Published:Updated:

பிரிட்டிஷ் டூரிங் சாம்பியன் ஆகணும்!

ச.ஜெ.ரவி , படங்கள்: தி.விஜய்

பிரிட்டிஷ் டூரிங் சாம்பியன் ஆகணும்!

ச.ஜெ.ரவி , படங்கள்: தி.விஜய்

Published:Updated:

டுத்தடுத்து இரு ஆண்டுகளில், ‘இந்தியன் டூரிங் கார்ஸ் சாம்பியன்’ பட்டத்தை வென்று, இந்திய ரேஸ் உலகில் கவனிக்கத்தக்க இளைஞராகி இருக்கிறார், கோவையைச் சேர்ந்த அர்ஜூன் நரேந்திரன். 2014-ம் ஆண்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் இந்தியன் டூரிங் கார்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த அர்ஜூனை, கோவையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

“என்னோட 17 வயதில் இருந்து, அதாவது 2011-ல் இருந்து ரேஸில் பங்கேற்கிறேன். அப்போது எனது ஃபிட்னஸ் சரியாக இல்லை. அதனால், என்னால் 10-வது இடம், 11-வது இடம்தான் வர முடிந்தது. அதன் பின்பு, ஃபிட்னஸில் கவனம் செலுத்தினேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேற்றமும் கண்டேன். 2014-ம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. ரேஸின் 11-வது ரவுண்டில் அதிக புள்ளிகள் எடுத்து, நேஷனல் டூரிங் கார் சாம்பியன் ஆனேன். இந்த ஆண்டும் நான்தான் சாம்பியன். சென்னை, டெல்லி, கோவை என மூன்று இடங்களில், 12 ரவுண்டுகளாக நடந்த இந்த ரேஸ் சாம்பியன் ஷிப்பில், 9-வது ரவுண்டிலேயே நான் சாம்பியன் ஆகிவிட்டேன்!” என உற்சாகமாகப் பேசினார் அர்ஜூன்.

“சின்ன வயதில் இருந்தே கார் ஓட்டும் ஆர்வம் அதிகம். என் அப்பா நரேந்திரன், மாமா லீலாகிருஷ்ணன், ராம் நாராயணன் என நிறைய பேர் கார் ரேஸ் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போது சந்தித்தாலும் ரேஸ் பற்றித்தான் பேசுவார்கள். அதனால்தானோ என்னவோ, என் எட்டாவது வயதிலேயே கோ-கார்ட் ரேஸில் கலந்கொள்ள விரும்பினேன். ஆனால், அப்போது வீட்டில் அனுமதிக்கவில்லை.

பிரிட்டிஷ் டூரிங் சாம்பியன் ஆகணும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சமயத்தில் என்னுடைய மாமா லீலாகிருஷ்ணன் ‘டைகர் ஸ்போர்ட் இந்தியா’ என்ற பெயரில் ரேஸ் டீம் ஆரம்பித்தார். அவர்தான் என்னை ரேஸுக்கு அழைத்து வந்தார். உடனேயே தொழில்முறையிலான ரேஸ்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். நேஷனல் ரேஸ்களிலும் அந்த ஆண்டே கலந்துகொண்டேன். அதுவரை, ‘ரேஸுக்குப் போகக் கூடாது’ எனச் சொல்லிவந்த என் அப்பாவும் அம்மாவும், என்கரேஜ் செய்ய ஆரம்பித்தார்கள்!” என்றவர், எதிர்காலத் திட்டம் குறித்தும் பேசினார்.

‘‘அடுத்து, ‘எம்.ஆர்.எஃப் சேலஞ்ச் ஃபார்முலா 2000’ எனும் ரேஸில் பங்கேற்கிறேன். அபுதாபி, பக்ரைன், துபாய் ஆகிய நாடுகளில் இந்தப் போட்டி நடக்கவிருக்கிறது. அடுத்து பிரிட்டிஷ் டூரிங் கார், வேர்ல்டு டூரிங் கார் ஆகிய இரண்டிலும் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், இது சாதாரணம் இல்லை. நிறைய செலவாகும். இங்கே ஸ்பான்ஸர் கிடைப்பது கடினம். பிரிட்டிஷ் டூரிங் கார்ஸ் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன் ஆவதுதான் என் லட்சியம்!” என்று நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் அர்ஜூன் நரேந்திரன்.

வாழ்த்துகள் அர்ஜூன்!