கி்ட்டத்தட்ட 50 கார்கள், இந்த ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கின்றன. ஹேட்ச்பேக், செடான், மினி எஸ்யுவி, எஸ்யுவி, எம்யுவி என விதவிதமான வடிவங்களில், வெவ்வேறு விலை வித்தியாசத்தில் இந்த கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதில் ஃபேஸ்லிஃப்ட், அப்டேட்டட் மாடல்கள் நீங்கலாக, முற்றிலும் புதிதாக வெளிவரவிருக்கும் 20 கார்கள்தான் இங்கே பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டு புதிதாக கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அல்லது அடுத்த காருக்கு அப்டேட் ஆக இருப்பவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு முடிவெடுக்கலாம்!

இந்தியாவின் மாஸ் மார்க்கெட் செக்மென்ட்டுக்குள் நுழைகிறது ரெனோ. மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்குப் போட்டியாக, மினி க்ராஸ்ஓவர் காரை களம் இறக்குகிறது ரெனோ. XBA என்கிற குறியீட்டில் அழைக்கப்படும் இந்தப் புதிய கார், தற்போது ரெனோ-நிஸான் தொழிற்சாலையில் டெஸ்ட் செய்யப்பட்டுவருகிறது. 800சிசி திறன்கொண்ட இந்த சின்ன கார், மார்ச் மாதவாக்கில் விற்பனைக்கு வருவதாக இருந்தது. இப்போது ஜூன் அல்லது ஜூலை மாதம் விற்பனைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்கலாம்!

டட்ஸனின் மூன்றாவது காராக, இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது ரெடி கோ. 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ரெனோவின் சின்ன காரில் அறிமுகமாக இருக்கும் அதே 800சிசி இன்ஜின்தான், டட்ஸன் ரெடி கோ காரிலும் இருக்கும். ரெனோவின் சின்ன கார் விற்பனைக்கு வந்ததும் செப்டம்பர் - அக்டோபர் மாதவாக்கில் ரெடி கோ விற்பனைக்கு வரும். ரெடி கோ, டட்ஸன் கோ ப்ளஸ் காரைவிடவும் விலை குறைவாக இருக்கும். 2.5 லட்சம் ரூபாய்க்குள் மார்க்கெட்டுக்கு வரலாம்!

இண்டிகா விஸ்டாவுக்குப் பதிலாக, டாடா போல்ட் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், இண்டிகா புத்தம் புதிய காராக ‘கைட்’ என்ற பெயருடன் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினோடு, 1 லிட்டர் டீசல் இன்ஜினையும் இதில் அறிமுகப்படுத்த இருக்கிறது டாடா. டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 64bhp சக்தியை வெளிப்படுத்தும். தற்போதையை இண்டிகாவுக்கும், கைட் காருக்கும் ஸ்டைலில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும் என்கிறது டாடா. அதேபோல், காருக்கு உள்ளேயே ஹூண்டாய், மாருதி கார்களில் இல்லாத பல புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்படும் என டீலர்களுக்கு உறுதியளித்திருக்கிறார்கள்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செலெரியோ, மார்க்கெட்டில் ஹிட் அடித்திருக்கும் உற்சாகத்தில், இதில் டீசல் இன்ஜினையும் சேர்க்கிறது மாருதி. முக்கியமான விஷயம் என்னவென்றால் ஸ்விஃப்ட், டிசையர், சியாஸ் கார்களில் இருக்கும் ஃபியட்டின் டீசல் இன்ஜின் இந்த செலெரியோவில் இருக்கிறது. மாருதி புதிதாக உருவாக்கி வரும் 2 சிலிண்டர், 800சிசி டீசல் இன்ஜின்தான் செலெரியோவின் இதயமாக இருக்கும். செவர்லே பீட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல் கார்களுக்குப் போட்டியாக, செலெரியோ டீசல் காரை 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்!

2010 -ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஃபோர்டு ஃபிகோ, இந்த ஆண்டுடன் மார்க்கெட்டில் இருந்து விடைபெறுகிறது. முற்றிலும் புதிய டிஸைன், புதிய சிறப்பம்சங்கள் கொண்ட ஃபிகோவை அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. புதிய கிரில், புதிய ஹெட்லைட்ஸ், புதிய பானெட் என தற்போதைய ஃபிகோவுக்கும் புதிய ஃபிகோவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. காரின் உள்ளே புதிய ஃபியஸ்டாவின் டேஷ்போர்டு அப்படியே இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. எக்கோஸ்போர்ட்டில் உள்ள வாய்ஸ் சிங்க் வசதி ஃபிகோவில் அறிமுகப்படுத்தப்படும். இன்ஜினைப் பொறுத்தவரை தற்போதைய ஃபிகோவுக்கும், புதிய ஃபிகோவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது புதிய ஃபிகோ.

