Published:Updated:

டக்கார் ராலியில் முதல் இந்தியன் !

ரா.ராகேஷ் குமார்

க்கார் ராலி... உலக மோட்டார் ராலி போட்டிகளின் உச்சம். ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ராலியில், கடந்த ஆண்டு வரை இந்தியாவில் இருந்து ஒருவர்கூட பங்கேற்றது இல்லை. காரணம், நாமாகச் சென்று இதில் பங்கேற்க முடியாது. டக்கார் போட்டியை நடத்தும் அமைப்பு அழைத்தால்தான் செல்ல முடியும். உலக அளவில் ராலி போட்டிகளைக் கண்காணித்து, அதில் திறமையான நபர்களை மட்டுமே இந்த அமைப்பு அழைக்கும். அப்படி வந்த அழைப்பின் பேரில், இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து முதன்முறையாகக் கலந்துகொண்டவர் சி.எஸ்.சந்தோஷ். பெங்களூருவைச் சேர்ந்த இவர், இந்திய அளவில் பல ராலி போட்டிகளில் முன்னணி வகித்தவர். கேடிஎம் 450 ராலி பைக்கில், டக்கார் ராலியை நிறைவுசெய்து வெற்றிக்களிப்புடன் பெங்களூரு திரும்பிய சந்தோஷிடம் பேசினோம்.

டக்கார் ராலியில் முதல் இந்தியன் !

 டக்கார் ராலியில் பங்கேற்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘கடந்த ஆண்டு FIM நடத்திய ‘கிராஸ் கன்ட்ரி வேர்ல்டு சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்கெடுத்து, முதல் பத்து இடத்துக்குள் வந்தேன். அதைத் தொடர்ந்துதான் இந்த வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. கூடவே, இந்தியாவின் சார்பில் பங்குபெறும் முதல் நபர் என்ற கூடுதல் பொறுப்பும் தொற்றிக்கொண்டது.’’

டக்கார் ராலியில் முதல் இந்தியன் !

 டக்கார் போட்டியில் கலந்துகொண்ட அனுபவம் எப்படி?

‘‘கடுமையாக இருந்தது நான் எதிர்பார்த்ததுதான். அர்ஜென்டினாவில் தொடங்கி சிலி, பொலிவியா வழியாக காடு, மலை, ஆற்றுப்படுகை, புழுதி என ஆஃப் ரோடு ரேஸிங்கின் அத்தனை சவால்களையும் கடந்து, 14 நாட்களில் 9,000 கி.மீ பயணித்து அர்ஜென்டினாவிலேயே முடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்குச் சராசரியாக 600 முதல் 700 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த ஆண்டு மொத்தம் 168 பேர் போட்டியில் கலந்துகொண்டார்கள். ஆனால், முழுமையாக நிறைவு செய்தவர்கள் 76 பேர் மட்டுமே. அதில் நானும் ஒருவன். பைக்குகள் மட்டுமல்ல... கார்கள், டிரக்குகளும் இதில் பங்குபெறுகின்றன. போட்டியின்போது, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் நாமேதான் சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அமைப்பாளர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால், மீட்பதற்காக மருத்துவக் குழுவுடன் ஹெலிகாப்டர்கள் சுற்றிக்கொண்டிருக்கும். இந்தத் துறையில் விபத்துகள் சகஜம். எந்த அளவுக்குப் பெரிய காயம் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். தோள்பட்டையில் அடிபட்டு, ஹெல்மெட் உடைந்து, மூக்கில் ரத்தம் ஒழுக பைக் ஓட்டியிருக்கிறேன். இதில், 6-வது ஸ்டேஜில், புழுதி காரணமாக பாதை சரியாகத் தெரியாமல், விபத்து ஏற்பட்டு கால் கட்டை விரல் முறிந்தது. அந்த வலியைப் பொறுத்துக்கொண்டு பயணித்ததுதான் மிகவும் மோசமான அனுபவம். டக்கார் ராலியில் காணாமல்போவதும், விபத்தில் இறந்துபோவதும் சகஜம்.’’

டக்கார் ராலியில் முதல் இந்தியன் !

 டக்கார் ராலியில் கலந்துகொண்ட பிறகு, இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

‘‘என் இடத்தில் யார் இருந்தாலும், மிகப் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம்தான். இந்தியனுக்கு இது சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளேன். இனி வரும் ஆண்டுகளில் இந்தியர்கள் நிறைய இடம் பெறுவார்கள் என நம்புகிறேன்.’’

டக்கார் ராலியில் முதல் இந்தியன் !

 அடுத்த இலக்கு?

 ‘‘இந்த முறை 36-வது இடத்தில் ராலியை நிறைவு செய்திருக்கிறேன். அடுத்தமுறை 20 இடங்களுக்குள் வர வேண்டும்.’’

ஆல் தி பெஸ்ட்... சந்தோஷ்!