Published:Updated:

சாம்பியன் மகுடம் யாருக்கு?

தேசிய கார் ரேஸ் சாம்பியன்ஷிப்

சார்லஸ்>> எம்.உசேன், ஜெ. தான்யராஜு

 ##~##

ரண்டு மாதங்களாக இருங்காட்டுக்கோட்டையில் ரேஸ் தீ! தேசிய கார் ரேஸ் பந்தயங்களின் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகள், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ரேஸ் டிராக்கில் நடந்து முடிந்தன. இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப்பில் இன்னும் இரண்டு ரேஸ்களே மிச்சம் இருக்கும் நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகும் போட்டா போட்டியில், வெறி கொண்டு பறந்து கொண்டு இருக்கிறார்கள் உள்ளூர் வீரர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 தேசிய கார் ரேஸ்- 22-8-2011

தேசிய கார் ரேஸ் பந்தயத்தின் மூன்றாவது சுற்று, கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கில் நடைபெற்றது. டூரிங் கார்ஸ் ரேஸ் போட்டியில் மூத்த ரேஸ் வீரர்களும், ட்யூனர்களுமான ராதா செல்வராஜும், லீலா கிருஷ்ணனும் ஆதிக்கம் செலுத்த, ஜூனியர் டூரிங் கார்ஸ் ரேஸ் போட்டியில் மோதிக் கொண்டனர் இளம் வீரர்கள். நடப்பு சாம்பியனும், மோட்டோ-ரெவ் இந்தியா அணியின் உரிமையாளருமான பாலவிஜய்க்கும், சிகரம் ரேஸ் அணியின் தில்ஜித் ஷாஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

சாம்பியன் மகுடம் யாருக்கு?

தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து, முதல் ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார் தில்ஜித் ஷாஜி. நடப்பு சாம்பியன் பாலவிஜய் ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். ரேஸ் துவங்கியதும் தில்ஜித் ஷாஜி முதல் இடத்தில் பறக்க... அவரைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார் பாலவிஜய். ரேஸ் துவங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய பாலவிஜய்க்கும், தில்ஜித் ஷாஜிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இருவரும் ஒருவர் காரை ஒருவர் முட்டித் தள்ளும் வேகத்துடன் வெறிகொண்டு பறக்க... ரேஸ் டிராக்கில் அனல் பறந்தது. பத்து லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் டிராக்கின் பத்தாவது லேப்பின்போது யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற சஸ்பென்ஸுடன் ரசிகர்கள் காத்திருக்க... ரேஸ் டிராக்கின் மூன்றாவது வளைவில் தில்ஜித் ஷாஜியைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார் பாலவிஜய்.

இரண்டாவது ரேஸிலும் பாலவிஜய்க்கும், தில்ஜித் ஷாஜிக்கும் இடையேதான் போட்டி. ரிவர்ஸ் கிரிட் முறைப்படி, நடைபெற்ற இரண்டாவது ரேஸில் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தவர் நான்காவது இடத்தில் இருந்தும், இரண்டாவது இடம் பிடித்தவர் மூன்றாவது இடத்தில் இருந்தும், நான்காவது இடம் பிடித்தவர் முதல் இடத்தில் இருந்தும் துவக்க வேண்டும். இதன்படி தில்ஜித் ஷாஜி நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, ஐந்தாவது இடத்தில் இருந்து ஆட்டத்தைத் துவக்கினார் பாலவிஜய். ரேஸ் துவங்கியதுமே போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னோக்கிப் பறந்த பாலவிஜய், மூன்றாவது லேப்பிலேயே முதல் இடத்துக்கு முன்னேறினார். தில்ஜித் ஷாஜி இறுதிவரை முயன்றும் பால விஜய்யை முந்த முடியவில்லை. இரண்டு ரேஸ்களிலுமே வெற்றி பெற்று அசத்தினார் பாலவிஜய்.

சாம்பியன் மகுடம் யாருக்கு?

போலோ கப்

ஃபோக்ஸ்வாகன் போலோ ஆர் கப் ரேஸின் முதல் ரேஸில் எந்தவிதமான போட்டியும் இன்றி எளிதாக

சாம்பியன் மகுடம் யாருக்கு?

வெற்றி பெற்றார் சென்னையைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய விஷ்ணு பிரசாத்தை இறுதிவரை யாராலும் முந்த முடியவில்லை. சென்னையைச் சேர்ந்த மற்றொரு ரேஸ் வீரர் அஜய் கினி இரண்டாம் இடம் பிடிக்க, மும்பையைச் சேர்ந்த ராகுல் நூரானி மூன்றாவது இடம் பிடித்தார்.

