என் வயது 60. நான் எனது அன்றாடப் பயன்பாட்டுக்காக, புதிய கார் வாங்கும் முடிவில் இருக்கிறேன். அது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காராக இருக்க வேண்டும். காற்றுப்

மோட்டார் கிளினிக்

பை, ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நல்ல சஸ்பென்ஷன் அமைப்புகொண்ட சின்ன காரைப் பரிந்துரை செய்யுங்கள்!

- ஆர்.ராஜாமணி, இ-மெயில்.

 உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய காராக ஹோண்டா ஜாஸ் இருக்கும். ஏனெனில் டிஸைன், இடவசதி, சொகுசு, சிறப்பம்சங்கள், பெர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் தரம் என அனைத்து ஏரியாவிலும் ஜாஸ் சிறந்து விளங்குகிறது. ஏபிஎஸ் மற்றும் காற்றுப் பை இருக்கும் டாப் வேரியன்ட்டின் விலை சற்று அதிகமாகத் தோன்றினாலும், அதை நியாயப்படுத்தும் வகையில், தரமான காராக இருக்கிறது ஜாஸ்.

 எனது காதலிக்குப் பிறந்தநாள் பரிசாக ஸ்கூட்டர் வாங்கித் தர விரும்புகிறேன். ஹோண்டா

மோட்டார் கிளினிக்

டியோ அல்லது யமஹா ரே ஆகிய இரண்டில் எதை வாங்கலாம்? நான் ஹோண்டா ட்ரிகர் வைத்திருக்கிறேன். தவிர, எனக்கு ஹோண்டாவின் தயாரிப்புகள் ரொம்பப் பிடிக்கும். என் காதலியின் உயரம் 5 அடி. ஆக, அவருக்கு எந்த ஸ்கூட்டர் வசதியாக இருக்கும்? உங்கள் பரிந்துரை என்ன?

- மணிகண்டன், இ-மெயில்.

 நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு ஸ்கூட்டர்களின் விலையும், மைலேஜும் ஏறக்குறைய ஒன்றுதான். டியோ போல ட்ரெண்டியாக, ரே ஸ்கூட்டரை வடிவமைத்திருக்கிறது யமஹா. எடை மற்றும் சிறப்பம்சங்களில் இரு ஸ்கூட்டர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால், ஹோண்டா டியோவுடன் ஒப்பிடும்போது, யமஹா ரே ஸ்மூத்தான சஸ்பென்ஷனைக்கொண்டிருக்கிறது. யமஹா ரே சரியான ஸ்கூட்டராக இருக்கும்.

 நான் கடந்த 6 ஆண்டுகளாக ஹோண்டா ஷைன் பைக்கைப் பயன்படுத்துகிறேன். இந்த பைக்,

மோட்டார் கிளினிக்

எனக்குப் பெரிய அளவில் பிரச்னைகளைத் தந்தது இல்லை. அதேபோன்று தரமான, நல்ல மைலேஜ் தரக்கூடிய, உறுதியான 125 சிசி பைக் வாங்கத் தீர்மானித்திருக்கிறேன். எனக்கு எந்த பைக் சரியாக இருக்கும்?

- தமிழ் அழகன், இ-மெயில்.

 பிரேக்கிங், தோற்றம், வசதிகள் ஆகியவற்றில் சில மாற்றங்களைச் செய்து, மேம்படுத்தப்பட்ட ஷைன் பைக்கை இந்த ஆண்டு வெளியிட்டது ஹோண்டா. நீங்கள் ஹோண்டா தயாரிப்புகளுக்குப் பழகிவிட்டதால், புதிய ஷைன் பைக்கை வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்கும். புதிய டிஸைனில் மாடர்னாக ஒரு 125சிசி பைக்கை, இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. உடனடித் தேவை இல்லை என்றால், காத்திருக்கலாம்.

 நான் தற்போது ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ டீசல் காரைப் பயன்படுத்தி வருகிறேன். அடுத்த

மோட்டார் கிளினிக்

ஆண்டில், 30 - 35 லட்ச ருபாய்க்குள் ஒரு புதிய கார் வாங்கத் திட்டமிட்டிருக்கிறேன். என் கார் பயன்பாடு, மாதம் 2,000 கி.மீ இருக்கும். அதிகம் நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டியிருக்கும். அதனால், கார் ஓட்டுவதற்கு சிறப்பாகவும், சொகுசாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம். ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், ஃபோர்டு எண்டேவர் ஆகிய மூன்றில் சிறந்தது எது?

- செல்வசேகரன், சென்னை.

 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், சிறப்பான கார் என்றாலும் கூட, இந்தியாவில் அவர்களுக்குப் போதுமான டீலர் நெட்வொர்க் இல்லை. தவிர, சர்வீஸ் தரமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து ஃபோக்ஸ்வாகன் கார்களைப் பயன்படுத்துவதில் எவ்விதச் சிரமமும் இல்லை என்றால், ஜெட்டா உங்களுக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கும். உறுதியான கட்டுமானம், சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஓட்டுதல் தரம், பாதுகாப்பு மற்றும் இன்டீரியர் தரம், சிறப்பம்சங்கள் என ஒரு பிரீமியம் செடானுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும், ஜெட்டாவில் இடம் பிடித்திருக்கின்றன. உங்களுக்கு எஸ்யுவிதான் வேண்டும் என்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய எண்டேவர் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு நிறுவனம்.

 நான் டிவிஎஸ் அப்பாச்சி 180 ஏபிஎஸ் பைக் வாங்க ஆசைப்படுகிறேன். ஆனால் எனது நண்பர்கள், ‘அது ஒரு ஃபெய்லியர் மாடல்; அதனால், தயாரிப்பை விரைவில் நிறுத்தப் போகிறார்கள்’ எனக்

மோட்டார் கிளினிக்

கூறி பயமுறுத்துகிறார்கள். விலை அதிகமான யமஹா R15 மற்றும் ஹோண்டா சிபிஆர் 150 பைக்குகளோடு ஒப்பிடும்போது, டிவிஎஸ் அப்பாச்சி சிறப்பான பெர்ஃபாமென்ஸ், கையாளுமை, மற்றும் ஏபிஎஸ் பிரேக்ஸ் ஆகியவற்றுடன் குறைந்த விலையில் கிடைக்கும் காரணத்தால், அதனை வாங்குவதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன். எனக்கான தெளிவான பதிலைத் தாருங்கள்.

- கிருஷ்ணன், இ-மெயில்.

 மாதந்தோறும் சராசரியாக 20 ஆயிரம் பைக்குகளுக்கு மேல் விற்பனையாகும் ஒரு வாகனத்தை, எப்படி ஃபெய்லியர் பைக் என வகைப்படுத்த முடியும்? ஒரு லட்ச ரூபாயில், சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்ஸ் ஆகியவற்றைத் தரும் ஒரே பைக், டிவிஎஸ் அப்பாச்சிதான். ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலும் புதிய அப்பாச்சி பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது டிவிஎஸ். அது 200சிசி இன்ஜினைக்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உங்கள் தேவை என்ன என்பதைப் பொறுத்து முடிவெடுங்கள்.

 நான் முதன்முதலாக கார் வாங்கப் போகிறேன். பழைய காரா, புதிய காரா? என்ன பட்ஜெட்

மோட்டார் கிளினிக்

என்பதை முடிவு செய்வதில் குழப்பமாக இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?

- கார்த்திகேயன், இ-மெயில்.

 முதன்முதலாக கார் வாங்கப் போகிறீர்கள் என்றால், புதிய கார் வாங்குவதே சரியான முடிவாக இருக்கும். ஏனென்றால், குறைந்த விலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கிடைத்தாலும், அது முறையாகப் பராமரிக்கப்பட வில்லை என்றால், பராமரிப்புச் செலவு தாறுமாறாக எகிறிவிடும். மேலும், கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் முதன்முறையாக கார் வாங்குவதன் மூலம், பெரும் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். உங்களுக்கு ரெனோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள க்விட், சிறந்த தேர்வாக இருக்கும். கார் முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், பராமரிப்புச் செலவு கட்டுப்படியாகக்கூடிய அளவிலே இருக்கும். தவிர இடவசதி, ஸ்டைல், ஓட்டுதல் தரம், சிறப்பம்சங்கள் என கொடுக்கும் காசுக்கு ஏற்ற பிராக்டிக்கலான காராக, க்விட்டைத் தயாரித்திருக்கிறது ரெனோ.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2. மெயில்: motor@vikatan.com
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு