Published:Updated:

லைலேஜ் ப்ளஸ்... ஆனால் விலை!

யமஹா MT-15 V2
பிரீமியம் ஸ்டோரி
யமஹா MT-15 V2

ஃபர்ஸ்ட் லுக்: யமஹா MT-15 V2

லைலேஜ் ப்ளஸ்... ஆனால் விலை!

ஃபர்ஸ்ட் லுக்: யமஹா MT-15 V2

Published:Updated:
யமஹா MT-15 V2
பிரீமியம் ஸ்டோரி
யமஹா MT-15 V2
லைலேஜ் ப்ளஸ்... ஆனால் விலை!

இந்த `Naked Street bike' செக்மென்ட்டில் ஏகப்பட்ட பைக்குகள் இருந்தாலும் MT15-க்கென ஒரு தனி இடம் உள்ளது. அதற்குக் காரணம் இதன் மைலேஜ். இது 150சிசி மோட்டார் பைக்காக இருந்தாலும் இதன் மைலேஜ் 45kmph - 50kmph. ஹைவேயில் 55-50kmph மைலேஜ் கூட கிடைக்கிறது என்கிறார்கள். இதற்காகவே இந்த பைக்கை நிறைய பேர் விரும்பி வாங்குகிறார்கள். இது ஏற்கெனவே மார்க்கெட்டில் இருந்தாலும் யமஹா, இந்த MT 15-ல் நிறைய அப்கிரேட்களைக் கொண்டு வந்து, V2- ஆகக் களமிறக்கியிருக்கிறது. அதாவது, வெர்ஷன் 2.

புதிய மாற்றங்கள்:

முதலாவதாக பார்க்க வேண்டிய அப்கிரேட், இதன் முன்பக்க ஃபோர்க். இந்த ஃபோர்க் நச்சுனு கண்ணைக் கவரும் வண்ணம் கோல்டன் கலரில் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய மாடலில் 'Telescopic Fork' இருந்தது, இந்தப் புதிய MT 15-யில் இருப்பது 'Telescopic Upside Down Front Fork'. இது ஓட்டும்போதும், சட்டெனத் திருப்பும்போதும் பைக்கை ஸ்டேபிளாக வைத்திருக்க உதவுகிறது. இரண்டாவதாக, பின்பக்கம் உள்ள ஸ்விங்ஆர்ம், இதில் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் வீல் பேஸ் குறைந்துள்ளது. இது சிட்டியில் இடது, வலது என வளைத்து ஓட்டுவதற்கு ஏதுவாக உள்ளது. மூன்றாவதாக இதன் கலர். கிரே, கறுப்பு, நீலம் போன்ற கலர்களில் வருகிறது இந்த MT15. இதில் உள்ள புதிய கிரே-புளூ வேரியன்ட், சாம்பல் நிறத்துடன் சிவப்பு, நீலம் எனக் கலந்து பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கிறது. இதன் நீலநிற வீல் பைக்கின் கவர்ச்சியை இன்னும் கூட்டுகிறது. உண்மையில் இந்த புதிய கிரே-புளூ வேரியன்ட், பலரது சாய்ஸாக இருக்கலாம்.

டிசைன்

பழைய மாடல்தான். டிசைனைப் பற்றிப் பெரிதாகச் சொல்லத் தேவையில்லை. ஒரு ஜப்பானிய சாமுராயின் கத்தியைப்போல ஷார்ப்பாக உள்ள இதன் டிசைன் காண்போரின் இதயங்களைச் சட்டெனக் கவர்ந்து விடுகிறது.

அதே 155 சிசி இன்ஜின்... 18.4bhp பவர்... மைலேஜ்தான் பெரிய ப்ளஸ்
அதே 155 சிசி இன்ஜின்... 18.4bhp பவர்... மைலேஜ்தான் பெரிய ப்ளஸ்
மல்ட்டி ஃபங்ஷனல் நெகட்டிவ் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்... Y Connect ஆப் மூலம் பைக்கை கனெக்ட் செய்து கொள்ளலாம்.
மல்ட்டி ஃபங்ஷனல் நெகட்டிவ் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்... Y Connect ஆப் மூலம் பைக்கை கனெக்ட் செய்து கொள்ளலாம்.
உயர்த்தி வைக்கப்பட்ட LED டெயில் லைட் - ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைன்...
உயர்த்தி வைக்கப்பட்ட LED டெயில் லைட் - ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைன்...
நீலநிற அலாய் வீல்களும்... எக்ஸாஸ்ட் டிசைனும் அருமை.
நீலநிற அலாய் வீல்களும்... எக்ஸாஸ்ட் டிசைனும் அருமை.


