ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ப்ரீமியமாக மாறப் போகுது பிரெஸ்ஸா!

பிரெஸ்ஸா டீஸர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரெஸ்ஸா டீஸர்

பிரெஸ்ஸாவின் டீஸரே செம ஸ்டைலாகக் கலக்குகிறது. முதலில் கவர்வது டூயல்பாட் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் செட் அப்தான். இதைத்தான் டீஸரில் பார்க்கும்போதே ஸ்டைலாக இருக்கிறது.

மாருதி கார்கள் எல்லாவற்றையும் நெக்ஸாவில் விற்கலாம் போல! வசதிகளில் மயக்க ஆரம்பித்து விட்டன. அந்தளவு ப்ரீமியம் லுக்கில் கலக்கத் தொடங்கிவிட்டன மாருதி கார்கள். புது ஃபேஸ்லிஃப்ட் பிரெஸ்ஸாவில் என்னென்னலாம் இருக்குனு பாருங்க!

பிரெஸ்ஸாவின் டீஸரே செம ஸ்டைலாகக் கலக்குகிறது. முதலில் கவர்வது டூயல்பாட் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் செட் அப்தான். இதைத்தான் டீஸரில் பார்க்கும்போதே ஸ்டைலாக இருக்கிறது. எல்இடி டிஆர்எல்களும், கீழே பனிவிளக்குகளும் கலக்கல். புதிதாக சிங்கிள் ஸ்லாட் கிரில் கொஞ்சம் தடிமனாக இருக்கிறது. பம்பருக்கு டூயல் டோன் கொடுத்திருக்கிறார்கள். கறுப்பு நிற பாடி கிளாடிங்குடன், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஸ்போர்ட்டினெஸ்.

பின் பக்கம் ரேப் அரவுண்ட் எல்இடி ஹெட்லைட்ஸ், ரியர் வாஷ் அண்ட் வைப்பர், இங்கேயும் டூயல் டோன் ரியர் பம்பர், பூட் லிட்டில் பிரெஸ்ஸா எனும் லோகோ. இவைதான் பிரெஸ்ஸா 2022–ல் நடந்திருக்கும் அவுட்லுக் மாற்றங்கள்.

உள்பக்கமும் ப்ரீமியம் ரகம்தான். உள்ளே 9 இன்ச் டச் ஸ்க்ரீன், ஸ்மார்ட்ப்ளே Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கனெக்டட் வசதிகள் இருக்கின்றன. ஆம், Next Gen Suzuki Connect Telematics solution தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது பிரெஸ்ஸா. இதில் அட்வான்ஸ்டு வெஹிக்கிள் சேஃப்டி, ட்ராக்கிங், செக்யூரிட்டி, ஓட்டுநரின் ஒழுக்கம், ரிமோட் ஆப்பரேஷன்கள், ஸ்டேட்டஸ் அலெர்ட்கள், ட்ரிப் அனலைசிஸ் என்று சுமார் 40 வகையான கனெக்டட் வசதிகள் இருக்கின்றன. ஸ்மார்ட் வாட்ச் இல்லாமலா! அதுவும் உண்டு. மொபைலிலும் ஆப் மூலம் இன்ஸ்டால் செய்து கொண்டு பிரெஸ்ஸாவை இயக்கலாம். மேலும், அமேஸான் அலெக்ஸா போன்ற கூகுள் டிவைஸ் வசதிகளும் உண்டு.

இன்னும் வசதிகள் நிற்கவில்லை; 6 காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ரோல் ஓவர் மிட்டிகேஷன், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, டெலிஸ்கோப்பிக் அட்ஜஸ்ட்மென்ட்டுடன் கொண்ட ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், ARKAMYS சரவுண்ட் சிஸ்டம், கூல்டு க்ளோவ் பாக்ஸ், குட்டி எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், டைப் ஏ மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட்டுகள், ‘Hi Suzuki’ வாய்ஸ் அசிஸ்டன்ட் என்று கலக்க இருக்கிறது பிரெஸ்ஸா.

இதில் எர்டிகா மற்றும் XL6-ல் இருக்கும் 1.5 லிட்டர் K15C டூயல் ஜெட் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உண்டு. ஏற்கெனவே இருந்த 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்குக்குப் பதிலாக 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸுடன் வருகிறது. வழக்கம்போல் மேனுவல் பார்ட்டிகளுக்கு 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் உண்டு.