பிரீமியம் ஸ்டோரி

•  முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர், 64,575 ரூபாய்க்கு சென்னை ஆன்ரோடுக்கு விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஆக்ஸஸின் நீளம், அகலம், உயரம் அதிகரித்திருந்தாலும், 10 கிலோ எடை குறைந்துள்ளது. ஹெட்லைட், இண்டிகேட்டர்களுடன் கூடிய முன்பக்க ஏப்ரன், முன்பக்க ஸ்டீல் ஃபெண்டர், LED டெயில்லைட், பாடி பேனல்கள் எல்லாமே புதுசு! சர்வீஸ் இண்டிகேட்டருடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல், 12V DC socket, முன்பக்க டிஸ்க் பிரேக், க்ரோம் எக்ஸாஸ்ட் - லோகோ, பெரிய கிராப் ரெயில் என சிறப்பம்சங்களும் அதிகரித்திருக்கின்றன.

மோட்டார் நியூஸ்

முன்பக்கம் 12 இன்ச் - பின்பக்கம் 10 இன்ச் வீல்களில் ட்யூப்லெஸ் டயர்களுடன், முன்பக்கம் டிஸ்க்/டிரம் பிரேக் ஆப்ஷன் மற்றும் ஸ்டீல்/அலாய் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

SEP தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், 124சிசி இன்ஜினின் அராய் மைலேஜ் 64kpl ஆகவும், பவர் 8.7bhp - டார்க் 1.02kgm ஆகவும் உயர்ந்துள்ளது.

 

• தனது புகழ்பெற்ற FZ-S வெர்ஷன் 1, ஃபேஸர் வெர்ஷன் 1, க்ரக்ஸ், FZ-1 ஸ்போர்ட்ஸ் பைக், ரே ஸ்கூட்டர் ஆகியவற்றின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது யமஹா.

மோட்டார் நியூஸ்

கார்புரேட்டர் பொருத்தப்பட்ட FZ பைக்தான் வேண்டும் என்பவர்கள், 2008 தொடங்கி தற்போது வரை விற்பனையில் இருக்கும் FZ-16 பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம். 2015-ல் ரெட்ரோ டிஸைனில் வெளியான ஃபஸினோ ஸ்கூட்டரின் சிறப்பான விற்பனை காரணமாக, இந்தியாவில் தான் முதன்முதலாக 2012-ல் களமிறக்கிய ஸ்கூட்டரான யமஹா ரேவின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய  ரே-ZR, ரே ஸ்கூட்டருக்கு மாற்றாக அலாய் வீல் மற்றும் டிஸ்க் பிரேக் உடன் விரைவில் களம் காண இருக்கிறது. அதேவேளையில், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் கொண்ட ரே-Z ஸ்கூட்டரின் விற்பனை தொடரும் என யமஹா தெளிவுபடுத்தி உள்ளது.

•   காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டின் முன்னோடியான குவான்ட்டோவின் படுசுமாரான விற்பனை, TUV 3OO காரின் அண்ணனாகத் திகழும் குவான்ட்டோவின் தோற்றத்தில் கணிசமான மாற்றங்களைச் செய்ய வைத்துள்ளது. கூடுதல் சிறப்பம்சங்களைச் சேர்த்து (DRL உடன் ஹெட்லைட்ஸ், பம்ப்பர், கிரில், அலாய் வீல், டெயில் லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன், சொகுசான 7 இருக்கைகள், பீஜ் வண்ண கேபின்), நுவோஸ்போர்ட் (NuvoSport) என்று புதிய பெயர் சூட்டி, ஏப்ரல் 4 அன்று அறிமுகம் செய்கிறது மஹிந்திரா.

மோட்டார் நியூஸ்

இதில், TUV 3OO-ல் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் கூட்டணி, இந்த காரில் பயன்படுத்தப்படலாம். மஹிந்திராவின் கார்கள் பெரும்பாலும் ஆங்கில எழுத்தான O என்ற ஓசையைக் கொண்டதாக இருக்கும். ஆனால், வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் மற்றும் ஆஃப் ரோடர் வாகனமான தார் வரிசையில், இந்த காரின் பெயர் NuvoSport என வித்தியாசமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த காரின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகள் முழுக்க சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

•   பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 4 மீட்டர் நீளத்துக்குள்ளான, 1,200சிசி-க்கும் குறைவான பெட்ரோல் - எல்பிஜி - சிஎன்ஜி கார்களின் மீது, 1 சதவிகிதம் Infra Cess Tax விதிக்கப்பட்டுள்ளது. டீசல் கார்களின் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக, 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான, 1,500சிசி-க்கும் குறைவான டீசல் கார்களின் மீது 2.5 சதவிகிதம் Infra Cess Tax விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால், அவற்றின் மீது 1 சதவிகிதம்  Infra Cess Tax கூடுதலாக விதிக்கப்படும். பெரிய வாகனங்கள் அதாவது, பெரிய இன்ஜின் கொண்ட கார்கள், எஸ்யுவிகள், லக்ஸூரி செடான்கள் போன்றவற்றின் மீது 4 சதவிகிதம்  Infra Cess Tax விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட புதிய வரிகள் காரணமாக மார்ச் முதல் கார் நிறுவனங்கள், கார்களின் விலையை உயர்த்தியுள்ளன.

மோட்டார் நியூஸ்

ஹோண்டா  ரூ. 4,000 - ரூ. 79,000

ஹூண்டாய்  ரூ. 2,889 - ரூ. 82,906

மாருதி சுஸூகி  ரூ. 1,441 -  ரூ. 34,494

மெர்சிடீஸ் பென்ஸ்  3% - 5% கூடுதல் விலை

டாடா மோட்டார்ஸ்  ரூ. 2,000 - ரூ. 35,000

மஹிந்திரா  ரூ. 5,500 -  ரூ. 47,000

நிஸான்  1% - 3.5% கூடுதல் விலை

செவர்லே   ரூ. 3,500 -  ரூ. 51,000

மோட்டார் நியூஸ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு