Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

இனோவா, லிவா - பாதுகாப்பில் 4 ஸ்டார்!

 இந்தோனேஷியாவில் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்புத்தன்மையைக் கூறும்  ASEAN NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை இனோவா எம்பிவி, ஒட்டுமொத்தமாக 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.  எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) இருந்தால் மட்டுமே அங்கு எந்த காரும் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெறமுடியும். அங்கே டெஸ்ட் செய்த வேரியன்ட்டில் ESC சிஸ்டம் இல்லை என்பதால், ஒரு ஸ்டார் ரேட்டிங் குறைந்துள்ளது. ஆனால், காரின் டாப் வேரியன்ட்டில் 2 காற்றுப் பைகள், EBD, ABS, ESC, பிரேக் அசிஸ்ட், ISOFIX, சீட் பெல்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. மேலும், Child Occupant Protection (COP)-ல் 76% ரேட்டிங்கைப் பெற்றுள்ளது புதிய இனோவா.

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக், Global NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் தனது அனைத்து எட்டியோஸ் லிவா வேரியன்ட்டிலும் 2 காற்றுப் பைகள் மற்றும் சீட் பெல்ட் pre-tensioners ஆகியவற்றை டொயோட்டா கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வாகனுக்கு மீண்டும் சிக்கல்!

மோட்டார் நியூஸ்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள  3.24 லட்சம் ஃபோக்ஸ்வாகன் கார்களை அராய் அமைப்பு பரிசோதித்தபோது, நிர்ணயிக்கப்பட்ட  அளவைவிட 9  மடங்கு அதிக மாசு அளவுகளை  வெளியிடுவதாக அராய் தெரிவித்துள்ளது. எனவே,  DEFEAT DEVICE ஃபோக்ஸ்வாகன் கார்களில் இருப்பது உறுதியாகி இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

கார் இன்ஷூரன்ஸ்- எங்கு வேண்டுமானாலும் எடுக்கலாம்!

 டீலரிடம் இருந்து வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர், டீலரிடமே மோட்டார் இன்ஷூரன்ஸையும் வாங்க வேண்டியது கட்டாயம் இல்லை. ஏனெனில், அந்த டீலரிடம் கூட்டுச் சேர்ந்துள்ள மோட்டார் இன்ஷூரன்ஸ் நிறுவனம், டீலருக்கு அளிக்கும் கமிஷன் தொகை அதிகமாகவும், சேவைத் தரம் குறைவாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அமைப்பு எச்சரித்துள்ளது.

மோட்டார் நியூஸ்

கார் டீலர்/கார் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ள அல்லது பரிந்துரைக்கும் மோட்டார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தவிர, தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தின் மோட்டார் இன்ஷூரன்ஸை தங்களது வாகனங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. 

லேலாண்டுக்கும் நிஸானுக்கும் விவாகரத்து!

அசோக் லேலாண்ட் நிறுவனம், ஜப்பானின் நிஸான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ஸ்டைல், தோஸ்த் போன்ற வாகனங்களைத் தயாரிக்க கைகோத்தது.

மோட்டார் நியூஸ்

அது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் விலகுவதற்காக நீதிமன்றத்தை  அணுகியுள்ளன. 2008-ல் உதயமான இந்தக் கூட்டணி தயாரித்த தோஸ்த் நீங்கலாக, மற்ற எதுவும் பெரிய அளவில் விற்பனையாகாத நிலையில், இரு நிறுவனங்களும் விவாகரத்து செய்து கொள்ளத் தயாராகிவிட்டன.

டாப்-10-ல் இடம் பிடிக்கத் தயாராகும் KUV100

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் எஸ்யுவி வாகனங்களைத் தயாரிப்பதில் பிரபலமான மஹிந்திரா நிறுவனம், கடந்த மாதம் பொங்கல் தினத்தன்று  KUV1OO காரை அறிமுகப்படுத்தியது. அன்று முதல் இன்று வரை இந்த காரின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை 27 லட்சம்  மக்கள் பார்வையிட்டதாகவும், 1.75 லட்சம் பேர் காரைப் பற்றி விசாரித்துள்ளதாகவும் வெற்றிப் பெருமிதத்துடன் சொல்கிறது மஹிந்திரா.

 அதன் தொடர்ச்சியாக 21,000 பேர் காரை புக்கிங் செய்துள்ளார்கள் என்றும் அறிவித்திருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், புக்கிங் செய்யப்பட்ட கார்களில் பாதி பெட்ரோல் மாடல் என்பதுதான்.

மோட்டார் நியூஸ்
அடுத்த கட்டுரைக்கு