Published:Updated:

எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!
பிரீமியம் ஸ்டோரி
எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

ரீடர்ஸ் ரெவ்யூ: மாருதி பெலினோ (டீ) ஞா.சுதாகர் , படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

ரீடர்ஸ் ரெவ்யூ: மாருதி பெலினோ (டீ) ஞா.சுதாகர் , படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

Published:Updated:
எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!
பிரீமியம் ஸ்டோரி
எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

ட்டோமொபைல் துறையில் இருப்பதால், மார்க்கெட்டுக்குப் புதிதாக வரும் கார்களைப் பற்றித் தெரிந்து கொள்வேன். நான் முதன்முதலாக வாங்கிய கார், அம்பாஸடர். பின்னர், மாருதி ஆம்னி வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். மாருதி கார்களின் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என்பதுடன், ரீ-சேல் வேல்யூவும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே, எனக்கு மாருதியின் தயாரிப்புகள் மீது மிகுந்த மதிப்பு உண்டு. 2007-ல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கினேன். அதை இப்போதும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

ஏன் பெலினோ?

அலுவலகப் பயன்பாட்டுக்கு ஸ்விஃப்ட் இருக்கிறது. குடும்பத்துடன் பயணம் செய்ய, புதிதாக ஒரு கார் வாங்கலாம் என முடிவு செய்து, என்ன கார் வாங்கலாம் என்று ஆலோசித்துக்கொண்டிருந்தேன். ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் i20 ஆகிய கார்கள் என் முதல் கட்டப் பரிசீலனையில் இருந்தன. அப்போதுதான் ஸ்விஃப்ட் டீசல் காரில் இருக்கும் ஃபியட் இன்ஜினுடன், பெரிய மாறுதல்களோடு மாருதியின் பிரீமியம் காராக பெலினோ வந்தது. ஸ்விஃப்ட் காரை வாங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும்கூட இன்னும் நன்றாக இருக்கிறது. எனவே, அந்த இன்ஜின் மீது எனக்கு இருந்த நம்பிக்கையால், பெலினோவை டெஸ்ட் டிரைவ் செய்ய நினைத்தேன்.

எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

நெக்ஸா அனுபவம்

பெலினோ காரைப் பார்த்ததுமே, டிஸைன் மிகவும் கவர்ந்துவிட்டது. அதிக இடவசதி இருந்ததால், குடும்பத்தோடு பயணம் செய்ய சரியான காராக இருக்கும் என முடிவு செய்து, அன்றே புக் செய்துவிட்டேன். நெக்ஸா ஷோரூமில் பெலினோவின் சிறப்புகளை விளக்கினார்கள். பெலினோவின் தனித்தன்மைகள், வசதிகள் பற்றித் தெளிவாகச் சொன்னார்கள். பெலினோ நமக்கு ஏற்ற காராக இருக்கும் என அன்றே முடிவு செய்துவிட்டேன். புக் செய்து ஒரு மாதம் கழித்து காரை டெலிவரி செய்தனர். ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் வழங்குகிறார்கள். எனவே, ஷோரூம் அனுபவம் மிகத் திருப்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

எப்படி இருக்கிறது பெலினோ?

இதன் வெளிப்புற வடிவமைப்பைப் பார்த்தால், மாருதி காரைப் போன்றே தெரியாது. லக்ஸூரி காரைப்போல காட்சி தருகிறது பெலினோ. மிகச் சிறந்த வடிவமைப்பு. டாப் வேரியன்ட்டான இதில் டே டைம் ரன்னிங் லைட்ஸ், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் ஆகியவை இருக்கின்றன. இரவில் பயணிக்கும்போது அழகாக இருப்பதுடன் போதுமான வெளிச்சத்தைக் கொடுக்கிறது. அடுத்த சிறப்பு,  இதன் இருக்கை வசதிகள். ஐந்து பேர் வரை தாராளமாக உட்காரலாம். நன்றாக காலை நீட்டி உட்காரும் அளவுக்கு இடவசதி இருக்கிறது. பூட் ஸ்பேஸ் 339 லிட்டர் என்பதால், கூடுதல் லக்கேஜ் ஏற்றிச் செல்ல முடியும். ஸ்விஃப்ட்டின் அதே இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. ஆனால், பவர் டெலிவரி மிக அருமை. சஸ்பென்ஷன் மென்மையாக இருப்பதால், அதிர்வுகள் அதிகம் இல்லை. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் உள்ள டயல்கள், கார் ஓட்டும்போது தெளிவாகத் தெரியும்படியும், துல்லியமாகவும் இருக்கின்றன. இரவில் இதன் நீல நிறம் வெகு அழகாக ஒளிர்கிறது. அதேபோல, டேஷ்போர்டில் இருக்கும் டச் ஸ்கிரீன் மிக உதவியாக இருக்கிறது. நாம் போகும் இடத்தை செட் செய்துவிட்டால்... நமக்கு வாய்ஸ் மூலம் வழி சொல்கிறது. இதைக் கையாள்வதும் மிக எளிதாக இருக்கிறது. பார்க்கிங் செய்யும்போது, ரிவர்ஸ் கேமரா உதவியாக இருக்கிறது. நகரத்துக்குள் காரை சுலபமாகக் கையாள முடிகிறது. இதன் எல்லா வேரியன்ட்களிலும் இரண்டு காற்றுப் பைகள் இடம் பெற்றிருக்கின்றன. அதனால், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!
எக்கனாமிக்கல் பிரீமியம் கார்!

ப்ளஸ்

சொகுசு காரைப் போன்ற உணர்வைத் தரும் டிஸைன், டே டைம் ரன்னிங் லைட்ஸ், புரொஜெக்‌டர் ஹெட்லைட்ஸ் ஆகியவை இதன் ப்ளஸ். ஐந்து பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி இருக்கிறது. இருக்கைகளும் சொகுசாக இருக்கின்றன. ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களை வழங்கும் டயல்கள் சிறப்பாக இருக்கின்றன. நேவிகேஷன், மியூஸிக் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா ஆகியவை இணைந்த டச் ஸ்கிரீன் மிகத் துல்லியமாக இருக்கிறது. கூடுதல் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் நீண்ட தூரப் பயணத்துக்கு ஏற்றதாக இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ என்பதால், வேகத் தடைகள் பற்றிய கவலை இல்லை.

மைனஸ்

இதன் டாப் வேரியன்ட்டில்கூட, லெதர் இருக்கைகள் இல்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. இதன் இன்டீரியர் அழகாக இருந்தாலும், மற்ற மாருதி கார்களில் உள்ள அதே சுவிட்ச்கள், பிளாஸ்டிக் பொருட்கள்தான் இதிலும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை எல்லாம் மேம்படுத்தி இருக்கலாம்.

என் தீர்ப்பு

அழகாக, 5 பேர் வசதியாக பயணம் செய்ய, எக்கனாமிக்கலாக கார் வேண்டும் என்பவர்களுக்கு, பெலினோ சரியான தேர்வாக இருக்கும்.