இரண்டாவது ரேஸில் ரிவர்ஸ் கிரிட் முறைப்படி எட்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார் விஷ்ணு பிரசாத். ரேஸ் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், விஷ்ணு பிரசாத்தின் காரில் இருந்து சில மெக்கானிக்கல் பாகங்கள் கழன்று விழ ஆரம்பித்தன. இதனால், அவருக்கு கறுப்பு - ஆரஞ்சு வண்ணக் கொடி காட்டப்பட்டது. இந்தக் கொடி எந்த வீரருக்குக் காட்டப்படுகிறதோ அவர் உடனடியாக 'பிட்’டுக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், விஷ்ணு பிரசாத் இந்தக் கொடி தனக்குத்தான் காட்டப்படுகிறது என்பதை உணராமல், தொடர்ந்து இரண்டு லேப்புகள் ரேஸ் ஓட்ட... ரேஸில் இருந்து அதிரடியாக விலக்கப்பட்டார் விஷ்ணு பிரசாத். இதனால், கோவாவைச் சேர்ந்த அவ்டும்பர் ஹெடேவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். ஹெடே முதலிடம் பிடித்து வெற்றி பெற, பிரதீக் தலால் இரண்டாம் இடமும், ஒஷன் கொத்தடியா மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஸ்விஃப்ட் ரேஸ்

ஸ்விஃப்ட் கார் ரேஸ் போட்டியில், முதல் ரேஸில் அமேயா வால்வால்கர் வெற்றி பெற்றார். இரண்டாவது ரேஸிலும் அமேயா வால்வால்கர் ஆதிக்கம் செலுத்த... துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கினார். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த டிவிஎஸ் கிர்லிங் அணியின் நரேந்திரனை முந்திச் செல்ல முயன்ற அமேயா வால்வால்கரின் கார், நரேந்திரன் கார் மீது மோத... ரேஸில் இருந்து வெளியேறினார் அமேயா. இதனால், டிவிஎஸ் கிர்லிங் அணி வீரர்களான கார்த்திக் கிருஷ்ணா முதலிடம் பிடித்து வெற்றி பெற, நரேந்திரன் மற்றும் சந்தீப் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்தனர்.

தேசிய கார் ரேஸ்- 18-09-2011

தேசிய கார் ரேஸ் பந்தயத்தின் நான்காவது சுற்று, இருங்காட்டுக் கோட்டை ரேஸ் டிராக்கில் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்றது. தேசிய கார் ரேஸ் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் செய்த தவறுக்காக, இந்த ரேஸிலும் விஷ்ணு பிரசாத்துக்குத் தண்டனை தொடர்ந்தது. ஃபோக்ஸ்வாகன் போலோ ஆர் கப் ரேஸ் போட்டியின் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றும், பத்து இடங்கள் பின்னால் இருந்து ரேஸைத் துவக்க வேண்டும் என்று விஷ்ணு பிரசாத்துக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

கடுமையான சவால் எதுவும் இல்லாததால், முதல் ரேஸில் வெற்றி பெற்றார் ஓஷன் கொத்தடியா. இதனால், சாம்பியன்ஷிப் பட்டியலில் விஷ்ணு பிரசாத்தை முந்திக் கொண்டு முதலிடத்துக்கு முன்னேறினார் ஓஷன்.

சாம்பியன் மகுடம் யாருக்கு?

ஆனால், இரண்டாவது ரேஸிலேயே அவரது சாம்பியன் கனவில் மண் விழுந்தது. காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரேஸில் இருந்து வெளியேறினார் ஓஷன். இதற்கிடையே இரண்டாவது ரேஸில் நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய விஷ்ணு பிரசாத் முன்னால் சென்று கொண்டிருந்த ராகுல் நூரானி, அங்கத் சிங் ஆகியோரை முந்திச் சென்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். ஆனால், ராகுல் நூரானியை இடித்துத் தள்ளிவிட்டுப் போனார் என விஷ்ணு பிரசாத் மேல் குற்றம் சாட்டப்பட்டது. அதனால், முதலிடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தாலும், 30 விநாடிகள் அபராதம் காரணமாக எட்டாவது இடம் பிடித்தார். இரண்டாம் இடம் பிடித்த ராகுல் முதல் இடமும், அங்கத் சிங் இரண்டாவது இடமும் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

எல்ஜிபி ஸ்விஃப்ட் ரேஸ் போட்டியில் சேத்தன் வெற்றி பெற்றார். ஜூனியர் டூரிங் கார்ஸ் போட்டியின் நான்காவது சுற்றில் முன்னால் சென்றுகொண்டு இருந்த நடப்பு சாம்பியன் பாலவிஜய்யின் கார் மீது தில்ஜித்தின் கார் மோத... ரேஸ் டிராக்கில் இருந்து வெளியே போய் விழுந்ததது பாலவிஜயின் கார். இதனால், இந்த ரேஸில் ஃபெரோஸ் கான் வெற்றி பெற்றார். இரண்டாவது ரேஸில் காரின் ராக்கர் ஆர்ம் உடைய... ஐந்த ரேஸில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் பாலவிஜய். இரண்டாவது ரேஸிலும் வெற்றி பெற்றார் ஃபெரோஸ் கான்.

டூரிங் கார்ஸ் ரேஸ் போட்டியின் இரண்டு ரேஸ்களிலும் கோவையைச் சேர்ந்த விஜயகுமார் ராக்விர்துதன் வெற்றி பெற்றார்!