Published:Updated:

அடுத்த டார்கெட் ஃபார்முலா ரேஸ்தான்!

சந்திப்பு, படம்: ஜெ.விக்னேஷ்

அடுத்த டார்கெட் ஃபார்முலா ரேஸ்தான்!

சந்திப்பு, படம்: ஜெ.விக்னேஷ்

Published:Updated:

கார் ஓட்டுவதை ரசிக்க மட்டுமே முடியும் சிறுவர்களுக்கு, கோ-கார்ட் காரை ஓட்டுவது பரவச அனுபவமாக இருக்கும். 13 வயது சிறுவனான யாஷ் ஆராத்யாவுக்கும் இது பொருந்தும். ஆனால், அதையும் தாண்டி இப்போது அவன், கோ-கார்ட் ரேஸில் ஏராளமான வெற்றிகளையும், விருதுகளையும் ஜெயித்திருக்கிறான்.

பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் யாஷ் ஆராத்யா,2014-ம் ஆண்டு ஜே.கே டயர்ஸ் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான கார்ட்டிங் போட்டியில், மைக்ரோ மேக்ஸ் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தினான். மேலும், அதே பிரிவில் 2014-ம் ஆண்டுக்கான ‘சிறந்த கார்ட்டர்’ விருதையும் வென்றான்.

அடுத்த டார்கெட் ஃபார்முலா ரேஸ்தான்!

யாஷ், தன்னுடைய ஆறாவது வயதில் ஃபன் கார்ட்டிங்கைத் தொடங்கிவிட்டான் என்ற போதும், தன் ஒன்பது வயதில் ப்ரொஃபெஷனல் கார்ட்டிங்குக்குள் காலடியைப் பதித்திருக்கிறான். “எங்க குடும்பத்துல நான்தான் முதல் ரேஸர். தேசிய அளவிலான கார்ட்டிங் சாம்பியன் நிகில் காஷ்யப் கிட்ட எங்க அப்பா கூட்டிட்டுப் போனார். அவர்தான் எனக்கு, கார்ட்டிங்கோட அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தார். நிகிலோட அறிவுரைப்படி, அக்பர் இப்ராஹிம் ரேஸிங் டீமான, மீகோ மோட்டார் ஸ்போர்ட்ஸில் சேர்ந்்தேன்.

கோலாப்பூரில் நடந்த கார்ட்டிங் பந்தயம்தான் என்னோட முதல் ரேஸ். முதல் ரேஸ் விபத்துல முடிய, நான் மனமுடைந்து போனேன். விடாமுயற்சியோட பயிற்சி செஞ்சு, அடுத்த வருஷமே ஜே.கே டயர்ஸின் ரூக்கீ சாம்பியன்ஷிப் கார்ட்டிங் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தேன். அந்த வருஷமே ஹைதராபாத்தில் நடந்த ஜே.கே டயர்ஸ் நேஷனல் கார்ட்டிங் ஓப்பன் சாம்பியன் பட்டத்தை ஜெயிச்சேன். அதுதான் என்னோட முதல் வெற்றி! 2017-க்குள் கார்ட்டிங் ரேஸில் உலக சாம்பியன் ஆவதுதான் என் குறுகிய கால இலக்கு. ஆனால், என்னோட லட்சியம், ஃபார்முலா ஒன் போட்டியில கலந்துகிட்டு சாம்பியன்ஷிப் ஜெயிக்கணும்” என்று நம்பிக்கையோடு பேசுகிறான் யாஷ் ஆராத்யா!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!