Published:Updated:

"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"

1975 மாடல் யெஸ்டி பைக் உரிமையாளர் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
1975 மாடல் யெஸ்டி பைக் உரிமையாளர் ரவீந்திரன்

வின்டேஜ் பைக்: யெஸ்டி 1975 மாடல்

"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"

வின்டேஜ் பைக்: யெஸ்டி 1975 மாடல்

Published:Updated:
1975 மாடல் யெஸ்டி பைக் உரிமையாளர் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
1975 மாடல் யெஸ்டி பைக் உரிமையாளர் ரவீந்திரன்

‘ஓல்டு இஸ் கோல்டு’னு சும்மாவா சொன்னாங்க! புது பைக் வாங்கியவர்களைவிட, பழைய வின்டேஜ் வாகனங்கள் வைத்திருப்பவர்களின் அட்ராசிட்டிதான் தாங்காது. ஆனால், அது அட்ராசிட்டி இல்லை… அது ஒரு வகையான காதல்! அப்படிப்பட்ட ஒரு வின்டேஜ் காதலர்தான் கோவையைச் சேர்ந்த ரவீந்திரன்.

‘‘புது யெஸ்டி வந்திருக்குல்ல.. மோட்டார் விகடன் வீடியோ பார்த்தேன். ஆனா நம்ம யெஸ்டி பைக் மாதிரி வராதுங்க!’’ என்று செல்லமாக தனது யெஸ்டி மாடல் பைக்கைத் தடவிக் கொடுத்தார் ரவீந்திரன். அது ஒரு 1975–ல் தயாரிக்கப்பட்ட ‘ஐடியல் ஜாவா’ நிறுவனத்தின் 250சிசி மாடல். அதன் பெயர், B டைப் ஜாவா யெஸ்டி.

ரவீந்திரனைப் பற்றியும், அடுத்தடுத்த பக்கங்களில் புது யெஸ்டியின் ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட்களைப் படிப்பதற்கு முன்பும் ஜாவா பற்றி ஒரு சின்னப் பாரா.

1929–ம் ஆண்டில் செக் குடியரசில் பிறந்த ஜாவா நிறுவனம், கடந்த 1960–ம் ஆண்டு இந்தியாவில் டயர் பதித்தது. 1973–ம் ஆண்டு ‘யெஸ்டி’ என்ற பெயரில் பைக்குகளைத் தயாரிக்கத் தொடங்கியது, மைசூரைச் சேர்ந்த ‘ஐடியல் ஜாவா’ என்னும் நிறுவனம். இந்த மாடல்களில் சிலவற்றை அந்தக் காலத்தில் ரேஸுக்கெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்களாம். அந்த மாடலைத்தான் பாசம் பாசமாகப் பார்த்து ஓட்டி வருகிறார் ரவீந்திரன். அவரிடம் பேசினால், யெஸ்டி மீது நமக்கே காதல் வந்துவிடும்போல!

‘‘இந்த பைக்கை கடந்த ஆண்டு 2021 ஜூன் மாதம் 80,000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். எங்கூரில் ஒரு பழமொழி சொல்வாங்க… ‘வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்’னு. அதாவது, வீடு கட்டுவதும், கல்யாணம் பண்ணுவதும் அடுத்த படி. ஆனால், அதில் மிகவும் கவனமாகவும், ஆர்வமாகவும் இருக்க வேண்டும். அதேபோல், ‘ஒரு வின்டேஜ் பைக்கை வாங்கிப் பார்; பராமரிச்சுப் பார்’னு நான் ஒரு புதுமொழியே சொல்வேன். அப்படிப்பட்ட அனுபவத்தைத்தான் நான் ஆசையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு சரியான வின்டேஜ் பைக்கைத் தேர்ந்தெடுப்பதில் பல டாஸ்க்குகள் உள்ளன.

டாஸ்க் நம்பர் 1 – பைக் கிடைப்பது ரொம்ப கஷ்டம். பைக் கிடைத்தாலும் அந்த பைக்கின் உபகரணங்கள் அந்த பைக்கினுடையது தானா என்று சோதிப்பது பெரிய டாஸ்க். ஏனென்றால், 750சிசி பைக்குகளுக்குக்கூட சில தந்திர வியாபாரிகள் மொபட்டின் இன்ஜினைப் பொருத்திக்கூட பிசினஸ் செய்வதை நான் பார்த்துக் கண்டித்திருக்கிறேன்.

டாஸ்க் நம்பர் 2 – அந்த பைக் நமக்கு வாழ்க்கை முழுக்க செட் ஆகுமா என்று பார்க்க வேண்டும். நான் இந்த பைக்கை ஃபேஸ்புக் மூலமாகத் தேடிக் கண்டுபிடித்து வாங்கினேன். விற்பவரை நேரில் சந்தித்து, பைக்கைச் சரி பார்க்க மெக்கானிக் ஒருவரைக் கூட்டிச் சென்றேன். அவர் பைக்கின் அனைத்துப் பாகங்களையும் சோதித்துப் பார்த்தவுடன்தான் கைகுலுக்கி இருநாட்டு அதிபர்கள்போல் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அப்புறமென்ன, ஆர்சி புக் என் பெயருக்கு மாறியது.

நான் ஒரு வின்டேஜ் காதலன் என்று தெரிந்துகொண்டு, இதற்கு முன்னால் பல பைக் வியாபாரிகள் என்னிடம் ‘அண்டப் புளுகு; ஆகாசப் புளுகு’ சொல்லி ஏமாற்ற முயற்சித்தார்கள். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். ஆகவே, கண்டிப்பாக வின்டேஜ் பைக் வாங்கும்போது நம்பகமான மெக்கானிக்கைக் கண்டிப்பாக கூட்டிச் செல்லுங்கள்.

"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"

டாஸ்க் நம்பர் 3 – ஒரு நல்ல மெக்கானிக். உங்களுக்கு ஒரு நம்பகமான மெக்கானிக் இருந்தால் மட்டுமே வின்டேஜ் பைக்குகளை வாங்குவது நலம். காரணம், வின்டேஜ் பைக்குகளுக்கு ஏது சார் சர்வீஸ் சென்டர்? நான் வாங்கிய ஜாவா யெஸ்டி B மாடல் பைக்குக்கு சர்வீஸ் செய்ய ஷோரூமை விடுங்கள்; மெக்கானிக்குகளே கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு அந்தச் சிக்கல் இல்லை. என் மெக்கானிக் என்னைப்போலவே என் யெஸ்டியையும் காதலித்து சர்வீஸ் செய்து தருவார்.

டாஸ்க் நம்பர் 4 – உதிரிபாகங்கள்! நம்பகமான மெக்கானிக் கிடைத்தாலும், உதிரி பாகங்கள் கிடைக்க அலைய வேண்டுமே! நீங்கள் அதற்கு ரெடியாக இருக்க வேண்டும். அல்லது, ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கத் தெரிந்த… அல்லது இப்போது இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் வைத்து சர்வீஸ் செய்யக்கூடிய ஓவர் பிரில்லியன்ட் மெக்கானிக் வேண்டும்.

டாஸ்க் நம்பர் 5 – வின்டேஜ் பைக்குகள் நமக்கு முன்னோர்கள் மாதிரி. பல லட்சம் கிமீகூட ஓடி இருக்கலாம். ஆனால் நம் தந்திர வியாபாரிகள் ஓடோ மீட்டரில் சூடு வைத்துக்கூட நம் தலையில் கட்ட வாய்ப்பிருக்கிறது. அதனால் அதிலேயும் உஷாராக இருங்கள். எனது பைக், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக 30 ஆயிரம் கிமீ–தான் ஓடி இருந்தது. இந்த அனைத்துச் சிக்கல்களையும் சமாளித்து, ஒரு நல்ல தனிநபரிடமிருந்து எனது 1975 ஜாவா யெஸ்டியை வாங்கினேன்!

என்னடா இவன் டாஸ்க்காகவே சொல்கிறானே என்று நினைக்காதீர்கள்! இதில் உள்ள அற்புதங்களையும் சொல்கிறேன். இந்த ஒரு வருட காலத்தில் ஒரு ஆயிரம் கிமீ ஓட்டியிருப்பேன். நார்மல் ரோடுகளில் இது 22 முதல் 25 கிமீ மைலேஜ் தருகிறது. ஒரு தடவை ஹைவேஸில் விரட்டிப் பார்த்தேன். 30 கிமீ தந்தது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 10 லிட்டர்.

"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"
"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"
"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"
"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"
"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"
"ஃபேஸ்புக்கில் பார்த்தேன்…வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!"

பெட்ரோல் இன்ஜினாக இருந்தாலும், எனது நண்பர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த வண்டிக்கு டீசல் ஊற்றினாலே ஓடும் என்றார்கள். இது காமெடியா… உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் டீசல் ஊற்றும் தைரியம் எனக்கு இல்லைங்க!

இந்த பைக்கின் இன்னொரு ஸ்பெஷல் விஷயம் – நீங்கள் நான்காவது கியரில் ஓட்டினாலும் நியூட்ரலுக்கு வரலாம். ஆமாம், இந்த பைக்கில் 3rd கியர் மற்றும் 4th கியருக்கு நடுவே நியூட்ரலுக்குக் கொண்டுவரும் வசதி இருக்கிறது. என்னதான் கியர் மாற்றும்போது கிளட்ச் பிடிப்பவர்தான் குட் டிரைவர் என்றாலும், இந்த பைக்கில் கிளட்ச் பிடிக்காமலேயே சுலபமாக கியர் மாற்ற முடிகிறது.

இந்த யெஸ்டிக்கு இன்ஷூரன்ஸ் மற்றும் FC ஆகியவை சுலபமாகக் கிடைத்துவிட்டது. சர்வீஸின்போதும், பட்ஜெட்டிலும் கையைக் கடிக்கவில்லை என் ஜாவா. பெரும்பாலும் இந்த பைக்கிற்கு சர்வீஸ் தேவையில்லை என்றே சொல்கிறார்கள். இருந்தாலும் இன்ஜின் ஆயில் மற்றும் பிரேக் ஷூ சரிபார்ப்பதுடன் சேர்த்து ஒரு 1,500 - 2,000 ரூபாய் ஆகும்!

இப்போதெல்லாம் பக்கத்துக்குப் பயணங்களுக்கு என் யெஸ்டிதான் நண்பன். ஆத்திரமோ அவசரமோ ரிலாக்ஸ்டு ரைடோ – எனது யெஸ்டியின் கிக்கரை உதைத்தால்… இந்த 2 ஸ்ட்ரோக் இன்ஜினிலிருந்து வருமே ஓர் உற்சாக ‘டப்டுப்டப்டுப்’ எக்ஸாஸ்ட் பீட்…. இதைவிட இனிமையான சத்தம் ஏதும் இல்லை!”

- அவரிடம் பேசி முடித்தபோது, எனக்கும் யெஸ்டி மீது காதல் வந்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism