Published:Updated:

அட்வென்ச்சர்... த்ரில்லர்.. ஹாரர்!

யெஸ்டி அட்வென்ச்சர்
பிரீமியம் ஸ்டோரி
யெஸ்டி அட்வென்ச்சர்

ஃபர்ஸ்ட் லுக்: யெஸ்டி அட்வென்ச்சர்

அட்வென்ச்சர்... த்ரில்லர்.. ஹாரர்!

ஃபர்ஸ்ட் லுக்: யெஸ்டி அட்வென்ச்சர்

Published:Updated:
யெஸ்டி அட்வென்ச்சர்
பிரீமியம் ஸ்டோரி
யெஸ்டி அட்வென்ச்சர்
அட்வென்ச்சர்... த்ரில்லர்.. ஹாரர்!

இந்த யெஸ்டி பைக்குகளில் இதை மட்டும் ஓட்ட வாய்ப்புக் கிடைக்காதது வருத்தம்தான். அதனால் என்ன, இப்போதைக்கு இந்த யெஸ்டி அட்வென்ச்சருக்கு மார்க்கெட்டில் டஃப் கொடுக்கப் போவது ஹிமாலயன் அட்வென்ச்சர்தானே? ஹிமாலயனுடன் லேசாக ஒப்பிட்டுப் பார்த்து, அப்படியே இந்த யெஸ்டி அட்வென்ச்சரின் ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்து விடலாம்.

ஆரம்பத்தில் நமது வாசகர்கள் எடுத்த ஸ்பை ஷாட்டை யெஸ்டி அட்வென்ச்சர் என்றால் நம்பவே முடியவில்லை. தடாலென்று பார்ப்பதற்கு அப்படியே ஹிமாலயனின் ஃபேஸ்லிஃப்ட் மாதிரியே இருந்தது. கொஞ்சம் கூர்மையாகக் கவனித்தால்… வித்தியாசம் தெரிந்தாலும்… ஹிமாலயனின் தாக்கம் நிறையத் தெரிகிறது.

டிசைனைப் பொருத்தவரை வட்ட வடிவ ஹெட்லைட்டுடன், உயரமான விண்ட் ஸ்க்ரீனுடன் அச்சு அசலாக அட்வென்ச்சருக்கு ஏற்ப டிசைன் செய்திருக்கிறார்கள். ஸ்க்ராம்ப்ளருக்கே Beak கொடுத்திருந்தார்கள்;. இதில் இல்லாமல் இருக்குமா? டயர் ஹக்கருக்கு மேலே உள்ள இதன் ADV Beak ஆஃப்ரோடு பைக் என்று அடித்துச் சொல்கிறது. இண்டிகேட்டர்களை ஃபோர்க்கில் ஃபிட் செய்திருக்கிறார்கள்.

பெரிய பெட்ரோல் டேங்க்… இதன் கொள்ளளவு 15.5 லிட்டர். இது ஹிமாலயனைவிட அரை லிட்டர் அதிகம். இதன் ஃப்யூல் கேப் – ரெட்ரோ ஸ்டைலில் இருந்தது. வழக்கம்போல டேங்க்கில் ரப்பர் கிரிப் தொடைக்கு. அதென்ன, டேங்க்கைச் சுற்றி ஒரு மெட்டல் டியூப் பயணிக்கிறதே என்று பார்த்தால்… அது அட்வென்ச்சர் பார்ட்டிகளுக்கானது. ஜெர்ரி கேன்களை மவுன்ட் செய்யக்கூடிய மெட்டல் டியூப் அது. அட்வென்ச்சர் செய்பவர்கள், நீண்ட தூரம் போனால் எக்ஸ்ட்ரா பெட்ரோலை எடுத்துச் செல்லும் வசதிதான் இந்த ஜெர்ரி கேன். இரண்டு பக்கமும் 10 லிட்டர் அளவு ஜெர்ரி கேன் மவுன்ட் செய்து கொள்ளலாம் போல! இது தவிர பெரிய விண்ட் ஸ்க்ரீன், ஹெட்லைட் கிரில், பார் எண்ட் மிரர்கள் என்று ஆக்சஸரீஸ்கள் எக்ஸ்ட்ராவாக வாங்கிக் கொள்ளலாம்.

டெயில் செக்ஷனை அடக்கியே வாசித்திருக்கிறார்கள். பின் பக்கமும் சேடில் பெட்டிகளை வைத்துக் கொள்ளும் வசதி. இது இருந்தால்தானே அட்வென்ச்சர் பைக். ஒரு ஸ்பை ஷாட்டில் யெஸ்டி பிராண்டின் பேனியர்கள் வைத்திருந்தார்கள். ஆனால், இது எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில் வரும். எக்ஸாஸ்ட்டைத் தண்ணீரில் பயணிப்பதற்கு ஏற்ப உயர்த்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், பில்லியன் ரைடருக்கு இது கால் சூடு ஏற்படாமல் இருக்க வேண்டும்.

கட்டுமஸ்தாக இருக்கும் இந்த அட்வென்ச்சருக்கு அழகு சேர்ப்பது இதன் டிஜிட்டல் க்ளஸ்ட்டர்தான். ஏதோ காரின் டச் ஸ்க்ரீன் போல கெத்தாக இருக்கிறது. ஹிமாலயனில் செமி டிஜிட்டல் மீட்டர்தான். வசதிகளைப் பொருத்தவரை யெஸ்டி அட்வென்ச்சரில் அருமை. ஹெட்லைட், டெயில் லைட் எல்லாமே எல்இடி மயம். ஹிமாலயனில் எல்இடி இல்லை. டூயல் சேனல் ஏபிஎஸ் ஹிமாலயனிலும் இருந்தாலும், யெஸ்டியில் ஏபிஎஸ்–க்கு எக்ஸ்ட்ரா மோடுகள் உண்டு. டர்ன்–பை–டர்ன் நேவிகேஷன், புளூடூத் கனெக்டிவிட்டி இரண்டிலுமே இருக்கின்றன. இதில் ஹேண்டில் பாருக்கு வருகிற Knuckle Guard ஸ்டாண்டர்டாகவே தருகிறார்கள்.

அட்வென்ச்சர்... த்ரில்லர்.. ஹாரர்!
அட்வென்ச்சர்... த்ரில்லர்.. ஹாரர்!

அட்வென்ச்சரின் இதயத்துக்கு வரலாம். இங்கே இதயம் என்று சொல்வது, இதன் ஆஃப்ரோடு மற்றும் சஸ்பென்ஷன் தன்மையை. இது ஹிமாலயனுக்கு நெருக்கமாக இருந்தாலும், சில விஷயங்களில் மேலே இருக்கிறது யெஸ்டி. இதில் முன் பக்கம் 320 மிமீ; 240 மிமீ டிஸ்க் இருக்கிறது. பின் பக்கம் டயரும் ஹிமாலயனைவிட லேசாக அகலம் அதிகம். மற்றபடி இந்த இரண்டு பைக்குகளின் சஸ்பென்ஷன் டிராவலும் 200 மிமீ/180 மிமீதான். செம அட்வென்ச்சர் கிடைக்கும். கி.கிளியரன்ஸும் இரண்டிலுமே 220 மிமீதான். வீல்பேஸும் ஒன்றுதான் – 1,465 மிமீ.

கடோத்கஜன்போல் இருக்கும் இந்த அட்வென்ச்சரை சிட்டிக்குள் எளிதாகக் கையாளுவது என்பது ஒரு அட்வென்ச்சராகத் தான் இருக்கும். காரணம், இதன் எடை 188 கிலோ. ஆனால், ஹிமாலயனை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. ஹிமாலயனின் எடை 199 கிலோ. 11 கிலோ குறைவான எடை என்பதால், ஹிமாலயனைவிட எளிதாகவே இருக்கும் யெஸ்டி. யெஸ்டியின் சீட் உயரமும் அதிகம். 815 மிமீ. ஆனால் ஹிமாலயன் சீட் உயரம் 800 மிமீதான்.

இதிலிருப்பது மற்ற யெஸ்டிக்களில் இருக்கும் 334 சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின்தான். ஆனால், அட்வென்ச்சர் இல்லையா… அதற்கு ஏற்ப பவரையும் டார்க்கையும் கணிசமாகவே கூட்டியிருக்கிறார்கள். இதன் பவர் 30.2bhp. இது ஹிமாலயனை ஒப்பிடும்போது செம அதிகம். (24.3bhp) ஆனால் இதன் டார்க் ஹிமாலயனைவிடக் குறைவுதான். (யெஸ்டி – 2.99kgm / ஹிமாலயன் - 3.2kgm). இதில் கியர்பாக்ஸிலும் ஒரு படி மேலே இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். ராயல் என்ஃபீல்டில் 5 ஸ்பீடுதான். அட!

யெஸ்டி அட்வென்ச்சர் Matte, Camo என இரண்டு வேரியன்ட்களில் வருகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலைகள் 2,09,900 மற்றும் 2,18,900 ரூபாய். இதன் ஆன்ரோடு விலை சுமார் 2.60 லட்சம் வரை வரலாம். ஹிமாலயனின் ஆன்ரோடுக்கு நெருக்கமாகவே வருகிறது. (2,55,500 ரூபாய்).

யெஸ்டி அட்வென்ச்சர், நிச்சயம் ஹிமாயலனுக்கு எல்லாவற்றிலும் பெரிய டஃப் கொடுக்கக் காத்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்ஜின்: 334சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின்

பவர் : 30.2bhp

டார்க் : 2.99kgm

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு

கெர்ப் எடை : 188 கிலோ

சீட் உயரம் : 815 மிமீ

வீல்பேஸ் : 1,465 மிமீ

சஸ்பென்ஷன் டிராவல்: 200/180 மிமீ

சஸ்பென்ஷன்: டெலிஸ்கோப்பிக்/மோனோஷாக்

பிரேக்ஸ் : 320/240மிமீ டிஸ்க்

ஏபிஸ் : டூயல் சேனல்

கி.கிளியரன்ஸ் : 220 மிமீ

டயர்கள் : 21/17 இன்ச்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism