Published:Updated:

ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!

ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!

ரீடர்ஸ் ரெவ்யூ: ஹோண்டா CB யூனிகார்ன் 160 இரா.த.சசிபிரியா, படங்கள்: தே.தீட்ஷித்

ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!

ரீடர்ஸ் ரெவ்யூ: ஹோண்டா CB யூனிகார்ன் 160 இரா.த.சசிபிரியா, படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!

நான் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் ஆக வேலை செய்கிறேன். பைக் எனக்கு ரொம்ப முக்கியம். ஆனால், தொழில் சார்ந்த நீண்ட பயணம் நிரந்தரம். எனவே, பைக்கை வேகமாக ஓட்டுவது எனக்குப்  பிடிக்கும்.
ஏன் யூனிகார்ன் 160?

எனக்கும் டூவீலருக்குமான தொடர்பு முதன்முதலில் டிவிஎஸ் XL சூப்பர் மூலம்தான் ஆரம்பமானது. அதன்பின்பு முதல் கியர் பைக் என்றால், அது ஹோண்டா ட்விஸ்ட்டர்தான். அதை நான் நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தேன். ட்விஸ்ட்டர் நன்றாக இருந்தாலும், நான் எதிர்பார்த்த மைலேஜ் கிடைக்கவில்லை. அதனால், வேறு பைக் வாங்கலாம் என முடிவு செய்தேன். முதலில் யமஹா FZ வாங்குவதுதான் திட்டம். ஆனால், அதன் மைலேஜ் எனக்குச் சரிவராது என்பதால், வேறு பைக்கைத் தேடினேன். ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் நல்ல மைலேஜ் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதைப் பார்க்கலாம் என முடிவு செய்தேன். பைக் பற்றிய விமர்சனங்களும் திருப்தி அளிக்கவே, ஷோரூமுக்குச் சென்றேன்.

ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!

ஷோரூம் அனுபவம்

திருச்சி ஹோண்டா டீலரான ‘M A ஹோண்டா’ ஷோரூமுக்குச் சென்று யூனிகார்ன் பற்றி விசாரித்தேன். பைக்கின் சிறப்பம்சங்கள், தனித்துவம் பற்றிச் சொன்னார்கள். எனக்கு ஏற்ற யூனிக்கான பைக் எனத் தோன்றியதால், வாங்கிவிட்டேன். என்னை மிகவும் கவர்ந்த பிளாக் கலரைத் தேர்ந்தெடுத்தேன்.

எப்படி இருக்கிறது?

நான் தேடியதுபோன்றே நல்ல கம்யூட்டர் பைக்காக இருந்ததால், என் பணிக்கு ஏற்றதாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதன் பில்டு குவாலிட்டி சூப்பர்!

இன்ஜின் ஸ்மூத்தாகவும், மிட் ரேஞ்சில் பெப்பியாகவும் உள்ளது. அதனால், இதை ஓட்டும்போது எந்த அலுப்பும் தெரியவில்லை. ரோடு கிரிப் மற்றும் ஹேண்ட்லிங் அருமை! பிரேக், பாதுகாப்பான உணர்வை அளிக்கிறது. ஸ்கிட் ஆவது, அதிர்வுகள் போன்ற எந்தப் பிரச்னைகளும் இல்லை. இதில் நான் செளகரியமாக உணர்கிறேன். யூனிகார்னில் 60 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் என வாங்கும்போது சொன்னார்கள். என் ஓட்டுதல் முறைக்கு சிட்டியில் லிட்டருக்கு 52 கி.மீ, நெடுஞ்சாலையில் 55 கி.மீ வரை கிடைக்கிறது. பைக்கை இன்னும் சர்வீஸ் செய்யவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!

ப்ளஸ்

யூனிகார்னில் எனக்குப் பிடித்தது, இதன் பவர். பைக்கை ஸ்டார்ட் செய்த சில விநாடிகளிலேயே ஃபுல் ஸ்பீடு ரீச் ஆகிவிடுகிறது. இதன் ஆக்ஸிலரேஷன் சிறப்பாக உள்ளது. சஸ்பென்ஷன் ஸ்மூத்தாக இருப்பதால், மோசமான சாலைகளிலும் ஓட்டுதல் தரம் செம ஸ்மூத். இதன் LED டெயில் லைட்டுகள், சுவிட்ச்கள் பயன்படுத்த வசதியாக உள்ளன. மீட்டர்கள் அனைத்தும் டிஜிட்டலில் கொடுத்திருப்பது  நன்றாகவும் வசதியாகவும் இருக்கிறது. 150 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஓகே. இதன் ஃபினிஷ் மற்றும் தரம் கூடுதல் ப்ளஸ்.

ஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை!

மைனஸ்

ஸ்போர்ட்டி லுக் இல்லாமல், வழக்கமான பைக் போன்றே காட்சி அளிக்கிறது யூனிகார்ன். கியர்பாக்ஸ் பெரிய மைனஸ். சில சமயங்களில் முதல் கியரில் இருந்து 2-வது கியருக்கு மாற்றும்போது நியூட்ரல் ஆகிவிடும். இது டிராஃபிக்கில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும் சுஸூகியில் இருப்பதுபோன்ற கியர் பொசிஷன் இண்டிகேட்டர், இன்ஜின் கில் ஸ்விட்ச் போன்றவை மிஸ்ஸிங். யூனிகார்ன் 150 மாடலில் இருந்ததுபோன்று பில்லியன் ரைடருக்கு ஏற்றதுபோல் சீட் பெரிதாகவும் வசதியாகவும் இருந்திருக்கலாம். பைக்கை ஓட்டுபவருக்கு இருக்கும் சொகுசு, பில்லியன் ரைடருக்கு இல்லாதது மைனஸ்.

என் தீர்ப்பு

கொடுக்கும் விலைக்கு நல்ல வொர்த்தான பைக் வாங்க வேண்டும் என்றால், என்னுடைய சாய்ஸ் யூனிகார்ன் 160.