பெர்ஃபாமன்ஸ்

யமஹா இப்போது எல்லா பைக்குகளிலும் 'Variable valve Actuation' கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் புதிய MT15-யிலும் இந்த வசதி உண்டு. இதில் இரண்டு இன்டேக் வால்வு கேம்ஸ் உள்ளன. இது குறைந்த ஆர்பிஎம்-ல் ஓட்டும்போது கூட தேவையான டார்க் டெலிவரி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வால்வுகளும் மாறி மாறி வேலை செய்து எல்லா கியரிலும் பவர் இருக்கும்படி வைத்திருக்கும். மேலும் இதில் `Assist & Slipper Clutch' உள்ளது. இது கியரை டவுன்ஷிஃப்ட் செய்யும்போது இன்ஜின் ஸ்மூத்தான இருப்பதற்கு உதவுகிறது. ஆனால் டவுன்ஷிஃப்ட் கியர் மட்டுமே பண்ண முடியும். இதனால்தான் இதை `Assist & Slipper Clutch' என்று சொல்கிறார்கள்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்

மல்ட்டி ஃபங்ஷனல் நெகட்டிவ் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இதில் உள்ளது. இதன் மூலம் போன் அழைப்புகள், இ-மெயில், மெசேஜ் நோட்டிஃபிகேஷன், பேட்டரி லெவல் போன்றவற்றை பைக்கின் ஸ்க்ரீனிலேயே பார்த்துக் கொள்ளலாம். மேலும் கடைசி பைக் பார்க்கிங், கடைசி ட்ரிப், இதுவரை சென்ற டாப் ஸ்பீடு போன்றவற்றை ஸ்மார்ட் போனிலேயே பார்க்கும் வசதி உள்ளது.

இதில் LED இண்டிகேட்டர், டேங்க் பேட், சீட் கவர், USB சார்ஜர், மொபைல் ஹோல்டர், ஸ்டிக்கர்ஸ், ரைடிங் ஜாக்கெட்ஸ் என எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் மூலம், பைக்கை விரும்பியபடி கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

இன்ஜின்

இந்தப் புதிய MT15-ல் ஏற்கெனவே இருந்த அதே 155சிசி இன்ஜின்தான் உள்ளது. டாப் ஸ்பீடு 130 கிமீயில் பறக்கலாம் என்கிறது யமஹா. சிட்டி ரைடிங்கில் ரொம்பவே ஸ்மூத்தாக இருக்கிறது. ஆனால் 100-க்கு மேல் போகும்போது அதிர்வுகள் வழக்கம்தான் போல. இதன் அகலமான ஹேண்டில் பார், போக்குவரத்து நெரிசலில் வளைத்து ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம், இதன் குறைவான எடை. இந்த பைக் 139 கிலோ எடைதான். இதனால் இதைக் கைளாளுவது மிக எளிதாக உள்ளது. இதன் சீட் உயரம் 810 மிமீ நீளம் என்பது கொஞ்சம் சிக்கல். கிரவுண்ட் கிளியரன்ஸும் 170மிமீ கொடுத்திருக்கிறார்கள். ஓரளவு ஓகே!

பிரேக்கிங்:

இதற்கு முந்தைய MT15-ல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான் இருந்தது. இந்தப் புதிய வெர்ஷனில் டூயல் சேனல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் புதிய MT15-லும் அதே சிங்கிள் சேனல்தான். இந்த நேக்கட் ஸ்ட்ரீ பைக் செக்மென்ட்டில் எத்தனையோ பைக்குகள் இருந்தாலும், நாம் முதலில் சொன்னபடி மைலேஜிலும், 0-60 கிமீ-யிலும் சொல்லியடிக்கிறது இந்த MT15. ப்ளஸ்களோடே இதன் விலையும் இதற்கு வில்லனாக இருக்கிறது. சுமார் சுமார் 1.97 லட்சம் ஆன்ரோடு விலை என்பது, இந்த 155 சிசி பைக்குக்குக் கொஞ்சம் டூ-மச்தான்!