ஆல்ட்டோ துவங்கி ஸ்விஃப்ட் வரை தற்போது எட்டு ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்துவரும் மாருதி, புதிதாக மேலும் ஒரு ஹேட்ச்பேக் காரைக் கொண்டுவருகிறது. இது ஸ்விஃப்ட்டைவிட விலை உயர்ந்த, அதாவது ஹூண்டாய் எலீட் ஐ20 காருடன் போட்டி போடும் பிரீமியம் ஹேட்ச்பேக் காராக இருக்கும். மாருதி சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டுவந்த சியாஸின் ஹேட்ச்பேக் வடிவம்தான் இந்தப் புதிய கார். 1 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இதில் பொருத்தப்பட இருக்கிறது. இது, அதிகபட்சமாக 90bhp சக்தியை வெளிப்படுத்தும் என்பதுதான் ஹைலைட். இதுதவிர, 1.3 லிட்டர் 90bhp ஃபியட் டீசல் இன்ஜினும் இதில் இருக்கும்.

மார்ச் மாதம் முதல், ஹூண்டாய் தனது எலீட் ஐ20 காரின் விற்பனையைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். காரணம், எலீட் ஐ20 காரைவிட அதிக இடவசதி, தரமான பெட்ரோல் இன்ஜின் மற்றும் அதிக மைலேஜ் தரக்கூடிய டீசல் இன்ஜின், சிறந்த கட்டுமானத் தரம் என அதிக பலத்தோடு விற்பனைக்கு வருகிறது ஹோண்டாவின் புதிய ஜாஸ். அமேஸைவிட 50,000 முதல் 30,000 ரூபாய் வரை விலை குறைவாக இருக்கும்.

ஹூண்டாய் எலீட் i20 காரை அடிப்படையாகக் கொண்டு, மினி க்ராஸ்ஓவர் காரை இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஹூண்டாய். கிராஸ்ஓவர் என்று அடையாளப்படுத்தும் வகையில், முன்பக்கம் பிளாஸ்டிக் பாகங்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு, கிரில் மற்றும் பானெட் டிஸைனும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. எலீட் i20 காரைவிட அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் மற்றும் புதிய டிஸைன் அலாய் வீல்களும் இதில் பொருத்தப்பட்டிருக்கும். இன்ஜின் மற்றும் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை எலீட் i20 காருக்கும், இந்த க்ராஸ்ஓவர் காருக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

பிப்ரவரி மாத மத்தியில், புதிய ஃபிகோ ப்ளஸ் காரின் தயாரிப்பு சென்னை தொழிற்சாலையில் துவங்குகிறது. மார்ச் முதல் விற்பனைக்கு வரவிருக்கும் ஃபிகோ ப்ளஸ் - மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட் கார்களுடன் போட்டி போட இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஃபியஸ்டாவின் மினி வெர்ஷன். காரின் உள்பக்கம் முழுவதுமே ஃபியஸ்டா போலவே இருக்கும். டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் என அனைத்துமே ஃபியஸ்டாவில் இருந்து இடம் பெயர்ந்தவைதான். இன்ஜினைப் பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களோடு, எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 1 லிட்டர் எக்கோபூஸ்ட் பெட்ரோல் இன்ஜினையும் இதில் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு.

போலோவுக்கும், வென்ட்டோவுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இதற்காக புதிய காரைத் தேர்ந்தெடுக்காமல், வென்ட்டோவையே 4 மீட்டருக்குள் சுருக்கி வடிவமைத்திருக்கிறார்கள். டிக்கியில் இடம் குறைந்திருப்பதைத் தாண்டி வென்ட்டோவுக்கும் வென்ட்டோ மினி செடானுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்கிறார்கள். 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இந்த காரில் இடம் பிடித்திருக்கும். விலை 5 - 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்.

இண்டிகோவுக்குப் பதிலாக டாடா களமிறக்கப் போகும் கார்தான் கைட் செடான். டாடா ஜெஸ்ட்டைவிடவும் கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் விலை குறைவு. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது. தேன்கூடு வடிவ பானெட், நீளமான ஹெட்லைட்ஸ், வைர வடிவக் கண்ணாடிகள் என புதிய டிஸைன் தீமின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் அல்லது டிசம்பரில் விற்பனைக்கு வரும்.

அக்கார்டு காரை கடந்த ஆண்டு விற்பனையில் இருந்து நிறுத்திய ஹோண்டா, புத்தம் புதிய அக்கார்டை இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. சொகுசு கார்களுக்கே உரிய கம்பீரமான டிஸைன், அதிக இடவசதி மற்றும் பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களில் இருப்பதுபோன்ற ஏராளமான சிறப்பம்சங்களுடன் வரவிருக்கிறது அக்கார்டு. 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் ஆட்டோமேட்டிக், மேனுவல் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு. புதிய அக்கார்டில் V6 இன்ஜின் ஆப்ஷன் இல்லை. அதற்குப் பதிலாக, பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பேட்டரி மூலம் இயங்கும் ஹைபிரிட் அக்கார்டு மாடலை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா. 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட மாடல் 2016-ம் ஆண்டுதான் விற்பனைக்கு வரும்.

ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ கார்களுக்குப் போட்டியாக ஹூண்டாய் களமிறக்கப்போகும் கார் இது. தற்போது சென்னை ஹூண்டாய் தொழிற்சாலையில் தீவிர டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த கார், ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வருகிறது. 4 மீட்டருக்குள் அடங்கும் மினி எஸ்யுவியாக இது இருக்காது. ரெனோ டஸ்ட்டர் போன்று 4 மீட்டரைத் தாண்டும் கொஞ்சம் பெரிய எஸ்யுவியாகவே இருக்கும். ஹூண்டாய் எலீட் i20 காரின் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த காரில், எலீட் i20 காரின் டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், கியர்பாக்ஸ் அனைத்தும் அப்படியே இருக்கும். 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது இந்த மினி எஸ்யுவி!

மாருதியின் மினி எஸ்யுவி இது. உண்மையிலேயே ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுடன் போட்டி போட இருக்கும் கார் இதுதான். காரணம், 4 மீட்டர் நீளத்துக்குள் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது மாருதியின் இந்த மினி எஸ்யுவி. இந்த செக்மென்ட்டிலேயே எந்த காரிலும் இல்லாத வசதியான 4 வீல் டிரைவ் ஆப்ஷனை இதில் அறிமுகப்படுத்த இருக்கிறது மாருதி. இது தவிர, 1.5 லிட்டர், 100bhp சக்திகொண்ட டீசல் இன்ஜினும் இதில் இடம்பிடிக்க இருக்கிறது. தீபாவளி நெருக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு வரும்.

ஆறு பேர் பயணிக்கக்கூடிய மினி எஸ்யுவி என்பதுதான் மஹிந்திராவின் ஸ்பெஷல். டிஸைனில் கிட்டத்தட்ட XUV500 காரின் மினி வெர்ஷனாக இருக்கும் இதில், மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பிடிக்க இருக்கிறது. இது தவிர, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினும் உண்டு. கியர் லீவர், சென்டர் கன்ஸோலுடன் இணைக்கப்பட்டிருப்பதால், டட்ஸன் கோ கார் போன்று முன்பக்க இருக்கைகளில் இடவசதி அதிகமாக இருக்கிறது.

7 பேர் பயணிக்கக்கூடிய முழுமையான எம்பிவி காராக, பிப்ரவரி மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது ரெனோ லாட்ஜி. மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களைவிட நீள, அகல, வீல்பேஸ் அளவுகளில், பெரிய கார் ரெனோ லாட்ஜி. இதனால், காருக்குள் இடவசதியும் அதிகம். டஸ்ட்டரில் உள்ள அதே 1.5 லிட்டர், 85bhp டீசல் இன்ஜின்தான் லாட்ஜியிலும் இடம்பிடித்திருக்கும். 7 -10 லட்சம் ரூபாய்க்குள் லாட்ஜி விற்பனைக்கு வரும்.

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதியின் எஸ்-கிராஸ் எம்பிவி கார், இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ, மஹிந்திரா XUV500 கார்களுக்குப் போட்டியாக விற்பனைக்கு வரும் இதில், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட இருக்கின்றன. டே டைம் ரன்னிங் லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம்கொண்ட முழுமையான எஸ்யுவியாக இது இருக்கும். டிக்கியில் 430 லிட்டர் அளவுக்கு இடம் இருப்பதால், அதிகப்படியான பொருட்களையும் வைக்கலாம். மார்ச் மாதவாக்கில் விற்பனைக்கு வரும் எஸ் கிராஸின் விலை, 13 - 16 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார்களில், எப்போதும் இடம்பிடிக்கும் யுட்டிலிட்டி கார், பொலேரோ மட்டுமே. முதன்முதலில் 2000-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது பொலேரோ. கடந்த 14 ஆண்டுகளாக பொலேரோவின் தோற்றம் காலத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படவில்லை. அந்தக் குறையைப் போக்க, புதிய டிஸைன் கொள்கையின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது பொலேரோ. 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் இதில் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறது மஹிந்திரா. இன்ஜினைப் பொறுத்தவரை, 2.2 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் இதில் பொருத்தப்படும்.

நம்பகத்தன்மைக்கும் தரத்துக்கும் பெயர் பெற்ற எஸ்யுவி ஹோண்டா சிஆர்-வி. முதன்முறையாக டீசல் இன்ஜினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 1.6 லிட்டர், 118bhp சக்தி, 31kgm டார்க் என சக்திவாய்ந்த டீசல் இன்ஜினுடன் களம் இறங்குகிறது ஹோண்டா சிஆர்-வி. ஆனால், இதில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் கிடையாது. 25 லட்சம் ரூபாய் இருக்கலாம்!

ஃபோர்டு எண்டேவர் இந்தியாவில் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு, முற்றிலும் புதிய எண்டேவரை இந்த ஆண்டு கொண்டுவருகிறது ஃபோர்டு. 2.2 லிட்டர் மற்றும் 3 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வருகிறது எண்டேவர். இன்ஜின் முதல் காரின் 90 சதவிகித பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதால், 20 - 25 லட்சம் ரூபாய்க்குள் வாங்கலாம் புதிய எண்டேவர்.