ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

"நம் இடத்துக்கே வந்து, நம் கண் எதிரிலேயே... கார் சர்வீஸ்! - ’மை டிவிஎஸ்’ நிறுவனத்தின் சர்வீஸ்!

My TVS @ home
பிரீமியம் ஸ்டோரி
News
My TVS @ home

My TVS @ home என்ற பெயரில், நமது இடத்துக்கே வந்து நம் காரை நம் கண்ணுக்கு முன்னாடியே சர்வீஸ் செய்து தருகிறார்கள். அதற்காக நம் அலுவலக நண்பர் ஒருவரின் ரெனோ டஸ்ட்டரை சர்வீஸ் செய்து பார்த்தோம்.

கார் வாங்கிய கொஞ்ச நாளைக்கு சர்வீஸைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டீர்கள். அதாவது, வாரன்ட்டி முடியும் வரைக்கும் ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டரைத் தாண்டி உங்கள் காரும் மனமும் எங்கேயும் அலைபாயாது. பிடித்தோ பிடிக்காமலோ – அந்தந்த கம்பெனி சர்வீஸ் சென்டர்தான் உங்கள் கதியாக இருக்கும்.

ஆனால், வாரன்ட்டி முடிந்த பிறகுதான் ஒரு விஷயம் மண்டையைக் குழப்பியடிக்கும். ‘‘சர்வீஸ் சென்டருக்கே போலாமா… வீட்டுக்குப் பக்கத்தில் நமக்குத் தெரிஞ்ச மெக்கானிக்குகிட்டயே விட்டுடலாமா?’’ – இப்படி ஒரு டைலமா கார் உரிமையாளர்கள் எல்லோருக்கும் வந்து போயிருக்கும். அப்போதைய அவர்களது பெரிய கவலை – தனியார் மெக்கானிக் ஷெட்டுக்கோ… சர்வீஸ் சென்டருக்கோ… காரை வந்து அவர்களாகவே எடுத்துட்டுப் போய், டெலிவரி கொடுத்தால் தேவலை என்பதாகத்தான் இருக்கும்.

"நம் இடத்துக்கே வந்து, நம் கண் எதிரிலேயே... கார் சர்வீஸ்! - ’மை டிவிஎஸ்’ நிறுவனத்தின் சர்வீஸ்!

அப்படி ஒரு ஆப்ஷனையும் தாண்டி, உங்கள் இடத்துக்கே வந்து, உங்கள் கண் பார்வை படும்படி உங்கள் காரை சர்வீஸ் செய்தால்… உங்களுக்கு மகிழ்ச்சி ப்ளஸ் நிம்மதி கிடைக்கும்தானே! அப்படி ஒரு விஷயத்தைத்தான் செய்து வருகிறது மை டிவிஸ் நிறுவனம். My TVS @ home என்ற பெயரில், நமது இடத்துக்கே வந்து நம் காரை நம் கண்ணுக்கு முன்னாடியே சர்வீஸ் செய்து தருகிறார்கள். அதற்காக ‘நம் அலுவலக நண்பர் ஒருவரின் ரெனோ டஸ்ட்டரை சர்வீஸ் செய்யலாமே… எப்படி இருக்குனு பார்க்கலாம்’ என்று முடிவெடுத்து போன் செய்தோம். இரண்டு மணி நேரத்துக்குள் நம் அலுவலகத்துக்கு ஒரு ஆம்னி வேனும் சில டெக்னீஷியன்களும் வந்து விட்டார்கள்.

‘‘பொதுவா நான் டஸ்ட்டரை சர்வீஸ் விட்டா 8,000 – 9,000 ரூபாய் வரும். இங்கே எவ்வளவு வாங்குறாங்கனு பார்க்கலாம்!’’ என்றார் நமது அலுவலக டஸ்ட்டர் உரிமையாளர்.

"நம் இடத்துக்கே வந்து, நம் கண் எதிரிலேயே... கார் சர்வீஸ்! - ’மை டிவிஎஸ்’ நிறுவனத்தின் சர்வீஸ்!

சர்வீஸுக்கு விடுபவர்களின் முதல் கவலை – சர்வீஸ் தொகை. பிறகு, நமக்குத் தெரியாமல் சர்வீஸ் நடப்பதால், காரில் எதுவும் ஸ்பேர்ஸ் மாத்திடுவாங்களோ என்பது அடுத்த கவலை. இங்கே அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பது ப்ளஸ்.

வந்ததும் காரில் என்ன பிரச்னை என்று உரிமையாளரிடம் கேட்டுக் குறித்துக் கொண்டார்கள். சர்வீஸ் தொடங்கியது. நம் கண் பார்வைக்கு முன்னே! காரை ஓட்டிப் பார்த்ததுமே, ‘‘க்ளட்ச் போயிடுச்சே… மாத்தணும்!’’ என்று சொல்லிவிட்டார் மை டிவிஎஸ் டெக்னீஷியன் தாவித் ராஜா. ‘`அட, நிஜம்தான்; போன சர்வீஸ்லயே சொன்னாங்க; அடுத்த சர்வீஸ்ல மாத்திக்கலாம்னு விட்டுட்டேன்! இப்போவும் பட்ஜெட் ப்ராப்ளம்!’’ என்றார் டஸ்ட்டர் நண்பர்.

‘‘இன்னும் 800 – 1,000 கிமீ–க்குள்ள மாத்தினா நல்லது சார். இல்லேனா கார் எப்போ நிக்கும்னு சொல்ல முடியாது!’’ என்றார் டெக்னீஷியன். நிஜம்தான்; கார்களைப் பொருத்தவரை எந்த நேரத்தில் எது நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென பிரேக் டவுன் ஆகலாம்; 40,000 ஓட வேண்டிய டயர்கள் 20,000–த்தில் தேயலாம்; கியர்பாக்ஸ் திடீரெனப் பழுதாகலாம். இதில் நம் ஓட்டுதல் முறையும் அடங்கியிருக்கிறது. அதையெல்லாம் அறிவுரை சொன்னார் ஜாவித்.

"நம் இடத்துக்கே வந்து, நம் கண் எதிரிலேயே... கார் சர்வீஸ்! - ’மை டிவிஎஸ்’ நிறுவனத்தின் சர்வீஸ்!

மை டிவிஎஸ்–ல் ‘மேன் ஆஃப் தி இயர்’ விருது வாங்கியவர் தாவித் என்கிற தகவலைச் சொன்னார்கள். நிஜம்தான்; காரை ஓட்டிப் பார்த்தே என்ன பிரச்னை என்று சொல்லிவிட்டார்கள். டெக்னீஷியன்களை மை டிவிஎஸ் நிறுவனத்தில் நன்றாகவே சோதனை வைத்துத்தான் வேலைக்குத் தேர்ந்தெடுப்பார்களாம். வாடிக்கையாளர்களுக்கு நம்பகம் வேண்டுமே! அதனால், அப்ரஸன்ட்டிகள் மை டிவிஎஸ்–ல் நோ!

‘டஸ்ட்டரில் எத்தனை லிட்டர் ஆயில் சம்ப் உண்டு; டயர் எத்தனை நாள் ஓடும்; டிஸ்க்கில் தேய்மானம் இருக்கு’ என்று அவர் வாய் வார்த்தையில் சொன்னதெல்லாம் OBD டெஸ்ட்டிலும் நிரூபணம் ஆனது.

டஸ்ட்டர், 4.8 லிட்டர் ஆயில் சம்ப் கொண்ட ஒரு எஸ்யூவி. இதுவே ஹேட்ச்பேக்குகளுக்கு 3.1 லிட்டரில் இருந்து 3.9 வரையும், செடான்களுக்கு 3.5 லிட்டரில் இருந்து 4.5 வரையும் இருக்கலாம். இதனால்தான் சர்வீஸ் சென்டர்களில் காருக்கு கார் சர்வீஸ் தொகை வித்தியாசமாகிறது. டஸ்ட்டருக்கு 3,900 + வரி என்றார்கள்.

ஒரு காரை சர்வீஸ் விடும்போது, பொதுவாக சென்டர்களில் 24 வகையான ஜெனரல் செக்–அப் செய்வார்கள். இதில் இன்ஜின் ஆயில் முதற்கொண்டு, ஏர்ஃபில்டர், பிரேக் ஃப்ளூயிட் டாப் அப், எக்ஸ்டீயரியர் ஃபோம் / டிரை வாஷ், வைப்பர் ஃப்ளூயிட், இன்டீரியர் வேக்யூம் க்ளீனிங், கூலன்ட் டாப்–அப் என்று எல்லாமும் போக உங்கள் வாகனத்துக்கான ஹெல்த் ரிப்போர்ட்டும் தருவார்கள். இது எல்லாமே மை டிவிஎஸ்ஸில் பக்காவாக நடக்கிறது.

இதில் பிரேக்குகளை வீலிலிருந்து தனியாகக் கழற்றிச் சுத்தம் செய்ய மட்டும் தனித் தொகை. ‘‘பல சென்டர்களில் இதற்கு 3,000 ரூபாய் முதல் சொல்கிறார்கள். இதுவே மை டிவிஎஸ்–ல் நான்கு வீல்களுக்கும் சேர்த்து 1,600 ரூபாய்தான் சார்’’ என்று புரொமோட் செய்தார் தாவித் ராஜா.

தாவித் வந்த ஆம்னி வேனில் ஒரு சர்வீஸ் சென்டரே இருந்தது. பஞ்சர் ஜாக்கி முதல் இன்ஜின் ஆயில், வைப்பர் ஃப்ளூயிட், உபகரணங்கள், OBD வரை எல்லாமே வைத்திருந்தார்கள். பரபரவென வேலை நடந்தது. அந்த இடத்தை மினி சர்வீஸ் சென்டராகவே மாற்றிவிட்டார். ‘‘இங்க பாருங்க… ஆயிலோட விஸ்காசிட்டி… இதுதான் சிலிண்டருக்கான இன்ஜெக்டர்… இதில்தான் கவனமா இருக்கணும்’’ என்று நம் கண் முன்னாலேயே எல்லாவற்றையும் பக்காவாகச் சரி செய்தார்கள் மை டிவிஎஸ் டெக்னீஷியன்கள்.

வெறும் மூன்றே மணி நேரத்துக்குள் எல்லாம் பக்காவாக முடிந்து போனது. நம் காரில் என்னென்ன பிரச்னைகள் இருந்தன; பாகங்களைப் பற்றிய ரிப்போர்ட் என நம் காரின் ஹெல்த் ரிப்போர்ட்டுக்கான லிங்க்கையே அனுப்பி விட்டார்கள். அந்த லிங்க்கில் நம் கார் எண்ணைப் பதிவிட்டால், என்னென்ன சரி செய்யப்பட்டிருக்கின்றன; சர்வீஸ் டெக்னீஷியன் யார் என்பதற்கான மொத்த விவரங்களும் தெரிந்தன. ‘‘இன்னொரு ஆடி கார் சர்வீஸ் ஒண்ணு இருக்கு. அங்க வேற போகணும்!’’ என்றார் தாவித். அதாவது, சாதாரண ஆம்னி முதல் ஆடி வரை எல்லா கார்களுக்கான சர்வீஸ் வித்தைகளையும் முறையான டெக்னீஷியன்கள் வைத்தே பயிற்சி தருகிறார்கள் மை டிவிஎஸ்–ல் என்பது நமக்கு ஒரு நம்பிக்கையான விஷயம்.

வழக்கம்போல் பில் தொகை 7,400 ரூபாய் வந்தது. ‘‘இது வழக்கமாக சர்வீஸ் சென்டர்களை விட ஓரளவு குறைவாகத்தான் இருக்கிறது. ஆனா நான் என் கண்ணுக்கு முன்னாடியே என் காரோட ஹெல்த்தைப் பார்த்தது ஹேப்பி!’’ என்றார் டஸ்ட்டர் நண்பர்.

"நம் இடத்துக்கே வந்து, நம் கண் எதிரிலேயே... கார் சர்வீஸ்! - ’மை டிவிஎஸ்’ நிறுவனத்தின் சர்வீஸ்!


ஒரு வாரம் கழித்து, அந்த டஸ்ட்டர் நண்பருக்குப் போன் செய்து, ‘‘வண்டி எப்படி இருக்கு… ஒழுங்கா சர்வீஸ் பண்ணியிருக்காங்களா?’’ என்று விசாரித்தபோது, கொஞ்சம் பதற்றமாகப் பேசினார்.

‘‘சூப்பரா பண்ணியிருக்காங்க சார். பக்காவா இருக்கு. நான் சொல்ல மறந்த புகார்களையும் சரி செஞ்சிட்டாங்க! ஆனா பாண்டிச்சேரி போயிட்டு வர்ற வழியில, வண்டி பிரேக் டவுன். அவங்க சொன்ன மாதிரியே இப்போ க்ளட்ச் போயிடுச்சு! My TVS சர்வீஸ் சென்டருக்கே கால் பண்ணலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்!’’ என்றார்.