற்றி, ஃபர்ஸ்ட் காப்பிபோல FZ-X எனும் க்ளாஸிக் பைக்கை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கிறது யமஹா. புதிய FZ-X-ன் மெட்டாலிக் புளூ கலர் வேரியன்ட் நமக்குக் கிடைத்தது. இந்த FZ-X, நமது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்.

யமஹா  FZ-X 150
யமஹா FZ-X 150

டிசைன்

புதிய FZ-X-ல் அதிகம் பேச வேண்டியிருப்பதும், அதிகம் மாறியிருப்பதும் அதன் டிசைன்தான். ஸ்டாண்டர்டு FZ-ல் இருந்து முழுவதுமாக டிசைனை மாற்றி புதிய தோற்றத்தை FZ-X-க்குக் கொடுத்திருக்கிறது யமஹா. வட்ட வடிவ டிஆர்எல்லுக்கு நடுவில் எல்இடி முகப்பு விளக்கு FZ-X-ன் முன்பக்கத் தோற்றத்திற்கு நிறையவே அழகு சேர்க்கிறது. ரேடியேட்டர் இல்லையென்றாலும் பார்வைக்காக ரேடியேட்டர் ஷ்ரௌட்களைச் சேர்த்திருக்கிறது யமஹா. நீர்த்துளி வடிவ ஃப்யூல் டேங்க்கின் டிசைனும் சிறப்பாகவே இருக்கிறது. பின்னால் வர வர எளிமையான டிசைனைக் கொண்டிருக்கிறது புதிய FZ-X. சிறிய எல்இடி டெய்ல் லேம்ப் சிறப்பு. விலைக் குறைப்புக்காக பழைய FZ-ன் சேஸியையே பயன்படுத்தியிருக்கிறது யமஹா.

எல்சிடி டிஸ்ப்ளே புதுசு. கியர் பொசிஷன் இண்டிகேட்டர், நேவிகேஷன் கொடுத்திருக்கலாம்
எல்சிடி டிஸ்ப்ளே புதுசு. கியர் பொசிஷன் இண்டிகேட்டர், நேவிகேஷன் கொடுத்திருக்கலாம்

டிசைனைத் தவிர FZ-X-ல் புதிதாக இணைந்திருப்பது எல்சிடி டிஸ்ப்ளேதான். 3000 ரூபாய் அதிகமாகக் கொடுத்தால் யமஹாவின் Y-Connect bluetooth செயலியுடன் இணைந்து சில தகவல்களை நமக்குக் காட்டும் இந்தப் புதிய டிஸ்ப்ளே. எவ்வளவு எரிபொருள் செலவாகியிருக்கிறது, எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் போன்ற தகவல்களை மொபைலிலேயே பெற முடியும். மேலும் மொபைலில் வரும் நோட்டிஃபிகேஷன்களையும் பைக்கின் எல்சிடி டிஸ்ப்ளேயில் பெற முடியும். ஆனால், Turn-by-Turn நேவிகேஷன் வசதி, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் இந்த டிஸ்ப்ளேவில் இல்லை. பெட்ரோல் டேங்க்கின் மூடி சாவி போட்டுத் திறந்தவுடன் நம் கைகளுடன் வந்து விடுகிறது. டேங்க்குடன் இணைக்கப்பட்ட மூடியைத் தரவில்லை யமஹா.

மெட்டாலிக் புளூ, மேட் காப்பர் மற்றும் மேட் பிளாக் என மூன்று கலர் வேரியன்ட்களில் கிடைக்கிறது புதிய FZ-X. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பைக்கின் டிசைன் நன்றாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தந்தாலும், கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதுபோலவும் இருக்கிறது. பைக்கின் பெட்ரோல் டேங்க் பார்ப்பதற்குப் பெரிதாக இருக்கிறது, ஆனால் பழைய FZ-ஐ விட மூன்று லிட்டர் குறைவாக 10 லிட்டர் கொள்ளளவை மட்டுமே கொண்டிருக்கிறது புது FZ-X.

வட்ட வடிவ ஹெட்லைட், செம மாடர்ன் க்ளாஸிக் டிசைன்
வட்ட வடிவ ஹெட்லைட், செம மாடர்ன் க்ளாஸிக் டிசைன்
டெயில் லைட் மற்றும் கிராப் ரெயிலும் க்ளாஸிக் டிசைன்
டெயில் லைட் மற்றும் கிராப் ரெயிலும் க்ளாஸிக் டிசைன்

பெர்ஃபாமன்ஸ்

ஏற்கெனவே கூறியதுபோல் பழைய FZ-ன் அதே இன்ஜினைத்தான் கொண்டிருக்கிறது புதிய FZ-X. எனவே, பெர்ஃபாமன்ஸில் சிறப்பாக இருக்கும் எனக் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. இரண்டு வால்வுகள், ஐந்து கியர்கள் கொண்ட 149 சிசி ஏர் கூல்டு இன்ஜினையே பெற்றிருக்கிறது FZ-X. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 12.4 hp பவரையும், 1.33 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் செக்மென்ட்டிலேயே குறைவான பவர் கொண்ட பைக் இதுவாகத்தான் இருக்க முடியும். மேலும் பல்ஸர் NS125-யை விட 0.4 hp பவர் மட்டுமே அதிகமாகக் கொண்டிருக்கிறது FZ-X. அதே இன்ஜின், ஆனால் சிறிய பெட்ரோல் டேங்க் என்பதால், பெட்ரோலுக்கான நிறுத்தங்கள் இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்.

150 சிசி பைக்குக்கான ஸ்பீடையும் எக்ஸைட்மென்ட்டையும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. டக்கென்று ஒரு சிறிய ஓவர்டேக் செய்ய வேண்டும் என்றால் கூட ஒரு கியரைக் குறைத்து, ஆக்ஸிலரேட்டரை முழுவதுமாக முறுக்க வேண்டியிருக்கிறது. 80 கிமீக்கு மேல் நிறையவே திணறுகிறது புதிய FZ-X. அதிகபட்ச ஸ்பீடு 100- 110-க்குள்தான் இருக்கிறது. ப்ளஸ் என்று FZ-X-ல் சொல்ல வேண்டும் என்றால், அதன் எக்ஸாஸ்ட் பீட்டைச் சொல்லலாம். க்ளாஸிக் ஸ்டைலில் காதுகளுக்கு இதமாக இருக்கிறது. பெர்ஃபாமன்ஸைப் பற்றிச் சிலாகிப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. சிட்டிக்குள் ஓட்டுவதற்கு டீசன்ட்டான சிட்டி பைக்.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்ட்ர்டு ஆப்ஷன்
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்ட்ர்டு ஆப்ஷன்

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

FZ-X-ல் ரைடு செய்யும்போது சொகுசாகவும் ப்ராக்டிக்கலாகவும் இருக்கிறது. FZ உடன் ஒப்பிடும்போது ரிஸாக்ஸ்டான ரைடிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது FZ-X. உயர்த்தி வைக்கப்பட்ட ஹேண்டில்பார்கள், முன்னே பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ், இடவதியுடன் சீட்கள் என சொகுசான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. சீட்டின் உயரமும் கொஞ்சம் அதிகமாக 810 மிமீ-ல் இருக்கிறது. FZ-ஐ விட நான்கு கிலோ அதிகமாக 139 கிலோவுடன் இருந்தாலும் சாலையில் ஓட்டும்போது ஹேண்டில் செய்வதற்கு எளிதாகவே இருக்கிறது. ப்யூல் டேங்க், ரேடியேட்டர் ஷ்ரௌஃட், முன்பக்க மட்கார்ட், முகப்பு விளக்கு ப்ராக்கெட்டுகள் ஆகியவை மெட்டல் பாகங்களாக இருப்பதே இந்த நான்கு கிலோ எடை கூடியதற்குக் காரணம்.

சிங்கிள் சேனஸ் ஏபிஎஸ்ஸுடன் பின்பக்கம் ஸ்டாண்டர்டாகவே டிஸ்க் பிரேக்கைக் கொடுத்திருக்கிறது யமஹா. முன் பக்க பிரேக்குகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் சிறப்பாக இல்லை. சஸ்பென்ஷன் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் இரண்டுமே பழைய FZ-ல் பயன்படுத்தப்பட்டதை அப்படியே FZ-X-லும் பயன்படுத்தியிருக்கிறது யமஹா. ஸ்க்ராம்ப்ளர் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஆஃப் ரோடிங்கிற்கு இந்த FZ-X செட் ஆகுமா எனக் கேட்டால், ஒரு பெரிய NO-தான் பதிலாக இருக்கும்.

யமஹா  FZ-X 150
யமஹா FZ-X 150

FZ-X வாங்கலாமா?

இந்தப் புதிய FZ-X கண்டிப்பாக விலை குறைவான பைக்காக வெளியாகவில்லை. புளூடூத் வசதி கொண்ட மாடல், ஸ்டாண்டர்டான FZ-யை விட 12,000 ரூபாய் கூடுதலான விலையில்தான் கிடைக்கிறது. மற்ற ப்ரீமியம் 150-160 சிசி செக்மென்ட் பைக்குகளைவிட விலை அதிகமாகவே இருக்கிறது. சொல்லப்போனால் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200-ன் விலையுடன்தான் ஒப்பிட வேண்டும் FZ-X-ன் விலையை! இதன் சென்னை ஆன்ரோடு விலை 1.46 ரூபாய்.

டிசைன்தான் எனக்கு முக்கியம். பெர்ஃபாமன்ஸ், கொஞ்சம் கூடுதல் விலை எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்பவர்கள், சிட்டியைத் தாண்டி வேறெங்கும் பைக்கை எடுத்துச் செல்ல மாட்டோம் என்பவர்கள் இந்த FZ-X-யை முயற்சி செய்யலாம்.